اِذَا الشَّمْسُ كُوِّرَتْ ۟
சூரியன் சுருட்டப்பட்டுவிடும்போது,
Surah 81
At-Takwir
81. ஸூரத்துத் தக்வீர் (சுருட்டுதல்)
29 verses
بِسْمِ اللّٰهِ الرَّحْمٰنِ الرَّحِیْمِ
اِذَا الشَّمْسُ كُوِّرَتْ ۟
சூரியன் சுருட்டப்பட்டுவிடும்போது,
وَاِذَا النُّجُوْمُ انْكَدَرَتْ ۟
மேலும், தாரகைகள் உதிர்ந்து விடும்போது,
وَاِذَا الْجِبَالُ سُیِّرَتْ ۟
மேலும், மலைகள் நடத்திச் செல்லப்படும்போது,
وَاِذَا الْعِشَارُ عُطِّلَتْ ۟
மேலும், பத்து மாத நிறைகர்ப்ப ஒட்டகங்கள் அப்படியே விட்டு விடப்படும்போது,
وَاِذَا الْوُحُوْشُ حُشِرَتْ ۟
மேலும், வன விலங்குகள் ஒன்று திரட்டப்படும்போது,
وَاِذَا الْبِحَارُ سُجِّرَتْ ۟
மேலும், கடல்கள் கொளுத்தப்படும்போது,
وَاِذَا النُّفُوْسُ زُوِّجَتْ ۟
மேலும், உயிர்கள் (உடல்களுடன்) ஒன்றிணைக்கப்படும்போது,
وَاِذَا الْمَوْءٗدَةُ سُىِٕلَتْ ۟
மேலும், உயிருடன் புதைக்கப்பட்ட சிறுமியிடம் கேட்கப்படும்போது,
بِاَیِّ ذَنْۢبٍ قُتِلَتْ ۟ۚ
எக்குற்றத்திற்காக கொல்லப்பட்டாள் என்று
وَاِذَا الصُّحُفُ نُشِرَتْ ۟
மேலும், வினைச் சுவடிகள் விரிக்கப்படும்போது,
وَاِذَا السَّمَآءُ كُشِطَتْ ۟
மேலும், வானத் திரை அகற்றப்படும்போது,
وَاِذَا الْجَحِیْمُ سُعِّرَتْ ۟
மேலும், நரகம் எரிக்கப்படும்போது
وَاِذَا الْجَنَّةُ اُزْلِفَتْ ۟
மேலும், சுவனம் அருகே கொண்டு வரப்படும்போது,
عَلِمَتْ نَفْسٌ مَّاۤ اَحْضَرَتْ ۟ؕ
அந்நேரத்தில் ஒவ்வொரு மனிதனும் எதனைக் கொண்டு வந்துள்ளான் என்பதை அறிந்து கொள்வான்.
فَلَاۤ اُقْسِمُ بِالْخُنَّسِ ۟ۙ
அவ்வாறில்லை! மீண்டும் மீண்டும் திரும்பி வரக்கூடிய தாரகைகள்மீதும்,
الْجَوَارِ الْكُنَّسِ ۟ۙ
மறையக்கூடிய தாரகைகள் மீதும்,
وَالَّیْلِ اِذَا عَسْعَسَ ۟ۙ
விடை பெற்றுச் செல்லும் இரவின் மீதும்,
وَالصُّبْحِ اِذَا تَنَفَّسَ ۟ۙ
புலரும் வைகறையின் மீதும் நான் சத்தியம் செய்கின்றேன்.
اِنَّهٗ لَقَوْلُ رَسُوْلٍ كَرِیْمٍ ۟ۙ
உண்மையில், இது கண்ணியமிக்க தூதர் ஒருவரின் வாக்காகும்.
ذِیْ قُوَّةٍ عِنْدَ ذِی الْعَرْشِ مَكِیْنٍ ۟ۙ
அவர் வலிமையுடையவர்; அர்ஷுக்குரியவனிடம் உயர் மதிப்பு பெற்றவர்.
مُّطَاعٍ ثَمَّ اَمِیْنٍ ۟ؕ
அங்கு அவருடைய கட்டளை ஏற்றுக் கொள்ளப்படுகின்றது. அவர் நம்பிக்கைக்குரியவராயும் இருக்கின்றார்.
وَمَا صَاحِبُكُمْ بِمَجْنُوْنٍ ۟ۚ
மேலும், (மக்காவாசிகளே!) உங்கள் நண்பர் பைத்தியக்காரர் அல்லர்.
وَلَقَدْ رَاٰهُ بِالْاُفُقِ الْمُبِیْنِ ۟ۚ
திண்ணமாக, அவர் அந்தத் தூதரை தெளிவான அடிவானத்தில் கண்டார்.
وَمَا هُوَ عَلَی الْغَیْبِ بِضَنِیْنٍ ۟ۚ
மேலும், அவர் மறைவான உண்மைகள் (எனும் இந்த அறிவை மக்களிடம் எடுத்துக்கூறும்) விஷயத்தில் கஞ்சர் அல்லர்.
وَمَا هُوَ بِقَوْلِ شَیْطٰنٍ رَّجِیْمٍ ۟ۙ
மேலும், இது விரட்டியடிக்கப்பட்ட ஷைத்தானின் சொல்லும் அன்று.
فَاَیْنَ تَذْهَبُوْنَ ۟ؕ
பின்னர், நீங்கள் எங்கு சென்று கொண்டிருக்கின்றீர்கள்?
اِنْ هُوَ اِلَّا ذِكْرٌ لِّلْعٰلَمِیْنَ ۟ۙ
இதுவோ அனைத்துலக மக்களுக்கும் உரிய ஓர் அறிவுரையாகும்;
لِمَنْ شَآءَ مِنْكُمْ اَنْ یَّسْتَقِیْمَ ۟ؕ
உங்களில், நேர்வழியில் நடந்திட விரும்பும் ஒவ்வொருவருக்கும் உரியது.
وَمَا تَشَآءُوْنَ اِلَّاۤ اَنْ یَّشَآءَ اللّٰهُ رَبُّ الْعٰلَمِیْنَ ۟۠
மேலும், நீங்கள் நாடுவதால் எதுவும் நடந்துவிடப்போவதில்லை, பிரபஞ்சம் அனைத்திற்கும் அதிபதியான அல்லாஹ் நாடாத வரையில்!