1
قُلْ اَعُوْذُ بِرَبِّ النَّاسِ ۟ۙ
கூறுவீராக! மக்களின் அதிபதியிடம் நான் பாதுகாப்பு தேடுகின்றேன்;
Surah 114
An-Nas
114. ஸூரத்துந் நாஸ் (மனிதர்கள்)
6 verses
بِسْمِ اللّٰهِ الرَّحْمٰنِ الرَّحِیْمِ
قُلْ اَعُوْذُ بِرَبِّ النَّاسِ ۟ۙ
கூறுவீராக! மக்களின் அதிபதியிடம் நான் பாதுகாப்பு தேடுகின்றேன்;
مَلِكِ النَّاسِ ۟ۙ
மக்களின் மன்னனிடம்
اِلٰهِ النَّاسِ ۟ۙ
மக்களின் உண்மையான இறைவனிடம் (நான் பாதுகாப்பு தேடுகின்றேன்;)
مِنْ شَرِّ الْوَسْوَاسِ ۙ۬ الْخَنَّاسِ ۟
திரும்பத் திரும்ப வந்து ஊசலாட்டங்களை ஏற்படுத்துபவனின் தீங்கிலிருந்து.
الَّذِیْ یُوَسْوِسُ فِیْ صُدُوْرِ النَّاسِ ۟ۙ
அவன் எத்தகையவன் எனில், மனிதர்களின் உள்ளங்களில் ஊசலாட்டங்களை ஏற்படுத்துகின்றான்.
مِنَ الْجِنَّةِ وَالنَّاسِ ۟۠
அவன் ஜின் இனத்தைச் சேர்ந்தவனாயினும் மனித இனத்தைச் சேர்ந்தவனாயினும் சரியே.