وَالْعٰدِیٰتِ ضَبْحًا ۟ۙ
மூச்சிறைக்கப் பாய்ந்து ஓடுகின்றவை (குதிரைகள்) மீது சத்தியமாக!
Surah 100
Al-Adiyat
100. ஸூரத்துல் ஆதியாத்தி (வேகமாகச் செல்லுபவை)
11 verses
بِسْمِ اللّٰهِ الرَّحْمٰنِ الرَّحِیْمِ
وَالْعٰدِیٰتِ ضَبْحًا ۟ۙ
மூச்சிறைக்கப் பாய்ந்து ஓடுகின்றவை (குதிரைகள்) மீது சத்தியமாக!
فَالْمُوْرِیٰتِ قَدْحًا ۟ۙ
பின்னர், குளம்புகளிலிருந்து தீப்பொறியை எழுப்புகின்ற
فَالْمُغِیْرٰتِ صُبْحًا ۟ۙ
மேலும், அதிகாலையில் பாய்ந்து தாக்குதல் நடத்தி,
فَاَثَرْنَ بِهٖ نَقْعًا ۟ۙ
அதனால் புழுதியினைக் கிளப்பி
فَوَسَطْنَ بِهٖ جَمْعًا ۟ۙ
மேலும், ஏதேனும் கூட்டத்தின் நடுவில் நுழைந்துவிடுகின்ற குதிரைகள் மீது சத்தியமாக!
اِنَّ الْاِنْسَانَ لِرَبِّهٖ لَكَنُوْدٌ ۟ۚ
உண்மையில் மனிதன் தன் இறைவனுக்கு மிகவும் நன்றி கெட்டவனாக இருக்கின்றான்.
وَاِنَّهٗ عَلٰی ذٰلِكَ لَشَهِیْدٌ ۟ۚ
அவனே அதற்குச் சாட்சியாகவும் இருக்கின்றான்
وَاِنَّهٗ لِحُبِّ الْخَیْرِ لَشَدِیْدٌ ۟ؕ
மேலும், அவன் செல்வத்தின் மீது அளவு கடந்து மோகம் கொண்டிருக்கின்றான்.
اَفَلَا یَعْلَمُ اِذَا بُعْثِرَ مَا فِی الْقُبُوْرِ ۟ۙ
மண்ணறைகளில் (அடக்கப்பட்டு) உள்ளவை அனைத்தும் வெளிக்கொணரப்படும் நேரத்தையும்;
وَحُصِّلَ مَا فِی الصُّدُوْرِ ۟ۙ
மேலும், நெஞ்சங்களில் (மறைக்கப்பட்டு) உள்ளவை அனைத்தும் வெளிப்படுத்தப்பட்டு ஆய்வு செய்யப்படும் நேரத்தையும் அவன் அறியமாட்டானா?
اِنَّ رَبَّهُمْ بِهِمْ یَوْمَىِٕذٍ لَّخَبِیْرٌ ۟۠
திண்ணமாக, அந்நாளில் அவர்களின் இறைவன் அவர்களைப் பற்றி நன்கறிந்தவனாக இருப்பான்.