اِذَا السَّمَآءُ انْفَطَرَتْ ۟ۙ
வானம் வெடித்து விடும்போது
Surah 82
Al-Infitar
82. ஸூரத்துல் இன்ஃபிதார் (வெடித்துப் போதல்)
19 verses
بِسْمِ اللّٰهِ الرَّحْمٰنِ الرَّحِیْمِ
اِذَا السَّمَآءُ انْفَطَرَتْ ۟ۙ
வானம் வெடித்து விடும்போது
وَاِذَا الْكَوَاكِبُ انْتَثَرَتْ ۟ۙ
மேலும், தாரகைகள் உதிர்ந்துவிடும்போது
وَاِذَا الْبِحَارُ فُجِّرَتْ ۟ۙ
மேலும், கடல்கள் பிளக்கப்படும்போது
وَاِذَا الْقُبُوْرُ بُعْثِرَتْ ۟ۙ
மேலும், அடக்கத்தலங்கள் திறந்துவிடப்படும்போது
عَلِمَتْ نَفْسٌ مَّا قَدَّمَتْ وَاَخَّرَتْ ۟ؕ
ஒவ்வொரு மனிதனும் தான் முன்பும் பின்பும் செய்த செயல்கள் அனைத்தையும் அப்போது நன்கு அறிந்துகொள்வான்.
یٰۤاَیُّهَا الْاِنْسَانُ مَا غَرَّكَ بِرَبِّكَ الْكَرِیْمِ ۟ۙ
மனிதனே! அருட்கொடையாளனாகிய உன் இறைவனைக் குறித்து உன்னை ஏமாற்றத்தில் வீழ்த்தியது எது?
الَّذِیْ خَلَقَكَ فَسَوّٰىكَ فَعَدَلَكَ ۟ۙ
அவனே உன்னைப் படைத்தான்; உன்னைக் குறைகள் எதுவுமின்றிச் செம்மைப்படுத்தினான்; உனக்குப் பொருத்தமான உறுப்புகளை அளித்தான்.
فِیْۤ اَیِّ صُوْرَةٍ مَّا شَآءَ رَكَّبَكَ ۟ؕ
மேலும், தான் நாடிய உருவத்தில் உன்னை ஒருங்கிணைத்து உண்டாக்கினான்.
كَلَّا بَلْ تُكَذِّبُوْنَ بِالدِّیْنِ ۟ۙ
ஒருபோதும் அவ்வாறில்லை! மாறாக, (உண்மை யாதெனில்) கூலி கொடுக்கப்படுவதை நீங்கள் பொய்யெனத் தூற்றுகின்றீர்கள்.
وَاِنَّ عَلَیْكُمْ لَحٰفِظِیْنَ ۟ۙ
நிச்சயமாக உங்கள் மீது கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.
كِرَامًا كَاتِبِیْنَ ۟ۙ
அவர்களோ கண்ணியமிக்க எழுத்தர்களாவர்;
یَعْلَمُوْنَ مَا تَفْعَلُوْنَ ۟
உங்களுடைய ஒவ்வொரு செயலையும் அறிகின்றார்கள்.
اِنَّ الْاَبْرَارَ لَفِیْ نَعِیْمٍ ۟ۙ
திண்ணமாக, நல்லவர்கள் இன்பத்தில் திளைத்திருப் பார்கள்.
وَاِنَّ الْفُجَّارَ لَفِیْ جَحِیْمٍ ۟ۚۖ
மேலும், சந்தேகமின்றி, தீயவர்கள் நரகத்துக்குச் செல்வார்கள்.
یَّصْلَوْنَهَا یَوْمَ الدِّیْنِ ۟
கூலி கொடுக்கப்படும் நாளில், அதில் அவர்கள் நுழைவார்கள்.
وَمَا هُمْ عَنْهَا بِغَآىِٕبِیْنَ ۟ؕ
மேலும், அதிலிருந்து அவர்கள் காணாமல் போய்விட முடியாது.
وَمَاۤ اَدْرٰىكَ مَا یَوْمُ الدِّیْنِ ۟ۙ
மேலும், கூலி கொடுக்கப்படும் நாள் என்னவென்று நீர் அறிவீரா?
ثُمَّ مَاۤ اَدْرٰىكَ مَا یَوْمُ الدِّیْنِ ۟ؕ
ஆம்! கூலி கொடுக்கப்படும் அந்நாள் எத்தகையது என்று உமக்குத் தெரியுமா, என்ன?
یَوْمَ لَا تَمْلِكُ نَفْسٌ لِّنَفْسٍ شَیْـًٔا ؕ وَالْاَمْرُ یَوْمَىِٕذٍ لِّلّٰهِ ۟۠
அந்நாளில் எந்த மனிதனுக்காகவும் எதையும் செய்திட எவருக்கும் சக்தியிராது. தீர்ப்பு வழங்குவது, அந்நாளில் முற்றிலும் அல்லாஹ்வின் அதிகாரத்தில் இருக்கும்.