بَرَآءَةٌ مِّنَ اللّٰهِ وَرَسُوْلِهٖۤ اِلَی الَّذِیْنَ عٰهَدْتُّمْ مِّنَ الْمُشْرِكِیْنَ ۟ؕ
நீங்கள் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ள இணைவைப்பாளர்களுக்கு, அவர்களை விட்டு அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் விலகிக் கொண்டனர் என்று விடுக்கப்படும் அறிவிப்பாகும் இது.
Surah 9
At-Tawbah
9. ஸூரத்துத் தவ்பா (மனவருந்தி மன்னிப்பு தேடுதல்)
129 verses
بَرَآءَةٌ مِّنَ اللّٰهِ وَرَسُوْلِهٖۤ اِلَی الَّذِیْنَ عٰهَدْتُّمْ مِّنَ الْمُشْرِكِیْنَ ۟ؕ
நீங்கள் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ள இணைவைப்பாளர்களுக்கு, அவர்களை விட்டு அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் விலகிக் கொண்டனர் என்று விடுக்கப்படும் அறிவிப்பாகும் இது.
فَسِیْحُوْا فِی الْاَرْضِ اَرْبَعَةَ اَشْهُرٍ وَّاعْلَمُوْۤا اَنَّكُمْ غَیْرُ مُعْجِزِی اللّٰهِ ۙ وَاَنَّ اللّٰهَ مُخْزِی الْكٰفِرِیْنَ ۟
எனவே, (இணை வைப்பாளரான) நீங்கள் நான்கு மாதங்களுக்கு பூமியில் நடமாடிக் கொள்ளுங்கள்; மேலும் திண்ணமாக நீங்கள் அல்லாஹ்வை தோல்வியுறச் செய்ய முடியாது என்பதையும், சத்தியத்தை நிராகரிப்பவர்களை நிச்சயம் அல்லாஹ் இழிவுபடுத்துவான் என்பதையும் அறிந்து கொள்ளுங்கள்!
وَاَذَانٌ مِّنَ اللّٰهِ وَرَسُوْلِهٖۤ اِلَی النَّاسِ یَوْمَ الْحَجِّ الْاَكْبَرِ اَنَّ اللّٰهَ بَرِیْٓءٌ مِّنَ الْمُشْرِكِیْنَ ۙ۬ وَرَسُوْلُهٗ ؕ فَاِنْ تُبْتُمْ فَهُوَ خَیْرٌ لَّكُمْ ۚ وَاِنْ تَوَلَّیْتُمْ فَاعْلَمُوْۤا اَنَّكُمْ غَیْرُ مُعْجِزِی اللّٰهِ ؕ وَبَشِّرِ الَّذِیْنَ كَفَرُوْا بِعَذَابٍ اَلِیْمٍ ۟ۙ
மேலும், மாபெரும் ஹஜ்ஜுடைய நாளில் அல்லாஹ் மற்றும் அவனுடைய தூதரின் சார்பில் எல்லா மக்களுக்கும் விடுக்கப்படும் பொது அறிவிப்பு என்னவெனில், இறைவனுக்கு இணைவைப்பவர்களை விட்டு அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் திண்ணமாக விலகி விட்டார்கள். ஆகவே, நீங்கள் பாவமன்னிப்புத் தேடி மீளுவீர்களாயின் அது உங்களுக்கு நன்மை பயக்கும். நீங்கள் புறக்கணித்தால், அல்லாஹ்வை நீங்கள் தோல்வியுறச் செய்ய முடியாது என்பதை நன்கறிந்து கொள்ளுங்கள். மேலும், (நபியே!) கடுமையான வேதனை உண்டெனும் நற்செய்தியை இறைமறுப்பாளர்களுக்கு அறிவிப்பீராக!
اِلَّا الَّذِیْنَ عٰهَدْتُّمْ مِّنَ الْمُشْرِكِیْنَ ثُمَّ لَمْ یَنْقُصُوْكُمْ شَیْـًٔا وَّلَمْ یُظَاهِرُوْا عَلَیْكُمْ اَحَدًا فَاَتِمُّوْۤا اِلَیْهِمْ عَهْدَهُمْ اِلٰی مُدَّتِهِمْ ؕ اِنَّ اللّٰهَ یُحِبُّ الْمُتَّقِیْنَ ۟
ஆனால் இணைவைப்பாளர்களில் எவர்களுடன் உங்களுக்கு உடன்படிக்கை ஏற்பட்டு, பின்னர் அவர்கள் (தமது வாக்குறுதியை நிறைவேற்றுவதில்) உங்களிடம் எந்தக் குறைபாடும் செய்யாமலும், உங்களுக்கு எதிராக எவருக்கும் உதவாமலும் இருக்கின்றார்களோ அவர்களுக்கு விதிவிலக்கு உண்டு. அத்தகையவர்களின் உடன்படிக்கையை உரிய தவணை வரை நிறைவாக்குங்கள்! ஏனெனில், திண்ணமாக அல்லாஹ் இறையச்சம் உடையோரையே நேசிக்கின்றான்.
فَاِذَا انْسَلَخَ الْاَشْهُرُ الْحُرُمُ فَاقْتُلُوا الْمُشْرِكِیْنَ حَیْثُ وَجَدْتُّمُوْهُمْ وَخُذُوْهُمْ وَاحْصُرُوْهُمْ وَاقْعُدُوْا لَهُمْ كُلَّ مَرْصَدٍ ۚ فَاِنْ تَابُوْا وَاَقَامُوا الصَّلٰوةَ وَاٰتَوُا الزَّكٰوةَ فَخَلُّوْا سَبِیْلَهُمْ ؕ اِنَّ اللّٰهَ غَفُوْرٌ رَّحِیْمٌ ۟
எனவே, சங்கைக்குரிய மாதங்கள் கழிந்துவிட்டால், இறைவனுக்கு இணைவைப்போரை நீங்கள் எங்கு கண்டாலும் கொன்று விடுங்கள்! மேலும், அவர்களைச் சிறைப்பிடியுங்கள்; அவர்களை முற்றுகையிடுங்கள்! மேலும், எல்லா இடங்களிலிருந்தும் அவர்களைக் கண்காணியுங்கள். பிறகு, அவர்கள் பாவமன்னிப்புக் கோரி, தொழுகையை நிலைநாட்டி, ஜகாத்தையும் கொடுத்தால் அவர்களை விட்டுவிடுங்கள்! திண்ணமாக, அல்லாஹ் அதிகம் மன்னிப்பவனாகவும் பெரிதும் கருணை புரிபவனாகவும் இருக்கின்றான்.
وَاِنْ اَحَدٌ مِّنَ الْمُشْرِكِیْنَ اسْتَجَارَكَ فَاَجِرْهُ حَتّٰی یَسْمَعَ كَلٰمَ اللّٰهِ ثُمَّ اَبْلِغْهُ مَاْمَنَهٗ ؕ ذٰلِكَ بِاَنَّهُمْ قَوْمٌ لَّا یَعْلَمُوْنَ ۟۠
இணைவைப்பாளர்களில் எவரேனும் அடைக்கலம் கோரி உம்மிடம் (அல்லாஹ்வின் வேதத்தைச் செவியுறுவதற்காக) வந்தால், அப்பொழுது அல்லாஹ்வின் வேதத்தை அவர் செவியுறும் வரையில் அவருக்கு அடைக்கலம் அளிப்பீராக! பிறகு அவரை அவருடைய பாதுகாப்பிடத்தில் சேர்த்து விடுவீராக! இவ்வாறு ஏன் செய்ய வேண்டும் எனில், திண்ணமாக அவர்கள் அறியாத சமூகத்தினராய் இருக்கின்றனர்.
كَیْفَ یَكُوْنُ لِلْمُشْرِكِیْنَ عَهْدٌ عِنْدَ اللّٰهِ وَعِنْدَ رَسُوْلِهٖۤ اِلَّا الَّذِیْنَ عٰهَدْتُّمْ عِنْدَ الْمَسْجِدِ الْحَرَامِ ۚ فَمَا اسْتَقَامُوْا لَكُمْ فَاسْتَقِیْمُوْا لَهُمْ ؕ اِنَّ اللّٰهَ یُحِبُّ الْمُتَّقِیْنَ ۟
அல்லாஹ்விடத்திலும் அவனுடைய தூதரிடத்திலும் இந்த இணைவைப்பாளர்களின் உடன்படிக்கைக்கு என்ன முக்கியத்துவம் இருக்க முடியும்? ஆனால் மஸ்ஜிதுல் ஹராமுக்கு அருகில் யாருடன் நீங்கள் உடன்படிக்கை செய்திருந்தீர்களோ அவர்களுக்கு விதிவிலக்கு உண்டு. அவர்கள் உங்களோடு நேர்மையுடன் நடந்து கொள்ளும் வரை நீங்களும் அவர்களுடன் நேர்மையாய் நடந்துகொள்ளுங்கள்! ஏனென்றால், அல்லாஹ் இறையச்சமுள்ளவர்களை விரும்புகின்றான் .
كَیْفَ وَاِنْ یَّظْهَرُوْا عَلَیْكُمْ لَا یَرْقُبُوْا فِیْكُمْ اِلًّا وَّلَا ذِمَّةً ؕ یُرْضُوْنَكُمْ بِاَفْوَاهِهِمْ وَتَاْبٰی قُلُوْبُهُمْ ۚ وَاَكْثَرُهُمْ فٰسِقُوْنَ ۟ۚ
(அவர்களைத் தவிர மற்ற இணைவைப்பாளர்களிடம்) எவ்வாறு உடன்படிக்கை வைத்துக்கொள்ள முடியும்? அவர்கள் (இப்படித்தான் நடந்து கொள்கின்றனர்.) உங்களை வெற்றிகொண்டு விட்டால் உங்கள் விஷயத்தில் எந்த உறவுமுறையையும் பார்ப்பதில்லை; மேலும் ஒப்பந்தத்தின் எந்தப் பொறுப்பையும் மதிப்பதில்லை. தங்களுடைய வாய்ப்பேச்சுகளால் உங்களைத் திருப்திப்படுத்த முயற்சி செய்கிறார்கள். ஆனால், அவர்களின் உள்ளங்கள் அவற்றை மறுக்கின்றன. மேலும், அவர்களில் பெரும்பாலோர் தீயவர்களாவர்.
اِشْتَرَوْا بِاٰیٰتِ اللّٰهِ ثَمَنًا قَلِیْلًا فَصَدُّوْا عَنْ سَبِیْلِهٖ ؕ اِنَّهُمْ سَآءَ مَا كَانُوْا یَعْمَلُوْنَ ۟
அவர்கள் அல்லாஹ்வின் வசனங்களை அற்ப விலைக்கு விற்றார்கள். பின்னர் அல்லாஹ்வின் பாதையில் செல்லவிடாமல் (மக்களைத்) தடுத்தார்கள். அவர்கள் செய்து கொண்டிருந்த செயல்கள் எத்துணைக் கெட்டவை!
لَا یَرْقُبُوْنَ فِیْ مُؤْمِنٍ اِلًّا وَّلَا ذِمَّةً ؕ وَاُولٰٓىِٕكَ هُمُ الْمُعْتَدُوْنَ ۟
இறைநம்பிக்கையாளனின் விஷயத்தில் எந்த உறவுமுறையையும் பார்ப்பதில்லை; ஒப்பந்தத்தின் எந்தப் பொறுப்பையும் அவர்கள் மதிப்பதில்லை. மேலும், இத்தகையவர்கள்தாம் எப்போதும் வரம்பு மீறுபவர்களாய் இருக்கின்றனர்.
فَاِنْ تَابُوْا وَاَقَامُوا الصَّلٰوةَ وَاٰتَوُا الزَّكٰوةَ فَاِخْوَانُكُمْ فِی الدِّیْنِ ؕ وَنُفَصِّلُ الْاٰیٰتِ لِقَوْمٍ یَّعْلَمُوْنَ ۟
ஆயினும், இவர்கள் பாவமீட்சி பெற்று தொழுகையை நிலைநாட்டி, ஜகாத்தையும் கொடுத்தால், தீனில் மார்க்கத்தில் இவர்கள் உங்கள் சகோதரர்களாவர். மேலும், அறியக்கூடிய சமூகத்தாருக்கு நம்முடைய கட்டளைகளை நாம் நன்கு விளக்கிக் கூறுகின்றோம்.
وَاِنْ نَّكَثُوْۤا اَیْمَانَهُمْ مِّنْ بَعْدِ عَهْدِهِمْ وَطَعَنُوْا فِیْ دِیْنِكُمْ فَقَاتِلُوْۤا اَىِٕمَّةَ الْكُفْرِ ۙ اِنَّهُمْ لَاۤ اَیْمَانَ لَهُمْ لَعَلَّهُمْ یَنْتَهُوْنَ ۟
உடன்படிக்கை செய்துகொண்ட பிறகு இவர்கள் தங்களுடைய சத்தியங்களை முறித்து விட்டு உங்களுடைய மார்க்கத்தைத் தாக்க முற்பட்டால், இறைநிராகரிப்பின் தலைவர்களோடு போர் புரியுங்கள்! ஏனென்றால், அவர்களுடைய சத்தியங்களுக்கு எவ்வித மதிப்பு மில்லை. அவர்கள் (பின்னர் வாளுக்கு அஞ்சியேனும் இத்தகைய விஷமத்தனங்களிலிருந்து) விலகியிருக்கக்கூடும்.
اَلَا تُقَاتِلُوْنَ قَوْمًا نَّكَثُوْۤا اَیْمَانَهُمْ وَهَمُّوْا بِاِخْرَاجِ الرَّسُوْلِ وَهُمْ بَدَءُوْكُمْ اَوَّلَ مَرَّةٍ ؕ اَتَخْشَوْنَهُمْ ۚ فَاللّٰهُ اَحَقُّ اَنْ تَخْشَوْهُ اِنْ كُنْتُمْ مُّؤْمِنِیْنَ ۟
எவர்கள் தங்கள் உடன்படிக்கைகளை முறித்துக் கொண்டே இருக்கின்றார்களோ, மேலும், எவர்கள் இறைத்தூதரை நாட்டைவிட்டு வெளியேற்ற முடிவு செய்திருந்தார்களோ அக்கிரமம் செய்யத் தொடங்கியது முதலில் அவர்களாகவே இருந்தும் அத்தகைய மக்களுடன் நீங்கள் போர் புரிய வேண்டாமா? அவர்களுக்கா நீங்கள் அஞ்சுகிறீர்கள்? நீங்கள் நம்பிக்கையுடையவர்களாயின் நீங்கள் அஞ்சுவதற்கு மிகவும் தகுதியுள்ளவன் அல்லாஹ்வே ஆவான்.
قَاتِلُوْهُمْ یُعَذِّبْهُمُ اللّٰهُ بِاَیْدِیْكُمْ وَیُخْزِهِمْ وَیَنْصُرْكُمْ عَلَیْهِمْ وَیَشْفِ صُدُوْرَ قَوْمٍ مُّؤْمِنِیْنَ ۟ۙ
நீங்கள் அவர்களோடு போர் புரியுங்கள்; அல்லாஹ் உங்களுடைய கைகளால் அவர்களுக்குத் தண்டனை அளிக்கச் செய்வான். மேலும், அவர்களை இழிவுபடுத்துவான். இன்னும் நீங்கள் அவர்களை வென்றிட உங்களுக்கு உதவி புரிவான். மேலும், நம்பிக்கை கொண்ட மக்களின் இதயங்களைக் குளிரச் செய்வான்;
وَیُذْهِبْ غَیْظَ قُلُوْبِهِمْ ؕ وَیَتُوْبُ اللّٰهُ عَلٰی مَنْ یَّشَآءُ ؕ وَاللّٰهُ عَلِیْمٌ حَكِیْمٌ ۟
மேலும், அவர்களுடைய உள்ளங்களிலிருந்து கடுஞ்சினத்தையும் அகற்றிவிடுவான். மேலும், தான் நாடுகின்றவர்களுக்கு பாவமீட்சி பெறுவதற்கான பேற்றை அருள்வான். அல்லாஹ் யாவற்றையும் அறிந்தவனும், நுண்ணறிவாளனுமாய் இருக்கின்றான்.
اَمْ حَسِبْتُمْ اَنْ تُتْرَكُوْا وَلَمَّا یَعْلَمِ اللّٰهُ الَّذِیْنَ جٰهَدُوْا مِنْكُمْ وَلَمْ یَتَّخِذُوْا مِنْ دُوْنِ اللّٰهِ وَلَا رَسُوْلِهٖ وَلَا الْمُؤْمِنِیْنَ وَلِیْجَةً ؕ وَاللّٰهُ خَبِیْرٌ بِمَا تَعْمَلُوْنَ ۟۠
உங்களில் (இறைவழியில்) உயிர்த்தியாகம் செய்தவர்கள் யார், இன்னும் அல்லாஹ்வையும், அவனுடைய தூதரையும், இறைநம்பிக்கையாளர்களையும் விடுத்து வேறெவரையும் அந்தரங்க நண்பர்களாக எடுத்துக் கொள்ளாதவர்கள் யார் என அல்லாஹ் இன்னும் வேறுபடுத்தி அறிந்திடாத நிலையில் நீங்கள் வெறுமனே விடப்பட்டு விடுவீர்கள் என்று நினைத்துக்கொண்டீர்களா? நீங்கள் செய்வதனைத்தையும் அல்லாஹ் நன்கு தெரிந்தே இருக்கின்றான்.
مَا كَانَ لِلْمُشْرِكِیْنَ اَنْ یَّعْمُرُوْا مَسٰجِدَ اللّٰهِ شٰهِدِیْنَ عَلٰۤی اَنْفُسِهِمْ بِالْكُفْرِ ؕ اُولٰٓىِٕكَ حَبِطَتْ اَعْمَالُهُمْ ۖۚ وَفِی النَّارِ هُمْ خٰلِدُوْنَ ۟
தாங்கள் நிராகரிப்பாளர்கள் என்பதற்குத் தாங்களே சான்று வழங்கிக் கொண்டிருக்கும் இந்த இணைவைப்பாளர்களுக்கு இறையில்லங்களைப் பராமரிக்கும் உரிமை இல்லை. அத்தகையவர்களின் எல்லாச் செயல்களும் பாழாகிவிட்டன. மேலும், அவர்கள் நரகத்திலேயே என்றென்றும் வீழ்ந்து கிடப்பார்கள்.
اِنَّمَا یَعْمُرُ مَسٰجِدَ اللّٰهِ مَنْ اٰمَنَ بِاللّٰهِ وَالْیَوْمِ الْاٰخِرِ وَاَقَامَ الصَّلٰوةَ وَاٰتَی الزَّكٰوةَ وَلَمْ یَخْشَ اِلَّا اللّٰهَ فَعَسٰۤی اُولٰٓىِٕكَ اَنْ یَّكُوْنُوْا مِنَ الْمُهْتَدِیْنَ ۟
யார் அல்லாஹ்வையும் மறுமைநாளையும் நம்புகின்றார்களோ, மேலும், தொழுகையை நிலைநாட்டி, ஜகாத் கொடுக்கின்றார்களோ, மேலும், அல்லாஹ்வைத் தவிர வேறு எவருக்கும் அஞ்சாமல் இருக்கின்றார்களோ அவர்கள்தாம் இறையில்லங்களைப் பராமரிப்பவர்களாய் (அவற்றின் ஊழியர்களாய்) ஆக முடியும்! அத்தகையவர்களே நேர்வழியில் செல்வார்கள் என்று எதிர்பார்க்கலாம்.
اَجَعَلْتُمْ سِقَایَةَ الْحَآجِّ وَعِمَارَةَ الْمَسْجِدِ الْحَرَامِ كَمَنْ اٰمَنَ بِاللّٰهِ وَالْیَوْمِ الْاٰخِرِ وَجٰهَدَ فِیْ سَبِیْلِ اللّٰهِ ؕ لَا یَسْتَوٗنَ عِنْدَ اللّٰهِ ؕ وَاللّٰهُ لَا یَهْدِی الْقَوْمَ الظّٰلِمِیْنَ ۟ۘ
ஹஜ் செய்பவர்களுக்குத் தண்ணீர் புகட்டுவதும், சங்கைமிகு கஅபா பள்ளிவாசலுக்கு ஊழியம் புரிவதும் அல்லாஹ்வின் மீதும் மறுமைநாளின் மீதும் நம்பிக்கை கொண்டு அல்லாஹ்வின் பாதையில் கடுமையாக உழைப்பவனின் பணிக்குச் சமம் ஆகுமா? அல்லாஹ்விடத்தில் இவையிரண்டும் சமம் ஆகமாட்டா. மேலும், அக்கிரமம் புரியும் சமூகத்தாருக்கு அல்லாஹ் நேர்வழி காட்டுவதில்லை.
اَلَّذِیْنَ اٰمَنُوْا وَهَاجَرُوْا وَجٰهَدُوْا فِیْ سَبِیْلِ اللّٰهِ بِاَمْوَالِهِمْ وَاَنْفُسِهِمْ ۙ اَعْظَمُ دَرَجَةً عِنْدَ اللّٰهِ ؕ وَاُولٰٓىِٕكَ هُمُ الْفَآىِٕزُوْنَ ۟
எவர்கள் நம்பிக்கை கொண்டு, (இறைவழியில்) யாவற்றையும் துறந்து, தம் உயிர்களாலும், பொருள்களாலும் அல்லாஹ்வின் பாதையில் போராடினார்களோ அவர்கள் அல்லாஹ்விடம் உயர்ந்த படித்தரம் பெற்றவர்களாவர். மேலும், அத்தகையவர்கள் வெற்றியாளர்கள்.
یُبَشِّرُهُمْ رَبُّهُمْ بِرَحْمَةٍ مِّنْهُ وَرِضْوَانٍ وَّجَنّٰتٍ لَّهُمْ فِیْهَا نَعِیْمٌ مُّقِیْمٌ ۟ۙ
தன்னுடைய அருளும் உவப்பும் சுவனங்களும் அவர்களுக்கு இருக்கின்றன என்று அவர்களின் இறைவன் நற்செய்தி அறிவிக்கின்றான். அங்கே அவர்களுக்கு நிலையான அருட்பேறுகள் இருக்கின்றன.
خٰلِدِیْنَ فِیْهَاۤ اَبَدًا ؕ اِنَّ اللّٰهَ عِنْدَهٗۤ اَجْرٌ عَظِیْمٌ ۟
அவற்றில் அவர்கள் என்றென்றும் தங்கி வாழ்வார்கள். திண்ணமாக, சேவைகளுக்கான மாபெரும் கூலி அல்லாஹ்விடம் இருக்கிறது.
یٰۤاَیُّهَا الَّذِیْنَ اٰمَنُوْا لَا تَتَّخِذُوْۤا اٰبَآءَكُمْ وَاِخْوَانَكُمْ اَوْلِیَآءَ اِنِ اسْتَحَبُّوا الْكُفْرَ عَلَی الْاِیْمَانِ ؕ وَمَنْ یَّتَوَلَّهُمْ مِّنْكُمْ فَاُولٰٓىِٕكَ هُمُ الظّٰلِمُوْنَ ۟
இறைநம்பிக்கை கொண்டவர்களே! உங்களின் தந்தையரும், உங்களின் சகோதரர்களும் இறைநம்பிக்கையைக் கைவிட்டு நிராகரிப்புக்கு முன்னுரிமை தந்தால், நீங்கள் அவர்களை உங்களுடைய ஆதரவாளர்களாக்கிக் கொள்ள வேண்டாம். உங்களில் யார் அவர்களை ஆதரவாளர்களாக்கிக் கொள்கின்றார்களோ அவர்கள்தாம் அக்கிரமக்காரர்கள்.
قُلْ اِنْ كَانَ اٰبَآؤُكُمْ وَاَبْنَآؤُكُمْ وَاِخْوَانُكُمْ وَاَزْوَاجُكُمْ وَعَشِیْرَتُكُمْ وَاَمْوَالُ قْتَرَفْتُمُوْهَا وَتِجَارَةٌ تَخْشَوْنَ كَسَادَهَا وَمَسٰكِنُ تَرْضَوْنَهَاۤ اَحَبَّ اِلَیْكُمْ مِّنَ اللّٰهِ وَرَسُوْلِهٖ وَجِهَادٍ فِیْ سَبِیْلِهٖ فَتَرَبَّصُوْا حَتّٰی یَاْتِیَ اللّٰهُ بِاَمْرِهٖ ؕ وَاللّٰهُ لَا یَهْدِی الْقَوْمَ الْفٰسِقِیْنَ ۟۠
(நபியே!) நீர் கூறிவிடுவீராக: “உங்கள் தந்தையர், உங்கள் பிள்ளைகள், உங்கள் சகோதரர்கள், உங்கள் மனைவியர், உங்களுடைய உறவினர்கள், நீங்கள் சம்பாதித்த செல்வங்கள் மற்றும் தேக்கநிலை ஏற்பட்டுவிடுமோ என நீங்கள் அஞ்சுகின்ற உங்களுடைய வணிகம் மற்றும் உங்களுக்கு விருப்பமான இல்லங்கள் ஆகியவை அல்லாஹ்வையும், அவனுடைய தூதரையும்விட அவன் வழியில் போராடுவதைவிட உங்களுக்கு நேசமானவையாயிருந்தால், அல்லாஹ் தன்னுடைய தீர்ப்பினை (உங்களிடம்) செயல்படுத்தும் வரை நீங்கள் எதிர்பார்த்திருங்கள்! அல்லாஹ் தீய சமுதாயத்துக்கு நேர்வழி காட்டுவதில்லை.”
لَقَدْ نَصَرَكُمُ اللّٰهُ فِیْ مَوَاطِنَ كَثِیْرَةٍ ۙ وَّیَوْمَ حُنَیْنٍ ۙ اِذْ اَعْجَبَتْكُمْ كَثْرَتُكُمْ فَلَمْ تُغْنِ عَنْكُمْ شَیْـًٔا وَّضَاقَتْ عَلَیْكُمُ الْاَرْضُ بِمَا رَحُبَتْ ثُمَّ وَلَّیْتُمْ مُّدْبِرِیْنَ ۟ۚ
(இதற்கு முன்னர்) பெரும்பாலான சந்தர்ப்பங்களிலும் அல்லாஹ் உங்களுக்கு உதவி புரிந்துள்ளான். (இப்போது) ஹுனைன் (போர் நடைபெற்ற) நாளிலும் (அவன் உதவி செய்ததை நீங்கள் பார்த்திருக்கிறீர்கள்). அன்று உங்களின் படைப்பெருக்கம் உங்களை இறுமாப்பில் ஆழ்த்தியிருந்தது. ஆயினும், அது உங்களுக்கு எத்தகைய பலனுமளிக்கவில்லை. மேலும், பூமி இவ்வளவு விரிவாயிருந்தும் உங்களுக்குக் குறுகிப் போய்விட்டது. பின்னர் நீங்கள் புறங்காட்டி ஓடிவிட்டீர்கள்.
ثُمَّ اَنْزَلَ اللّٰهُ سَكِیْنَتَهٗ عَلٰی رَسُوْلِهٖ وَعَلَی الْمُؤْمِنِیْنَ وَاَنْزَلَ جُنُوْدًا لَّمْ تَرَوْهَا وَعَذَّبَ الَّذِیْنَ كَفَرُوْا ؕ وَذٰلِكَ جَزَآءُ الْكٰفِرِیْنَ ۟
பிறகு அல்லாஹ் தன் தூதர் மீதும், நம்பிக்கை கொண்டோர் மீதும் தனது சாந்தியை இறக்கி அருளினான். மேலும், உங்களின் பார்வையில் தென்படாதிருந்த படைகளை இறக்கி இறைமறுப்பாளர்களைத் தண்டித்தான். இதுதான் (சத்தியத்தை) மறுத்தோருக்குரிய கூலி!
ثُمَّ یَتُوْبُ اللّٰهُ مِنْ بَعْدِ ذٰلِكَ عَلٰی مَنْ یَّشَآءُ ؕ وَاللّٰهُ غَفُوْرٌ رَّحِیْمٌ ۟
பின்னர், இவ்வாறு தண்டனை வழங்கிய பிறகு அல்லாஹ் தான் நாடுகின்றவர்களுக்கு பாவமீட்சி பெறும் பேற்றினை வழங்குகின்றான் (என்பதையும் நீங்கள் பார்த்திருக்கின்றீர்கள்). அல்லாஹ் மிகவும் மன்னிப்பவனும், கருணையுடையவனும் ஆவான்.
یٰۤاَیُّهَا الَّذِیْنَ اٰمَنُوْۤا اِنَّمَا الْمُشْرِكُوْنَ نَجَسٌ فَلَا یَقْرَبُوا الْمَسْجِدَ الْحَرَامَ بَعْدَ عَامِهِمْ هٰذَا ۚ وَاِنْ خِفْتُمْ عَیْلَةً فَسَوْفَ یُغْنِیْكُمُ اللّٰهُ مِنْ فَضْلِهٖۤ اِنْ شَآءَ ؕ اِنَّ اللّٰهَ عَلِیْمٌ حَكِیْمٌ ۟
இறைநம்பிக்கை கொண்டவர்களே! இணை வைப்பாளர்கள் அசுத்தமானவர்கள்தாம்! எனவே, அவர்கள் இந்த ஆண்டுக்குப் பின் சங்கைமிகு கஅபா பள்ளிவாசலின் அருகில்கூட நெருங்கக் கூடாது. நீங்கள் வறுமைக்கு அஞ்சுவீர்களாயின், அல்லாஹ் நாடினால் தன் கருணையினால் விரைவில் உங்களுக்குச் செல்வத்தை வழங்குவான். திண்ணமாக, அல்லாஹ் யாவற்றையும் அறிந்தவனாகவும், நுண்ணறிவாளனாகவும் இருக்கின்றான்.
قَاتِلُوا الَّذِیْنَ لَا یُؤْمِنُوْنَ بِاللّٰهِ وَلَا بِالْیَوْمِ الْاٰخِرِ وَلَا یُحَرِّمُوْنَ مَا حَرَّمَ اللّٰهُ وَرَسُوْلُهٗ وَلَا یَدِیْنُوْنَ دِیْنَ الْحَقِّ مِنَ الَّذِیْنَ اُوْتُوا الْكِتٰبَ حَتّٰی یُعْطُوا الْجِزْیَةَ عَنْ یَّدٍ وَّهُمْ صٰغِرُوْنَ ۟۠
வேதம் வழங்கப்பட்டவர்களில் எவர்கள் அல்லாஹ்வின் மீதும் இறுதிநாளின் மீதும் நம்பிக்கை கொள்ளாமலும், அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் தடுத்தவற்றை ‘தடுக்கப்பட்டவை’ என்று கருதாமலும் சத்திய மார்க்கத்தைப் பின்பற்றாமலும் இருக்கின்றார்களோ அவர்களுக்கு எதிராகப் போர் புரியுங்கள்; அவர்கள் சிறுமை அடைந்தவர்களாகி (தமது) கையால் ஜிஸ்யா வரியைச் செலுத்தும் வரை!
وَقَالَتِ الْیَهُوْدُ عُزَیْرُ بْنُ اللّٰهِ وَقَالَتِ النَّصٰرَی الْمَسِیْحُ ابْنُ اللّٰهِ ؕ ذٰلِكَ قَوْلُهُمْ بِاَفْوَاهِهِمْ ۚ یُضَاهِـُٔوْنَ قَوْلَ الَّذِیْنَ كَفَرُوْا مِنْ قَبْلُ ؕ قٰتَلَهُمُ اللّٰهُ ؗۚ اَنّٰی یُؤْفَكُوْنَ ۟
“உஸைர் அல்லாஹ்வின் புதல்வர்” என்று யூதர்கள் கூறுகின்றார்கள். “மஸீஹ் அல்லாஹ்வின் புதல்வர்” என்று கிறிஸ்தவர்கள் கூறுகின்றார்கள். அவர்கள் தங்களுடைய நாவினால் கூறும் (உண்மைக்குப் புறம்பான) கூற்றுகளாகும் இவை. இவர்களுக்கு முன்னர் இறைநிராகரிப்பை மேற்கொண்டிருந்தவர்கள் கூறியதைப்போல் இவர்களும் கூறுகின்றனர். அல்லாஹ் இவர்களை நாசப்படுத்துவானாக! அவர்கள் எவ்வாறு திசை திருப்பப்படுகின்றார்கள்!
اِتَّخَذُوْۤا اَحْبَارَهُمْ وَرُهْبَانَهُمْ اَرْبَابًا مِّنْ دُوْنِ اللّٰهِ وَالْمَسِیْحَ ابْنَ مَرْیَمَ ۚ وَمَاۤ اُمِرُوْۤا اِلَّا لِیَعْبُدُوْۤا اِلٰهًا وَّاحِدًا ۚ لَاۤ اِلٰهَ اِلَّا هُوَ ؕ سُبْحٰنَهٗ عَمَّا یُشْرِكُوْنَ ۟
அவர்கள் அல்லாஹ்வை விடுத்து மார்க்க மேதைகளையும், துறவிகளையும் தங்களின் ரப் கடவுளராக்கிக் கொண்டார்கள். மேலும் (இதே போன்று) மர்யத்தின் குமாரர் மஸீஹையும் (இறைவனாக்கிக் கொண்டனர்). உண்மை யாதெனில், ஒரே இறைவனைத் தவிர வேறெவரையும் வணங்க அவர்களுக்குக் கட்டளையிடப்பட்டதில்லை. வணக்கத்திற்குரிய இறைவன் அவனையன்றி யாரும் இல்லை. அவர்கள் செய்யும் இணைவைப்புச் செயல்களிலிருந்து அவன் தூய்மையானவன்.
یُرِیْدُوْنَ اَنْ یُّطْفِـُٔوْا نُوْرَ اللّٰهِ بِاَفْوَاهِهِمْ وَیَاْبَی اللّٰهُ اِلَّاۤ اَنْ یُّتِمَّ نُوْرَهٗ وَلَوْ كَرِهَ الْكٰفِرُوْنَ ۟
அல்லாஹ்வின் ஒளியைத் தம் வாயால் ஊதி அணைத்துவிட அவர்கள் விரும்புகிறார்கள். ஆயினும் அல்லாஹ் தன் ஒளியை நிறைவு செய்யாமல் விடமாட்டான். இறைநிராகரிப்பாளர்களுக்கு அது எவ்வளவு வெறுப்பாக இருந்தாலும் சரியே!
هُوَ الَّذِیْۤ اَرْسَلَ رَسُوْلَهٗ بِالْهُدٰی وَدِیْنِ الْحَقِّ لِیُظْهِرَهٗ عَلَی الدِّیْنِ كُلِّهٖ ۙ وَلَوْ كَرِهَ الْمُشْرِكُوْنَ ۟
அல்லாஹ்தான் தன் தூதரை நேர்வழியுடனும், சத்திய மார்க்கத்துடனும் அனுப்பிவைத்தான்; அவர் அந்த மார்க்கத்தை ஏனைய அனைத்து மார்க்கங்களை விடவும் மேலோங்கச் செய்யவேண்டும் என்பதற்காக! இணைவைப்பாளர்களுக்கு அது எவ்வளவு வெறுப்பாக இருந்தாலும் சரியே!
یٰۤاَیُّهَا الَّذِیْنَ اٰمَنُوْۤا اِنَّ كَثِیْرًا مِّنَ الْاَحْبَارِ وَالرُّهْبَانِ لَیَاْكُلُوْنَ اَمْوَالَ النَّاسِ بِالْبَاطِلِ وَیَصُدُّوْنَ عَنْ سَبِیْلِ اللّٰهِ ؕ وَالَّذِیْنَ یَكْنِزُوْنَ الذَّهَبَ وَالْفِضَّةَ وَلَا یُنْفِقُوْنَهَا فِیْ سَبِیْلِ اللّٰهِ ۙ فَبَشِّرْهُمْ بِعَذَابٍ اَلِیْمٍ ۟ۙ
இறைநம்பிக்கையாளர்களே! (வேதம் வழங்கப்பட்டவர்களைச் சார்ந்த) பெரும்பாலான அறிஞர்களும், துறவிகளும் மக்களின் பொருள்களைத் தவறான முறையில் விழுங்குகிறார்கள். மேலும் அவர்களை அல்லாஹ்வின் வழியில் செல்லவிடாமல் தடுக்கிறார்கள். எவர்கள் தங்கத்தையும், வெள்ளியையும் சேகரித்து வைத்துக்கொண்டு அவற்றை அல்லாஹ்வின் வழியில் செலவு செய்யாமலிருக்கின்றார்களோ அவர்களுக்குத் துன்புறுத்தும் தண்டனை இருக்கிறது எனும் ‘நற்செய்தி’யினை நீர் அறிவிப்பீராக!
یَّوْمَ یُحْمٰی عَلَیْهَا فِیْ نَارِ جَهَنَّمَ فَتُكْوٰی بِهَا جِبَاهُهُمْ وَجُنُوْبُهُمْ وَظُهُوْرُهُمْ ؕ هٰذَا مَا كَنَزْتُمْ لِاَنْفُسِكُمْ فَذُوْقُوْا مَا كُنْتُمْ تَكْنِزُوْنَ ۟
ஒருநாள் வரும்; அந்நாளில் இதே தங்கமும், வெள்ளியும் நரக நெருப்பில் பழுக்கக் காய்ச்சப்பட்டு பிறகு அவற்றால் அவர்களின் நெற்றிகளிலும், விலாப்புறங்களிலும், முதுகுகளிலும் சூடு போடப்படும் இவைதாம் நீங்கள் உங்களுக்காக சேகரித்து வைத்திருந்த கருவூலங்கள்! எனவே நீங்கள் சேகரித்து வைத்திருந்த செல்வத்தைச் சுவையுங்கள்!
اِنَّ عِدَّةَ الشُّهُوْرِ عِنْدَ اللّٰهِ اثْنَا عَشَرَ شَهْرًا فِیْ كِتٰبِ اللّٰهِ یَوْمَ خَلَقَ السَّمٰوٰتِ وَالْاَرْضَ مِنْهَاۤ اَرْبَعَةٌ حُرُمٌ ؕ ذٰلِكَ الدِّیْنُ الْقَیِّمُ ۙ۬ فَلَا تَظْلِمُوْا فِیْهِنَّ اَنْفُسَكُمْ وَقَاتِلُوا الْمُشْرِكِیْنَ كَآفَّةً كَمَا یُقَاتِلُوْنَكُمْ كَآفَّةً ؕ وَاعْلَمُوْۤا اَنَّ اللّٰهَ مَعَ الْمُتَّقِیْنَ ۟
உண்மையாக, அல்லாஹ்விடத்தில் மாதங்களின் எண்ணிக்கை பன்னிரண்டாகும். வானங்களையும் பூமியையும் அவன் படைத்த நாள் முதல் அல்லாஹ்வின் பதிவேட்டில் இவ்வாறே உள்ளது. அவற்றில் நான்கு மாதங்கள் சங்கைக்குரியன. இதுதான் சரியான நெறிமுறையாகும். எனவே, இம்மாதங்களில் உங்களுக்கு நீங்களே அநீதி இழைத்துக் கொள்ளாதீர்கள்! எவ்வாறு, இணை வைப்பாளர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து உங்களோடு போரிடுகிறார்களோ அவ்வாறே நீங்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து அவர்களுடன் போர்புரியுங்கள்! மேலும் இறையச்சம் உள்ளவர்களோடு அல்லாஹ் இருக்கின்றான் என்பதை அறிந்து கொள்ளுங்கள்!
اِنَّمَا النَّسِیْٓءُ زِیَادَةٌ فِی الْكُفْرِ یُضَلُّ بِهِ الَّذِیْنَ كَفَرُوْا یُحِلُّوْنَهٗ عَامًا وَّیُحَرِّمُوْنَهٗ عَامًا لِّیُوَاطِـُٔوْا عِدَّةَ مَا حَرَّمَ اللّٰهُ فَیُحِلُّوْا مَا حَرَّمَ اللّٰهُ ؕ زُیِّنَ لَهُمْ سُوْٓءُ اَعْمَالِهِمْ ؕ وَاللّٰهُ لَا یَهْدِی الْقَوْمَ الْكٰفِرِیْنَ ۟۠
‘நஸீஃ’ நிராகரிப்பை அதிகப்படுத்தும் செயலாகும். நிராகரிப்பை மேற்கொண்ட மக்கள் இதனால் மேலும் வழிகெடுக்கப்படுகின்றார்கள். ஏதேனும் ஓர் ஆண்டில் (போர் விலக்கப்பட்ட) ஒரு மாதத்தை (போருக்காக) அவர்கள் அனுமதிக்கப்பட்டதாக்கிக் கொள்கின்றார்கள். ஆனால் மறு ஆண்டில் அதே மாதத்தில் போர் புரிவது கூடாது என்று தடுத்து விடுகிறார்கள். ஏனெனில், அல்லாஹ்வினால் (போர்புரிய) தடைசெய்யப்பட்டுள்ள மாதங்களின் எண்ணிக்கையை நிறைவு செய்ய வேண்டும் என்பதற்காக! இவ்வாறாக அல்லாஹ்வினால் தடுக்கப்பட்ட மாதத்தை இவர்கள் அனுமதிக்கப்பட்டதாய் ஆக்கிக் கொள்கின்றனர் அவர்களுடைய தீய செயல்கள் அவர்களுக்கு அழகாக்கப்பட்டுள்ளன. சத்தியத்தை மறுக்கும் மக்களுக்கு அல்லாஹ் நேர்வழி காட்டுவதில்லை.
یٰۤاَیُّهَا الَّذِیْنَ اٰمَنُوْا مَا لَكُمْ اِذَا قِیْلَ لَكُمُ انْفِرُوْا فِیْ سَبِیْلِ اللّٰهِ اثَّاقَلْتُمْ اِلَی الْاَرْضِ ؕ اَرَضِیْتُمْ بِالْحَیٰوةِ الدُّنْیَا مِنَ الْاٰخِرَةِ ۚ فَمَا مَتَاعُ الْحَیٰوةِ الدُّنْیَا فِی الْاٰخِرَةِ اِلَّا قَلِیْلٌ ۟
இறைநம்பிக்கை கொண்டவர்களே! உங்களுக்கு என்ன நேர்ந்து விட்டது? ‘அல்லாஹ்வின் வழியில் புறப்படுங்கள்’ என்று உங்களிடம் கூறப்பட்டால், பூமியிலேயே அமிழ்ந்து கிடக்கின்றீர்களே! மறுமையைவிட உலக வாழ்க்கையில் நிறைவடைந்து விட்டீர்களா? (அவ்வாறாயின் அறிந்து கொள்ளுங்கள்:) உலக வாழ்க்கையின் இன்பங்கள் அனைத்தும் மறுமைக்கு முன் மிக அற்பமானவையாகவே இருக்கும்.
اِلَّا تَنْفِرُوْا یُعَذِّبْكُمْ عَذَابًا اَلِیْمًا ۙ۬ وَّیَسْتَبْدِلْ قَوْمًا غَیْرَكُمْ وَلَا تَضُرُّوْهُ شَیْـًٔا ؕ وَاللّٰهُ عَلٰی كُلِّ شَیْءٍ قَدِیْرٌ ۟
நீங்கள் இறைவழியில் புறப்படவில்லையாயின், அல்லாஹ் உங்களுக்குத் துன்புறுத்தும் தண்டனை அளிப்பான். மேலும், உங்களுக்குப் பதிலாக வேறொரு சமூகத்தினரைக் கொண்டு வருவான். மேலும், அல்லாஹ்வுக்கு நீங்கள் எந்த ஒரு தீங்கும் செய்திட முடியாது. அல்லாஹ் யாவற்றின் மீதும் பேராற்றலுடையவனாக இருக்கின்றான்.
اِلَّا تَنْصُرُوْهُ فَقَدْ نَصَرَهُ اللّٰهُ اِذْ اَخْرَجَهُ الَّذِیْنَ كَفَرُوْا ثَانِیَ اثْنَیْنِ اِذْ هُمَا فِی الْغَارِ اِذْ یَقُوْلُ لِصَاحِبِهٖ لَا تَحْزَنْ اِنَّ اللّٰهَ مَعَنَا ۚ فَاَنْزَلَ اللّٰهُ سَكِیْنَتَهٗ عَلَیْهِ وَاَیَّدَهٗ بِجُنُوْدٍ لَّمْ تَرَوْهَا وَجَعَلَ كَلِمَةَ الَّذِیْنَ كَفَرُوا السُّفْلٰی ؕ وَكَلِمَةُ اللّٰهِ هِیَ الْعُلْیَا ؕ وَاللّٰهُ عَزِیْزٌ حَكِیْمٌ ۟
நீங்கள் இந்த நபிக்கு உதவி செய்யாவிட்டால் (அதனால் என்ன), நிராகரிப்பாளர்கள் அவரை வெளியேற்றியபோது திண்ணமாக அல்லாஹ் அவருக்கு உதவி செய்துள்ளான். அவர்கள் இருவரும் குகையில் தங்கியிருந்தபோது இருவரில் இரண்டாமவராய் இருந்த அவர் தன் தோழரை நோக்கி “கவலை கொள்ளாதீர்; அல்லாஹ் நம்முடன் இருக்கின்றான்” என்று கூறினார். அப்போது அல்லாஹ் அவருக்குத் தன்னிடமிருந்து மனஅமைதியை இறக்கி அருளினான். மேலும், உங்களின் பார்வைக்குத் தென்படாதிருந்த படைகளின் மூலம் அவருக்கு உதவி செய்தான். மேலும், இறைநிராகரிப்பாளர்களின் வாக்கைத் தாழ்த்தினான். மேலும், அல்லாஹ்வின் வாக்குதான் மேலானதாக இருக்கிறது. அல்லாஹ் யாவற்றையும் மிகைத்தவனும், நுண்ணறிவாளனுமாவான்.
اِنْفِرُوْا خِفَافًا وَّثِقَالًا وَّجَاهِدُوْا بِاَمْوَالِكُمْ وَاَنْفُسِكُمْ فِیْ سَبِیْلِ اللّٰهِ ؕ ذٰلِكُمْ خَیْرٌ لَّكُمْ اِنْ كُنْتُمْ تَعْلَمُوْنَ ۟
கனமாக இருந்தாலும் சரி, இலேசாக இருந்தாலும் சரி, நீங்கள் புறப்படுங்கள்! உங்களுடைய உடைமைகளைக் கொண்டும் உயிர்களைக் கொண்டும் அல்லாஹ்வின் வழியில் போராடுங்கள்! நீங்கள் அறிவுடையோராயின் இதுவே உங்களுக்கு மிகச் சிறந்ததாகும்.
لَوْ كَانَ عَرَضًا قَرِیْبًا وَّسَفَرًا قَاصِدًا لَّاتَّبَعُوْكَ وَلٰكِنْ بَعُدَتْ عَلَیْهِمُ الشُّقَّةُ ؕ وَسَیَحْلِفُوْنَ بِاللّٰهِ لَوِ اسْتَطَعْنَا لَخَرَجْنَا مَعَكُمْ ۚ یُهْلِكُوْنَ اَنْفُسَهُمْ ۚ وَاللّٰهُ یَعْلَمُ اِنَّهُمْ لَكٰذِبُوْنَ ۟۠
(நபியே!) விரைவில் பலன் கிட்டுவதாயும், பயணம் சிரமமின்றியும் இருந்திருப்பின், நிச்சயமாக அவர்கள் உம்மைப் பின்தொடர்ந்து வந்திருப்பார்கள். ஆனால், இப்பயணம் அவர்களுக்கு மிகவும் சிரமமாகத் தோன்றியது. “எங்களால் இயலுமாயின் நிச்சயம் நாங்கள் உங்களோடு கிளம்பியிருப்போம்” என்று அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்து கூறுவார்கள். அவர்கள் தம்மைத் தாமே அழிவுக்குள்ளாக்குகிறார்கள். அவர்கள் பொய்யர்கள் என்பதை அல்லாஹ் நன்கறிவான்.
عَفَا اللّٰهُ عَنْكَ ۚ لِمَ اَذِنْتَ لَهُمْ حَتّٰی یَتَبَیَّنَ لَكَ الَّذِیْنَ صَدَقُوْا وَتَعْلَمَ الْكٰذِبِیْنَ ۟
(நபியே!) அல்லாஹ் உம்மை மன்னித்தருள்வானாக! (போரில் கலந்திடாமல் இருக்க) நீர் ஏன் அவர்களுக்கு அனுமதி அளித்தீர்? (நீர் அனுமதி அளிக்காமல் இருந்திருந்தால்) வாய்மையாளர்கள் யார் என்றும், பொய்யர்கள் யார் என்றும் உமக்கு வெளிப்படையாகத் தெரிந்திருக்குமே!
لَا یَسْتَاْذِنُكَ الَّذِیْنَ یُؤْمِنُوْنَ بِاللّٰهِ وَالْیَوْمِ الْاٰخِرِ اَنْ یُّجَاهِدُوْا بِاَمْوَالِهِمْ وَاَنْفُسِهِمْ ؕ وَاللّٰهُ عَلِیْمٌۢ بِالْمُتَّقِیْنَ ۟
அல்லாஹ்வின் மீதும், மறுமைநாள் மீதும் நம்பிக்கை கொள்கின்றவர்கள் தங்களுடைய உடைமைகளையும், உயிர்களையும் அர்ப்பணித்துப் போர்புரிவதிலிருந்து விலக்கு அளிக்க வேண்டுமென்று ஒருபோதும் உம்மிடம் கோரமாட்டார்கள். அல்லாஹ் இறையச்சமுள்ளவர்களை நன்கறிபவனாக இருக்கின்றான்.
اِنَّمَا یَسْتَاْذِنُكَ الَّذِیْنَ لَا یُؤْمِنُوْنَ بِاللّٰهِ وَالْیَوْمِ الْاٰخِرِ وَارْتَابَتْ قُلُوْبُهُمْ فَهُمْ فِیْ رَیْبِهِمْ یَتَرَدَّدُوْنَ ۟
எவர்கள் அல்லாஹ்வின் மீதும், மறுமைநாள் மீதும் நம்பிக்கை கொள்வதில்லையோ, மேலும் தங்களுடைய உள்ளங்களில் சந்தேகம் கொண்டிருக்கின்றார்களோ, மேலும், அந்த சந்தேகத்திலேயே தடுமாறிக் கொண்டிருக்கின்றார்களோ அவர்கள்தாம் இத்தகைய கோரிக்கைகளை உம்மிடம் சமர்ப்பிக்கின்றனர்.
وَلَوْ اَرَادُوا الْخُرُوْجَ لَاَعَدُّوْا لَهٗ عُدَّةً وَّلٰكِنْ كَرِهَ اللّٰهُ انْۢبِعَاثَهُمْ فَثَبَّطَهُمْ وَقِیْلَ اقْعُدُوْا مَعَ الْقٰعِدِیْنَ ۟
மேலும், உண்மையிலேயே (ஜிஹாதுக்காகப்) புறப்பட அவர்கள் நாடியிருந்தால், அதற்கு வேண்டிய சில ஆயத்தங்களை அவர்கள் செய்திருப்பார்கள். ஆனால், அவர்கள் கிளம்புவதை அல்லாஹ் விரும்பவேயில்லை. எனவே, அவன் அவர்களைத் தடுத்து நிறுத்திவிட்டான். ஆகவே, ‘தங்கியிருப்பவர்களோடு சேர்ந்து நீங்களும் தங்கி விடுங்கள்!’ என்று அவர்களுக்குக் கூறப்பட்டது.
لَوْ خَرَجُوْا فِیْكُمْ مَّا زَادُوْكُمْ اِلَّا خَبَالًا وَّلَاۡاَوْضَعُوْا خِلٰلَكُمْ یَبْغُوْنَكُمُ الْفِتْنَةَ ۚ وَفِیْكُمْ سَمّٰعُوْنَ لَهُمْ ؕ وَاللّٰهُ عَلِیْمٌۢ بِالظّٰلِمِیْنَ ۟
அவர்கள் உங்களோடு வந்திருந்தால், வீண் குழப்பங்களைத் தவிர வேறு எதனையும் அவர்கள் உங்களிடையே அதிகப்படுத்தியிருக்க மாட்டார்கள். உங்களுக்குள் குழப்பத்தை ஏற்படுத்துவதற்காக உங்களுக்கிடையே விஷமம் செய்துகொண்டு திரிந்திருப்பார்கள். ஆனால் (உங்களுடைய நிலை என்னவெனில்) இன்னும்கூட அவர்களுடைய வார்த்தைகளுக்குச் செவிசாய்ப்பவர் உங்களில் பலர் இருக்கின்றனர். அல்லாஹ் அக்கிரமக்காரர்களை நன்கறிபவனாய் இருக்கின்றான்.
لَقَدِ ابْتَغَوُا الْفِتْنَةَ مِنْ قَبْلُ وَقَلَّبُوْا لَكَ الْاُمُوْرَ حَتّٰی جَآءَ الْحَقُّ وَظَهَرَ اَمْرُ اللّٰهِ وَهُمْ كٰرِهُوْنَ ۟
இதற்கு முன்னரும் அவர்கள் குழப்பம் செய்ய முயன்றிருக்கிறார்கள். மேலும், உம்மைத் தோல்வியுறச் செய்ய எல்லாவிதமான தில்லுமுல்லுகளையும் கையாண்டிருக்கிறார்கள். இறுதியில், அவர்கள் விரும்பாத நிலையிலும் சத்தியம் வந்தது; அல்லாஹ்வின் மார்க்கம் மேலோங்கவே செய்தது.
وَمِنْهُمْ مَّنْ یَّقُوْلُ ائْذَنْ لِّیْ وَلَا تَفْتِنِّیْ ؕ اَلَا فِی الْفِتْنَةِ سَقَطُوْا ؕ وَاِنَّ جَهَنَّمَ لَمُحِیْطَةٌ بِالْكٰفِرِیْنَ ۟
மேலும் (போருக்குச் செல்லாதிருக்க) “எனக்கு அனுமதி தாரும்; என்னைச் சோதனைக்குள்ளாக்காதீர்!” என்று கூறுவோரும் அவர்களில் இருக்கின்றனர். இதோ கேளுங்கள்; சோதனையிலேயே அவர்கள் வீழ்ந்து கிடக்கிறார்கள். மேலும் நரகம் இத்தகைய இறைநிராகரிப்பாளர்களைத் திண்ணமாக சூழ்ந்து கொண்டிருக்கிறது.
اِنْ تُصِبْكَ حَسَنَةٌ تَسُؤْهُمْ ۚ وَاِنْ تُصِبْكَ مُصِیْبَةٌ یَّقُوْلُوْا قَدْ اَخَذْنَاۤ اَمْرَنَا مِنْ قَبْلُ وَیَتَوَلَّوْا وَّهُمْ فَرِحُوْنَ ۟
உமக்கு ஏதேனும் நன்மை கிடைத்தால், அது அவர்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்துகின்றது. மேலும், உமக்கு ஏதேனும் துன்பம் நேர்ந்தால் “நாங்கள் முன்னரே எங்கள் விஷயத்தில் எச்சரிக்கையாய் இருந்துகொண்டோம்” என்று கூறிக்கொண்டு மிகவும் மகிழ்ச்சியுடன் திரும்பிச் செல்கின்றனர்.
قُلْ لَّنْ یُّصِیْبَنَاۤ اِلَّا مَا كَتَبَ اللّٰهُ لَنَا ۚ هُوَ مَوْلٰىنَا ۚ وَعَلَی اللّٰهِ فَلْیَتَوَكَّلِ الْمُؤْمِنُوْنَ ۟
நீர் அவர்களிடம் கூறுவீராக: “(நன்மையோ, தீமையோ) அல்லாஹ் எங்களுக்காக விதித்து வைத்திருப்பவற்றைத் தவிர எதுவும் எங்களை அடையாது. அவன்தான் எங்களின் பாதுகாவலன். மேலும், நம்பிக்கை கொண்டோர் அல்லாஹ்வையே முழுமை யாய்ச் சார்ந்திருக்க வேண்டும்.”
قُلْ هَلْ تَرَبَّصُوْنَ بِنَاۤ اِلَّاۤ اِحْدَی الْحُسْنَیَیْنِ ؕ وَنَحْنُ نَتَرَبَّصُ بِكُمْ اَنْ یُّصِیْبَكُمُ اللّٰهُ بِعَذَابٍ مِّنْ عِنْدِهٖۤ اَوْ بِاَیْدِیْنَا ۖؗ فَتَرَبَّصُوْۤا اِنَّا مَعَكُمْ مُّتَرَبِّصُوْنَ ۟
அவர்களிடம் கூறும்: “எங்கள் விஷயத்தில் இரு நன்மைகளில் ஒன்றைத் தவிர வேறு எதனை நீங்கள் எதிர்பார்க்கின்றீர்கள்? ஆனால், நாங்கள் உங்கள் விஷயத்தில் எதிர்பார்ப்பது, அல்லாஹ்வே உங்களுக்குத் தண்டனை கொடுக்கின்றானா? அல்லது எங்கள் கைகளின் மூலம் கொடுக்க வைக்கின்றானா என்பதைத்தான்! ஆக, நீங்களும் எதிர்பார்த்திருங்கள்! நாங்களும் உங்களுடன் எதிர்பார்த்திருக்கின்றோம்.”
قُلْ اَنْفِقُوْا طَوْعًا اَوْ كَرْهًا لَّنْ یُّتَقَبَّلَ مِنْكُمْ ؕ اِنَّكُمْ كُنْتُمْ قَوْمًا فٰسِقِیْنَ ۟
அவர்களிடம் நீர் கூறும்: “நீங்கள் (உங்கள் பொருளை) விருப்புடனோ, வெறுப்புடனோ எவ்வாறேனும் செலவு செய்யுங்கள்; ஆனால், அது உங்களிடமிருந்து ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. ஏனென்றால், திண்ணமாக நீங்கள் பாவம் செய்யும் சமூகத்தினராய் இருக்கின்றீர்கள்.”
وَمَا مَنَعَهُمْ اَنْ تُقْبَلَ مِنْهُمْ نَفَقٰتُهُمْ اِلَّاۤ اَنَّهُمْ كَفَرُوْا بِاللّٰهِ وَبِرَسُوْلِهٖ وَلَا یَاْتُوْنَ الصَّلٰوةَ اِلَّا وَهُمْ كُسَالٰی وَلَا یُنْفِقُوْنَ اِلَّا وَهُمْ كٰرِهُوْنَ ۟
அவர்கள் செலவு செய்த பொருள்கள் அவர்களிடமிருந்து ஏற்றுக்கொள்ளப்படாததற்குக் காரணம், அவர்கள் அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் நிராகரித்தார்கள்; மேலும், தொழுகைக்கு வரும்போது சோம்பல் பட்டவர்களாகவே வருகின்றார்கள். இறைவழியில் செலவழிக்கும்போதும் மனமில்லாமலேயே செலவழிக்கின்றார்கள்.
فَلَا تُعْجِبْكَ اَمْوَالُهُمْ وَلَاۤ اَوْلَادُهُمْ ؕ اِنَّمَا یُرِیْدُ اللّٰهُ لِیُعَذِّبَهُمْ بِهَا فِی الْحَیٰوةِ الدُّنْیَا وَتَزْهَقَ اَنْفُسُهُمْ وَهُمْ كٰفِرُوْنَ ۟
அவர்களிடமுள்ள செல்வங்களும், அவர்களின் மக்களும் உம்மை வியப்பில் ஆழ்த்திட வேண்டாம்! அல்லாஹ்வோ இவற்றின் மூலம் உலக வாழ்க்கையில் அவர்களை வேதனையில் ஆழ்த்திட வேண்டும் என்றும், சத்தியத்தை அவர்கள் நிராகரித்துக் கொண்டிருக்கும் நிலையிலேயே அவர்களின் உயிர்கள் பிரிய வேண்டும் என்றும்தான் நாடுகின்றான்.
وَیَحْلِفُوْنَ بِاللّٰهِ اِنَّهُمْ لَمِنْكُمْ ؕ وَمَا هُمْ مِّنْكُمْ وَلٰكِنَّهُمْ قَوْمٌ یَّفْرَقُوْنَ ۟
மேலும், “நாங்கள் உங்களைச் சார்ந்தவர்கள்தாம்” என்று அல்லாஹ்வின் மீது மீண்டும் மீண்டும் சத்தியம் செய்து அவர்கள் கூறுகின்றார்கள். ஆனால், ஒருபோதும் அவர்கள் உங்களைச் சார்ந்தவர்களல்லர். உண்மையில், அவர்கள் (உங்களைக் கண்டு) அஞ்சுகின்ற மக்களாவர்;
لَوْ یَجِدُوْنَ مَلْجَاً اَوْ مَغٰرٰتٍ اَوْ مُدَّخَلًا لَّوَلَّوْا اِلَیْهِ وَهُمْ یَجْمَحُوْنَ ۟
ஏதேனும் ஒரு தஞ்சம் புகும் இடத்தையோ, குகையையோ, நுழைவிடத்தையோ அவர்கள் காண்பார்களானால் அங்கே விரைந்து ஓடி ஒளிந்து கொள்வார்கள்!
وَمِنْهُمْ مَّنْ یَّلْمِزُكَ فِی الصَّدَقٰتِ ۚ فَاِنْ اُعْطُوْا مِنْهَا رَضُوْا وَاِنْ لَّمْ یُعْطَوْا مِنْهَاۤ اِذَا هُمْ یَسْخَطُوْنَ ۟
மேலும், (நபியே!) அவர்களில் சிலர், தானதர்மங்களைப் பங்கிடும் விஷயத்தில் உம்மைக் குறைகூறுகிறார்கள். அவற்றிலிருந்து அவர்களுக்குச் சிறிது கொடுக்கப்பட்டால் மனநிறைவு கொள்கின்றார்கள். அவற்றிலிருந்து அவர்களுக்கு கொடுக்கப்படவில்லையானால், அவர்கள் கோபம் அடைகிறார்கள்.
وَلَوْ اَنَّهُمْ رَضُوْا مَاۤ اٰتٰىهُمُ اللّٰهُ وَرَسُوْلُهٗ ۙ وَقَالُوْا حَسْبُنَا اللّٰهُ سَیُؤْتِیْنَا اللّٰهُ مِنْ فَضْلِهٖ وَرَسُوْلُهٗۤ ۙ اِنَّاۤ اِلَی اللّٰهِ رٰغِبُوْنَ ۟۠
அல்லாஹ்வும், அவனுடைய தூதரும் அவர்களுக்கு அளித்தவற்றைக் கொண்டு அவர்கள் மனநிறைவு கொண்டு “அல்லாஹ் எங்களுக்குப் போதுமானவன்; அல்லாஹ் தன்னுடைய அருட்கொடையிலிருந்து எங்களுக்கு இன்னும் அதிகம் வழங்குவான். அவனுடைய தூதரும் எங்களுக்கு வழங்குவார்கள். அல்லாஹ்விடமே நாங்கள் ஆவல் கொண்டிருக்கின்றோம்” என்று கூறியிருந்தார்களேயானால் எவ்வளவு நன்றாயிருந்திருக்கும்!
اِنَّمَا الصَّدَقٰتُ لِلْفُقَرَآءِ وَالْمَسٰكِیْنِ وَالْعٰمِلِیْنَ عَلَیْهَا وَالْمُؤَلَّفَةِ قُلُوْبُهُمْ وَفِی الرِّقَابِ وَالْغٰرِمِیْنَ وَفِیْ سَبِیْلِ اللّٰهِ وَابْنِ السَّبِیْلِ ؕ فَرِیْضَةً مِّنَ اللّٰهِ ؕ وَاللّٰهُ عَلِیْمٌ حَكِیْمٌ ۟
இந்த தானதர்மங்களெல்லாம் ஏழைகள், வறியவர்கள், இந்த தானதர்மங்களை வசூலிக்கவும் பங்கிடவும் நியமிக்கப்பட்ட பணியாளர்கள் மற்றும் உள்ளங்கள் இணக்கமாக்கப்பட வேண்டியவர்கள் ஆகியோருக்கும், பிடரிகளை விடுவிப்பதற்கும், கடனாளிகளுக்கும் மற்றும் இறைவழியில் செலவு செய்வதற்கும், பயணிகளுக்கும் உரியனவாகும். இது அல்லாஹ்வினால் விதிக்கப்பட்ட கடமையாகும்! மேலும் அல்லாஹ் யாவற்றையும் அறிந்தோனும் நுண்ணறிவாளனுமாயிருக்கின்றான்.
وَمِنْهُمُ الَّذِیْنَ یُؤْذُوْنَ النَّبِیَّ وَیَقُوْلُوْنَ هُوَ اُذُنٌ ؕ قُلْ اُذُنُ خَیْرٍ لَّكُمْ یُؤْمِنُ بِاللّٰهِ وَیُؤْمِنُ لِلْمُؤْمِنِیْنَ وَرَحْمَةٌ لِّلَّذِیْنَ اٰمَنُوْا مِنْكُمْ ؕ وَالَّذِیْنَ یُؤْذُوْنَ رَسُوْلَ اللّٰهِ لَهُمْ عَذَابٌ اَلِیْمٌ ۟
மேலும், நபிக்கு மனவேதனை அளிக்(கும் முறையில் பேசு)கின்ற சிலரும் அவர்களில் இருக்கின்றனர். அவர்கள் கூறுகின்றார்கள்: “இவர் தம்முடைய காதில் விழுவதையெல்லாம் நம்புகிறார்!” நீர் கூறும்: “உங்களுக்கு நன்மை அளிப்பவற்றைத் தான் செவியேற்கிறார். அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொள்கின்றார். மேலும் நம்பிக்கையாளர்களை நம்புகின்றார். உங்களில் யார் நம்பிக்கையாளர்களாய் விளங்குகின்றார்களோ அவர்களுக்கு முற்றிலும் அருட்கொடையாயும் இருக்கிறார். ஆனால், எவர்கள் அல்லாஹ்வின் தூதருக்கு நோவினை தருகின்றார்களோ அவர்களுக்குத் துன்புறுத்தும் தண்டனை இருக்கிறது.”
یَحْلِفُوْنَ بِاللّٰهِ لَكُمْ لِیُرْضُوْكُمْ ۚ وَاللّٰهُ وَرَسُوْلُهٗۤ اَحَقُّ اَنْ یُّرْضُوْهُ اِنْ كَانُوْا مُؤْمِنِیْنَ ۟
அவர்கள் உங்களைத் திருப்தியுறச் செய்வதற்காக உங்களிடம் அல்லாஹ்வின் பெயர் கூறி சத்தியம் செய்கின்றார்கள். உண்மையில் அவர்கள் நம்பிக்கையாளர்களாய் இருந்தால், அவர்கள் திருப்தியுறச் செய்வதற்கு அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே மிகவும் தகுதியானவர்கள்.
اَلَمْ یَعْلَمُوْۤا اَنَّهٗ مَنْ یُّحَادِدِ اللّٰهَ وَرَسُوْلَهٗ فَاَنَّ لَهٗ نَارَ جَهَنَّمَ خَالِدًا فِیْهَا ؕ ذٰلِكَ الْخِزْیُ الْعَظِیْمُ ۟
எவன் அல்லாஹ்வையும், அவனுடைய தூதரையும் பகைக்கின்றானோ அவனுக்குத் திண்ணமாக நரக நெருப்பு இருக்கிறது! அதில் அவன் என்றென்றும் வீழ்ந்து கிடப்பான்! இது மாபெரும் இழிவாகும் என்பதை அவர்கள் அறிந்து கொள்ளவில்லையா?
یَحْذَرُ الْمُنٰفِقُوْنَ اَنْ تُنَزَّلَ عَلَیْهِمْ سُوْرَةٌ تُنَبِّئُهُمْ بِمَا فِیْ قُلُوْبِهِمْ ؕ قُلِ اسْتَهْزِءُوْا ۚ اِنَّ اللّٰهَ مُخْرِجٌ مَّا تَحْذَرُوْنَ ۟
இறைநம்பிக்கையாளர்கள் மீது ஏதேனும் ஓர் அத்தியாயம் இறக்கியருளப்பட்டு, அது தம்முடைய உள்ளங்களில் உள்ளவற்றை அவர்களுக்கு வெளிப்படுத்திவிடுமோ என்று இந்நயவஞ்சகர்கள் அஞ்சுகிறார்கள். (நபியே! அவர்களிடம்) நீர் கூறும்: “நீங்கள் பரிகாசம் செய்து கொண்டே இருங்கள். எவை வெளிப்பட்டு விடுமோ என்று நீங்கள் அஞ்சுகின்றீர்களோ அவற்றை அல்லாஹ் வெளிப்படுத்தியே தீருவான்.”
وَلَىِٕنْ سَاَلْتَهُمْ لَیَقُوْلُنَّ اِنَّمَا كُنَّا نَخُوْضُ وَنَلْعَبُ ؕ قُلْ اَبِاللّٰهِ وَاٰیٰتِهٖ وَرَسُوْلِهٖ كُنْتُمْ تَسْتَهْزِءُوْنَ ۟
(நீங்கள் என்ன பேசிக் கொண்டிருந்தீர்கள் என்று) அவர்களிடம் நீர் கேட்பீராயின் உடனே அவர்கள் கூறுவர்: “நாங்கள் நகைச்சுவையாகவும் விளையாட்டாகவும்தான் பேசிக்கொண்டிருந்தோம்.” அவர்களிடம் நீர் கூறும்: “அல்லாஹ்வையும் அவனுடைய வசனங்களையும் அவனுடைய தூதரையும்தான் நீங்கள் பரிகாசம் செய்து கொண்டிருக்க வேண்டுமா?
لَا تَعْتَذِرُوْا قَدْ كَفَرْتُمْ بَعْدَ اِیْمَانِكُمْ ؕ اِنْ نَّعْفُ عَنْ طَآىِٕفَةٍ مِّنْكُمْ نُعَذِّبْ طَآىِٕفَةًۢ بِاَنَّهُمْ كَانُوْا مُجْرِمِیْنَ ۟۠
உங்கள் தவறுகளை நீங்கள் நியாயப்படுத்த வேண்டாம். நீங்கள் இறைநம்பிக்கை கொண்டபின் திண்ணமாக நிராகரித்துவிட்டீர்கள். உங்களில் ஒரு கூட்டத்தாரை நாம் மன்னித்துவிட்டாலும் மற்றொரு கூட்டத்தாருக்கு நாம் தண்டனை வழங்கியே தீருவோம்! ஏனென்றால், அவர்கள் குற்றவாளிகளாகி விட்டனர்.”
اَلْمُنٰفِقُوْنَ وَالْمُنٰفِقٰتُ بَعْضُهُمْ مِّنْ بَعْضٍ ۘ یَاْمُرُوْنَ بِالْمُنْكَرِ وَیَنْهَوْنَ عَنِ الْمَعْرُوْفِ وَیَقْبِضُوْنَ اَیْدِیَهُمْ ؕ نَسُوا اللّٰهَ فَنَسِیَهُمْ ؕ اِنَّ الْمُنٰفِقِیْنَ هُمُ الْفٰسِقُوْنَ ۟
நயவஞ்சக ஆண்கள், பெண்கள் அனைவரும் ஒரேவித மானவர்கள்தாம்! அவர்கள் தீமை புரியுமாறு ஏவுகிறார்கள்; நன்மையை விட்டுத் தடுக்கிறார்கள். மேலும், தங்களுடைய கைகளை (நன்மையானவற்றை விட்டு) முடக்கிக் கொள்கின்றார்கள். அவர்கள் அல்லாஹ்வை மறந்ததனால் அல்லாஹ்வும் அவர்களை மறந்தான்! திண்ணமாக, இந்நயவஞ்சகர்கள் தீயவர்கள்தாம்!
وَعَدَ اللّٰهُ الْمُنٰفِقِیْنَ وَالْمُنٰفِقٰتِ وَالْكُفَّارَ نَارَ جَهَنَّمَ خٰلِدِیْنَ فِیْهَا ؕ هِیَ حَسْبُهُمْ ۚ وَلَعَنَهُمُ اللّٰهُ ۚ وَلَهُمْ عَذَابٌ مُّقِیْمٌ ۟ۙ
இந்நயவஞ்சக ஆண்களுக்கும், பெண்களுக்கும் மற்றும் நிராகரிப்பாளர்களுக்கும் நரக நெருப்பு உண்டென்று அல்லாஹ் எச்சரிக்கை செய்திருக்கின்றான். அதில் அவர்கள் என்றென்றும் வீழ்ந்து கிடப்பார்கள்! அதுவே அவர்களுக்குப் பொருத்தமான இடமாகும். மேலும், அவர்கள்மீது அல்லாஹ்வின் சாபம் ஏற்படும். அவர்களுக்கு நிலையான வேதனையும் இருக்கிறது.
كَالَّذِیْنَ مِنْ قَبْلِكُمْ كَانُوْۤا اَشَدَّ مِنْكُمْ قُوَّةً وَّاَكْثَرَ اَمْوَالًا وَّاَوْلَادًا ؕ فَاسْتَمْتَعُوْا بِخَلَاقِهِمْ فَاسْتَمْتَعْتُمْ بِخَلَاقِكُمْ كَمَا اسْتَمْتَعَ الَّذِیْنَ مِنْ قَبْلِكُمْ بِخَلَاقِهِمْ وَخُضْتُمْ كَالَّذِیْ خَاضُوْا ؕ اُولٰٓىِٕكَ حَبِطَتْ اَعْمَالُهُمْ فِی الدُّنْیَا وَالْاٰخِرَةِ ۚ وَاُولٰٓىِٕكَ هُمُ الْخٰسِرُوْنَ ۟
உங்களுக்கு முன்னிருந்தவர்களைப் போன்றே நீங்களும் நடந்து கொள்கின்றீர்கள். அவர்கள் உங்களைவிடவும் அதிக ஆற்றல் பெற்றவர்களாயும், அதிகப் பொருள்களும் வழித்தோன்றல்களும் உடையவர்களாயும் இருந்தனர். உலகில் தமக்குரிய பங்கினை அவர்கள் அனுபவித்தார்கள். உங்களுக்கு முன் சென்றவர்கள், தமக்குரிய பங்கினை அனுபவித்தது போன்று நீங்கள் உங்களுக்குரிய பங்கினை அனுபவித்து விட்டீர்கள்! மேலும், வீண்வாதங்களில் ஈடுபட்டிருந்த அவர்களைப் போன்று நீங்களும் ஈடுபட்டீர்கள். (இறுதியில் அவர்களுக்கு என்ன கதி ஏற்பட்டதென்றால்) அவர்கள் செய்த எல்லாச் செயல்களும் இம்மையிலும், மறுமையிலும் வீணாகிவிட்டன. மேலும், அத்தகையவர்களே இழப்புக்குரியவர்களாவர்!
اَلَمْ یَاْتِهِمْ نَبَاُ الَّذِیْنَ مِنْ قَبْلِهِمْ قَوْمِ نُوْحٍ وَّعَادٍ وَّثَمُوْدَ ۙ۬ وَقَوْمِ اِبْرٰهِیْمَ وَاَصْحٰبِ مَدْیَنَ وَالْمُؤْتَفِكٰتِ ؕ اَتَتْهُمْ رُسُلُهُمْ بِالْبَیِّنٰتِ ۚ فَمَا كَانَ اللّٰهُ لِیَظْلِمَهُمْ وَلٰكِنْ كَانُوْۤا اَنْفُسَهُمْ یَظْلِمُوْنَ ۟
தமக்கு முன்சென்றவர்களான நூஹுடைய சமூகத்தினர், ஆத் மற்றும் ஸமூத் கூட்டத்தினர், இப்ராஹீமின் சமூகத்தினர், மத்யன்வாசிகள் மற்றும் தலைகீழாகப் புரட்டப்பட்ட ஊர்கள் ஆகியோரின் வரலாறு இவர்களுக்குக் கிடைக்கவில்லையா? அவர்களுடைய தூதர்கள் தெளிவான சான்றுகளை அவர்களிடம் கொண்டு வந்தார்கள். எனவே, அல்லாஹ் அவர்களுக்குத் தீங்கிழைக்கவில்லை. ஆனால் அவர்கள் தமக்குத்தாமே தீங்கிழைத்துக் கொண்டிருந்தார்கள்!
وَالْمُؤْمِنُوْنَ وَالْمُؤْمِنٰتُ بَعْضُهُمْ اَوْلِیَآءُ بَعْضٍ ۘ یَاْمُرُوْنَ بِالْمَعْرُوْفِ وَیَنْهَوْنَ عَنِ الْمُنْكَرِ وَیُقِیْمُوْنَ الصَّلٰوةَ وَیُؤْتُوْنَ الزَّكٰوةَ وَیُطِیْعُوْنَ اللّٰهَ وَرَسُوْلَهٗ ؕ اُولٰٓىِٕكَ سَیَرْحَمُهُمُ اللّٰهُ ؕ اِنَّ اللّٰهَ عَزِیْزٌ حَكِیْمٌ ۟
இறைநம்பிக்கை கொண்ட ஆண்கள், பெண்கள் அனைவரும் ஒருவருக்கொருவர் ஆதரவாளர்களாய் இருக்கின்றார்கள். அவர்கள் நன்மை புரியுமாறு ஏவுகிறார்கள்; தீமையிலிருந்து தடுக்கிறார்கள். மேலும், தொழுகையை நிலைநாட்டுகிறார்கள்; ஜகாத்தும் கொடுக்கிறார்கள். மேலும், அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் கீழ்ப்படிகிறார்கள். அத்தகையோர் மீதுதான் அல்லாஹ்வின் கருணை பொழிந்து கொண்டிருக்கும்! திண்ணமாக, அல்லாஹ் யாவற்றையும் மிகைத்தவனாகவும், நுண்ணறிவாளனாகவும் இருக்கின்றான்.
وَعَدَ اللّٰهُ الْمُؤْمِنِیْنَ وَالْمُؤْمِنٰتِ جَنّٰتٍ تَجْرِیْ مِنْ تَحْتِهَا الْاَنْهٰرُ خٰلِدِیْنَ فِیْهَا وَمَسٰكِنَ طَیِّبَةً فِیْ جَنّٰتِ عَدْنٍ ؕ وَرِضْوَانٌ مِّنَ اللّٰهِ اَكْبَرُ ؕ ذٰلِكَ هُوَ الْفَوْزُ الْعَظِیْمُ ۟۠
கீழே ஆறுகள் ஓடிக் கொண்டிருக்கும் சுவனங்களை வழங்குவதாக இறைநம்பிக்கை கொண்ட ஆண்களுக்கும், பெண்களுக்கும் அல்லாஹ் வாக்களித்துள்ளான். அவற்றில் அவர்கள் என்றென்றும் தங்கி வாழ்வார்கள்! மேலும், அந்த நிலையான சுவனங்களில் தூய்மையான இல்லங்கள் அவர்களுக்கு இருக்கின்றன. எல்லாவற்றிற்கும் மேலான அல்லாஹ்வின் உவப்பும் அவர்களுக்குக் கிட்டும். இதுவே மாபெரும் வெற்றியாகும்!
یٰۤاَیُّهَا النَّبِیُّ جَاهِدِ الْكُفَّارَ وَالْمُنٰفِقِیْنَ وَاغْلُظْ عَلَیْهِمْ ؕ وَمَاْوٰىهُمْ جَهَنَّمُ ؕ وَبِئْسَ الْمَصِیْرُ ۟
நபியே! இறைநிராகரிப்பாளர்கள், நயவஞ்சகர்கள் ஆகியோருடன் (முழு வலிமையோடு) போராடுவீராக! மேலும், அவர்களிடம் கடினமாக நடந்து கொள்வீராக! இறுதியில், அவர்களின் தங்குமிடம் நரகமாகும். அது மிகக் கெட்ட இருப்பிடமாகும்.
یَحْلِفُوْنَ بِاللّٰهِ مَا قَالُوْا ؕ وَلَقَدْ قَالُوْا كَلِمَةَ الْكُفْرِ وَكَفَرُوْا بَعْدَ اِسْلَامِهِمْ وَهَمُّوْا بِمَا لَمْ یَنَالُوْا ۚ وَمَا نَقَمُوْۤا اِلَّاۤ اَنْ اَغْنٰىهُمُ اللّٰهُ وَرَسُوْلُهٗ مِنْ فَضْلِهٖ ۚ فَاِنْ یَّتُوْبُوْا یَكُ خَیْرًا لَّهُمْ ۚ وَاِنْ یَّتَوَلَّوْا یُعَذِّبْهُمُ اللّٰهُ عَذَابًا اَلِیْمًا ۙ فِی الدُّنْیَا وَالْاٰخِرَةِ ۚ وَمَا لَهُمْ فِی الْاَرْضِ مِنْ وَّلِیٍّ وَّلَا نَصِیْرٍ ۟
இறைநிராகரிப்புச் சொல்லினைத் திண்ணமாக கூறியிருந்தும், ‘நாங்கள் அவ்வாறு கூறவில்லை’ என்று அல்லாஹ்வின் மீது அவர்கள் (மீண்டும் மீண்டும்) சத்தியம் செய்கின்றார்கள். அவர்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டபின் நிராகரிப்பை மேற்கொண்டு விட்டார்கள். மேலும் தம்மால் செய்ய முடியாத செயலைச் செய்ய நினைத்தார்கள். தன்னுடைய அருளால் அல்லாஹ்வும், அவனுடைய தூதரும் அவர்களுக்குச் செல்வம் வழங்கியதற்காகவா, அவர்கள் இவ்வளவு வெறுப்புக் கொள்கிறார்கள். அவர்கள் தம்முடைய இந்நடத்தையிலிருந்து விலகிக்கொண்டால் அது அவர்களுக்குச் சிறந்ததாகும். விலகிக்கொள்ளாவிட்டால் அல்லாஹ் அவர்களுக்கு இம்மையிலும் மறுமையிலும் துன்புறுத்தும் தண்டனை அளிப்பான். இப்பூமியில் அவர்களை ஆதரிப்பாரும், அவர்களுக்கு உதவி புரிவாரும் யாரும் இரார்.
وَمِنْهُمْ مَّنْ عٰهَدَ اللّٰهَ لَىِٕنْ اٰتٰىنَا مِنْ فَضْلِهٖ لَنَصَّدَّقَنَّ وَلَنَكُوْنَنَّ مِنَ الصّٰلِحِیْنَ ۟
அவர்களில் இப்படிச் சிலர் இருக்கின்றனர்: “அல்லாஹ் தன் அருட்கொடையிலிருந்து எங்களுக்கு வழங்கினால், நிச்சயம் நாங்கள் தானதர்மங்கள் செய்வோம்; மேலும், நல்லவர்களாவோம்” என்று அல்லாஹ்விடம் அவர்கள் வாக்குறுதி அளித்தார்கள்.
فَلَمَّاۤ اٰتٰىهُمْ مِّنْ فَضْلِهٖ بَخِلُوْا بِهٖ وَتَوَلَّوْا وَّهُمْ مُّعْرِضُوْنَ ۟
ஆனால், அல்லாஹ் தன்னுடைய அருட் கொடையிலிருந்து அவர்களுக்கு வழங்கியபோது, அதில் அவர்கள் கஞ்சத்தனம் செய்தார்கள். மேலும், சிறிதும் பொருட்படுத்தாதவர்களாய் (தமது வாக்குறுதியிலிருந்து) நழுவிச் சென்றார்கள்.
فَاَعْقَبَهُمْ نِفَاقًا فِیْ قُلُوْبِهِمْ اِلٰی یَوْمِ یَلْقَوْنَهٗ بِمَاۤ اَخْلَفُوا اللّٰهَ مَا وَعَدُوْهُ وَبِمَا كَانُوْا یَكْذِبُوْنَ ۟
எனவே, அல்லாஹ்விடம் அளித்த வாக்குறுதிக்கு அவர்கள் மாறுசெய்த காரணத்தாலும், பொய்யுரைத்துக் கொண்டிருந்ததாலும் அல்லாஹ் அவர்களின் உள்ளத்தில் வஞ்சக எண்ணத்தை ஏற்படுத்தினான். அவனை அவர்கள் சந்திக்கும் நாள் வரை அது அவர்களிடம் இருக்கும்.
اَلَمْ یَعْلَمُوْۤا اَنَّ اللّٰهَ یَعْلَمُ سِرَّهُمْ وَنَجْوٰىهُمْ وَاَنَّ اللّٰهَ عَلَّامُ الْغُیُوْبِ ۟ۚ
அவர்களுடைய அந்தரங்கத்தையும், அதைவிட இரகசியமானவற்றையும் திண்ணமாக அல்லாஹ் அறிகின்றான் என்பதையும் மறைவான உண்மைகள் அனைத்தையும் அவன் முழுமையாக அறியக்கூடியவன் ஆவான் என்பதையும் அவர்கள் தெரிந்து கொள்ளவில்லையா?
اَلَّذِیْنَ یَلْمِزُوْنَ الْمُطَّوِّعِیْنَ مِنَ الْمُؤْمِنِیْنَ فِی الصَّدَقٰتِ وَالَّذِیْنَ لَا یَجِدُوْنَ اِلَّا جُهْدَهُمْ فَیَسْخَرُوْنَ مِنْهُمْ ؕ سَخِرَ اللّٰهُ مِنْهُمْ ؗ وَلَهُمْ عَذَابٌ اَلِیْمٌ ۟
இக்கஞ்சர்கள் (என்ன செய்கிறார்கள் என்பதை அல்லாஹ் அறிகிறான்.) இறைநம்பிக்கையாளர்களில் மனமுவந்து வாரி வழங்குவோரின் தானதர்மங்களைப் பற்றியும் இவர்கள் குறை கூறுகின்றார்கள். (இறைவழியில் செலவழிப்பதற்காக) சிரமப்பட்டு சம்பாதித்ததைத் தவிர வேறெதுவும் இல்லாதவர்களைப் பற்றியும் இவர்கள் கேலி செய்கின்றார்கள். அல்லாஹ் இவர்களைக் கேலி செய்கின்றான். மேலும், இவர்களுக்குத் துன்புறுத்தும் தண்டனையும் இருக்கிறது.
اِسْتَغْفِرْ لَهُمْ اَوْ لَا تَسْتَغْفِرْ لَهُمْ ؕ اِنْ تَسْتَغْفِرْ لَهُمْ سَبْعِیْنَ مَرَّةً فَلَنْ یَّغْفِرَ اللّٰهُ لَهُمْ ؕ ذٰلِكَ بِاَنَّهُمْ كَفَرُوْا بِاللّٰهِ وَرَسُوْلِهٖ ؕ وَاللّٰهُ لَا یَهْدِی الْقَوْمَ الْفٰسِقِیْنَ ۟۠
(நபியே!) நீர் இவர்களுக்காக பாவமன்னிப் புக் கோரினாலும் சரி, கோராவிட்டாலும் சரி, எழுபது தடவைகள் இவர்களுக்காக நீர் மன்னிப்புக் கோரினாலும் அல்லாஹ் இவர்களை ஒருபோதும் மன்னிக்க மாட்டான்! ஏனென்றால் அல்லாஹ்வையும், அவனுடைய தூதரையும் இவர்கள் நிராகரித்து விட்டார்கள். பாவம் புரியும் மக்களுக்கு அல்லாஹ் நேர்வழி காட்டு வதில்லை.
فَرِحَ الْمُخَلَّفُوْنَ بِمَقْعَدِهِمْ خِلٰفَ رَسُوْلِ اللّٰهِ وَكَرِهُوْۤا اَنْ یُّجَاهِدُوْا بِاَمْوَالِهِمْ وَاَنْفُسِهِمْ فِیْ سَبِیْلِ اللّٰهِ وَقَالُوْا لَا تَنْفِرُوْا فِی الْحَرِّ ؕ قُلْ نَارُ جَهَنَّمَ اَشَدُّ حَرًّا ؕ لَوْ كَانُوْا یَفْقَهُوْنَ ۟
போருக்குச் செல்லாமல் தங்கிவிட அனுமதி பெற்றவர்கள், அல்லாஹ்வின் தூதர் புறப்பட்டதற்குப் பின்னால் தத்தம் வீடுகளில் இருப்பது குறித்து மகிழ்ச்சி அடைந்தார்கள். அவர்கள் தங்கள் உயிர்களையும், உடைமைகளையும் அல்லாஹ்வின் வழியில் அர்ப்பணித்துப் போராடுவதை வெறுத்தார்கள். மேலும், ‘கடுமையான இந்த வெப்ப காலத்தில் போருக்குப் புறப்படாதீர்கள்’ என்று (மக்களிடம்) கூறினார்கள். (இவர்களிடம்) நீர் கூறுவீராக: “நரக நெருப்பு இதைவிட அதிக வெப்பமுடையது.” அந்தோ! இதனை அவர்கள் உணர்ந்திருக்க வேண்டாமா!
فَلْیَضْحَكُوْا قَلِیْلًا وَّلْیَبْكُوْا كَثِیْرًا ۚ جَزَآءً بِمَا كَانُوْا یَكْسِبُوْنَ ۟
இனி அவர்கள் குறைவாக சிரிக்கட்டும்; அதிகமாக அழட்டும்! ஏனெனில் அவர்கள் சம்பாதித்துக் கொண்டிருந்த தீவினையின் விளைவு இவ்வாறுதான் இருக்கிறது. (அதனால் அவர்கள் அதிகம் அழட்டும்!)
فَاِنْ رَّجَعَكَ اللّٰهُ اِلٰی طَآىِٕفَةٍ مِّنْهُمْ فَاسْتَاْذَنُوْكَ لِلْخُرُوْجِ فَقُلْ لَّنْ تَخْرُجُوْا مَعِیَ اَبَدًا وَّلَنْ تُقَاتِلُوْا مَعِیَ عَدُوًّا ؕ اِنَّكُمْ رَضِیْتُمْ بِالْقُعُوْدِ اَوَّلَ مَرَّةٍ فَاقْعُدُوْا مَعَ الْخٰلِفِیْنَ ۟
அவர்களிடையே அல்லாஹ் உம்மைத் திரும்பக் கொண்டு வரும்போது (ஜிஹாதுக்காகப்) புறப்பட அவர்களில் ஒரு பிரிவினர் உம்மிடம் அனுமதி கோரினால், நீர் அவர்களிடம் (தெளிவாகக்) கூறிவிட வேண்டும்: “இனி ஒருபோதும் உங்களால் என்னுடன் வர இயலாது; என்னோடு வந்து எந்தப் பகைவர்களையும் எதிர்த்துப் போரிட உங்களால் முடியாது. ஏனெனில், முதல் தடவை (போருக்கு) வராமல் தங்கி விடுவதை நீங்கள் விரும்பினீர்கள். ஆகையால் (இனி) வராமல் தங்கி விட்டவர்களுடன் நீங்களும் தங்கி விடுங்கள்!”
وَلَا تُصَلِّ عَلٰۤی اَحَدٍ مِّنْهُمْ مَّاتَ اَبَدًا وَّلَا تَقُمْ عَلٰی قَبْرِهٖ ؕ اِنَّهُمْ كَفَرُوْا بِاللّٰهِ وَرَسُوْلِهٖ وَمَاتُوْا وَهُمْ فٰسِقُوْنَ ۟
(இனி,) அவர்களில் எவரேனும் இறந்துவிட்டால் ஒருபோதும் அவருக்காக (ஜனாஸா) மரணத்தொழுகை தொழாதீர்; மேலும், அவருக்குப் பிரார்த்தனை செய்வதற்காக அவருடைய அடக்கத்தலத்தில் நிற்காதீர்! ஏனென்றால், திண்ணமாக அவர்கள் அல்லாஹ்வையும், அவனுடைய தூதரையும் நிராகரித்து விட்டார்கள். மேலும், தீயவர்களாகவே அவர்கள் இறந்து போனார்கள்.
وَلَا تُعْجِبْكَ اَمْوَالُهُمْ وَاَوْلَادُهُمْ ؕ اِنَّمَا یُرِیْدُ اللّٰهُ اَنْ یُّعَذِّبَهُمْ بِهَا فِی الدُّنْیَا وَتَزْهَقَ اَنْفُسُهُمْ وَهُمْ كٰفِرُوْنَ ۟
அவர்களுடைய செல்வங்களும், அதிகமான பிள்ளைகளும் உம்மை வியப்பிலாழ்த்த வேண்டாம். இவற்றின் மூலம் அவர்களுக்கு இவ்வுலகிலே தண்டனை வழங்கிட வேண்டும் என்றும், நிராகரிப்பவர்களாகவே அவர்களின் உயிர்கள் பிரிய வேண்டும் என்றும்தான் அல்லாஹ் நாடுகின்றான்.
وَاِذَاۤ اُنْزِلَتْ سُوْرَةٌ اَنْ اٰمِنُوْا بِاللّٰهِ وَجَاهِدُوْا مَعَ رَسُوْلِهِ اسْتَاْذَنَكَ اُولُوا الطَّوْلِ مِنْهُمْ وَقَالُوْا ذَرْنَا نَكُنْ مَّعَ الْقٰعِدِیْنَ ۟
“அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொள்ளுங்கள்; மேலும், அவனுடைய தூதருடன் சேர்ந்து ஜிஹாத் செய்யுங்கள்!” என்று (அறிவுறுத்தும்) ஏதேனும் ஓர் அத்தியாயம் இறக்கியருளப்பட்டால், அவர்களில் சக்தி பெற்றவர்கள் (ஜிஹாதில் கலந்து கொள்ளாதிருக்க) அனுமதி வழங்குமாறு உம்மிடம் கோருவார்கள். “எங்களை விட்டுவிடும்; தங்கியிருப்பவர்களுடன் நாங்களும் சேர்ந்து விடுகின்றோம்” என்றும் கூறுவார்கள்.
رَضُوْا بِاَنْ یَّكُوْنُوْا مَعَ الْخَوَالِفِ وَطُبِعَ عَلٰی قُلُوْبِهِمْ فَهُمْ لَا یَفْقَهُوْنَ ۟
அத்தகையவர்கள் வீட்டில் தங்கியிருக்கும் பெண்கள் மற்றும் இயலாதோருடன் சேர்ந்துவிட விரும்பி விட்டார்கள். மேலும், அவர்களுடைய உள்ளங்கள் மீது முத்திரையிடப்பட்டுவிட்டது. எனவே அவர்கள் எதையும் புரிந்து கொள்ளமாட்டார்கள்.
لٰكِنِ الرَّسُوْلُ وَالَّذِیْنَ اٰمَنُوْا مَعَهٗ جٰهَدُوْا بِاَمْوَالِهِمْ وَاَنْفُسِهِمْ ؕ وَاُولٰٓىِٕكَ لَهُمُ الْخَیْرٰتُ ؗ وَاُولٰٓىِٕكَ هُمُ الْمُفْلِحُوْنَ ۟
ஆனால், இறைத்தூதரும் அவருடன் நம்பிக்கை கொண்டவர்களும் தம் உயிர்களையும் உடைமைகளையும் அர்ப்பணித்து ஜிஹாத் செய்தார்கள். (இனி) அத்தகையவர்களுக்கே எல்லா நன்மைகளும் இருக்கின்றன. அவர்கள்தாம் வெற்றி பெற்றவர்களுமாவர்.
اَعَدَّ اللّٰهُ لَهُمْ جَنّٰتٍ تَجْرِیْ مِنْ تَحْتِهَا الْاَنْهٰرُ خٰلِدِیْنَ فِیْهَا ؕ ذٰلِكَ الْفَوْزُ الْعَظِیْمُ ۟۠
கீழே ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும் சுவனங்களை அல்லாஹ் அவர்களுக்காகத் தயார் செய்து வைத்திருக்கின்றான்; அவற்றில் அவர்கள் என்றென்றும் தங்கி வாழ்வார்கள். இதுவே மாபெரும் வெற்றியாகும்.
وَجَآءَ الْمُعَذِّرُوْنَ مِنَ الْاَعْرَابِ لِیُؤْذَنَ لَهُمْ وَقَعَدَ الَّذِیْنَ كَذَبُوا اللّٰهَ وَرَسُوْلَهٗ ؕ سَیُصِیْبُ الَّذِیْنَ كَفَرُوْا مِنْهُمْ عَذَابٌ اَلِیْمٌ ۟
மேலும், (போருக்குச் செல்லாமலிருக்க) தங்களுக்கும் அனுமதி அளிக்கப்பட வேண்டும் என்பதற்காக, சாக்குப் போக்குகள் கூறக்கூடிய நாட்டுப்புற அரபிகள் பலர் வந்தனர். இதுபோல், ஈமான் நம்பிக்கை கொள்வதாக அல்லாஹ்விடமும் அவனுடைய தூதரிடமும் பொய்யான வாக்குறுதி அளித்தவர்களும் போருக்குச் செல்லாமல் பின்தங்கி விட்டார்கள். இந்த நாட்டுப்புற அரபிகளில் எவர்கள் நிராகரிக்கும் போக்கினைக் கடைப்பிடித்தார்களோ அவர்களைத் துன்புறுத்தும் தண்டனை அதிவிரைவில் சூழ்ந்து கொள்ளும்!
لَیْسَ عَلَی الضُّعَفَآءِ وَلَا عَلَی الْمَرْضٰی وَلَا عَلَی الَّذِیْنَ لَا یَجِدُوْنَ مَا یُنْفِقُوْنَ حَرَجٌ اِذَا نَصَحُوْا لِلّٰهِ وَرَسُوْلِهٖ ؕ مَا عَلَی الْمُحْسِنِیْنَ مِنْ سَبِیْلٍ ؕ وَاللّٰهُ غَفُوْرٌ رَّحِیْمٌ ۟ۙ
இயலாதவர்கள், நோயாளிகள் மற்றும் ஜிஹாதில் கலந்துகொள்ள வசதி வாய்ப்பு அற்றவர்கள் ஆகியோர் அவர்கள் அல்லாஹ் மற்றும் அவனுடைய தூதருக்கு வாய்மையாளர்களாய் இருக்கும் பட்சத்தில் அவர்கள் மீது யாதொரு குற்றமும் இல்லை. இத்தகைய நன்னடத்தையுடையோரை ஆட்சேபிக்க எந்தக் காரணமும் இல்லை. மேலும், அல்லாஹ் பெரும் மன்னிப்பாளனாகவும் கருணை புரிபவனாகவும் இருக்கின்றான்.
وَّلَا عَلَی الَّذِیْنَ اِذَا مَاۤ اَتَوْكَ لِتَحْمِلَهُمْ قُلْتَ لَاۤ اَجِدُ مَاۤ اَحْمِلُكُمْ عَلَیْهِ ۪ تَوَلَّوْا وَّاَعْیُنُهُمْ تَفِیْضُ مِنَ الدَّمْعِ حَزَنًا اَلَّا یَجِدُوْا مَا یُنْفِقُوْنَ ۟ؕ
இதேபோன்று பின்வருபவர்கள் மீதும் எவ்வித ஆட்சேபணையும் இல்லை: அவர்களாகவே உம்மிடம் வந்து தங்களுக்கு வாகன வசதி செய்து கொடுக்க வேண்டும் எனக் கோரினர். “உங்களுக்கு வாகனம் ஏற்பாடு செய்வதற்கு என்னிடம் வசதி எதுவும் இல்லையே!” என நீர் கூறியபோது வேறு வழியின்றி அவர்கள் திரும்பிச் சென்றனர். மேலும், ஜிஹாதில் கலந்து கொள்வதற்காக, சொந்தமாக செலவு செய்யும் ஆற்றலைப் பெற்றிருக்கவில்லையே என்ற துயரத்தில் அவர்களின் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது.
اِنَّمَا السَّبِیْلُ عَلَی الَّذِیْنَ یَسْتَاْذِنُوْنَكَ وَهُمْ اَغْنِیَآءُ ۚ رَضُوْا بِاَنْ یَّكُوْنُوْا مَعَ الْخَوَالِفِ ۙ وَطَبَعَ اللّٰهُ عَلٰی قُلُوْبِهِمْ فَهُمْ لَا یَعْلَمُوْنَ ۟
ஆனால், எவர்கள் செல்வந்தர்களாயிருந்தும் (ஜிஹாதில் கலந்து கொள்ளாதிருக்க) உம்மிடம் அனுமதி கோருகின்றார்களோ அவர்கள் மீதே ஆட்சேபணை இருக்கின்றது. வீட்டில் தங்கியிருக்கும் பெண்கள் மற்றும் இயலாதோருடன் சேர்ந்திருக்கவே அவர்கள் விரும்பினார்கள். மேலும், அல்லாஹ் அவர்களின் உள்ளங்கள் மீது முத்திரையிட்டுவிட்டான்! ஆகவே, இவர்கள் (தங்களின் இந்த நடத்தை அல்லாஹ்வின் திருமுன் எத்தகைய விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை) இப்பொழுது அறிந்தார் இலர்.
یَعْتَذِرُوْنَ اِلَیْكُمْ اِذَا رَجَعْتُمْ اِلَیْهِمْ ؕ قُلْ لَّا تَعْتَذِرُوْا لَنْ نُّؤْمِنَ لَكُمْ قَدْ نَبَّاَنَا اللّٰهُ مِنْ اَخْبَارِكُمْ ؕ وَسَیَرَی اللّٰهُ عَمَلَكُمْ وَرَسُوْلُهٗ ثُمَّ تُرَدُّوْنَ اِلٰی عٰلِمِ الْغَیْبِ وَالشَّهَادَةِ فَیُنَبِّئُكُمْ بِمَا كُنْتُمْ تَعْمَلُوْنَ ۟
நீங்கள் அவர்களிடம் திரும்ப வருவீர்களானால், உங்களிடம் அவர்கள் (விதவிதமான) சாக்குப் போக்குகள் கூறுவார்கள். ஆனால், நீர் கூறும்: “சாக்குப் போக்கு கூறாதீர்கள்; நீங்கள் கூறும் எதனையும் நாங்கள் ஏற்கமாட்டோம். உங்களுடைய நிலைமைகளை அல்லாஹ் எங்களுக்கு அறிவித்து விட்டான். இனி அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் உங்களுடைய செயல் முறையை நிச்சயம் பார்ப்பார்கள்! பின்னர் மறைவானவை, வெளிப்படையானவை ஆகிய அனைத்தையும் அறியக் கூடியவன் பக்கம் நீங்கள் திரும்பக் கொண்டுவரப்படுவீர்கள்! அப்போது நீங்கள் என்ன செய்து கொண்டிருந்தீர்கள் என்பதனை அவன் உங்களுக்கு அறிவிப்பான்.”
سَیَحْلِفُوْنَ بِاللّٰهِ لَكُمْ اِذَا انْقَلَبْتُمْ اِلَیْهِمْ لِتُعْرِضُوْا عَنْهُمْ ؕ فَاَعْرِضُوْا عَنْهُمْ ؕ اِنَّهُمْ رِجْسٌ ؗ وَّمَاْوٰىهُمْ جَهَنَّمُ ۚ جَزَآءً بِمَا كَانُوْا یَكْسِبُوْنَ ۟
நீங்கள் அவர்களிடம் திரும்பி வரும்போது அவர்களை நீங்கள் கண்டுகொள்ளாமல் இருந்துவிட வேண்டும் என்பதற்காக உங்கள் முன்னிலையில் அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்வார்கள். எனவே, நீங்கள் அவர்களைக் கண்டுகொள்ளாமல் இருந்துவிடுங்கள்! ஏனென்றால், அவர்கள் அசுத்தமானவர்கள்; உண்மையில் அவர்கள் சேருமிடம் நரகமாகும். அவர்கள் சம்பாதித்துக் கொண்டிருந்த தீவினைகளுக்கு இதுவே கூலியாகும்.
یَحْلِفُوْنَ لَكُمْ لِتَرْضَوْا عَنْهُمْ ۚ فَاِنْ تَرْضَوْا عَنْهُمْ فَاِنَّ اللّٰهَ لَا یَرْضٰی عَنِ الْقَوْمِ الْفٰسِقِیْنَ ۟
நீங்கள் அவர்கள் மீது திருப்தி கொண்டுவிட வேண்டும் என்பதற்காக உங்களிடம் அவர்கள் சத்தியம் செய்வார்கள். நீங்கள் அவர்கள் மீது திருப்தி கொண்டாலும் திண்ணமாக அல்லாஹ் பாவிகளான இத்தகைய மக்கள் மீது ஒருபோதும் திருப்தி கொள்ள மாட்டான்.
اَلْاَعْرَابُ اَشَدُّ كُفْرًا وَّنِفَاقًا وَّاَجْدَرُ اَلَّا یَعْلَمُوْا حُدُوْدَ مَاۤ اَنْزَلَ اللّٰهُ عَلٰی رَسُوْلِهٖ ؕ وَاللّٰهُ عَلِیْمٌ حَكِیْمٌ ۟
இந்த நாட்டுப்புற அரபிகள் இறைநிராகரிப்பிலும் நயவஞ்சகத்திலும் மிகவும் கடுமையானவர்களாவர். மேலும், அல்லாஹ் தன்னுடைய தூதர் மீது இறக்கியருளிய தீனின் (நெறியின்) வரையறைகளை அவர்கள் அறியாதிருப்பதற்கான சாத்தியக்கூறுகள் அவர்களிடம் அதிகம் இருக்கின்றன. மேலும், அல்லாஹ் யாவற்றையும் அறிந்தவனாகவும், நுண்ணறிவாளனாகவும் இருக்கின்றான்.
وَمِنَ الْاَعْرَابِ مَنْ یَّتَّخِذُ مَا یُنْفِقُ مَغْرَمًا وَّیَتَرَبَّصُ بِكُمُ الدَّوَآىِٕرَ ؕ عَلَیْهِمْ دَآىِٕرَةُ السَّوْءِ ؕ وَاللّٰهُ سَمِیْعٌ عَلِیْمٌ ۟
இந்த நாட்டுப்புற அரபிகளில் சிலர் இப்படியும் இருக்கின்றனர்; இறைவழியில் சிறிதளவு செலவு செய்வதை (தங்கள் மீது விதிக்கப்பட்ட) தண்டத் தொகையாகக் கருதுகின்றார்கள். உங்களுக்குக் கெட்ட காலம் வரவேண்டும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். (அதாவது, நீர் ஏதேனும் துன்பத்தில் மாட்டிக் கொண்டால் அப்போது நீர் எந்த அமைப்பில் அவர்களைப் பிணைத்து வைத்திருக்கின்றீரோ அந்த அமைப்பின் கட்டுப்பாட்டிலிருந்து தம்மை முற்றிலும் விடுவித்துக் கொள்ள வாய்ப்புக் கிடைக்கும் என்று எதிர்பார்க்கின்றனர்.) உண்மை யாதெனில், கெட்ட காலம் அவர்களையே சூழ்ந்துள்ளது. மேலும், அல்லாஹ் யாவற்றையும் செவியுறுபவனாகவும், அறிபவனாகவும் இருக்கின்றான்.
وَمِنَ الْاَعْرَابِ مَنْ یُّؤْمِنُ بِاللّٰهِ وَالْیَوْمِ الْاٰخِرِ وَیَتَّخِذُ مَا یُنْفِقُ قُرُبٰتٍ عِنْدَ اللّٰهِ وَصَلَوٰتِ الرَّسُوْلِ ؕ اَلَاۤ اِنَّهَا قُرْبَةٌ لَّهُمْ ؕ سَیُدْخِلُهُمُ اللّٰهُ فِیْ رَحْمَتِهٖ ؕ اِنَّ اللّٰهَ غَفُوْرٌ رَّحِیْمٌ ۟۠
இந்த நாட்டுப்புற அரபிகளில் சிலர் இவ்வாறும் உள்ளனர்: அல்லாஹ்வின் மீதும், மறுமைநாள் மீதும் நம்பிக்கை கொள்கின்றனர். மேலும், அவர்கள் எதனைச் செலவழித்தாலும், அதனை அல்லாஹ்விடம் நெருக்கத்தையும் தூதரிடமிருந்து அருள்பாலிக்கப்படுவதற்குரிய பிரார்த்தனைகளையும் அடைவதற்கான சாதனமாக எடுத்துக்கொள்கின்றார்கள். ஆம்! திண்ணமாக, அது (அல்லாஹ்விடம்) அவர்கள் நெருங்குவதற்குரிய சாதனமாகும். தன்னுடைய கருணையில் அல்லாஹ் அவர்களை நிச்சயம் நுழைவிப்பான்! திண்ணமாக, அல்லாஹ் பெரிதும் மன்னிப்பவனாகவும் கருணை புரிபவனாகவும் இருக்கின்றான்.
وَالسّٰبِقُوْنَ الْاَوَّلُوْنَ مِنَ الْمُهٰجِرِیْنَ وَالْاَنْصَارِ وَالَّذِیْنَ اتَّبَعُوْهُمْ بِاِحْسَانٍ ۙ رَّضِیَ اللّٰهُ عَنْهُمْ وَرَضُوْا عَنْهُ وَاَعَدَّ لَهُمْ جَنّٰتٍ تَجْرِیْ تَحْتَهَا الْاَنْهٰرُ خٰلِدِیْنَ فِیْهَاۤ اَبَدًا ؕ ذٰلِكَ الْفَوْزُ الْعَظِیْمُ ۟
(இஸ்லாத்தின் அழைப்புக்கு) முதன் முதலில் பதிலளித்த முஹாஜிர்கள், அன்ஸாரிகளைக் குறித்தும், அவர்களை யார் நேர்மையோடு பின்பற்றினார்களோ அவர்களைக் குறித்தும் அல்லாஹ் திருப்தி கொண்டான். அவர்களும் அவனைக் குறித்து திருப்தி அடைந்தார்கள். கீழே ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும் சுவனத் தோப்புகளை அல்லாஹ் அவர்களுக்காகத் தயார் செய்து வைத்திருக்கின்றான்; அவற்றில் அவர்கள் என்றென்றும் தங்கி வாழ்வார்கள். இதுவே மகத்தான வெற்றியாகும்.
وَمِمَّنْ حَوْلَكُمْ مِّنَ الْاَعْرَابِ مُنٰفِقُوْنَ ۛؕ وَمِنْ اَهْلِ الْمَدِیْنَةِ ؔۛ۫ مَرَدُوْا عَلَی النِّفَاقِ ۫ لَا تَعْلَمُهُمْ ؕ نَحْنُ نَعْلَمُهُمْ ؕ سَنُعَذِّبُهُمْ مَّرَّتَیْنِ ثُمَّ یُرَدُّوْنَ اِلٰی عَذَابٍ عَظِیْمٍ ۟ۚ
உங்களைச் சுற்றியுள்ள நாட்டுப்புற அரபிகளில் பலர் நயவஞ்சகர்களாக இருக்கின்றனர். இதேபோன்று மதீனாவாசிகளிலும் உள்ளனர். அவர்களோ நயவஞ்சகத்தில் ஊறித் திளைத்து இருக்கிறார்கள். அவர்களை நீர் அறிய மாட்டீர்; நாம் அறிவோம். வெகு விரைவில் அவர்களுக்கு இருமடங்கு தண்டனை வழங்குவோம். பிறகு, அவர்கள் மாபெரும் தண்டனைக்காக திரும்பக் கொண்டுவரப்படுவார்கள்.
وَاٰخَرُوْنَ اعْتَرَفُوْا بِذُنُوْبِهِمْ خَلَطُوْا عَمَلًا صَالِحًا وَّاٰخَرَ سَیِّئًا ؕ عَسَی اللّٰهُ اَنْ یَّتُوْبَ عَلَیْهِمْ ؕ اِنَّ اللّٰهَ غَفُوْرٌ رَّحِیْمٌ ۟
மேலும், தம் குற்றங்களை ஒப்புக்கொண்டிருக்கும் வேறு சிலரும் (அவர்களில்) உள்ளனர்; அவர்கள் நற்செயலோடு தீயசெயலையும் கலந்துவிட்டிருக்கின்றார்கள். ஆயினும், அல்லாஹ் அவர்கள் மீது கருணை புரியக்கூடும். ஏனென்றால் திண்ணமாக அல்லாஹ் பெரிதும் மன்னிப்பவனும், கருணை புரிபவனுமாவான்.
خُذْ مِنْ اَمْوَالِهِمْ صَدَقَةً تُطَهِّرُهُمْ وَتُزَكِّیْهِمْ بِهَا وَصَلِّ عَلَیْهِمْ ؕ اِنَّ صَلٰوتَكَ سَكَنٌ لَّهُمْ ؕ وَاللّٰهُ سَمِیْعٌ عَلِیْمٌ ۟
(நபியே!) அவர்களுடைய பொருள்களிலிருந்து தானத்தை வசூல் செய்துகொண்டு அதன் மூலம் அவர்களைத் தூய்மையாக்குவீராக; (நல்வழியில்) அவர்களை முன்னேறச் செய்வீராக! மேலும், அவர்களுக்காக (நல்லருள் வேண்டிப்) பிரார்த்திப்பீராக! ஏனென்றால், உம்முடைய பிரார்த்தனை திண்ணமாக அவர்களுக்கு சாந்தி அளிக்கக்கூடியதாகும். மேலும், அல்லாஹ் யாவற்றையும் கேட்பவனாகவும், அறிபவனாகவும் இருக்கின்றான்.
اَلَمْ یَعْلَمُوْۤا اَنَّ اللّٰهَ هُوَ یَقْبَلُ التَّوْبَةَ عَنْ عِبَادِهٖ وَیَاْخُذُ الصَّدَقٰتِ وَاَنَّ اللّٰهَ هُوَ التَّوَّابُ الرَّحِیْمُ ۟
திண்ணமாக, அல்லாஹ் தன்னுடைய அடிமைகளின் பாவமன்னிப்புக் கோரிக்கையை ஏற்றுக் கொள்கின்றான்; அவர்களின் தானதர்மங்களை அங்கீகரிக்கின்றான் என்பதையும், அல்லாஹ் பெரிதும் மன்னிப்பவனாகவும் கருணையுடையவனாகவும் இருக்கின்றான் என்பதையும் அவர்கள் அறியவில்லையா?
وَقُلِ اعْمَلُوْا فَسَیَرَی اللّٰهُ عَمَلَكُمْ وَرَسُوْلُهٗ وَالْمُؤْمِنُوْنَ ؕ وَسَتُرَدُّوْنَ اِلٰی عٰلِمِ الْغَیْبِ وَالشَّهَادَةِ فَیُنَبِّئُكُمْ بِمَا كُنْتُمْ تَعْمَلُوْنَ ۟ۚ
மேலும், (நபியே! இம்மக்களிடம்) கூறிவிடுவீராக: “நீங்கள் செயல்பட்டுக் கொண்டிருங்கள்! அல்லாஹ்வும், அவனுடைய தூதரும், இறை நம்பிக்கையாளர்களும் உங்களுடைய நடத்தை எப்படியிருக்கிறது என்பதைப் பார்க்கத்தான் செய்வார்கள். பிறகு, மறைவான வெளிப்படையான அனைத்தையும் அறிந்தவனிடம் அதிவிரைவில் நீங்கள் திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள். அப்போது நீங்கள் செய்து கொண்டிருந்தவை குறித்து உங்களுக்கு அவன் அறிவித்து விடுவான்.”
وَاٰخَرُوْنَ مُرْجَوْنَ لِاَمْرِ اللّٰهِ اِمَّا یُعَذِّبُهُمْ وَاِمَّا یَتُوْبُ عَلَیْهِمْ ؕ وَاللّٰهُ عَلِیْمٌ حَكِیْمٌ ۟
மேலும், இப்படியும் சிலர் இருக்கின்றார்கள்: அவர்களின் விவகாரம் அல்லாஹ்வின் ஆணைக்காக தாமதப்படுத்தி வைக்கப்பட்டுள்ளது. அவன் நாடினால் அவர்களைத் தண்டிப்பான்; நாடினால் அவர்களை மன்னித்து விடுவான். அல்லாஹ் யாவற்றையும் நன்கறிபவனும், நுண்ணறிவாளனுமாய் இருக்கின்றான்.
وَالَّذِیْنَ اتَّخَذُوْا مَسْجِدًا ضِرَارًا وَّكُفْرًا وَّتَفْرِیْقًا بَیْنَ الْمُؤْمِنِیْنَ وَاِرْصَادًا لِّمَنْ حَارَبَ اللّٰهَ وَرَسُوْلَهٗ مِنْ قَبْلُ ؕ وَلَیَحْلِفُنَّ اِنْ اَرَدْنَاۤ اِلَّا الْحُسْنٰی ؕ وَاللّٰهُ یَشْهَدُ اِنَّهُمْ لَكٰذِبُوْنَ ۟
மேலும், (அவர்களில்) சிலர் ஒரு பள்ளிவாசலை உருவாக்கியிருக்கின்றார்கள்; எதற்காகவெனில் (சத்திய அழைப்பிற்கு) ஊறு விளைவிக்க வேண்டும்; (அல்லாஹ்வுக்கு அடிபணிவதற்குப் பதிலாக அவனை) நிராகரிக்க வேண்டும்; மேலும், நம்பிக்கையாளர்களுக்கு இடையே பிரிவினையை ஏற்படுத்த வேண்டும்; மேலும், இதற்குமுன் அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் எதிர்த்துக் கொண்டிருந்த ஒருவனுக்குப் பதுங்குமிடமாக்க வேண்டும் என்பதற்காக! மேலும், “நாங்கள் நன்மையைத் தவிர வேறெதனையும் நாடவில்லை” என்று அவர்கள் சத்தியம் செய்து கூறுவார்கள். ஆனால், திண்ணமாக அவர்கள் பொய்யர்கள் என்பதற்கு அல்லாஹ் சாட்சி அளிக்கின்றான்.
لَا تَقُمْ فِیْهِ اَبَدًا ؕ لَمَسْجِدٌ اُسِّسَ عَلَی التَّقْوٰی مِنْ اَوَّلِ یَوْمٍ اَحَقُّ اَنْ تَقُوْمَ فِیْهِ ؕ فِیْهِ رِجَالٌ یُّحِبُّوْنَ اَنْ یَّتَطَهَّرُوْا ؕ وَاللّٰهُ یُحِبُّ الْمُطَّهِّرِیْنَ ۟
அப்படிப்பட்ட இடத்தில் நீர் ஒருபோதும் தொழ வேண்டாம். தொடக்க நாளிலிருந்து இறையச்சத்தின் அடிப்படையில் நிறுவப்பட்டிருக்கின்ற பள்ளிவாசல்தான் நீர் தொழுவதற்கு மிகவும் தகுதியானதாகும். தூய்மையுடன் வாழ விரும்பும் மனிதர்கள் அங்கு உள்ளனர். தூய்மையை மேற்கொள்பவர்களைத்தாம் அல்லாஹ்வும் நேசிக்கின்றான்.
اَفَمَنْ اَسَّسَ بُنْیَانَهٗ عَلٰی تَقْوٰی مِنَ اللّٰهِ وَرِضْوَانٍ خَیْرٌ اَمْ مَّنْ اَسَّسَ بُنْیَانَهٗ عَلٰی شَفَا جُرُفٍ هَارٍ فَانْهَارَ بِهٖ فِیْ نَارِ جَهَنَّمَ ؕ وَاللّٰهُ لَا یَهْدِی الْقَوْمَ الظّٰلِمِیْنَ ۟
(இனி நீர் என்ன கருதுகின்றீர்?) இறையச்சத்தையும், இறை உவப்பையும் அடிப்படையாகக் கொண்டு தம் கட்டடத்தை நிர்மாணித்தவர் சிறந்தவரா? அல்லது வெள்ளத்தால் அரிக்கப்பட்ட உறுதியற்ற ஓடைக்கரையின் மீது தனது கட்டடத்தை நிர்மாணித்து, பிறகு அக்கட்டடத்துடன் சேர்ந்து தானும் நரக நெருப்பில் நேராக வந்து விழுந்து விட்டானே அவன் சிறந்தவனா? அக்கிரமம் இழைக்கும் இத்தகையக் கூட்டத்தாருக்கு அல்லாஹ் நேர்வழி காட்டுவதில்லை.
لَا یَزَالُ بُنْیَانُهُمُ الَّذِیْ بَنَوْا رِیْبَةً فِیْ قُلُوْبِهِمْ اِلَّاۤ اَنْ تَقَطَّعَ قُلُوْبُهُمْ ؕ وَاللّٰهُ عَلِیْمٌ حَكِیْمٌ ۟۠
அவர்கள் எழுப்பிய இந்தக் கட்டடம் அவர்களின் உள்ளங்களில் என்றைக்கும் அமைதியின்மையை ஏற்படுத்திக் கொண்டிருக்கும்; அவர்களின் உள்ளங்கள் நொறுங்கினால் ஒழிய (அந்த அமைதியின்மை நீங்குவதற்கு எவ்வழியும் இல்லை!) அல்லாஹ் அனைத்தையும் தெரிந்தவனாகவும், நுண்ணறிவாளனாகவும் இருக்கின்றான்.
اِنَّ اللّٰهَ اشْتَرٰی مِنَ الْمُؤْمِنِیْنَ اَنْفُسَهُمْ وَاَمْوَالَهُمْ بِاَنَّ لَهُمُ الْجَنَّةَ ؕ یُقَاتِلُوْنَ فِیْ سَبِیْلِ اللّٰهِ فَیَقْتُلُوْنَ وَیُقْتَلُوْنَ ۫ وَعْدًا عَلَیْهِ حَقًّا فِی التَّوْرٰىةِ وَالْاِنْجِیْلِ وَالْقُرْاٰنِ ؕ وَمَنْ اَوْفٰی بِعَهْدِهٖ مِنَ اللّٰهِ فَاسْتَبْشِرُوْا بِبَیْعِكُمُ الَّذِیْ بَایَعْتُمْ بِهٖ ؕ وَذٰلِكَ هُوَ الْفَوْزُ الْعَظِیْمُ ۟
உண்மையாக, அல்லாஹ் இறைநம்பிக்கையாளர்களிடமிருந்து அவர்களின் உயிர்களையும், உடைமைகளையும் சுவனத்திற்குப் பகரமாய் விலைக்கு வாங்கிக் கொண்டான். அவர்கள் அல்லாஹ்வின் வழியில் போர் புரிகின்றார்கள்; கொல்கின்றார்கள்; கொல்லப்படுகின்றார்கள் அவர்களுக்கு (சுவனம் கிடைக்கும் எனும் இந்த வாக்குறுதி) அல்லாஹ்வின் பொறுப்பிலுள்ள ஒரு திடமான வாக்குறுதியாகும். இதுவோ தவ்ராத், இன்ஜீல், குர்ஆன் ஆகியவற்றிலும் உள்ளது. மேலும், அல்லாஹ்வைவிட தனது வாக்குறுதியை சிறப்பாக நிறைவேற்றுபவன் யார்? எனவே, நீங்கள் அல்லாஹ்வுடன் செய்துகொண்ட உங்களுடைய இந்த வியாபாரம் குறித்து மகிழ்ச்சி கொண்டாடுங்கள்! இதுவே மாபெரும் வெற்றியாகும்.
اَلتَّآىِٕبُوْنَ الْعٰبِدُوْنَ الْحٰمِدُوْنَ السَّآىِٕحُوْنَ الرّٰكِعُوْنَ السّٰجِدُوْنَ الْاٰمِرُوْنَ بِالْمَعْرُوْفِ وَالنَّاهُوْنَ عَنِ الْمُنْكَرِ وَالْحٰفِظُوْنَ لِحُدُوْدِ اللّٰهِ ؕ وَبَشِّرِ الْمُؤْمِنِیْنَ ۟
அல்லாஹ்விடம் மீண்டும் மீண்டும் திரும்புபவர்கள். அவனுக்கு அடிபணிந்து வாழ்பவர்கள், அவன் புகழ்பாடுபவர்கள், அவனுக்காகச் சுற்றித்திரிபவர்கள், அவன் முன்னால் குனிந்தும் சிரம் பணிந்தும் வணங்குபவர்கள், நன்மை புரியுமாறு ஏவுபவர்கள், மேலும் தீமையிலிருந்து தடுப்பவர்கள், அல்லாஹ்வின் வரம்புகளைக் காப்பவர்கள் (இத்தகைய மாண்புடைய இறை நம்பிக்கையாளர்கள் தாம் அல்லாஹ்விடம் ஒப்பந்தம் செய்து கொண்டவர்கள் ஆவர்). மேலும் (நபியே!) நீர் இந்நம்பிக்கையாளர்களுக்கு நற்செய்தி அறிவிப்பீராக!
مَا كَانَ لِلنَّبِیِّ وَالَّذِیْنَ اٰمَنُوْۤا اَنْ یَّسْتَغْفِرُوْا لِلْمُشْرِكِیْنَ وَلَوْ كَانُوْۤا اُولِیْ قُرْبٰی مِنْ بَعْدِ مَا تَبَیَّنَ لَهُمْ اَنَّهُمْ اَصْحٰبُ الْجَحِیْمِ ۟
இறைவனுக்கு இணைவைப்பவர்கள் நரகத்திற்குரியவர்கள் என்பது நன்கு தெளிவாகிவிட்ட பின்னர் அவர்களுக்காகப் பாவமன்னிப்புக் கோரிப் பிரார்த்திப்பது நபிக்கும் இறைநம்பிக்கையாளர்களுக்கும் ஏற்ற செயல் அல்ல அவர்கள் நெருங்கிய உறவினராய் இருப்பினும் சரியே!
وَمَا كَانَ اسْتِغْفَارُ اِبْرٰهِیْمَ لِاَبِیْهِ اِلَّا عَنْ مَّوْعِدَةٍ وَّعَدَهَاۤ اِیَّاهُ ۚ فَلَمَّا تَبَیَّنَ لَهٗۤ اَنَّهٗ عَدُوٌّ لِّلّٰهِ تَبَرَّاَ مِنْهُ ؕ اِنَّ اِبْرٰهِیْمَ لَاَوَّاهٌ حَلِیْمٌ ۟
இப்ராஹீம் தம் தந்தைக்காக பாவமன்னிப்புக் கோரியது அவருக்குத் தாம் அளித்திருந்த வாக்குறுதியின் காரணமாகத்தான். ஆனால், தம்முடைய தந்தை அல்லாஹ்வுக்குப் பகைவனாக இருக்கின்றார் என்பது இப்ராஹீமுக்குத் தெளிவாகி விட்டபோது, அவர் தம் தந்தையை விட்டு விலகிக் கொண்டார். திண்ணமாக, இப்ராஹீம் மிக இளகிய மனமும், இறையச்சமும், சகிப்புத்தன்மையும் உடையவராய் இருந்தார்.
وَمَا كَانَ اللّٰهُ لِیُضِلَّ قَوْمًا بَعْدَ اِذْ هَدٰىهُمْ حَتّٰی یُبَیِّنَ لَهُمْ مَّا یَتَّقُوْنَ ؕ اِنَّ اللّٰهَ بِكُلِّ شَیْءٍ عَلِیْمٌ ۟
ஒரு சமூகத்தாருக்கு நேர்வழி அளித்த பின்னால், எவற்றிலிருந்தெல்லாம் அவர்கள் தவிர்ந்து கொள்ள வேண்டும் என்பதை அவர்களுக்குத் தெளிவாக எடுத்துரைக்காத வரை அவர்களை வழிகேட்டிற்குள்ளாக்குவது அல்லாஹ்வின் நியதி அல்ல! திண்ணமாக, அல்லாஹ் அனைத்தையும் நன்கறிந்தவனாய் இருக்கின்றான்.
اِنَّ اللّٰهَ لَهٗ مُلْكُ السَّمٰوٰتِ وَالْاَرْضِ ؕ یُحْیٖ وَیُمِیْتُ ؕ وَمَا لَكُمْ مِّنْ دُوْنِ اللّٰهِ مِنْ وَّلِیٍّ وَّلَا نَصِیْرٍ ۟
உண்மையாகவே வானங்கள் மற்றும் பூமியினுடைய ஆட்சியதிகாரம் அல்லாஹ்வுக்குரியதாகும். வாழ்வும், மரணமும் அவன் கைவசமே உள்ளன. மேலும், அல்லாஹ்வைத் தவிர உங்களைப் பாதுகாப்பவரும் உதவிபுரிபவரும் யாருமில்லை.
لَقَدْ تَّابَ اللّٰهُ عَلَی النَّبِیِّ وَالْمُهٰجِرِیْنَ وَالْاَنْصَارِ الَّذِیْنَ اتَّبَعُوْهُ فِیْ سَاعَةِ الْعُسْرَةِ مِنْ بَعْدِ مَا كَادَ یَزِیْغُ قُلُوْبُ فَرِیْقٍ مِّنْهُمْ ثُمَّ تَابَ عَلَیْهِمْ ؕ اِنَّهٗ بِهِمْ رَءُوْفٌ رَّحِیْمٌ ۟ۙ
நபியையும், துன்பம் சூழ்ந்த நேரத்தில் அவருக்கு உறுதுணையாய் இருந்த முஹாஜிர்களையும் அன்ஸார்களையும்* அல்லாஹ் பொறுத்தருளினான், அவர்களில் ஒரு சிலரின் உள்ளங்கள் நெறி தவறுதலின்பால் சற்று சாய்ந்துவிட்டிருந்த போதிலும்! (ஆனால் அவர்கள் நெறி தவறிச் செல்லாமல் நபிக்கு பக்கபலமாக இருந்தனர். அப்போது) அல்லாஹ் அவர்களை மன்னித்துவிட்டான். திண்ணமாக, அவன் அவர்கள் விஷயத்தில் அதிகப் பரிவும் கருணையும் கொண்டவனாக இருக்கின்றான்.
وَّعَلَی الثَّلٰثَةِ الَّذِیْنَ خُلِّفُوْا ؕ حَتّٰۤی اِذَا ضَاقَتْ عَلَیْهِمُ الْاَرْضُ بِمَا رَحُبَتْ وَضَاقَتْ عَلَیْهِمْ اَنْفُسُهُمْ وَظَنُّوْۤا اَنْ لَّا مَلْجَاَ مِنَ اللّٰهِ اِلَّاۤ اِلَیْهِ ؕ ثُمَّ تَابَ عَلَیْهِمْ لِیَتُوْبُوْا ؕ اِنَّ اللّٰهَ هُوَ التَّوَّابُ الرَّحِیْمُ ۟۠
மேலும், விவகாரம் ஒத்திப்போடப்பட்டிருந்த மூவரையும் அவன் மன்னித்தான்; அவர்கள் நிலைமை எந்த அளவு மோசமாகி விட்டிருந்ததெனில், பூமி இத்துணை விரிவாய் இருந்தும் அவர்களைப் பொறுத்தவரை அது குறுகி அவர்கள் உயிர்வாழ்வதே கஷ்டமாகி விட்டிருந்தது! இன்னும் அல்லாஹ்விடமிருந்து தப்பிப்பதற்கு அவனுடைய அருளின் பக்கம் திரும்புவதைத் தவிர வேறு புகலிடம் இல்லை என்பதை அவர்கள் அறிந்துகொண்டார்கள். பின்னர், அவர்கள் பாவமன்னிப்புக்கோரி தன்னிடம் மீண்டுவர வேண்டும் என்பதற்காக அல்லாஹ் அவர்கள் மீது கருணை பொழிந்தான். திண்ணமாக, அவன் மிக மன்னிப்போனும், கருணையுடையோனுமாய் இருக்கின்றான்.
یٰۤاَیُّهَا الَّذِیْنَ اٰمَنُوا اتَّقُوا اللّٰهَ وَكُوْنُوْا مَعَ الصّٰدِقِیْنَ ۟
இறைநம்பிக்கை கொண்டவர்களே! அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்; மேலும், வாய்மையாளர்களுக்குத் துணையாக இருங்கள்!
مَا كَانَ لِاَهْلِ الْمَدِیْنَةِ وَمَنْ حَوْلَهُمْ مِّنَ الْاَعْرَابِ اَنْ یَّتَخَلَّفُوْا عَنْ رَّسُوْلِ اللّٰهِ وَلَا یَرْغَبُوْا بِاَنْفُسِهِمْ عَنْ نَّفْسِهٖ ؕ ذٰلِكَ بِاَنَّهُمْ لَا یُصِیْبُهُمْ ظَمَاٌ وَّلَا نَصَبٌ وَّلَا مَخْمَصَةٌ فِیْ سَبِیْلِ اللّٰهِ وَلَا یَطَـُٔوْنَ مَوْطِئًا یَّغِیْظُ الْكُفَّارَ وَلَا یَنَالُوْنَ مِنْ عَدُوٍّ نَّیْلًا اِلَّا كُتِبَ لَهُمْ بِهٖ عَمَلٌ صَالِحٌ ؕ اِنَّ اللّٰهَ لَا یُضِیْعُ اَجْرَ الْمُحْسِنِیْنَ ۟ۙ
அல்லாஹ்வுடைய தூதருடன் போருக்குச் செல்லாமல் தங்கிவிடுவதும், அவரைப் பொருட்படுத்தாமல் தங்களைப் பற்றியே அதிக அக்கறை கொள்வதும் மதீனாவாசிகளுக்கும் அவர்களைச் சுற்றி வாழும் நாட்டுப்புற அரபிகளுக்கும் அழகல்ல! ஏனெனில் அல்லாஹ்வின் பாதையில் பசி, தாகம் மற்றும் உடற்களைப்பின் எந்த ஒரு துன்பத்தை அவர்கள் சகித்துக் கொண்டாலும், மேலும் சத்தியத்தை நிராகரிப்பவர்களுக்கு வெறுப்பாக இருக்கும் பாதையில் எந்த ஓர் அடியை அவர்கள் எடுத்து வைத்தாலும், மேலும் எந்த ஒரு பகைவனிடமும் (சத்திய விரோதப் போக்கிற்காக) எந்தப் பழியை அவர்கள் வாங்கினாலும் அவை ஒவ்வொன்றுக்கும் பகரமாக அவர்களின் பெயரில் ஒரு நன்மை எழுதப்படாமல் ஒருபோதும் விடப்படமாட்டாது. திண்ணமாக, அல்லாஹ்விடம் நன்னடத்தை உடையோரின் கூலி வீணாக்கப்படுவதில்லை.
وَلَا یُنْفِقُوْنَ نَفَقَةً صَغِیْرَةً وَّلَا كَبِیْرَةً وَّلَا یَقْطَعُوْنَ وَادِیًا اِلَّا كُتِبَ لَهُمْ لِیَجْزِیَهُمُ اللّٰهُ اَحْسَنَ مَا كَانُوْا یَعْمَلُوْنَ ۟
(இதேபோல்) அவர்கள் (அல்லாஹ்வின் வழியில்) சிறிய அளவிலோ, பெரிய அளவிலோ செலவு செய்யும் எது ஒன்றும், மேலும் (ஜிஹாதுக்காக) ஏதேனும் ஒரு பள்ளத்தாக்கைக் கடந்து செல்வதும் அவர்களுடைய பேரில் பதிவு செய்யப்படாமல் ஒருபோதும் விடப்பட மாட்டாது. எதற்காகவெனில், இவர்களுடைய சிறப்பான சாதனைகளுக்கான நற்கூலியை அல்லாஹ் இவர்களுக்கு வழங்கிட வேண்டும் என்பதற்காக!
وَمَا كَانَ الْمُؤْمِنُوْنَ لِیَنْفِرُوْا كَآفَّةً ؕ فَلَوْلَا نَفَرَ مِنْ كُلِّ فِرْقَةٍ مِّنْهُمْ طَآىِٕفَةٌ لِّیَتَفَقَّهُوْا فِی الدِّیْنِ وَلِیُنْذِرُوْا قَوْمَهُمْ اِذَا رَجَعُوْۤا اِلَیْهِمْ لَعَلَّهُمْ یَحْذَرُوْنَ ۟۠
மேலும், இறைநம்பிக்கை கொண்டவர்கள் அனைவருமே புறப்பட வேண்டுமென்பது தேவையில்லை. எனினும், அவர்கள் வாழும் ஒவ்வொரு பகுதியிலிருந்தும் ஒரு சிலர் மட்டும் புறப்படலாமே! எதற்காகவெனில், மார்க்க அறிவை அவர்கள் பெற்றுக்கொண்டு தம் சமுதாயத்தாரிடம் திரும்பிவந்து அவர்களை எச்சரிக்கை செய்ய வேண்டும் என்பதற்காக! இதன் வாயிலாக (இஸ்லாத்திற்கு மாற்றமான போக்கை) அவர்கள் தவிர்த்துக் கொள்ளக்கூடும்!
یٰۤاَیُّهَا الَّذِیْنَ اٰمَنُوْا قَاتِلُوا الَّذِیْنَ یَلُوْنَكُمْ مِّنَ الْكُفَّارِ وَلْیَجِدُوْا فِیْكُمْ غِلْظَةً ؕ وَاعْلَمُوْۤا اَنَّ اللّٰهَ مَعَ الْمُتَّقِیْنَ ۟
இறைநம்பிக்கை கொண்டவர்களே! இறை மறுப்பாளர்களில் யார் உங்களை அடுத்திருக்கிறார்களோ அவர்களுடன் போர் புரியுங்கள்! அவர்கள் உங்களிடம் கடினமான போக்கைக் காணவேண்டும். மேலும், அல்லாஹ் இறையச்சமுள்ளவர்களோடு இருக்கின்றான் என்பதை அறிந்து கொள்ளுங்கள்!
وَاِذَا مَاۤ اُنْزِلَتْ سُوْرَةٌ فَمِنْهُمْ مَّنْ یَّقُوْلُ اَیُّكُمْ زَادَتْهُ هٰذِهٖۤ اِیْمَانًا ۚ فَاَمَّا الَّذِیْنَ اٰمَنُوْا فَزَادَتْهُمْ اِیْمَانًا وَّهُمْ یَسْتَبْشِرُوْنَ ۟
ஏதேனும் ஒரு (புதிய) அத்தியாயம் இறக்கியருளப்பட்டால், அவர்களில் சிலர் “இது உங்களில் எவருடைய நம்பிக்கையை அதிகப்படுத்தியது?” என்று (முஸ்லிம்களிடம் பரிகாசமாய்க்) கேட்கின்றார்கள். உண்மையில் யார் நம்பிக்கையாளர்களோ அவர்களின் நம்பிக்கையை ஒவ்வோர் அத்தியாயமும் அதிகமாக்கியே இருக்கிறது. அதனால் அவர்கள் மகிழ்ச்சி அடைகின்றார்கள்.
وَاَمَّا الَّذِیْنَ فِیْ قُلُوْبِهِمْ مَّرَضٌ فَزَادَتْهُمْ رِجْسًا اِلٰی رِجْسِهِمْ وَمَاتُوْا وَهُمْ كٰفِرُوْنَ ۟
ஆயினும், எவர்களுடைய உள்ளங்களில் (நயவஞ்சகப்) பிணி குடிகொண்டிருந்ததோ அவர்களிடம் ஏற்கனவே இருந்த அசுத்தத்தை அந்த (புதிய) அத்தியாயம் ஒவ்வொன்றும் மேலும் அதிகரிக்கச் செய்தது. மேலும், நிராகரிப்பாளர்களாகவே அவர்கள் மரணமடைந்தார்கள்.
اَوَلَا یَرَوْنَ اَنَّهُمْ یُفْتَنُوْنَ فِیْ كُلِّ عَامٍ مَّرَّةً اَوْ مَرَّتَیْنِ ثُمَّ لَا یَتُوْبُوْنَ وَلَا هُمْ یَذَّكَّرُوْنَ ۟
ஒவ்வோர் ஆண்டும் ஒரு முறையோ இரு முறையோ அவர்கள் சோதனைக்கு உள்ளாக்கப் படுகிறார்கள் என்பதை அவர்கள் கவனிப்பதில்லையா? இவ்வாறிருந்தும் அவர்கள் பாவமன்னிப்புக் கோருவதுமில்லை; நல்லுரை பெறுவதும் இல்லை!
وَاِذَا مَاۤ اُنْزِلَتْ سُوْرَةٌ نَّظَرَ بَعْضُهُمْ اِلٰی بَعْضٍ ؕ هَلْ یَرٰىكُمْ مِّنْ اَحَدٍ ثُمَّ انْصَرَفُوْا ؕ صَرَفَ اللّٰهُ قُلُوْبَهُمْ بِاَنَّهُمْ قَوْمٌ لَّا یَفْقَهُوْنَ ۟
ஏதாவது ஓர் அத்தியாயம் இறக்கியருளப்பட்டால் அவர்களில் ஒருவர் மற்றவரிடம் “உங்களை யாரும் பார்க்கவில்லையே?” என்று கண்களாலேயே சாடை காட்டி, (அங்கிருந்து) நழுவிச் சென்று விடுகின்றார்கள். அல்லாஹ் அவர்களுடைய இதயங்களைப் புரட்டி விடுகின்றான். ஏனெனில் அவர்கள் எதையும் புரிந்து கொள்ளாத மக்களாய் இருக்கின்றனர்.
لَقَدْ جَآءَكُمْ رَسُوْلٌ مِّنْ اَنْفُسِكُمْ عَزِیْزٌ عَلَیْهِ مَا عَنِتُّمْ حَرِیْصٌ عَلَیْكُمْ بِالْمُؤْمِنِیْنَ رَءُوْفٌ رَّحِیْمٌ ۟
(பாருங்கள்!) உங்களிலிருந்தே ஒரு தூதர் உங்களிடம் வந்திருக்கின்றார். நீங்கள் துன்பத்திற்காளாவது அவருக்குக் கடினமாக இருக்கிறது. மேலும், உங்களுடைய வெற்றியில் பேராவல் கொண்டவராகவும், நம்பிக்கையாளர்கள் மீது அதிகப் பரிவும், கருணையும் உடையோராகவும் இருக்கின்றார்
فَاِنْ تَوَلَّوْا فَقُلْ حَسْبِیَ اللّٰهُ ۖۗؗ لَاۤ اِلٰهَ اِلَّا هُوَ ؕ عَلَیْهِ تَوَكَّلْتُ وَهُوَ رَبُّ الْعَرْشِ الْعَظِیْمِ ۟۠
(இனி) அவர்கள் உம்மைப் புறக்கணித்தால் (நபியே!) நீர் கூறிவிடும்: “அல்லாஹ் எனக்குப் போதுமானவன். அவனைத் தவிர வணக்கத்திற்குரிய இறைவன் வேறு யாரும் இல்லை. அவனையே நான் முழுமையாகச் சார்ந்திருக்கின்றேன். மேலும், அவன் மகத்தான அர்ஷின்* அதிபதியாயிருக்கின்றான்.”