حٰمٓ ۟ۚۛ
ஹாமீம்;
Surah 44
Ad-Dukhan
44. ஸூரத்துத் துகான் (புகை)
59 verses
بِسْمِ اللّٰهِ الرَّحْمٰنِ الرَّحِیْمِ
حٰمٓ ۟ۚۛ
ஹாமீம்;
وَالْكِتٰبِ الْمُبِیْنِ ۟ۙۛ
தெளிவான இந்த வேதத்தின் மீது சத்தியமாக!
اِنَّاۤ اَنْزَلْنٰهُ فِیْ لَیْلَةٍ مُّبٰرَكَةٍ اِنَّا كُنَّا مُنْذِرِیْنَ ۟
நாம் இதனை, அருள்பாலிக்கப்பட்ட ஓர் இரவில் இறக்கிவைத்தோம். ஏனெனில், நாம் மக்களுக்கு முன்னெச்சரிக்கை செய்ய நாடியிருந்தோம்!
فِیْهَا یُفْرَقُ كُلُّ اَمْرٍ حَكِیْمٍ ۟ۙ
அது எத்தகைய இரவு எனில், அதில்தான் ஒவ்வொரு விவகாரத்துக்கும் விவேக மிக்க தீர்ப்பு நம்முடைய கட்டளையினால் பிறப்பிக்கப்படுகின்றது.
اَمْرًا مِّنْ عِنْدِنَا ؕ اِنَّا كُنَّا مُرْسِلِیْنَ ۟ۚ
நாம் ஒரு தூதரை அனுப்புகிறவர்களாய் இருந்தோம்.
رَحْمَةً مِّنْ رَّبِّكَ ؕ اِنَّهٗ هُوَ السَّمِیْعُ الْعَلِیْمُ ۟ۙ
உம் இறைவனுடைய கருணையின் அடிப்படையில்! திண்ணமாக, அவன் அனைத்தையும் கேட்கக்கூடியவனாகவும், அறியக்கூடியவனாகவும் இருக்கின்றான்
رَبِّ السَّمٰوٰتِ وَالْاَرْضِ وَمَا بَیْنَهُمَا ۘ اِنْ كُنْتُمْ مُّوْقِنِیْنَ ۟
நீங்கள் உண்மையில் உறுதியான நம்பிக்கையுடையவர்களாய் இருந்தால்! அவன் வானங்கள் மற்றும் பூமியின் அதிபதியாகவும் அவ்விரண்டிற்கிடையே உள்ள அனைத்திற்கும் அதிபதியாகவும் இருக்கின்றான் (என்பதைக் காண்பீர்கள்).
لَاۤ اِلٰهَ اِلَّا هُوَ یُحْیٖ وَیُمِیْتُ ؕ رَبُّكُمْ وَرَبُّ اٰبَآىِٕكُمُ الْاَوَّلِیْنَ ۟
அவனைத் தவிர வணக்கத்திற்குரிய இறைவன் வேறு யாரும் இல்லை. வாழ்வளிப்பவன் அவனே; மரணத்தை அளிப்பவனும் அவனே! அவனே உங்களுக்கும் அதிபதி; முன்னர் வாழ்ந்து சென்ற உங்கள் முன்னோர்களுக்கும் அதிபதி.
بَلْ هُمْ فِیْ شَكٍّ یَّلْعَبُوْنَ ۟
(ஆனால், உண்மையில் இவர்களுக்கு உறுதியான நம்பிக்கை இல்லை.) ஏனெனில், இவர்கள் சந்தேகத்தில் வீழ்ந்து விளையாடிக் கொண்டிருக்கின்றார்கள்.
فَارْتَقِبْ یَوْمَ تَاْتِی السَّمَآءُ بِدُخَانٍ مُّبِیْنٍ ۟ۙ
சரி, இனி ஒரு நாளை எதிர்பார்த்திருப்பீராக! அந்நாளில் வானம் வெளிப்படையான புகையைக் கொண்டுவரும்.
یَّغْشَی النَّاسَ ؕ هٰذَا عَذَابٌ اَلِیْمٌ ۟
அது மக்கள் மீது மூடிக்கொள்ளும். இது துன்புறுத்தக்கூடிய தண்டனையாகும்.
رَبَّنَا اكْشِفْ عَنَّا الْعَذَابَ اِنَّا مُؤْمِنُوْنَ ۟
(அப்போது கூறுவார்கள்:) “எங்கள் அதிபதியே! எங்களை விட்டு இந்த வேதனையை நீக்கி அருள். நிச்சயமாக நாங்கள் நம்பிக்கை கொண்டு விடுகிறோம்.”
اَنّٰی لَهُمُ الذِّكْرٰی وَقَدْ جَآءَهُمْ رَسُوْلٌ مُّبِیْنٌ ۟ۙ
இவர்களின் உணர்வில்லாத நிலை எங்கே மாறப்போகிறது? வெளிப்படையான இறைத்தூதர் இவர்களிடம் வந்தும்,
ثُمَّ تَوَلَّوْا عَنْهُ وَقَالُوْا مُعَلَّمٌ مَّجْنُوْنٌ ۟ۘ
இவர்கள் அவர் பக்கம் கவனம் செலுத்தவில்லை என்பதுதானே இவர்களின் நிலை! “இவர் நன்கு பயிற்றுவிக்கப்பட்ட பைத்தியக்காரர்!” என்று சொன்னார்கள்.
اِنَّا كَاشِفُوا الْعَذَابِ قَلِیْلًا اِنَّكُمْ عَآىِٕدُوْنَ ۟ۘ
நாம் சற்று வேதனையை அகற்றிவிடுகின்றோம். அப்போது நீங்கள் முன்னர் செய்து கொண்டிருந்ததைத்தான் மீண்டும் செய்வீர்கள்.
یَوْمَ نَبْطِشُ الْبَطْشَةَ الْكُبْرٰی ۚ اِنَّا مُنْتَقِمُوْنَ ۟
நாம் பலத்த அடி கொடுக்கும் நாளில் நாம் உங்களிடம் பழி வாங்கியே தீருவோம்.
وَلَقَدْ فَتَنَّا قَبْلَهُمْ قَوْمَ فِرْعَوْنَ وَجَآءَهُمْ رَسُوْلٌ كَرِیْمٌ ۟ۙ
திண்ணமாக, நாம் இவர்களுக்கு முன்னர் ஃபிர்அவ்னின் சமூகத்தை சோதித்திருக்கிறோம். அவர்களிடம் கண்ணியமான ஓர் இறைத்தூதர் வந்தார்.
اَنْ اَدُّوْۤا اِلَیَّ عِبَادَ اللّٰهِ ؕ اِنِّیْ لَكُمْ رَسُوْلٌ اَمِیْنٌ ۟ۙ
மேலும், அவர் கூறினார்: “அல்லாஹ்வின் அடியார்களை என்னிடம் ஒப்படைத்து விடுங்கள். நான் உங்களுக்காக அனுப்பப்பட்ட நம்பிக்கைக்குரிய இறைத்தூதராவேன்.
وَّاَنْ لَّا تَعْلُوْا عَلَی اللّٰهِ ؕ اِنِّیْۤ اٰتِیْكُمْ بِسُلْطٰنٍ مُّبِیْنٍ ۟ۚ
மேலும், அல்லாஹ்வின் விஷயத்தில் நீங்கள் வரம்பு மீறாதீர்கள். நான் உங்களிடம் (என்னுடைய நியமனம் பற்றிய) தெளிவான ஒரு சான்றினைக் கொண்டு வந்திருக்கின்றேன்.
وَاِنِّیْ عُذْتُ بِرَبِّیْ وَرَبِّكُمْ اَنْ تَرْجُمُوْنِ ۟ؗ
நீங்கள் என்மீது தாக்குதல் தொடுப்பதைவிட்டு என்னுடையவும் உங்களுடையவும் அதிபதியிடம் பாதுகாப்பு கோரியிருக்கின்றேன்.
وَاِنْ لَّمْ تُؤْمِنُوْا لِیْ فَاعْتَزِلُوْنِ ۟
நான் சொல்வதை நீங்கள் ஏற்றுக் கொள்ளவில்லையெனில் என் மீது கைவைப்பதைத் தவிர்த்துக் கொள்ளுங்கள்.”
فَدَعَا رَبَّهٗۤ اَنَّ هٰۤؤُلَآءِ قَوْمٌ مُّجْرِمُوْنَ ۟
இறுதியில், “இவர்கள் குற்றம் புரியக்கூடிய மக்களாய் இருக்கின்றனர்” என்று அவர் தம் இறைவனிடம் முறையிட்டார்.
فَاَسْرِ بِعِبَادِیْ لَیْلًا اِنَّكُمْ مُّتَّبَعُوْنَ ۟ۙ
(பதிலளிக்கப்பட்டது:) “என் அடியார்களை இரவோடிரவாக அழைத்துச் சென்றுவிடும்! திண்ணமாக, நீங்கள் பின் தொடரப்படுவீர்கள்.
وَاتْرُكِ الْبَحْرَ رَهْوًا ؕ اِنَّهُمْ جُنْدٌ مُّغْرَقُوْنَ ۟
கடலினை அதன் பிளந்த நிலையிலேயே விட்டுவிடும். திண்ணமாக, இந்தப் படையினர் அனைவரும் மூழ்கடிக்கப்பட வேண்டியவர்களாவர்!”
كَمْ تَرَكُوْا مِنْ جَنّٰتٍ وَّعُیُوْنٍ ۟ۙ
எத்தனையோ தோட்டங்களையும், நீரூற்றுகளையும்,
وَّزُرُوْعٍ وَّمَقَامٍ كَرِیْمٍ ۟ۙ
வயல்களையும், மிகச்சிறப்பான இல்லங்களையும்,
وَّنَعْمَةٍ كَانُوْا فِیْهَا فٰكِهِیْنَ ۟ۙ
அவர்கள் பயன்படுத்தி மகிழ்ந்த எத்தனையோ வாழ்க்கைச் சாதனங்களையும் அவர்கள் விட்டுச் சென்றார்கள்.
كَذٰلِكَ ۫ وَاَوْرَثْنٰهَا قَوْمًا اٰخَرِیْنَ ۟
இதுவே அவர்கள் அடைந்த கதி. மேலும், இந்தப் பொருள்களுக்கு வேறு மக்களை நாம் வாரிசுகளாக்கினோம்
فَمَا بَكَتْ عَلَیْهِمُ السَّمَآءُ وَالْاَرْضُ وَمَا كَانُوْا مُنْظَرِیْنَ ۟۠
பிறகு அவர்களுக்காக வானமும் அழவில்லை, பூமியும் அழவில்லை. இன்னும் சிறிதளவு அவகாசம் கூட அவர்களுக்குத் தரப்படவில்லை.
وَلَقَدْ نَجَّیْنَا بَنِیْۤ اِسْرَآءِیْلَ مِنَ الْعَذَابِ الْمُهِیْنِ ۟ۙ
இவ்வாறு இஸ்ராயீலின் வழித்தோன்றல்களை நாம் கடும் இழிவுபடுத்தும் வேதனையிலிருந்து அதாவது ஃபிர்அவ்னிடமிருந்து காப்பாற்றினோம்.
مِنْ فِرْعَوْنَ ؕ اِنَّهٗ كَانَ عَالِیًا مِّنَ الْمُسْرِفِیْنَ ۟
உண்மையில், அவன் வரம்பு மீறுவோரில் அனைவரையும்விட மிகக் கொடியவனாக இருந்தான்.
وَلَقَدِ اخْتَرْنٰهُمْ عَلٰی عِلْمٍ عَلَی الْعٰلَمِیْنَ ۟ۚ
மேலும், அவர்களின் நிலைமையை அறிந்தே உலகின் பிற சமுதாயங்களைவிட அவர்களுக்கு முன்னுரிமை அளித்தோம்.
وَاٰتَیْنٰهُمْ مِّنَ الْاٰیٰتِ مَا فِیْهِ بَلٰٓؤٌا مُّبِیْنٌ ۟
மேலும், அவர்களுக்கு எத்தகைய அத்தாட்சிகளை காண்பித்தோம் எனில் அவற்றில் வெளிப்படையான சோதனை இருந்தது.
اِنَّ هٰۤؤُلَآءِ لَیَقُوْلُوْنَ ۟ۙ
இந்த மக்கள் கூறுகின்றார்கள்:
اِنْ هِیَ اِلَّا مَوْتَتُنَا الْاُوْلٰی وَمَا نَحْنُ بِمُنْشَرِیْنَ ۟
“எங்களுக்கு முதலில் ஏற்படும் மரணத்தைத் தவிர வேறெதுவும் இல்லை. அதன் பிறகு நாங்கள் மீண்டும் எழுப்பப்பட மாட்டோம்.
فَاْتُوْا بِاٰبَآىِٕنَاۤ اِنْ كُنْتُمْ صٰدِقِیْنَ ۟
நீங்கள் உண்மையாளர்களாய் இருந்தால், எங்களுடைய முன்னோரை எழுப்பிக் கொண்டு வாருங்கள்.”
اَهُمْ خَیْرٌ اَمْ قَوْمُ تُبَّعٍ ۙ وَّالَّذِیْنَ مِنْ قَبْلِهِمْ ؕ اَهْلَكْنٰهُمْ ؗ اِنَّهُمْ كَانُوْا مُجْرِمِیْنَ ۟
இவர்கள் சிறந்தவர்களா? ‘துப்பஃஉ’ சமூகத்தாரும் அவர்களுக்கு முந்தியவர்களும் சிறந்தவர்களா? நாம் அவர்களை அழித்தோம். அவர்கள் குற்றம் புரிவோராய் இருந்த காரணத்தால்!
وَمَا خَلَقْنَا السَّمٰوٰتِ وَالْاَرْضَ وَمَا بَیْنَهُمَا لٰعِبِیْنَ ۟
இந்த வானங்களையும், பூமியையும் அவற்றிற்கிடையே உள்ளவற்றையும் விளையாட்டுக்காக நாம் படைக்கவில்லை.
مَا خَلَقْنٰهُمَاۤ اِلَّا بِالْحَقِّ وَلٰكِنَّ اَكْثَرَهُمْ لَا یَعْلَمُوْنَ ۟
அவற்றைச் சத்தியத்துடன் படைத்திருக்கின்றோம். ஆனால், இவர்களில் பெரும்பாலோர் அறிவதில்லை.
اِنَّ یَوْمَ الْفَصْلِ مِیْقَاتُهُمْ اَجْمَعِیْنَ ۟ۙ
இவர்கள் அனைவரையும் எழுப்புவதற்குத் தீர்மானிக்கப்பட்டிருக்கும் காலம் தீர்ப்பளிக்கும் நாளாகும்.
یَوْمَ لَا یُغْنِیْ مَوْلًی عَنْ مَّوْلًی شَیْـًٔا وَّلَا هُمْ یُنْصَرُوْنَ ۟ۙ
அந்நாளில் எந்த நண்பரும் தன்னுடைய நெருங்கிய எந்த நண்பருக்கும் எந்தப் பயனையும் அளிக்கமாட்டார். மேலும், அவர்களுக்கு எங்கிருந்தும் எந்த உதவியும் கிடைக்காது;
اِلَّا مَنْ رَّحِمَ اللّٰهُ ؕ اِنَّهٗ هُوَ الْعَزِیْزُ الرَّحِیْمُ ۟۠
ஆனால், அல்லாஹ்வே யாருக்காவது கருணை புரிந்தாலே தவிர! திண்ணமாக, அவனோ மிக வலிமை வாய்ந்தவனாகவும், கிருபையாளனாகவும் இருக்கின்றான்.
اِنَّ شَجَرَتَ الزَّقُّوْمِ ۟ۙ
‘ஸக்கூம்’ மரம்;
طَعَامُ الْاَثِیْمِ ۟
பாவியின் உணவாக இருக்கும்.
كَالْمُهْلِ ۛۚ یَغْلِیْ فِی الْبُطُوْنِ ۟ۙ
அது எண்ணெய்க் கசடு போலிருக்கும்.
كَغَلْیِ الْحَمِیْمِ ۟
சூடேறிய நீர் கொதிப்பது போன்று வயிற்றில் அது கொதிக்கும்.
خُذُوْهُ فَاعْتِلُوْهُ اِلٰی سَوَآءِ الْجَحِیْمِ ۟ۗۖ
“பிடியுங்கள் அவனை! நரகத்தின் நடுப்பகுதியில் இழுத்துச் செல்லுங்கள்.
ثُمَّ صُبُّوْا فَوْقَ رَاْسِهٖ مِنْ عَذَابِ الْحَمِیْمِ ۟ؕ
அவனது தலைமீது கொதிக்கும் நீரை ஊற்றி வேதனைப்படுத்துங்கள்.
ذُقْ ۙۚ اِنَّكَ اَنْتَ الْعَزِیْزُ الْكَرِیْمُ ۟
நீ சுவைத்துப் பார், இதன் சுவையை! பெரும் வல்லமை படைத்த கண்ணியமிக்கவனல்லவா நீ
اِنَّ هٰذَا مَا كُنْتُمْ بِهٖ تَمْتَرُوْنَ ۟
நீங்கள் எதன் வருகையை சந்தேகித்துக் கொண்டிருந்தீர்களோ அதுதான் இது!”
اِنَّ الْمُتَّقِیْنَ فِیْ مَقَامٍ اَمِیْنٍ ۟ۙ
இறையச்சமுடையவர்கள் அமைதியான இடத்தில் இருப்பார்கள்;
فِیْ جَنّٰتٍ وَّعُیُوْنٍ ۟ۚۙ
தோட்டங்களிலும், நீரூற்றுகளிலும் இருப்பார்கள்.
یَّلْبَسُوْنَ مِنْ سُنْدُسٍ وَّاِسْتَبْرَقٍ مُّتَقٰبِلِیْنَ ۟ۚۙ
தடித்த மற்றும் மெல்லிய பட்டாடைகளை அணிந்து கொண்டு எதிரெதிரே அமர்ந்திருப்பார்கள்.
كَذٰلِكَ ۫ وَزَوَّجْنٰهُمْ بِحُوْرٍ عِیْنٍ ۟ؕ
இதுதான் அவர்களின் நிலைமையாகும். மேலும், நாம் அழகிய தோற்றமுள்ள எழில்விழி மங்கையரை அவர்களுக்கு ஜோடிகளாக்கிக் கொடுப்போம்.
یَدْعُوْنَ فِیْهَا بِكُلِّ فَاكِهَةٍ اٰمِنِیْنَ ۟ۙ
அங்கு அவர்கள் மன நிம்மதியுடன் எல்லாவிதமான சுவைமிகு பொருட்களையும் கேட்பார்கள்.
لَا یَذُوْقُوْنَ فِیْهَا الْمَوْتَ اِلَّا الْمَوْتَةَ الْاُوْلٰی ۚ وَوَقٰىهُمْ عَذَابَ الْجَحِیْمِ ۟ۙ
ஏற்கனவே உலகில் அடைந்த மரணம் தவிர, மறு மரணத்தை அவர்கள் அனுபவிக்க மாட்டார்கள். மேலும், உம் இறைவன் தன்னுடைய கருணையினால் அவர்களை நரக வேதனையிலிருந்து காப்பாற்றிவிடுவான்.
فَضْلًا مِّنْ رَّبِّكَ ؕ ذٰلِكَ هُوَ الْفَوْزُ الْعَظِیْمُ ۟
இதுவே மாபெரும் வெற்றியாகும்.
فَاِنَّمَا یَسَّرْنٰهُ بِلِسَانِكَ لَعَلَّهُمْ یَتَذَكَّرُوْنَ ۟
(நபியே!) இவர்கள் அறிவுரை பெற வேண்டும் என்பதற்காக நாம் இந்த வேதத்தை உம்முடைய மொழியில் எளிமையாக்கித் தந்துள்ளோம்.
فَارْتَقِبْ اِنَّهُمْ مُّرْتَقِبُوْنَ ۟۠
இனி நீரும் எதிர்பாரும்! இவர்களும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றார்கள்!