وَیْلٌ لِّكُلِّ هُمَزَةٍ لُّمَزَةِ ۟ۙ
(மக்களை நேருக்கு நேர்) இழித்துரைத்துக் கொண்டும், (முதுகுக்குப் பின்) குறை கூறிக் கொண்டும் திரிகின்ற ஒவ்வொரு மனிதனுக்கும் கேடுதான்.
Surah 104
Al-Humazah
104. ஸூரத்துல் ஹுமஜா (புறங்கூறல்)
9 verses
بِسْمِ اللّٰهِ الرَّحْمٰنِ الرَّحِیْمِ
وَیْلٌ لِّكُلِّ هُمَزَةٍ لُّمَزَةِ ۟ۙ
(மக்களை நேருக்கு நேர்) இழித்துரைத்துக் கொண்டும், (முதுகுக்குப் பின்) குறை கூறிக் கொண்டும் திரிகின்ற ஒவ்வொரு மனிதனுக்கும் கேடுதான்.
لَّذِیْ جَمَعَ مَالًا وَّعَدَّدَهٗ ۟ۙ
அவன் பொருளைச் சேகரிக்கின்றான்.
یَحْسَبُ اَنَّ مَالَهٗۤ اَخْلَدَهٗ ۟ۚ
மேலும் அதனை எண்ணி எண்ணி வைக்கின்றான். அவன் கருதுகின்றான், தன்னுடைய பொருள் தன்னிடம் என்றென்றும் நிலைத்து இருக்கும் என்று!
كَلَّا لَیُنْۢبَذَنَّ فِی الْحُطَمَةِ ۟ؗۖ
அவ்வாறன்று! சிதைத்துச் சின்னாபின்னமாக்குகின்ற ஓரிடத்தில் அவன் வீசியெறியப்படுவான்.
وَمَاۤ اَدْرٰىكَ مَا الْحُطَمَةُ ۟ؕ
மேலும், சிதைத்துச் சின்னாபின்னமாக்கும் அந்த இடம் எதுவென்று உமக்குத் தெரியுமா என்ன?
نَارُ اللّٰهِ الْمُوْقَدَةُ ۟ۙ
அது அல்லாஹ்வின் நெருப்பு; அதி உக்கிரமாக மூட்டப்பட்டிருக்கின்றது;
الَّتِیْ تَطَّلِعُ عَلَی الْاَفْـِٕدَةِ ۟ؕ
இதயங்கள் வரைச் சென்று பரவுகின்றது;
اِنَّهَا عَلَیْهِمْ مُّؤْصَدَةٌ ۟ۙ
நிச்சயமாக அதனால் அவர்கள் சூழப்பட்டு மூடப்படுவார்கள்.
فِیْ عَمَدٍ مُّمَدَّدَةٍ ۟۠
உயர உயரமான தூண்களில் (அவர்கள் கட்டப்பட்ட நிலையில்).