اِقْرَاْ بِاسْمِ رَبِّكَ الَّذِیْ خَلَقَ ۟ۚ
ஓதுவீராக! (நபியே!) படைத்த உம் இறைவனின் திருப்பெயர் கொண்டு!
Surah 96
Al-Alaq
96. ஸூரத்துல் அலஃக் (இரத்தக்கட்டி)
19 verses
بِسْمِ اللّٰهِ الرَّحْمٰنِ الرَّحِیْمِ
اِقْرَاْ بِاسْمِ رَبِّكَ الَّذِیْ خَلَقَ ۟ۚ
ஓதுவீராக! (நபியே!) படைத்த உம் இறைவனின் திருப்பெயர் கொண்டு!
خَلَقَ الْاِنْسَانَ مِنْ عَلَقٍ ۟ۚ
(உறைந்த) இரத்தக் கட்டியிலிருந்து மனிதனை அவன் படைத்தான்! ஓதுவீராக!
اِقْرَاْ وَرَبُّكَ الْاَكْرَمُ ۟ۙ
மேலும், உம் இறைவன் எத்தகைய மாபெரும் அருட்கொடையாளன் எனில்,
الَّذِیْ عَلَّمَ بِالْقَلَمِ ۟ۙ
அவனே எழுதுகோலின் மூலம் கற்றுக் கொடுத்தான்;
عَلَّمَ الْاِنْسَانَ مَا لَمْ یَعْلَمْ ۟ؕ
மனிதனுக்கு அவன் அறியாதிருந்தவற்றையெல்லாம் கற்றுக் கொடுத்தான்.
كَلَّاۤ اِنَّ الْاِنْسَانَ لَیَطْغٰۤی ۟ۙ
அவ்வாறன்று! மனிதன் வரம்பு மீறி நடக்கின்றான்;
اَنْ رَّاٰهُ اسْتَغْنٰی ۟ؕ
அவன் தன்னைத் தன்னிறைவுடையவன் என்று கருதிக் கொண்டதால்!
اِنَّ اِلٰی رَبِّكَ الرُّجْعٰی ۟ؕ
ஆனால், திரும்பிச் செல்வது திண்ணமாக, உம் இறைவனின் பக்கமே ஆகும்.
اَرَءَیْتَ الَّذِیْ یَنْهٰی ۟ۙ
தடுப்பவனை நீர் பார்த்தீரா?
عَبْدًا اِذَا صَلّٰی ۟ؕ
அடியார் ஒருவர் தொழுது கொண்டிருக்கையில் அவரைத் தடுப்பவனை நீர் பார்த்தீரா?
اَرَءَیْتَ اِنْ كَانَ عَلَی الْهُدٰۤی ۟ۙ
நீர் என்ன நினைக்கிறீர்? அவர் நேர்வழியில் நடந்தாலுமா?
اَوْ اَمَرَ بِالتَّقْوٰی ۟ؕ
அல்லது தூய்மையை மேற்கொள்ளும்படி ஏவினாலுமா?
اَرَءَیْتَ اِنْ كَذَّبَ وَتَوَلّٰی ۟ؕ
(தடுக்கக்கூடிய இந்த மனிதன் சத்தியத்தைப்) பொய்யென்று தூற்றினால் மேலும், புறக்கணிக்கவும் செய்தால் (அவனைப் பற்றி) நீர் என்ன கருதுகின்றீர்?
اَلَمْ یَعْلَمْ بِاَنَّ اللّٰهَ یَرٰی ۟ؕ
அல்லாஹ் பார்த்துக் கொண்டிருக்கின்றான் என்பது அவனுக்குத் தெரியாதா?
كَلَّا لَىِٕنْ لَّمْ یَنْتَهِ ۙ۬ لَنَسْفَعًا بِالنَّاصِیَةِ ۟ۙ
அவ்வாறன்று! அவன் (இந்த நடத்தையிலிருந்து) விலகிக் கொள்ளவில்லையெனில், திண்ணமாக, அவனது நெற்றி முடியைப் பிடித்து இழுப்போம்,
نَاصِیَةٍ كَاذِبَةٍ خَاطِئَةٍ ۟ۚ
கடும் தவறிழைத்த பொய்யுரைத்த அந்த நெற்றியை!
فَلْیَدْعُ نَادِیَهٗ ۟ۙ
அவன் தன் (ஆதரவாளர்களின்) கூட்டத்தை அழைத்துக் கொள்ளட்டும்;
سَنَدْعُ الزَّبَانِیَةَ ۟ۙ
தண்டனை தரும் வானவர்களை நாமும் அழைத்துக் கொள்வோம்.
كَلَّا ؕ لَا تُطِعْهُ وَاسْجُدْ وَاقْتَرِبْ ۟
ஒருபோதும் அவ்வாறில்லை! அவனுக்குக் கீழ்ப்படியாதீர். மேலும், சிரம் பணிவீராக! மேலும் (உம் இறைவனின்) நெருக்கத்தைப் பெறுவீராக!