All Surahs

Surah 85

البروج

Al-Buruj

85. ஸூரத்துல் புரூஜ் (கிரகங்கள்)

22 verses

بِسْمِ اللّٰهِ الرَّحْمٰنِ الرَّحِیْمِ

1

وَالسَّمَآءِ ذَاتِ الْبُرُوْجِ ۟ۙ

உறுதியான கோட்டைகளைக் கொண்ட வானத்தின் மீது சத்தியமாக!

2

وَالْیَوْمِ الْمَوْعُوْدِ ۟ۙ

வாக்களிக்கப்பட்ட அந்த நாளின் மீது சத்தியமாக!

3

وَشَاهِدٍ وَّمَشْهُوْدٍ ۟ؕ

மேலும், பார்க்கின்றவர் மீதும், பார்க்கப்படும் பொருளின் மீதும் சத்தியமாக!

4

قُتِلَ اَصْحٰبُ الْاُخْدُوْدِ ۟ۙ

தீக்குண்டத்தார் அழிக்கப்பட்டார்கள்!

5

النَّارِ ذَاتِ الْوَقُوْدِ ۟ۙ

(அது எத்தகைய தீக்குண்டமெனில்) அதில் நன்கு கொழுந்து விட்டெரியும் எரிபொருள் இருந்தது.

6

اِذْ هُمْ عَلَیْهَا قُعُوْدٌ ۟ۙ

அவர்கள் அதன் ஓரத்தில் அமர்ந்திருந்து

7

وَّهُمْ عَلٰی مَا یَفْعَلُوْنَ بِالْمُؤْمِنِیْنَ شُهُوْدٌ ۟ؕ

இறைநம்பிக்கையாளர்களுக்குத் தாம் செய்து கொண்டிருந்த செயல்களைப் பார்த்த வண்ணம் இருந்தார்கள்.

8

وَمَا نَقَمُوْا مِنْهُمْ اِلَّاۤ اَنْ یُّؤْمِنُوْا بِاللّٰهِ الْعَزِیْزِ الْحَمِیْدِ ۟ۙ

அந்த இறை நம்பிக்கையாளர்களிடம் இவர்கள் பகைமை பாராட்டியதற்குக் காரணம் இதைத் தவிர வேறு எதுவும் இல்லை: யாவற்றையும் மிகைத்தவனும் தனக்குத்தானே புகழுக்குரியவனுமான அல்லாஹ்வின் மீது அவர்கள் நம்பிக்கை கொண்டுள்ளார்கள் என்பதுதான்!

9

الَّذِیْ لَهٗ مُلْكُ السَّمٰوٰتِ وَالْاَرْضِ ؕ وَاللّٰهُ عَلٰی كُلِّ شَیْءٍ شَهِیْدٌ ۟ؕ

வானங்கள் மற்றும் பூமியின் ஆட்சியதிகாரத்திற்கு உரிமையாளனும் அந்த இறைவனே. மேலும், அவன் அனைத்தையும் பார்த்துக் கொண்டிருக்கின்றான்.

10

اِنَّ الَّذِیْنَ فَتَنُوا الْمُؤْمِنِیْنَ وَالْمُؤْمِنٰتِ ثُمَّ لَمْ یَتُوْبُوْا فَلَهُمْ عَذَابُ جَهَنَّمَ وَلَهُمْ عَذَابُ الْحَرِیْقِ ۟ؕ

இறைநம்பிக்கை கொண்ட ஆண்கள் மற்றும் பெண்கள் மீது எவர்கள் கொடுமைகள் புரிந்தார்களோ, பிறகு, அதற்காக மன்னிப்புக் கோரி மீளவில்லையோ, அவர்களுக்கு நிச்சயம் நரகவேதனை இருக்கிறது. மேலும், சுட்டெரிக்கும் தண்டனையும் உண்டு,

11

اِنَّ الَّذِیْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ لَهُمْ جَنّٰتٌ تَجْرِیْ مِنْ تَحْتِهَا الْاَنْهٰرُ ؔؕ۬ ذٰلِكَ الْفَوْزُ الْكَبِیْرُ ۟ؕ

எவர்கள் இறைநம்பிக்கை கொண்டு நற்செயல்கள் புரிந்தார்களோ அவர்களுக்குத் திண்ணமாக சுவனங்கள் இருக்கின்றன. அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக் கொண்டிருக்கும். இதுவே பெரும் வெற்றியாகும்.

12

اِنَّ بَطْشَ رَبِّكَ لَشَدِیْدٌ ۟ؕ

உண்மையில், உம் இறைவனின் பிடி மிகக் கடுமையானது.

13

اِنَّهٗ هُوَ یُبْدِئُ وَیُعِیْدُ ۟ۚ

திண்ணமாக, அவனே முதன் முதலாகப் படைக்கின்றான். அவனே மீண்டும் படைப்பான்.

14

وَهُوَ الْغَفُوْرُ الْوَدُوْدُ ۟ۙ

மேலும், அவன் அதிகம் மன்னித்தருள்பவனாகவும், அன்பு செலுத்துபவனாகவும் இருக்கின்றான்.

15

ذُو الْعَرْشِ الْمَجِیْدُ ۟ۙ

அர்ஷின் உரிமையாளனாகவும், மேன்மை மிக்கவனாகவும்,

16

فَعَّالٌ لِّمَا یُرِیْدُ ۟ؕ

தான் நாடுகின்றவற்றை செயல்படுத்துபவனாகவும் இருக்கின்றான்.

17

هَلْ اَتٰىكَ حَدِیْثُ الْجُنُوْدِ ۟ۙ

படைகளைப் பற்றிய செய்தி உமக்கு எட்டியதா?

18

فِرْعَوْنَ وَثَمُوْدَ ۟ؕ

ஃபிர்அவ்ன் மற்றும் ஸமூத் சமுதாயத்தினரின் (படைகளைப் பற்றிய) செய்தி

19

بَلِ الَّذِیْنَ كَفَرُوْا فِیْ تَكْذِیْبٍ ۟ۙ

ஆனால், நிராகரிப்பாளர்கள் பொய்யெனத் தூற்றுவதில் முனைந்துள்ளார்கள்.

20

وَّاللّٰهُ مِنْ وَّرَآىِٕهِمْ مُّحِیْطٌ ۟ۚ

ஆயினும், அல்லாஹ்வோ அவர்களை முற்றிலும் சூழ்ந்து கொண்டிருக்கின்றான்.

21

بَلْ هُوَ قُرْاٰنٌ مَّجِیْدٌ ۟ۙ

(அவர்கள் பொய்யெனத் தூற்றுவதால் இந்தக் குர்ஆனுக்கு எவ்விதத் தீங்கும் ஏற்பட்டுவிடாது) மாறாக, இந்தக் குர்ஆன் அதிக மகத்துவம் மிக்கது;

22

فِیْ لَوْحٍ مَّحْفُوْظٍ ۟۠

பாதுகாக்கப்பட்ட பலகையில் (பதிக்கப்பட்டு) உள்ளது.

PreviousAl-InshiqaqNextAt-Tariq

0:00–:––