اَلَمْ نَشْرَحْ لَكَ صَدْرَكَ ۟ۙ
(நபியே!) நாம் உம்முடைய இதயத்தை உமக்காக விரிவாக்கித் தரவில்லையா?
Surah 94
Ash-Sharh
94. ஸூரத்து அலம் நஷ்ரஹ் (விரிவாக்கல்)
8 verses
بِسْمِ اللّٰهِ الرَّحْمٰنِ الرَّحِیْمِ
اَلَمْ نَشْرَحْ لَكَ صَدْرَكَ ۟ۙ
(நபியே!) நாம் உம்முடைய இதயத்தை உமக்காக விரிவாக்கித் தரவில்லையா?
وَوَضَعْنَا عَنْكَ وِزْرَكَ ۟ۙ
மேலும், உம்முடைய சுமையை உம்மைவிட்டு நாம் இறக்கிவைத்தோம்.
الَّذِیْۤ اَنْقَضَ ظَهْرَكَ ۟ۙ
(அது) உம்முடைய முதுகை முறித்துக் கொண்டிருந்தது.
وَرَفَعْنَا لَكَ ذِكْرَكَ ۟ؕ
மேலும், உமக்காக உம் புகழினை உயர்த்தினோம்.
فَاِنَّ مَعَ الْعُسْرِ یُسْرًا ۟ۙ
உண்மையில் சிரமத்துடன் இலகுவும் இருக்கின்றது.
اِنَّ مَعَ الْعُسْرِ یُسْرًا ۟ؕ
திண்ணமாக, சிரமத்துடன் இலகுவும் இருக்கிறது.
فَاِذَا فَرَغْتَ فَانْصَبْ ۟ۙ
எனவே, நீர் ஓய்வு பெறும்போது வணக்க வழிபாட்டின் கடும் உழைப்பில் முனைப்புடன் ஈடுபடுவீராக!
وَاِلٰی رَبِّكَ فَارْغَبْ ۟۠
மேலும், உம் இறைவனின் பக்கமே ஆர்வம் கொள்வீராக!