وَالتِّیْنِ وَالزَّیْتُوْنِ ۟ۙ
அத்தியின் மீதும் ஒலிவத்தின் மீதும் சத்தியமாக!
Surah 95
At-Tin
95. ஸூரத்துத் தீன் (அத்தி)
8 verses
بِسْمِ اللّٰهِ الرَّحْمٰنِ الرَّحِیْمِ
وَالتِّیْنِ وَالزَّیْتُوْنِ ۟ۙ
அத்தியின் மீதும் ஒலிவத்தின் மீதும் சத்தியமாக!
وَطُوْرِ سِیْنِیْنَ ۟ۙ
சினாய் மலையின் மீதும்
وَهٰذَا الْبَلَدِ الْاَمِیْنِ ۟ۙ
மேலும், அமைதியான இந்த (மக்கா) நகரத்தின் மீதும் சத்தியமாக!
لَقَدْ خَلَقْنَا الْاِنْسَانَ فِیْۤ اَحْسَنِ تَقْوِیْمٍ ۟ؗ
திண்ணமாக, நாம் மனிதனை மிகச் சிறந்த அமைப்பில் படைத்தோம்.
ثُمَّ رَدَدْنٰهُ اَسْفَلَ سٰفِلِیْنَ ۟ۙ
பிறகு, நேர்மாறாக, தாழ்ந்தவர்களில் மிகவும் தாழ்ந்தவனாக அவனை ஆக்கினோம்.
اِلَّا الَّذِیْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ فَلَهُمْ اَجْرٌ غَیْرُ مَمْنُوْنٍ ۟ؕ
ஆனால், இறைநம்பிக்கை கொண்டு நற்செயல்கள் புரிந்து கொண்டிருந்தவர்களைத் தவிர! அவர்களுக்கு முடிவில்லாத நற்கூலி இருக்கின்றது.
فَمَا یُكَذِّبُكَ بَعْدُ بِالدِّیْنِ ۟ؕ
எனவே (நபியே!) இதன் பிறகும், நற்கூலி தண்டனை வழங்கப்படும் விஷயத்தில் உம்மை யாரால் பொய்யர் எனத் தூற்ற முடியும்?
اَلَیْسَ اللّٰهُ بِاَحْكَمِ الْحٰكِمِیْنَ ۟۠
அல்லாஹ் ஆட்சியாளர்கள் அனைவரிலும் மாபெரும் ஆட்சியாளன் இல்லையா?