نٓ وَالْقَلَمِ وَمَا یَسْطُرُوْنَ ۟ۙ
நூன், எழுதுகோலின் மீது சத்தியமாக! எழுதுவோர் எதனை எழுதிக் கொண்டிருக்கின்றார்களோ அதன் மீதும் சத்தியமாக!
Surah 68
Al-Qalam
68. ஸூரத்துல் கலம் (எழுதுகோல்)
52 verses
بِسْمِ اللّٰهِ الرَّحْمٰنِ الرَّحِیْمِ
نٓ وَالْقَلَمِ وَمَا یَسْطُرُوْنَ ۟ۙ
நூன், எழுதுகோலின் மீது சத்தியமாக! எழுதுவோர் எதனை எழுதிக் கொண்டிருக்கின்றார்களோ அதன் மீதும் சத்தியமாக!
مَاۤ اَنْتَ بِنِعْمَةِ رَبِّكَ بِمَجْنُوْنٍ ۟ۚ
நீர் உம் இறைவனின் அருளால் பைத்தியக்காரர் அல்லர்.
وَاِنَّ لَكَ لَاَجْرًا غَیْرَ مَمْنُوْنٍ ۟ۚ
என்றைக்கும் முடிவடையாத கூலி திண்ணமாக உமக்கு இருக்கிறது.
وَاِنَّكَ لَعَلٰی خُلُقٍ عَظِیْمٍ ۟
மேலும், திண்ணமாக நற்குணத்தின் மிக உன்னதமான நிலையில் நீர் இருக்கின்றீர்.
فَسَتُبْصِرُ وَیُبْصِرُوْنَ ۟ۙ
விரைவில் நீரும் கண்டுகொள்வீர்; அவர்களும் கண்டுகொள்வார்கள்.
بِاَیِّىكُمُ الْمَفْتُوْنُ ۟
உங்களில் யார் பைத்தியத்திற்குள்ளானவர் என்பதையும்
اِنَّ رَبَّكَ هُوَ اَعْلَمُ بِمَنْ ضَلَّ عَنْ سَبِیْلِهٖ ۪ وَهُوَ اَعْلَمُ بِالْمُهْتَدِیْنَ ۟
அவன் வழியிலிருந்து பிறழ்ந்தவர்கள் யாரென்பதையும் உமதிறைவன் நன்கு அறிகின்றான்; நேர்வழியில் இருப்பவர்களையும் நன்கு அறிகின்றான்.
فَلَا تُطِعِ الْمُكَذِّبِیْنَ ۟
எனவே சத்தியத்தைப் பொய்ப்படுத்துகின்ற இவர்களின் நிர்ப்பந்தத்திற்கு நீர் பணிந்து விடாதீர்.
وَدُّوْا لَوْ تُدْهِنُ فَیُدْهِنُوْنَ ۟
நீர் சிறிது விட்டுக் கொடுத்து இணங்கி வந்தால், அவர்களும் சற்று விட்டுக்கொடுத்து இணங்கி வரலாம் என விரும்புகின்றார்கள்.
وَلَا تُطِعْ كُلَّ حَلَّافٍ مَّهِیْنٍ ۟ۙ
அதிகமாக சத்தியம் செய்கின்ற, அற்பமான எந்த மனிதனுக்கும் நீர் அடங்கி விடாதீர்.
هَمَّازٍ مَّشَّآءٍ بِنَمِیْمٍ ۟ۙ
அவன் திட்டுகின்றவனாகவும், புறம்பேசித் திரிபவனாகவும்,
مَّنَّاعٍ لِّلْخَیْرِ مُعْتَدٍ اَثِیْمٍ ۟ۙ
நன்மை செய்யவிடாமல் தடுப்பவனாகவும்,
عُتُلٍّ بَعْدَ ذٰلِكَ زَنِیْمٍ ۟ۙ
கொடுமைகள் புரிவதில் வரம்பு மீறிச் செல்பவனாகவும், பாவச் செயல்கள் அதிகம் செய்பவனாகவும், இரக்கமற்ற கொடுமைக்காரனாகவும், இத்தனைக்கும் பிறகு இழி பிறவியாகவும் இருக்கின்றான்;
اَنْ كَانَ ذَا مَالٍ وَّبَنِیْنَ ۟ؕ
அவனுக்கு நிறைய செல்வமும் பிள்ளைகளும் இருக்கின்றன என்பதால்!
اِذَا تُتْلٰی عَلَیْهِ اٰیٰتُنَا قَالَ اَسَاطِیْرُ الْاَوَّلِیْنَ ۟
நம்முடைய வசனங்கள் அவனுக்கு ஓதிக் காட்டப்படும்போது, இவை முற்காலத்துக் கட்டுக்கதைகள் என்று கூறுகின்றான்.
سَنَسِمُهٗ عَلَی الْخُرْطُوْمِ ۟
விரைவில் நாம் இவனுடைய மூக்கின் மீது சூடு இடுவோம்!
اِنَّا بَلَوْنٰهُمْ كَمَا بَلَوْنَاۤ اَصْحٰبَ الْجَنَّةِ ۚ اِذْ اَقْسَمُوْا لَیَصْرِمُنَّهَا مُصْبِحِیْنَ ۟ۙ
நாம் (மக்காவாசிகளாகிய) இவர்களைச் சோதனைக் குள்ளாக்கியுள்ளோம், ஒரு தோட்டத்தின் உரிமையாளர்களைச் சோதனைக்குள்ளாக்கியது போன்று! ஒருபோது அவர்கள் தங்களுடைய தோட்டத்தின் கனிகளை நிச்சயம் அதிகாலையில் பறிப்பதாகச் சத்தியம் செய்தார்கள்.
وَلَا یَسْتَثْنُوْنَ ۟
அதில் எவ்வித விதிவிலக்கையும் அவர்கள் குறிப்பிடவில்லை.
فَطَافَ عَلَیْهَا طَآىِٕفٌ مِّنْ رَّبِّكَ وَهُمْ نَآىِٕمُوْنَ ۟
இரவில் அவர்கள் உறங்கிக் கொண்டிருக்கும்போது உம் இறைவனின் தரப்பிலிருந்து ஒரு பேரிடர் அந்தத் தோட்டத்தைப் பிடித்துக் கொண்டது.
فَاَصْبَحَتْ كَالصَّرِیْمِ ۟ۙ
அப்போது அது அறுவடை செய்யப்பட்ட வயலைப் போன்று ஆகிவிட்டது!
فَتَنَادَوْا مُصْبِحِیْنَ ۟ۙ
காலையில் அவர்கள் ஒருவரையொருவர் அழைத்துக் கூறினார்கள்,
اَنِ اغْدُوْا عَلٰی حَرْثِكُمْ اِنْ كُنْتُمْ صٰرِمِیْنَ ۟
“நீங்கள் கனிகளைப் பறிப்பதாக இருந்தால், அதிகாலையிலேயே உங்கள் வயலுக்குப் புறப்பட்டுச் சென்றுவிடுங்கள்” என்று!
فَانْطَلَقُوْا وَهُمْ یَتَخَافَتُوْنَ ۟ۙ
அவ்வாறே அவர்கள் புறப்பட்டுச் சென்றார்கள்: தங்களிடையே இரகசியம் பேசிக்கொண்டு.
اَنْ لَّا یَدْخُلَنَّهَا الْیَوْمَ عَلَیْكُمْ مِّسْكِیْنٌ ۟ۙ
“இன்று எந்த ஏழை எளியவனும் உங்களிடம் தோட்டத்திற்குள் வந்துவிடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்!”
وَّغَدَوْا عَلٰی حَرْدٍ قٰدِرِیْنَ ۟
அப்படி எதையும் கொடுக்கக்கூடாது என்று முடிவு செய்து அதிகாலையில் (கனிகளைப் பறிக்க) ஆற்றலுள்ளவர்கள் போன்று அவசர அவசரமாக அவர்கள் அங்கு சென்றார்கள்:
فَلَمَّا رَاَوْهَا قَالُوْۤا اِنَّا لَضَآلُّوْنَ ۟ۙ
ஆனால் தோட்டத்தை அவர்கள் பார்த்தபோது கூறினார்கள். “நாம் வழிதவறி விட்டிருக்கிறோம்;
بَلْ نَحْنُ مَحْرُوْمُوْنَ ۟
இல்லை, உண்மையில் நாம் இழப்புக்குள்ளாகிவிட்டோம்!”
قَالَ اَوْسَطُهُمْ اَلَمْ اَقُلْ لَّكُمْ لَوْلَا تُسَبِّحُوْنَ ۟
அவர்களிடையே மிகவும் சிறந்த மனிதர் கூறினார்: “நீங்கள் இறைவனைத் துதிக்க வேண்டாமா? இதை நான் உங்களிடம் கூறவில்லையா?”
قَالُوْا سُبْحٰنَ رَبِّنَاۤ اِنَّا كُنَّا ظٰلِمِیْنَ ۟
அப்போது அவர்கள் கூறினார்கள்: “மிகத் தூய்மையானவன், எங்கள் அதிபதி! உண்மையில் நாம் தாம் பாவிகளாயிருந்தோம்!”
فَاَقْبَلَ بَعْضُهُمْ عَلٰی بَعْضٍ یَّتَلَاوَمُوْنَ ۟
பின்னர் அவர்கள் பரஸ்பரம் பழித்துரைக்கலாயினர்.
قَالُوْا یٰوَیْلَنَاۤ اِنَّا كُنَّا طٰغِیْنَ ۟
இறுதியில் அவர்கள் கூறினார்கள்: “எங்களுடைய கேடே! ஐயமின்றி நாங்கள் வரம்பு மீறியவர்களாகி விட்டோம்.
عَسٰی رَبُّنَاۤ اَنْ یُّبْدِلَنَا خَیْرًا مِّنْهَاۤ اِنَّاۤ اِلٰی رَبِّنَا رٰغِبُوْنَ ۟
எங்கள் அதிபதி இதற்குப் பகரமாக இதனைவிடச் சிறந்த தோட்டத்தை எங்களுக்கு வழங்கக்கூடும். நாங்கள் எங்கள் அதிபதியின் பக்கம் திரும்புகின்றோம்!”
كَذٰلِكَ الْعَذَابُ ؕ وَلَعَذَابُ الْاٰخِرَةِ اَكْبَرُ ۘ لَوْ كَانُوْا یَعْلَمُوْنَ ۟۠
இப்படித்தான் இருக்கும் வேதனை! மறுமையின் வேதனை இதனைவிடக் கொடியதாகும். அந்தோ! இவர்கள் இதனை அறிந்திருக்க வேண்டுமே!
اِنَّ لِلْمُتَّقِیْنَ عِنْدَ رَبِّهِمْ جَنّٰتِ النَّعِیْمِ ۟
திண்ணமாக இறையச்சமுடைய மனிதர்களுக்கு அவர்களின் இறைவனிடத்தில் அருள்நிறைந்த சுவனங்கள் இருக்கின்றன.
اَفَنَجْعَلُ الْمُسْلِمِیْنَ كَالْمُجْرِمِیْنَ ۟ؕ
கீழ்ப்படிபவர்களின் நிலையை குற்றவாளிகளின் நிலைபோன்று நாம் செய்துவிடுவோமா, என்ன?
مَا لَكُمْ ۥ كَیْفَ تَحْكُمُوْنَ ۟ۚ
உங்களுக்கு என்ன நேர்ந்துவிட்டது? நீங்கள் எப்படிப்பட்ட முடிவை எடுக்கின்றீர்கள்?
اَمْ لَكُمْ كِتٰبٌ فِیْهِ تَدْرُسُوْنَ ۟ۙ
உங்களிடம் ஏதாவது வேதம் இருக்கின்றதா?
اِنَّ لَكُمْ فِیْهِ لَمَا تَخَیَّرُوْنَ ۟ۚ
நீங்கள் உங்களுக்கு எதை விரும்புகின்றீர்களோ அது உங்களுக்கு அங்கே அவசியம் கிடைக்கும் என்று அந்த வேதத்தில் நீங்கள் படிக்கின்றீர்களா?
اَمْ لَكُمْ اَیْمَانٌ عَلَیْنَا بَالِغَةٌ اِلٰی یَوْمِ الْقِیٰمَةِ ۙ اِنَّ لَكُمْ لَمَا تَحْكُمُوْنَ ۟ۚ
அல்லது நீங்கள் எதைத் தீர்மானித்திருக்கின்றீர்களோ அதுவே உங்களுக்குக் கிடைக்க வேண்டுமென்று இறுதித் தீர்ப்புநாள் வரை நம்மைக் கட்டுப்படுத்தும் உடன்படிக்கை ஏதேனும் நீங்கள் நம்முடன் ஏற்படுத்திவைத்திருக்கிறீர்களா, என்ன?
سَلْهُمْ اَیُّهُمْ بِذٰلِكَ زَعِیْمٌ ۟ۚۛ
உங்களில் எவர் இதற்குப் பொறுப்பாளி என்று இவர்களிடம் நீர் கேளும்!
اَمْ لَهُمْ شُرَكَآءُ ۛۚ فَلْیَاْتُوْا بِشُرَكَآىِٕهِمْ اِنْ كَانُوْا صٰدِقِیْنَ ۟
அல்லது இவர்களாக ஏற்படுத்திக் கொண்ட இணைக் கடவுள்கள் (இதற்குப் பொறுப்பேற்கும் வகையில்) உள்ளனரா? அப்படியென்றால், தங்களுடைய அந்த இணைக் கடவுள்களை இவர்கள் கொண்டுவரட்டும், இவர்கள் உண்மையாளர்களாய் இருந்தால்!
یَوْمَ یُكْشَفُ عَنْ سَاقٍ وَّیُدْعَوْنَ اِلَی السُّجُوْدِ فَلَا یَسْتَطِیْعُوْنَ ۟ۙ
எந்த நாளில் கடினமான நேரம் வருமோ மேலும், மக்கள் ஸஜ்தா* செய்வதற்காக அழைக்கப்படுவார்களோ அந்த நாளில் இந்த மக்களால் ஸஜ்தா செய்திட முடியாது.
خَاشِعَةً اَبْصَارُهُمْ تَرْهَقُهُمْ ذِلَّةٌ ؕ وَقَدْ كَانُوْا یُدْعَوْنَ اِلَی السُّجُوْدِ وَهُمْ سٰلِمُوْنَ ۟
இவர்களின் பார்வைகள் தாழ்ந்திருக்கும். இழிவு இவர்களைச் சூழ்ந்து கொண்டிருக்கும். இவர்கள் ஆரோக்கியமானவர்களாய் இருந்தபோது, ஸஜ்தா செய்யுமாறு இவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு வந்தது. (அப்போது இவர்கள் மறுத்துக் கொண்டிருந்தார்கள்).
فَذَرْنِیْ وَمَنْ یُّكَذِّبُ بِهٰذَا الْحَدِیْثِ ؕ سَنَسْتَدْرِجُهُمْ مِّنْ حَیْثُ لَا یَعْلَمُوْنَ ۟ۙ
ஆகவே (நபியே!) நீர் இந்த வேதவாக்கைப் பொய்யெனத் தூற்றுபவர்களின் விவகாரத்தை என்னிடம் விட்டுவிடும். படிப்படியாக இவர்கள் அறியாத விதத்தில் அழிவின் பக்கம் இவர்களை நாம் கொண்டு செல்வோம்.
وَاُمْلِیْ لَهُمْ ؕ اِنَّ كَیْدِیْ مَتِیْنٌ ۟
நான் இவர்களுடைய கடிவாளத்தைத் தளர்த்தி விட்டிருக்கின்றேன். எனது சூழ்ச்சி மிக உறுதியானதாகும்.
اَمْ تَسْـَٔلُهُمْ اَجْرًا فَهُمْ مِّنْ مَّغْرَمٍ مُّثْقَلُوْنَ ۟ۚ
என்ன, நீர் இவர்களிடம் கூலி எதுவும் கேட்கிறீரா? அவ்வாறு இவர்கள் கடன் சுமையால் அழுத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றார்களா?
اَمْ عِنْدَهُمُ الْغَیْبُ فَهُمْ یَكْتُبُوْنَ ۟
அல்லது மறைவானவற்றைப் பற்றிய ஞானம் இவர்களுக்கு இருந்து அதனை இவர்கள் எழுதிக் கொண்டிருக்கின்றார்களா?
فَاصْبِرْ لِحُكْمِ رَبِّكَ وَلَا تَكُنْ كَصَاحِبِ الْحُوْتِ ۘ اِذْ نَادٰی وَهُوَ مَكْظُوْمٌ ۟ؕ
சரி! உம் அதிபதியின் தீர்ப்பு வரும்வரை பொறுமையாய் இரும். மேலும் மீன் மனிதர் (யூனுஸ்) போன்று ஆகி விடாதீர். அவர் துயரத்திற்குள்ளாகி இருந்த நிலையில் அழைத்த போது,
لَوْلَاۤ اَنْ تَدٰرَكَهٗ نِعْمَةٌ مِّنْ رَّبِّهٖ لَنُبِذَ بِالْعَرَآءِ وَهُوَ مَذْمُوْمٌ ۟
அவருடைய அதிபதியின் கருணை அவருக்குக் கிடைத் திராவிட்டால், அவர் இழிவுக்கு ஆளாகி பொட்டல்வெளியில் எறியப்பட்டிருப்பார்!
فَاجْتَبٰىهُ رَبُّهٗ فَجَعَلَهٗ مِنَ الصّٰلِحِیْنَ ۟
இறுதியில் அவருடைய அதிபதி அவரைத் தேர்ந்தெடுத்துக் கொண்டான். மேலும், அவரை நல்லடியார்களில் ஒருவராயும் சேர்த்துக் கொண்டான்.
وَاِنْ یَّكَادُ الَّذِیْنَ كَفَرُوْا لَیُزْلِقُوْنَكَ بِاَبْصَارِهِمْ لَمَّا سَمِعُوا الذِّكْرَ وَیَقُوْلُوْنَ اِنَّهٗ لَمَجْنُوْنٌ ۟ۘ
இந்த நிராகரிப்பாளர்கள் நல்லுரையை (குர்ஆனை)ச் செவியுறும்போது உம்முடைய பாதங்களைப் பிறழச் செய்துவிடு வதைப் போன்று உம்மை முறைத்துப் பார்க்கின்றார்கள். மேலும், “நிச்சயமாக இவர் ஒரு பைத்தியக்காரர்!” என்றும் கூறுகின்றார்கள்.
وَمَا هُوَ اِلَّا ذِكْرٌ لِّلْعٰلَمِیْنَ ۟۠
ஆனால் உண்மை நிலை யாதெனில், இது உலக மக்கள் அனைவருக்கும் ஒரு நல்லுரையாகவே இருக்கிறது.