All Surahs

Surah 45

الجاثية

Al-Jathiyah

45. ஸூரத்துல் ஜாஸியா (முழந்தாளிடுதல்)

37 verses

بِسْمِ اللّٰهِ الرَّحْمٰنِ الرَّحِیْمِ

1

حٰمٓ ۟ۚ

ஹாமீம்.

2

تَنْزِیْلُ الْكِتٰبِ مِنَ اللّٰهِ الْعَزِیْزِ الْحَكِیْمِ ۟

இந்த வேதம், வல்லமை மிக்கவனும் நுண்ணறிவாளனுமாகிய அல்லாஹ்விடமிருந்து இறக்கியருளப்பட்டதாகும்.

3

اِنَّ فِی السَّمٰوٰتِ وَالْاَرْضِ لَاٰیٰتٍ لِّلْمُؤْمِنِیْنَ ۟ؕ

உண்மை யாதெனில், இறைநம்பிக்கையுள்ளவர்களுக்கு வானங்களிலும் பூமியிலும் எண்ணற்ற சான்றுகள் உள்ளன.

4

وَفِیْ خَلْقِكُمْ وَمَا یَبُثُّ مِنْ دَآبَّةٍ اٰیٰتٌ لِّقَوْمٍ یُّوْقِنُوْنَ ۟ۙ

மேலும், உங்களைப் படைப்பதிலும், (பூமியில்) அல்லாஹ் பரப்பியிருக்கின்ற உயிரினங்களிலும், உறுதிகொள்ளும் மக்களுக்கு பெரும் சான்றுகள் உள்ளன.

5

وَاخْتِلَافِ الَّیْلِ وَالنَّهَارِ وَمَاۤ اَنْزَلَ اللّٰهُ مِنَ السَّمَآءِ مِنْ رِّزْقٍ فَاَحْیَا بِهِ الْاَرْضَ بَعْدَ مَوْتِهَا وَتَصْرِیْفِ الرِّیٰحِ اٰیٰتٌ لِّقَوْمٍ یَّعْقِلُوْنَ ۟

இரவும் பகலும் வேறுபட்டு இருப்பதிலும், அல்லாஹ், வானத்திலிருந்து மழையை இறக்கி பிறகு அதனைக் கொண்டு இறந்துபோன பூமியை உயிர்ப்பிப்பதிலும் மேலும், காற்றுகளின் சுழற்சியிலும் அறிவைப் பயன்படுத்தும் மக்களுக்குப் பல்வேறு அத்தாட்சிகள் உள்ளன.

6

تِلْكَ اٰیٰتُ اللّٰهِ نَتْلُوْهَا عَلَیْكَ بِالْحَقِّ ۚ فَبِاَیِّ حَدِیْثٍ بَعْدَ اللّٰهِ وَاٰیٰتِهٖ یُؤْمِنُوْنَ ۟

இவை அல்லாஹ்வின் அத்தாட்சிகள். இவற்றை உம்மிடம் நாம் மிகச் சரியாக எடுத்துரைத்துக் கொண்டிருக்கின்றோம். இனி, அல்லாஹ்வுக்கும் அவனுடைய வசனங்களுக்கும் பிறகு, இவர்கள் எந்த விஷயத்தின் மீது நம்பிக்கை கொள்ளப் போகிறார்கள்?

7

وَیْلٌ لِّكُلِّ اَفَّاكٍ اَثِیْمٍ ۟ۙ

பொய்யனாகவும் கெட்டவனாகவும் உள்ள ஒவ்வொரு மனிதனுக்கும் அழிவுதான்.

8

یَّسْمَعُ اٰیٰتِ اللّٰهِ تُتْلٰی عَلَیْهِ ثُمَّ یُصِرُّ مُسْتَكْبِرًا كَاَنْ لَّمْ یَسْمَعْهَا ۚ فَبَشِّرْهُ بِعَذَابٍ اَلِیْمٍ ۟

அவன் முன்னிலையில் ஓதிக் காட்டப்படும் இறைவசனங்களை அவன் செவியேற்கிறான்; பிறகு முழு ஆணவத்துடன் (தன் நிராகரிப்பில்) அவன் பிடிவாதமாய் இருக்கின்றான், அவ்வசனங்களை அவன் செவியேற்காதது போன்று! இத்தகைய மனிதனுக்குத் துன்புறுத்தும் வேதனையைப் பற்றிய ‘நற்செய்தியை’ அறிவித்து விடும்.

9

وَاِذَا عَلِمَ مِنْ اٰیٰتِنَا شَیْـَٔا تَّخَذَهَا هُزُوًا ؕ اُولٰٓىِٕكَ لَهُمْ عَذَابٌ مُّهِیْنٌ ۟ؕ

நம்முடைய வசனங்களிலிருந்து ஏதேனும் ஒரு விஷயத்தை அவன் தெரிந்து கொள்ளும்போது அதனை பரிகாசமாய் ஆக்கிக் கொள்கிறான். இத்தகையோர் அனைவர்க்கும் இழிவு தரும் வேதனை இருக்கிறது.

10

مِنْ وَّرَآىِٕهِمْ جَهَنَّمُ ۚ وَلَا یُغْنِیْ عَنْهُمْ مَّا كَسَبُوْا شَیْـًٔا وَّلَا مَا اتَّخَذُوْا مِنْ دُوْنِ اللّٰهِ اَوْلِیَآءَ ۚ وَلَهُمْ عَذَابٌ عَظِیْمٌ ۟ؕ

அவர்களுக்கு எதிரில் நரகம் உள்ளது. (உலகில்) அவர்கள் சம்பாதித்தது எதுவும் எந்தப் பயனும் அவர்களுக்கு அளிக்காது. அல்லாஹ்வை விட்டுவிட்டு இவர்கள் யாரை பாதுகாவலர்களாய் எடுத்துக் கொண்டு இருக்கிறார்களோ அவர்களாலும் எதுவும் செய்ய முடியாது. மேலும், அவர்களுக்கு மாபெரும் வேதனை இருக்கிறது.

11

هٰذَا هُدًی ۚ وَالَّذِیْنَ كَفَرُوْا بِاٰیٰتِ رَبِّهِمْ لَهُمْ عَذَابٌ مِّنْ رِّجْزٍ اَلِیْمٌ ۟۠

இந்தக் குர்ஆன் முற்றிலும் நேர்வழியாய்த் திகழ்கின்றது. தங்கள் இறைவனின் வசனங்களை ஏற்க மறுத்தவர்களுக்கோ பெரும் வேதனை தரும் தண்டனை இருக்கிறது.

12

اَللّٰهُ الَّذِیْ سَخَّرَ لَكُمُ الْبَحْرَ لِتَجْرِیَ الْفُلْكُ فِیْهِ بِاَمْرِهٖ وَلِتَبْتَغُوْا مِنْ فَضْلِهٖ وَلَعَلَّكُمْ تَشْكُرُوْنَ ۟ۚ

அல்லாஹ்தான் உங்களுக்குக் கடலினை வசப்படுத்தித் தந்தான். அவனது கட்டளைப்படிக் கப்பல்கள் அதில் செல்வதற்காகவும், நீங்கள் அவனது அருளைத் தேடுவதற்காகவும்! மேலும், நீங்கள் நன்றி செலுத்துவோராகத் திகழ்வதற்காகவும்.

13

وَسَخَّرَ لَكُمْ مَّا فِی السَّمٰوٰتِ وَمَا فِی الْاَرْضِ جَمِیْعًا مِّنْهُ ؕ اِنَّ فِیْ ذٰلِكَ لَاٰیٰتٍ لِّقَوْمٍ یَّتَفَكَّرُوْنَ ۟

வானங்கள் மற்றும் பூமியின் அனைத்தையுமே உங்களுக்கு அவன் வசப்படுத்திக் கொடுத்தான். அனைத்தையும் தன் சார்பாகவே செய்தான். சிந்திக்கக்கூடிய மக்களுக்குத் திண்ணமாக இதில் பெரும் சான்றுகள் இருக்கின்றன.

14

قُلْ لِّلَّذِیْنَ اٰمَنُوْا یَغْفِرُوْا لِلَّذِیْنَ لَا یَرْجُوْنَ اَیَّامَ اللّٰهِ لِیَجْزِیَ قَوْمًا بِمَا كَانُوْا یَكْسِبُوْنَ ۟

(நபியே!) இறைநம்பிக்கையாளர்களிடம் நீர் கூறிவிடும்: “யார் அல்லாஹ்விடமிருந்து கெட்ட நாள் வருவது பற்றி எந்த எதிர்பார்ப்பும் இல்லாதிருக்கின்றார்களோ அவர்களின் நடவடிக் கைகளைக் கண்டுகொள்ளாது விட்டுவிடுங்கள் ஒரு சமுதாயத்திற்கு அவர்கள் சம்பாதித்ததற்கான கூலியை அல்லாஹ் கொடுப்பதற்காக!

15

مَنْ عَمِلَ صَالِحًا فَلِنَفْسِهٖ ۚ وَمَنْ اَسَآءَ فَعَلَیْهَا ؗ ثُمَّ اِلٰی رَبِّكُمْ تُرْجَعُوْنَ ۟

ஒருவர் ஏதேனும் நற்செயல்கள் செய்தால், அவற்றை அவர் தமக்காகவே செய்து கொள்கிறார். ஒருவர் ஏதேனும் தீய செயல் செய்தால் அவற்றின் விளைவை அவரே அனுபவிப்பார். பின்னர், நீங்கள் அனைவரும் உங்கள் அதிபதியிடமே திரும்பக் கொண்டு சொல்லப்பட இருக்கின்றீர்கள்.”

16

وَلَقَدْ اٰتَیْنَا بَنِیْۤ اِسْرَآءِیْلَ الْكِتٰبَ وَالْحُكْمَ وَالنُّبُوَّةَ وَرَزَقْنٰهُمْ مِّنَ الطَّیِّبٰتِ وَفَضَّلْنٰهُمْ عَلَی الْعٰلَمِیْنَ ۟ۚ

இதற்கு முன்பு இஸ்ராயீலின் வழித்தோன்றல்களுக்கு நாம் வேதம், ஞானம், தூதுத்துவம் ஆகியவற்றை வழங்கியிருந்தோம். நாம், அவர்களுக்குச் சிறந்த வாழ்வாதாரங்களையும் வழங்கியிருந்தோம். மேலும், உலக மக்கள் அனைவரைக் காட்டிலும், அவர்களுக்குச் சிறப்பை வழங்கியிருந்தோம்.

17

وَاٰتَیْنٰهُمْ بَیِّنٰتٍ مِّنَ الْاَمْرِ ۚ فَمَا اخْتَلَفُوْۤا اِلَّا مِنْ بَعْدِ مَا جَآءَهُمُ الْعِلْمُ ۙ بَغْیًا بَیْنَهُمْ ؕ اِنَّ رَبَّكَ یَقْضِیْ بَیْنَهُمْ یَوْمَ الْقِیٰمَةِ فِیْمَا كَانُوْا فِیْهِ یَخْتَلِفُوْنَ ۟

தீன் இறைமார்க்கம் சம்பந்தமாக அவர்களுக்குத் தெளிவான வழிகாட்டுதல்களை வழங்கினோம். பின்னர், அவர்களிடையே கருத்து முரண்பாடு ஏற்பட்டது (அறியாமையின் காரணத்தினால் அல்ல; மாறாக) அறிவு ஞானம் வந்த பின்னர்தான் அதுவும் அவர்கள் ஒருவர் மற்றவர் மீது அநீதி இழைக்க விரும்பிய காரணத்தால்தான் ஏற்பட்டது! திண்ணமாக, உம் இறைவன் மறுமைநாளில், அவர்கள் கருத்து முரண்பாடு கொண்டிருக்கின்ற விஷயங்களில் தீர்ப்பு வழங்குவான்.

18

ثُمَّ جَعَلْنٰكَ عَلٰی شَرِیْعَةٍ مِّنَ الْاَمْرِ فَاتَّبِعْهَا وَلَا تَتَّبِعْ اَهْوَآءَ الَّذِیْنَ لَا یَعْلَمُوْنَ ۟

பிறகு (நபியே!) இப்போது தீன் சம்பந்தமான விஷயங்களில் தெளிவான, பிரதான மார்க்கத்தில் (ஷரீஅத்தில்) உம்மை நாம் நிலை நிறுத்தியிருக்கிறோம். எனவே, நீர் அதையே பின்பற்றும். அறியாத மக்களின் மன இச்சைகளைப் பின்பற்றாதீர்.

19

اِنَّهُمْ لَنْ یُّغْنُوْا عَنْكَ مِنَ اللّٰهِ شَیْـًٔا ؕ وَاِنَّ الظّٰلِمِیْنَ بَعْضُهُمْ اَوْلِیَآءُ بَعْضٍ ۚ وَاللّٰهُ وَلِیُّ الْمُتَّقِیْنَ ۟

அல்லாஹ்வுக்கு எதிராக உமக்கு அவர்களால் எந்தப் பயனும் தர முடியாது. மேலும், கொடுமை புரிபவர்களே தங்களுக்குள் ஒருவருக்கொருவர் தோழர்களாக இருக்கின்றார்கள். மேலும், இறையச்சமுடையோர்க்கு அல்லாஹ் தோழனாக இருக்கின்றான்.

20

هٰذَا بَصَآىِٕرُ لِلنَّاسِ وَهُدًی وَّرَحْمَةٌ لِّقَوْمٍ یُّوْقِنُوْنَ ۟

இவை, மனிதர்கள் அனைவருக்கும் பகுத்துணரும் சான்றுகளாய் இருக்கின்றன. மேலும், உறுதி கொள்ளக்கூடிய மக்களுக்கு வழிகாட்டியாகவும் கருணையாகவும் இருக்கின்றது.

21

اَمْ حَسِبَ الَّذِیْنَ اجْتَرَحُوا السَّیِّاٰتِ اَنْ نَّجْعَلَهُمْ كَالَّذِیْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ ۙ سَوَآءً مَّحْیَاهُمْ وَمَمَاتُهُمْ ؕ سَآءَ مَا یَحْكُمُوْنَ ۟۠

தீமைகளைச் செய்தவர்களையும், இறைநம்பிக்கை கொண்டு நற்செயல்கள் புரிந்தவர்களையும் இரு சாராரின் வாழ்வும் மரணமும் சமமாகும் விதத்தில் ஒன்றுபோல் ஆக்கி விடுவோம் என்று எண்ணிக்கொண்டார்களா என்ன? இவர்கள் செய்யும் முடிவு எவ்வளவு கெட்டது!

22

وَخَلَقَ اللّٰهُ السَّمٰوٰتِ وَالْاَرْضَ بِالْحَقِّ وَلِتُجْزٰی كُلُّ نَفْسٍ بِمَا كَسَبَتْ وَهُمْ لَا یُظْلَمُوْنَ ۟

அல்லாஹ் வானங்களையும் பூமியையும் சத்தியத்துடன் படைத்திருக்கிறான் ஒவ்வொரு மனிதனுக்கும் அவனவன் சம்பாதித்த கூலி வழங்கப்பட வேண்டும்; மக்கள் மீது சிறிதும் அநீதி இழைக்கப்படக் கூடாது என்பதற்காக!

23

اَفَرَءَیْتَ مَنِ اتَّخَذَ اِلٰهَهٗ هَوٰىهُ وَاَضَلَّهُ اللّٰهُ عَلٰی عِلْمٍ وَّخَتَمَ عَلٰی سَمْعِهٖ وَقَلْبِهٖ وَجَعَلَ عَلٰی بَصَرِهٖ غِشٰوَةً ؕ فَمَنْ یَّهْدِیْهِ مِنْ بَعْدِ اللّٰهِ ؕ اَفَلَا تَذَكَّرُوْنَ ۟

தனது மன இச்சையைத் தன்னுடைய கடவுளாக்கிக் கொண்ட மனிதனின் நிலையை எப்போதேனும் நீர் சிந்தித்ததுண்டா? அறிவுடனேயே அல்லாஹ் அவனை வழிகேட்டில் தள்ளிவிட்டான். மேலும், அவனுடைய காதுகளிலும், இதயத்திலும் முத்திரையிட்டுவிட்டான். மேலும் அவனுடைய கண்கள்மீது திரையிட்டு விட்டான். இனி அல்லாஹ்வைத் தவிர அவனுக்கு நேர்வழிகாட்டக்கூடியவர் யார்? என்ன, நீங்கள் எந்தப் படிப்பினையும் பெறுவதில்லையா?

24

وَقَالُوْا مَا هِیَ اِلَّا حَیَاتُنَا الدُّنْیَا نَمُوْتُ وَنَحْیَا وَمَا یُهْلِكُنَاۤ اِلَّا الدَّهْرُ ۚ وَمَا لَهُمْ بِذٰلِكَ مِنْ عِلْمٍ ۚ اِنْ هُمْ اِلَّا یَظُنُّوْنَ ۟

மேலும், இந்த மக்கள் கூறுகிறார்கள்: “வாழ்க்கை என்பது நம்முடைய இந்த உலக வாழ்க்கைதான். இங்குதான் நாம் மரணிக்கவும் உயிர்வாழவும் செய்கின்றோம். கால ஓட்டமல்லாமல் வேறெதுவும் நம்மை அழிப்பதில்லை” உண்மையில் இது சம்பந்தமாக இவர்களிடம் எந்த ஞானமும் இல்லை. இவர்கள் வெறும் ஊகத்தின் அடிப்படையில்தான் இப்படிக் கூறுகிறார்கள்.

25

وَاِذَا تُتْلٰی عَلَیْهِمْ اٰیٰتُنَا بَیِّنٰتٍ مَّا كَانَ حُجَّتَهُمْ اِلَّاۤ اَنْ قَالُوا ائْتُوْا بِاٰبَآىِٕنَاۤ اِنْ كُنْتُمْ صٰدِقِیْنَ ۟

மேலும், நம்முடைய தெளிவான வசனங்கள் இவர்களிடம் ஓதிக் காட்டப்படும்போது “நீங்கள் உண்மையாளர்கள் என்றால் எங்கள் முன்னோரை எழுப்பிக் கொண்டுவாருங்கள்” என்று கூறுவதைத் தவிர வேறு எந்த ஆதாரமும் இவர்களிடம் இருப்பதில்லை.

26

قُلِ اللّٰهُ یُحْیِیْكُمْ ثُمَّ یُمِیْتُكُمْ ثُمَّ یَجْمَعُكُمْ اِلٰی یَوْمِ الْقِیٰمَةِ لَا رَیْبَ فِیْهِ وَلٰكِنَّ اَكْثَرَ النَّاسِ لَا یَعْلَمُوْنَ ۟۠

(நபியே, இவர்களிடம்) கூறும்: அல்லாஹ்தான் உங்களை உயிர் வாழச் செய்கின்றான். பின்னர் அவனே உங்களை மரணமடையச் செய்கின்றான். பின்னர், அந்த மறுமைநாளின்போது அவனே உங்களை ஒன்றுதிரட்டுவான். அந்நாளின் வருகையில் எந்தச் சந்தேகமும் இல்லை. எனினும் பெரும்பாலோர் அறிவதில்லை.

27

وَلِلّٰهِ مُلْكُ السَّمٰوٰتِ وَالْاَرْضِ ؕ وَیَوْمَ تَقُوْمُ السَّاعَةُ یَوْمَىِٕذٍ یَّخْسَرُ الْمُبْطِلُوْنَ ۟

வானங்கள் மற்றும் பூமியின் ஆட்சி அல்லாஹ்வுக்கே உரியது. மேலும், மறுமைநாள் வந்துவிடும்போது அசத்தியவாதிகள் நஷ்டத்திலேயே கிடப்பார்கள்.

28

وَتَرٰی كُلَّ اُمَّةٍ جَاثِیَةً ۫ كُلُّ اُمَّةٍ تُدْعٰۤی اِلٰی كِتٰبِهَا ؕ اَلْیَوْمَ تُجْزَوْنَ مَا كُنْتُمْ تَعْمَلُوْنَ ۟

அந்நேரம் ஒவ்வொரு சமூகமும் முழந்தாளிட்டு விழுந்திருப்பதை நீர் காண்பீர். “வாருங்கள், உங்கள் வினைச்சுவடியைப் பாருங்கள்” என்று ஒவ்வொரு சமுதாயத்தினரும் அழைக்கப்படுவர் (அவர்களிடம் கூறப்படும்:) “நீங்கள் செய்துகொண்டிருந்த செயல்களுக்குப் பிரதிபலன் இன்று உங்களுக்குக் கொடுக்கப்படும்.

29

هٰذَا كِتٰبُنَا یَنْطِقُ عَلَیْكُمْ بِالْحَقِّ ؕ اِنَّا كُنَّا نَسْتَنْسِخُ مَا كُنْتُمْ تَعْمَلُوْنَ ۟

இது, நாம் தயாரித்த வினைச்சுவடி. உங்கள் மீது மிகச் சரியாக சாட்சியம் அளித்துக் கொண்டிருக்கிறது. நீங்கள் செய்துவந்த செயல்களை நாம் எழுதச் செய்துகொண்டிருந்தோம்.

30

فَاَمَّا الَّذِیْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ فَیُدْخِلُهُمْ رَبُّهُمْ فِیْ رَحْمَتِهٖ ؕ ذٰلِكَ هُوَ الْفَوْزُ الْمُبِیْنُ ۟

இனி எவர்கள் நம்பிக்கை கொண்டு நற்செயல்கள் புரிந்தார்களோ அவர்களை, அவர்களின் அதிபதி தன் கருணையில் நுழைவிப்பான். இதுவே தெளிவான வெற்றியாகும்.”

31

وَاَمَّا الَّذِیْنَ كَفَرُوْا ۫ اَفَلَمْ تَكُنْ اٰیٰتِیْ تُتْلٰی عَلَیْكُمْ فَاسْتَكْبَرْتُمْ وَكُنْتُمْ قَوْمًا مُّجْرِمِیْنَ ۟

மேலும், எவர்கள் நிராகரித்தார்களோ (அவர்களிடம் சொல்லப்படும்:) “என்னுடைய வசனங்கள் உங்களிடம் ஓதிக்காட்டப்படவில்லையா? ஆனால், நீங்கள் பெருமையடித்தீர்கள். மேலும், குற்றம்செய்யும் மக்களாய் இருந்தீர்கள்.

32

وَاِذَا قِیْلَ اِنَّ وَعْدَ اللّٰهِ حَقٌّ وَّالسَّاعَةُ لَا رَیْبَ فِیْهَا قُلْتُمْ مَّا نَدْرِیْ مَا السَّاعَةُ ۙ اِنْ نَّظُنُّ اِلَّا ظَنًّا وَّمَا نَحْنُ بِمُسْتَیْقِنِیْنَ ۟

மேலும், அல்லாஹ்வின் வாக்குறுதி உண்மையானது என்றும் மறுமைநாள் வருவதில் எவ்வித ஐயமும் இல்லை என்றும் சொல்லப்பட்டால் “மறுமை என்றால் என்னவென்றே எங்களுக்குத் தெரியாது. நாங்கள் வெறும் ஊகம்தான் கொண்டிருக்கின்றோம்; உறுதிகொள்ளக் கூடியவர்களாய் இல்லை” என்று நீங்கள் கூறிக்கொண்டிருந்தீர்கள்.

33

وَبَدَا لَهُمْ سَیِّاٰتُ مَا عَمِلُوْا وَحَاقَ بِهِمْ مَّا كَانُوْا بِهٖ یَسْتَهْزِءُوْنَ ۟

அந்த நேரம் அவர்களுடைய செயல்களின் தீய விளைவு அவர்களுக்குத் தென்பட்டுவிடும். மேலும், அவர்கள் எதைப் பரிகாசம் செய்து கொண்டிருந்தார்களோ, அதுவே அவர்களைச் சூழ்ந்து கொள்ளும்.

34

وَقِیْلَ الْیَوْمَ نَنْسٰىكُمْ كَمَا نَسِیْتُمْ لِقَآءَ یَوْمِكُمْ هٰذَا وَمَاْوٰىكُمُ النَّارُ وَمَا لَكُمْ مِّنْ نّٰصِرِیْنَ ۟

மேலும், அவர்களிடம் கூறப்படும்: “நீங்கள் இந்நாளின் சந்திப்பை எப்படி மறந்திருந்தீர்களோ அப்படியே இன்று நாம் உங்களை மறந்துவிடுகின்றோம். உங்கள் இருப்பிடம் இனி நரகம்தான். மேலும், உங்களுக்கு உதவி செய்வோர் எவரும் இல்லை.

35

ذٰلِكُمْ بِاَنَّكُمُ اتَّخَذْتُمْ اٰیٰتِ اللّٰهِ هُزُوًا وَّغَرَّتْكُمُ الْحَیٰوةُ الدُّنْیَا ۚ فَالْیَوْمَ لَا یُخْرَجُوْنَ مِنْهَا وَلَا هُمْ یُسْتَعْتَبُوْنَ ۟

உங்களுக்கு இந்தக் கதி ஏற்பட்டதற்குக் காரணம், நீங்கள் அல்லாஹ்வின் வசனங்களைப் பரிகாசம் செய்து கொண்டிருந்தீர்கள். மேலும், உலக வாழ்வு உங்களை ஏமாற்றத்தில் ஆழ்த்தியிருந்தது. எனவே இன்று இவர்கள் நரகத்திலிருந்து விடுவிக்கப்படவும் மாட்டார்கள். மன்னிப்புக்கோரி (உங்கள் அதிபதியின்) உவப்பைப் பெறுங்கள் என்று இவர்களிடம் கூறப்படவும் மாட்டாது.

36

فَلِلّٰهِ الْحَمْدُ رَبِّ السَّمٰوٰتِ وَرَبِّ الْاَرْضِ رَبِّ الْعٰلَمِیْنَ ۟

வானங்கள் மற்றும் பூமியின் அதிபதியும், அகிலத்தார் அனைவரையும் பரிபாலிப்பவனுமாகிய அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும்!

37

وَلَهُ الْكِبْرِیَآءُ فِی السَّمٰوٰتِ وَالْاَرْضِ ۪ وَهُوَ الْعَزِیْزُ الْحَكِیْمُ ۟۠

வானங்களிலும் பூமியிலும் பெருமை அவனுக்கே உரியதாகும். மேலும் அவன் மிகவும் வல்லமை மிக்கவனாகவும் நுண்ணறிவாளனாகவும் இருக்கின்றான்.

PreviousAd-DukhanNextAl-Ahqaf

0:00–:––