اِذَا زُلْزِلَتِ الْاَرْضُ زِلْزَالَهَا ۟ۙ
பூமி, முழுபலத்துடன் உலுக்கப்படும்போது
Surah 99
Az-Zalzalah
99. ஸூரத்துஜ் ஜில்ஜால் (அதிர்ச்சி)
8 verses
بِسْمِ اللّٰهِ الرَّحْمٰنِ الرَّحِیْمِ
اِذَا زُلْزِلَتِ الْاَرْضُ زِلْزَالَهَا ۟ۙ
பூமி, முழுபலத்துடன் உலுக்கப்படும்போது
وَاَخْرَجَتِ الْاَرْضُ اَثْقَالَهَا ۟ۙ
மேலும் பூமி தன்னுள்ளிருக்கும் சுமைகள் அனைத்தையும் வெளிக்கொணர்ந்து விடும்போது,
وَقَالَ الْاِنْسَانُ مَا لَهَا ۟ۚ
மேலும், “அதற்கு என்ன நேர்ந்துவிட்டது?” என்று மனிதன் கேட்கும்போது
یَوْمَىِٕذٍ تُحَدِّثُ اَخْبَارَهَا ۟ؕ
அந்நாளில் அது தன் மீது நடந்துவிட்ட நிகழ்ச்சிகளை எடுத்துரைக்கும்.
بِاَنَّ رَبَّكَ اَوْحٰی لَهَا ۟ؕ
ஏனெனில், உம் இறைவன் அதற்கு (அவ்வாறு எடுத்துரைக்கும்படி) ஆணையிட்டிருப்பான்.
یَوْمَىِٕذٍ یَّصْدُرُ النَّاسُ اَشْتَاتًا ۙ۬ لِّیُرَوْا اَعْمَالَهُمْ ۟ؕ
அன்று மக்கள் பல்வேறு நிலைமைகளில் திரும்புவார்கள், தங்களுடைய செயல்கள் தங்களுக்குக் காண்பிக்கப்படுவதற்காக!
فَمَنْ یَّعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَیْرًا یَّرَهٗ ۟ؕ
பிறகு, எவன் அணுவளவு நன்மை செய்திருந்தானோ அவன் அதனைக் கண்டு கொள்வான்.
وَمَنْ یَّعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا یَّرَهٗ ۟۠
மேலும், எவன் அணுவளவு தீமை புரிந்திருந்தானோ அவனும் அதனைக் கண்டுகொள்வான்.