وَالضُّحٰی ۟ۙ
ஒளிமிக்க பகலின் மீது சத்தியமாக!
Surah 93
Ad-Duha
93. ஸூரத்துள் ளுஹா (முற்பகல்)
11 verses
بِسْمِ اللّٰهِ الرَّحْمٰنِ الرَّحِیْمِ
وَالضُّحٰی ۟ۙ
ஒளிமிக்க பகலின் மீது சத்தியமாக!
وَالَّیْلِ اِذَا سَجٰی ۟ۙ
மேலும், இரவின் மீதும் சத்தியமாக, அது அமைதியாக வந்தடையும் போது!
مَا وَدَّعَكَ رَبُّكَ وَمَا قَلٰی ۟ؕ
(நபியே!) உம் இறைவன் உம்மை ஒருபோதும் கைவிடவில்லை; கோபம் கொள்ளவும் இல்லை.
وَلَلْاٰخِرَةُ خَیْرٌ لَّكَ مِنَ الْاُوْلٰی ۟ؕ
மேலும், திண்ணமாக, பிந்திய காலகட்டம் முந்திய காலகட்டத்தைவிட உமக்கு மிகவும் சிறந்ததாயிருக்கும்.
وَلَسَوْفَ یُعْطِیْكَ رَبُّكَ فَتَرْضٰی ۟ؕ
மேலும், விரைவில் உம் இறைவன் நீர் திருப்தியடைந்து விடுமளவு உமக்கு வழங்குவான்.
اَلَمْ یَجِدْكَ یَتِیْمًا فَاٰوٰی ۪۟
அவன் உம்மை அநாதையாய்க் காணவில்லையா? பிறகு, புகலிடம் தந்தான் அல்லவா?
وَوَجَدَكَ ضَآلًّا فَهَدٰی ۪۟
மேலும், அவன் உம்மை வழியறியாதவராய்க் கண்டான்; பிறகு, நேர்வழி காண்பித்தான்.
وَوَجَدَكَ عَآىِٕلًا فَاَغْنٰی ۟ؕ
மேலும், அவன் உம்மை ஏழையாய்க் கண்டான்; பிறகு செல்வராய் ஆக்கினான்.
فَاَمَّا الْیَتِیْمَ فَلَا تَقْهَرْ ۟ؕ
ஆகவே, நீர் அநாதைகளுடன் கடுமையாய் நடந்து கொள்ளாதீர்.
وَاَمَّا السَّآىِٕلَ فَلَا تَنْهَرْ ۟ؕ
மேலும், யாசகம் கேட்பவரை விரட்டாதீர்.
وَاَمَّا بِنِعْمَةِ رَبِّكَ فَحَدِّثْ ۟۠
மேலும், உம் இறைவனின் அருட்கொடைபற்றி எடுத்துரைப்பீர்.