وَالسَّمَآءِ وَالطَّارِقِ ۟ۙ
வானத்தின் மீது சத்தியமாக! மேலும், இரவில் தோன்றக்கூடியதன் மீதும் சத்தியமாக!
Surah 86
At-Tariq
86. ஸூரத்துத் தாரிஃக் (விடிவெள்ளி)
17 verses
بِسْمِ اللّٰهِ الرَّحْمٰنِ الرَّحِیْمِ
وَالسَّمَآءِ وَالطَّارِقِ ۟ۙ
வானத்தின் மீது சத்தியமாக! மேலும், இரவில் தோன்றக்கூடியதன் மீதும் சத்தியமாக!
وَمَاۤ اَدْرٰىكَ مَا الطَّارِقُ ۟ۙ
இரவில் தோன்றக்கூடியது எது என்று உமக்குத் தெரியுமா, என்ன?
النَّجْمُ الثَّاقِبُ ۟ۙ
அது ஓர் ஒளிரும் தாரகை.
اِنْ كُلُّ نَفْسٍ لَّمَّا عَلَیْهَا حَافِظٌ ۟ؕ
பாதுகாப்பாளன் இல்லாத எந்த ஓர் உயிருமில்லை.
فَلْیَنْظُرِ الْاِنْسَانُ مِمَّ خُلِقَ ۟ؕ
பிறகு, மனிதன் தான் எப்பொருளிலிருந்து படைக்கப்பட்டிருக்கின்றான் என்பதையாவது சற்று கவனித்துப் பார்க்கட்டுமே!
خُلِقَ مِنْ مَّآءٍ دَافِقٍ ۟ۙ
பீறிட்டுப் பாயும் நீரிலிருந்து படைக்கப்பட்டுள்ளான்!
یَّخْرُجُ مِنْ بَیْنِ الصُّلْبِ وَالتَّرَآىِٕبِ ۟ؕ
அது, முதுகெலும்புக்கும், நெஞ்செலும்புக்கும் இடையிலிருந்து வெளியாகின்றது.
اِنَّهٗ عَلٰی رَجْعِهٖ لَقَادِرٌ ۟ؕ
திண்ணமாக, அவன் (அந்தப் படைப்பாளன்) மீண்டும் அவனைப் படைப்பதற்கு ஆற்றலுள்ளவனாக இருக்கின்றான்.
یَوْمَ تُبْلَی السَّرَآىِٕرُ ۟ۙ
எந்நாளில் மறைவான இரகசியங்கள் சோதனை இடப்படுமோ அந்நாளில்
فَمَا لَهٗ مِنْ قُوَّةٍ وَّلَا نَاصِرٍ ۟ؕ
மனிதனிடம் எந்த சுய வலிமையும் இராது; அவனுக்குத் துணை புரிபவர் எவரும் இருக்கமாட்டார்.
وَالسَّمَآءِ ذَاتِ الرَّجْعِ ۟ۙ
மழையைப் பொழிகின்ற வானத்தின் மீது சத்தியமாக!
وَالْاَرْضِ ذَاتِ الصَّدْعِ ۟ۙ
மேலும் (தாவரங்கள் முளைக்கின்ற போது) பிளந்துவிடுகின்ற பூமியின் மீது சத்தியமாக!
اِنَّهٗ لَقَوْلٌ فَصْلٌ ۟ۙ
திண்ணமாக, இது தீர்க்கமான சொல்லே
وَّمَا هُوَ بِالْهَزْلِ ۟ؕ
தவிர கேலியோ விளையாட்டோ அல்ல!
اِنَّهُمْ یَكِیْدُوْنَ كَیْدًا ۟ۙ
(மக்காவின் இறைநிராகரிப்பாளர்களான) இவர்கள் சில சூழ்ச்சிகள் செய்து கொண்டிருக்கின்றார்கள்.
وَّاَكِیْدُ كَیْدًا ۟ۚۖ
நானும் ஒரு சூழ்ச்சி செய்து கொண்டிருக்கின்றேன்.
فَمَهِّلِ الْكٰفِرِیْنَ اَمْهِلْهُمْ رُوَیْدًا ۟۠
எனவே (நபியே!) விட்டுவிடுவீராக, இந்நிராகரிப்பாளர்களை! சொற்ப காலம் (அவர்களுடைய நிலையிலே) அவர்களை விட்டுவிடுவீராக!