اَلْحَآقَّةُ ۟ۙ
நிச்சயமாக நிகழ்ந்தே தீரவேண்டிய விஷயம்!
Surah 69
Al-Haqqah
69. ஸூரத்துல் ஹாஃக்ஃகா (நிச்சயமானது)
52 verses
بِسْمِ اللّٰهِ الرَّحْمٰنِ الرَّحِیْمِ
اَلْحَآقَّةُ ۟ۙ
நிச்சயமாக நிகழ்ந்தே தீரவேண்டிய விஷயம்!
مَا الْحَآقَّةُ ۟ۚ
நிச்சயமாக நிகழ்ந்தே தீரவேண்டிய அந்த விஷயம் என்ன?
وَمَاۤ اَدْرٰىكَ مَا الْحَآقَّةُ ۟ؕ
நிச்சயமாக நிகழ்ந்தே தீர வேண்டிய அந்த விஷயம் என்னவென்று உமக்குத் தெரியுமா?
كَذَّبَتْ ثَمُوْدُ وَعَادٌ بِالْقَارِعَةِ ۟
ஸமூது மற்றும் ஆது சமூகத்தினர் திடீரென நிகழவிருக்கும் அந்த ஆபத்தைப் பொய்யென வாதிட்டனர்.
فَاَمَّا ثَمُوْدُ فَاُهْلِكُوْا بِالطَّاغِیَةِ ۟
எனவே ஸமூது சமூகத்தினர் ஒரு கடுமையான விபத்தினால் அழிக்கப்பட்டார்கள்.
وَاَمَّا عَادٌ فَاُهْلِكُوْا بِرِیْحٍ صَرْصَرٍ عَاتِیَةٍ ۟ۙ
ஆது சமூகத்தினர் மிகப்பெரிய கடும் சூறாவளிக் காற்றினால் அழிக்கப்பட்டார்கள்.
سَخَّرَهَا عَلَیْهِمْ سَبْعَ لَیَالٍ وَّثَمٰنِیَةَ اَیَّامٍ ۙ حُسُوْمًاۙ فَتَرَی الْقَوْمَ فِیْهَا صَرْعٰی ۙ كَاَنَّهُمْ اَعْجَازُ نَخْلٍ خَاوِیَةٍ ۟ۚ
அல்லாஹ் அந்தக் காற்றினை அவர்கள் மீது ஏழு இரவுகளும், எட்டு பகல்களும் தொடர்ந்து ஏவினான். (நீர் அங்கு இருந்திருந்தால்) இற்றுப்போன ஈச்சமரத் தண்டுகளைப் போன்று அவர்கள் அங்கு முகங்குப்புற வீழ்ந்து கிடந்ததைப் பார்த்திருப்பீர்!
فَهَلْ تَرٰی لَهُمْ مِّنْ بَاقِیَةٍ ۟
இப்போது அவர்களில் எவரேனும் எஞ்சியிருப்பது உமக்குத் தெரிய வருகிறதா என்ன?
وَجَآءَ فِرْعَوْنُ وَمَنْ قَبْلَهٗ وَالْمُؤْتَفِكٰتُ بِالْخَاطِئَةِ ۟ۚ
ஃபிர்அவ்னும் அவனுக்கு முன்பிருந்த மக்களும், தலை கீழாகப் புரட்டப்பட்ட ஊர் (வாசி)களும் இதே பெருந்தவறைச் செய்தனர்.
فَعَصَوْا رَسُوْلَ رَبِّهِمْ فَاَخَذَهُمْ اَخْذَةً رَّابِیَةً ۟
அவர்கள் அனைவரும் தங்களுடைய இறைத்தூதர்களின் பேச்சைக் கேட்கவில்லை. எனவே அவன் அவர்களை மிகக் கடுமையாகப் பிடித்தான்.
اِنَّا لَمَّا طَغَا الْمَآءُ حَمَلْنٰكُمْ فِی الْجَارِیَةِ ۟ۙ
வெள்ளப் பிரளயம் எல்லை கடந்து போனபோது நாம் உங்களைக் கப்பலில் ஏற்றினோம்;
لِنَجْعَلَهَا لَكُمْ تَذْكِرَةً وَّتَعِیَهَاۤ اُذُنٌ وَّاعِیَةٌ ۟
இச்சம்பவங்களை நாம் படிப்பினையூட்டும் ஒரு பாடமாக ஆக்க வேண்டும் என்பதற்காகவும், நினைவுகூரும் செவிகள் இதனை நினைவிலிருத்திப் பாதுகாக்க வேண்டும் என்பதற்காகவும்தான்!
فَاِذَا نُفِخَ فِی الصُّوْرِ نَفْخَةٌ وَّاحِدَةٌ ۟ۙ
பிறகு ஒரே ஒரு தடவை எக்காளம் ஊதப்படும்போது
وَّحُمِلَتِ الْاَرْضُ وَالْجِبَالُ فَدُكَّتَا دَكَّةً وَّاحِدَةً ۟ۙ
மேலும், பூமியையும் மலைகளையும் தூக்கி ஒரே அடியில் அவை நொறுங்கி, துகள்துகளாக ஆக்கப்படும்போது ;
فَیَوْمَىِٕذٍ وَّقَعَتِ الْوَاقِعَةُ ۟ۙ
அந்த நாளில் நிகழவேண்டியது நிகழ்ந்தே தீரும்!
وَانْشَقَّتِ السَّمَآءُ فَهِیَ یَوْمَىِٕذٍ وَّاهِیَةٌ ۟ۙ
மேலும் (அந்நாளில்) வானம் பிளக்கும், அதன் கட்டுக்கோப்பு குலைந்து போய்விடும்.
وَّالْمَلَكُ عَلٰۤی اَرْجَآىِٕهَا ؕ وَیَحْمِلُ عَرْشَ رَبِّكَ فَوْقَهُمْ یَوْمَىِٕذٍ ثَمٰنِیَةٌ ۟ؕ
வானவர்கள் அதன் ஓரங்களில் இருப்பார்கள். மேலும், உம் இறைவனின் அர்ஷை* அன்று எட்டு வானவர்கள் தங்களின் மீது சுமந்துகொண்டிருப்பார்கள்.
یَوْمَىِٕذٍ تُعْرَضُوْنَ لَا تَخْفٰی مِنْكُمْ خَافِیَةٌ ۟
அந்நாளில் நீங்கள் ஆஜர்படுத்தப்படுவீர்கள். உங்களுடைய எந்த இரகசியமும் அன்று மறைந்து இருக்காது.
فَاَمَّا مَنْ اُوْتِیَ كِتٰبَهٗ بِیَمِیْنِهٖ ۙ فَیَقُوْلُ هَآؤُمُ اقْرَءُوْا كِتٰبِیَهْ ۟ۚ
அன்று தன் வலக்கையில் யாருக்குச் செயலேடு தரப்படு கிறதோ அவர் கூறுவார்: “இதோ, பாருங்கள்! படியுங்கள், என் வினைச் சுவடியை!
اِنِّیْ ظَنَنْتُ اَنِّیْ مُلٰقٍ حِسَابِیَهْ ۟ۚ
நிச்சயம் என்னுடைய கணக்கை நான் சந்திப்பேன் என்று நான் எண்ணியேயிருந்தேன்!”
فَهُوَ فِیْ عِیْشَةٍ رَّاضِیَةٍ ۟ۙ
அவர் மனத்திற்குகந்த வாழ்க்கையில் இருப்பார்,
فِیْ جَنَّةٍ عَالِیَةٍ ۟ۙ
உன்னதமான சுவனத்தில்;
قُطُوْفُهَا دَانِیَةٌ ۟
அங்கு பழக்குலைகள் தாழ்ந்து தொங்கிக் கொண்டிருக்கும்.
كُلُوْا وَاشْرَبُوْا هَنِیْٓـًٔا بِمَاۤ اَسْلَفْتُمْ فِی الْاَیَّامِ الْخَالِیَةِ ۟
(இத்தகையவர்களிடம்) கூறப்படும்: “சுவையாக உண்ணுங்கள்; பருகுங்கள்! கடந்து சென்ற நாட்களில் நீங்கள் ஆற்றிய நற்காரியங்களுக்குப் பகரமாக!”
وَاَمَّا مَنْ اُوْتِیَ كِتٰبَهٗ بِشِمَالِهٖ ۙ۬ فَیَقُوْلُ یٰلَیْتَنِیْ لَمْ اُوْتَ كِتٰبِیَهْ ۟ۚ
மேலும், தன்னுடைய இடக்கையில் செயலேடு கொடுக்கப்படுபவர் கூறுவார்: “அந்தோ! என்னுடைய செயலேடு எனக்குத் தரப்படாமல் இருந்திருக்கக் கூடாதா?
وَلَمْ اَدْرِ مَا حِسَابِیَهْ ۟ۚ
என் கணக்கு என்னவென்று நான் அறியாமல் இருந்திருக்கக் கூடாதா?
یٰلَیْتَهَا كَانَتِ الْقَاضِیَةَ ۟ۚ
அந்தோ! (உலகத்தில் வந்த) அந்த மரணமே இறுதியானதாய் இருந்திருக்கக் கூடாதா?
مَاۤ اَغْنٰی عَنِّیْ مَالِیَهْ ۟ۚ
இன்று என்னுடைய செல்வம் எனக்கு எவ்விதப் பயனும் அளிக்கவில்லையே!
هَلَكَ عَنِّیْ سُلْطٰنِیَهْ ۟ۚ
என்னுடைய அதிகாரம் அனைத்தும் முடிந்துபோய் விட்டதே!”
خُذُوْهُ فَغُلُّوْهُ ۟ۙ
(ஆணை பிறக்கும்:) “பிடியுங்கள் இவனை! இவனுடைய கழுத்தில் விலங்கை மாட்டுங்கள்!
ثُمَّ الْجَحِیْمَ صَلُّوْهُ ۟ۙ
பின்னர் இவனை நரகத்தில் வீசி எறியுங்கள்!
ثُمَّ فِیْ سِلْسِلَةٍ ذَرْعُهَا سَبْعُوْنَ ذِرَاعًا فَاسْلُكُوْهُ ۟ؕ
பிறகு இவனை எழுபது முழம் நீளமுள்ள சங்கிலியால் பிணையுங்கள்.”
اِنَّهٗ كَانَ لَا یُؤْمِنُ بِاللّٰهِ الْعَظِیْمِ ۟ۙ
மேன்மையும் உயர்வும் மிக்கவனாகிய அல்லாஹ்வின் மீது இவன் நம்பிக்கை கொள்ளாமல் இருந்தான்.
وَلَا یَحُضُّ عَلٰی طَعَامِ الْمِسْكِیْنِ ۟ؕ
ஏழை எளியோர்க்கு உணவு அளிக்கும்படி தூண்டாமலும் இருந்தான்.
فَلَیْسَ لَهُ الْیَوْمَ هٰهُنَا حَمِیْمٌ ۟ۙ
எனவே, இன்று இங்கு அவன் மீது அனுதாபப்படும் எந்த நண்பனும் இல்லை.
وَّلَا طَعَامٌ اِلَّا مِنْ غِسْلِیْنٍ ۟ۙ
சீழ்நீரைத் தவிர அவனுக்கு எந்த உணவும் இங்கு இல்லை;
لَّا یَاْكُلُهٗۤ اِلَّا الْخَاطِـُٔوْنَ ۟۠
தவறிழைத்தவர்களைத் தவிர வேறெவரும் அதனை அருந்துவதில்லை.
فَلَاۤ اُقْسِمُ بِمَا تُبْصِرُوْنَ ۟ۙ
இல்லை! நீங்கள் பார்க்கின்றவற்றின் மீதும்,
وَمَا لَا تُبْصِرُوْنَ ۟ۙ
நீங்கள் பார்க்காதவற்றின் மீதும் நான் சத்தியம் செய்கின்றேன்!
اِنَّهٗ لَقَوْلُ رَسُوْلٍ كَرِیْمٍ ۟ۚۙ
இது கண்ணியமான ஒரு தூதரின் சொல்லாகும்.
وَّمَا هُوَ بِقَوْلِ شَاعِرٍ ؕ قَلِیْلًا مَّا تُؤْمِنُوْنَ ۟ۙ
யாரோ ஒரு கவிஞனின் சொல்லல்ல. நீங்கள் குறைவாகத்தான் நம்பிக்கை கொள்கின்றீர்கள்.
وَلَا بِقَوْلِ كَاهِنٍ ؕ قَلِیْلًا مَّا تَذَكَّرُوْنَ ۟ؕ
இது யாரோ ஒரு ஜோதிடனின் சொல்லும் அல்ல. நீங்கள் குறைவாகத்தான் சிந்திக்கிறீர்கள்.
تَنْزِیْلٌ مِّنْ رَّبِّ الْعٰلَمِیْنَ ۟
இது அகில உலகங்களின் அதிபதியிடமிருந்து இறங்கியதாகும்.
وَلَوْ تَقَوَّلَ عَلَیْنَا بَعْضَ الْاَقَاوِیْلِ ۟ۙ
மேலும், இவர் (இந்த நபி) சுயமாக இட்டுக்கட்டி ஏதேனுமொரு விஷயத்தை நம் பெயரில் சேர்த்துச் சொல்லியிருந்தால்
لَاَخَذْنَا مِنْهُ بِالْیَمِیْنِ ۟ۙ
நாம் அவரது வலக்கையைப் பிடித்திருப்போம்.
ثُمَّ لَقَطَعْنَا مِنْهُ الْوَتِیْنَ ۟ؗۖ
பிறகு அவருடைய பிடரி நரம்பைத் துண்டித்தும் இருப்போம்.
فَمَا مِنْكُمْ مِّنْ اَحَدٍ عَنْهُ حٰجِزِیْنَ ۟
பிறகு உங்களில் எவரும் இப்படிச் செய்வதிலிருந்து (நம்மைத்) தடுப்பவராய் இருக்க முடியாது!
وَاِنَّهٗ لَتَذْكِرَةٌ لِّلْمُتَّقِیْنَ ۟
உண்மையில் இறையச்சமுள்ளோருக்கு இது ஒரு நல்லுரையாகும்.
وَاِنَّا لَنَعْلَمُ اَنَّ مِنْكُمْ مُّكَذِّبِیْنَ ۟
உங்களில் பொய்யென வாதிடுபவர்கள் சிலரும் உள்ளனர் என்பதை நாம் அறிவோம்.
وَاِنَّهٗ لَحَسْرَةٌ عَلَی الْكٰفِرِیْنَ ۟
இப்படிப்பட்ட நிராகரிப்பாளர்களுக்கு நிச்சயம் இது மனவருத்தத்தை அளிக்கக்கூடியதே ஆகும்.
وَاِنَّهٗ لَحَقُّ الْیَقِیْنِ ۟
மேலும், இது முற்றிலும் உறுதியான சத்தியமாகும்.
فَسَبِّحْ بِاسْمِ رَبِّكَ الْعَظِیْمِ ۟۠
எனவே, (நபியே) உம்முடைய மகத்தான அதிபதியின் பெயரைத் துதிப்பீராக!