وَیْلٌ لِّلْمُطَفِّفِیْنَ ۟ۙ
அளவில் மோசடி செய்பவருக்குக் கேடுதான்!
Surah 83
Al-Mutaffifin
83. ஸூரத்துல் முதஃப்ஃபிஃபீன் (அளவு நிறுவையில் மோசம் செய்தல்)
36 verses
بِسْمِ اللّٰهِ الرَّحْمٰنِ الرَّحِیْمِ
وَیْلٌ لِّلْمُطَفِّفِیْنَ ۟ۙ
அளவில் மோசடி செய்பவருக்குக் கேடுதான்!
الَّذِیْنَ اِذَا اكْتَالُوْا عَلَی النَّاسِ یَسْتَوْفُوْنَ ۟ؗۖ
அவர்கள் எத்தகையோர் என்றால், மக்களிடமிருந்து அளந்து வாங்கும்போது நிறைவாக வாங்குகின்றார்கள்.
وَاِذَا كَالُوْهُمْ اَوْ وَّزَنُوْهُمْ یُخْسِرُوْنَ ۟ؕ
அவர்களுக்கு அளந்தோ, நிறுத்தோ கொடுக்கும்போது குறைத்துக் கொடுக்கின்றார்கள்.
اَلَا یَظُنُّ اُولٰٓىِٕكَ اَنَّهُمْ مَّبْعُوْثُوْنَ ۟ۙ
திண்ணமாக, அவர்கள் ஒரு மாபெரும் நாளில் எழுப்பிக் கொண்டுவரப்படவிருக்கின்றார்கள் என்பதை அவர்கள் எண்ணிப் பார்ப்பதில்லையா?
لِیَوْمٍ عَظِیْمٍ ۟ۙ
ஒரு மாபெரும் நாளில்,
یَّوْمَ یَقُوْمُ النَّاسُ لِرَبِّ الْعٰلَمِیْنَ ۟ؕ
அந்நாளில், அனைத்துலகின் அதிபதியின் முன்னால் மாந்தர்கள் அனைவரும் நின்றுகொண்டிருப்பார்கள்.
كَلَّاۤ اِنَّ كِتٰبَ الْفُجَّارِ لَفِیْ سِجِّیْنٍ ۟ؕ
ஒருபோதும் அவ்வாறில்லை! திண்ணமாக, தீயவர்களின் வினைப்பட்டியல் சிறைப்பதிவேட்டில் உள்ளது.
وَمَاۤ اَدْرٰىكَ مَا سِجِّیْنٌ ۟ؕ
சிறைப்பதிவேடு என்னவென்று உமக்குத் தெரியுமா, என்ன?
كِتٰبٌ مَّرْقُوْمٌ ۟ؕ
அது எழுதப்பட்ட ஒரு புத்தகமாகும்.
وَیْلٌ یَّوْمَىِٕذٍ لِّلْمُكَذِّبِیْنَ ۟ۙ
அந்நாளில், பொய்யெனத் தூற்றுபவர்களுக்குக் கேடுதான்!
الَّذِیْنَ یُكَذِّبُوْنَ بِیَوْمِ الدِّیْنِ ۟ؕ
அவர்கள் எத்தகையவர்கள் எனில், கூலி கொடுக்கப்படும் நாளினை பொய் யென வாதிடுகின்றார்கள்.
وَمَا یُكَذِّبُ بِهٖۤ اِلَّا كُلُّ مُعْتَدٍ اَثِیْمٍ ۟ۙ
அதை யாரும் பொய் யெனக் கூறுவதில்லை, வரம்பு மீறக்கூடிய தீய செயல்கள் செய்யக்கூடிய ஒவ்வொருவனையும் தவிர!
اِذَا تُتْلٰی عَلَیْهِ اٰیٰتُنَا قَالَ اَسَاطِیْرُ الْاَوَّلِیْنَ ۟ؕ
நம்முடைய வசனங்கள் அவனிடம் ஓதிக் காண்பிக்கப்பட்டால், “இவை பண்டைக் காலத்துக் கட்டுக்கதைகள்” என்று சொல்கின்றான்.
كَلَّا بَلْ ٚ رَانَ عَلٰی قُلُوْبِهِمْ مَّا كَانُوْا یَكْسِبُوْنَ ۟
ஒருபோதும் அவ்வாறில்லை. மாறாக, உண்மை யாதெனில், அவர்களுடைய தீயசெயல்களின் கறை அவர்களின் உள்ளங்களில் படிந்து விட்டிருக்கின்றது.
كَلَّاۤ اِنَّهُمْ عَنْ رَّبِّهِمْ یَوْمَىِٕذٍ لَّمَحْجُوْبُوْنَ ۟ؕ
ஒருபோதும் அவ்வாறில்லை! திண்ணமாக, அவர்கள் அந்நாளில் தம் இறைவனைக் காணும் பேற்றினை விட்டு தடுத்து வைக்கப்படுவார்கள்.
ثُمَّ اِنَّهُمْ لَصَالُوا الْجَحِیْمِ ۟ؕ
பின்னர், அவர்கள் உறுதியாக நரகில் வீழ்வார்கள்.
ثُمَّ یُقَالُ هٰذَا الَّذِیْ كُنْتُمْ بِهٖ تُكَذِّبُوْنَ ۟ؕ
பின்னர், அவர்களிடம் “நீங்கள் பொய்யெனத் தூற்றிக் கொண்டிருந்தது இதுதான்” என்று கூறப்படும்.
كَلَّاۤ اِنَّ كِتٰبَ الْاَبْرَارِ لَفِیْ عِلِّیِّیْنَ ۟ؕ
ஒருபோதும் அவ்வாறில்லை! திண்ணமாக, நல்லோரின் வினைப்பட்டியல் மேன்மக்களின் பதிவேட்டில் உள்ளது.
وَمَاۤ اَدْرٰىكَ مَا عِلِّیُّوْنَ ۟ؕ
அந்த மேன்மக்களின் பதிவேடு என்னவென்று உமக்குத் தெரியுமா, என்ன?
كِتٰبٌ مَّرْقُوْمٌ ۟ۙ
அது எழுதப்பட்ட ஒரு புத்தகம்;
یَّشْهَدُهُ الْمُقَرَّبُوْنَ ۟ؕ
(இறைவனிடம்) நெருக்கமான வானவர்கள் அதனைப் பாதுகாக்கின்றார்கள்.
اِنَّ الْاَبْرَارَ لَفِیْ نَعِیْمٍ ۟ۙ
திண்ணமாக, நல்லவர்கள் பேரின்பத்தில் இருப்பார்கள்.
عَلَی الْاَرَآىِٕكِ یَنْظُرُوْنَ ۟ۙ
உயர்தரமான சாய்வு இருக்கைகளில் அமர்ந்து பார்த்துக் கொண்டிருப்பார்கள்.
تَعْرِفُ فِیْ وُجُوْهِهِمْ نَضْرَةَ النَّعِیْمِ ۟ۚ
அவர்களின் முகங்களில் சுகவாழ்வின் பொலிவை நீர் கண்டறிவீர்.
یُسْقَوْنَ مِنْ رَّحِیْقٍ مَّخْتُوْمٍ ۟ۙ
முத்திரையிடப்பட்ட மிகச்சிறந்த மதுபானம் அவர்களுக்குப் புகட்டப்படும்.
خِتٰمُهٗ مِسْكٌ ؕ وَفِیْ ذٰلِكَ فَلْیَتَنَافَسِ الْمُتَنَافِسُوْنَ ۟ؕ
அதன் மீது கஸ்தூரி முத்திரை பதிந்திருக்கும். போட்டியிட்டு முந்திக்கொள்ள முயல்பவர்கள், இதனை அடைந்து கொள்வதில் முந்திக்கொள்ள முயலட்டும்!
وَمِزَاجُهٗ مِنْ تَسْنِیْمٍ ۟ۙ
மேலும், அந்த பானத்தில் ‘தஸ்னீம்’ கலந்திருக்கும்.
عَیْنًا یَّشْرَبُ بِهَا الْمُقَرَّبُوْنَ ۟ؕ
அது ஒரு நீரூற்று. (இறைவனுக்கு) நெருக்கமானவர்கள் அதன் நீருடன் மது அருந்துவார்கள்.
اِنَّ الَّذِیْنَ اَجْرَمُوْا كَانُوْا مِنَ الَّذِیْنَ اٰمَنُوْا یَضْحَكُوْنَ ۟ؗۖ
திண்ணமாக, குற்றம் புரிந்தவர்கள் இறைநம்பிக்கை கொண்டவர்களை (உலகில்) ஏளனம் செய்து கொண்டிருந்தார்கள்.
وَاِذَا مَرُّوْا بِهِمْ یَتَغَامَزُوْنَ ۟ؗۖ
மேலும், அவர்களை இவர்கள் கடந்து செல்லும்போது கண்களால் சாடை காட்டிக் கொண்டிருந்தார்கள்.
وَاِذَا انْقَلَبُوْۤا اِلٰۤی اَهْلِهِمُ انْقَلَبُوْا فَكِهِیْنَ ۟ؗۖ
மேலும், தம் குடும்பத்தாரிடம் திரும்பும்போது மகிழ்ச்சி ஆரவாரத்துடன் திரும்பிச் சென்று கொண்டிருந்தார்கள்.
وَاِذَا رَاَوْهُمْ قَالُوْۤا اِنَّ هٰۤؤُلَآءِ لَضَآلُّوْنَ ۟ۙ
மேலும், அவர்களைப் பார்க்கும்போது, நிச்சயமாக இவர்கள் வழிகெட்டவர்கள் என்று கூறிக் கொண்டிருந்தார்கள்.
وَمَاۤ اُرْسِلُوْا عَلَیْهِمْ حٰفِظِیْنَ ۟ؕ
ஆனால், அவர்களோ இறைநம்பிக்கையாளர்களை கண்காணிக்கக் கூடியவர்களாய் அனுப்பப்படவில்லை.
فَالْیَوْمَ الَّذِیْنَ اٰمَنُوْا مِنَ الْكُفَّارِ یَضْحَكُوْنَ ۟ۙ
இன்று இறைநம்பிக்கையாளர்கள், நிராகரிப்பாளர்களைப் பார்த்து சிரிக்கின்றார்கள்.
عَلَی الْاَرَآىِٕكِ ۙ یَنْظُرُوْنَ ۟ؕ
சாய்வு நாற்காலிகளில் சாய்ந்தவாறு (அவர்களின் நிலைகளைப்) பார்க்கின்றார்கள்.
هَلْ ثُوِّبَ الْكُفَّارُ مَا كَانُوْا یَفْعَلُوْنَ ۟۠
கிடைத்துவிட்டதல்லவா, நிராகரிப்பாளர்களுக்கு அவர்கள் செய்து கொண்டிருந்த செயல்களுக்கான நற்கூலி!