All Surahs

Surah 92

الليل

Al-Layl

92. ஸூரத்துல் லைல் (இரவு)

21 verses

بِسْمِ اللّٰهِ الرَّحْمٰنِ الرَّحِیْمِ

1

وَالَّیْلِ اِذَا یَغْشٰی ۟ۙ

இரவின் மீது சத்தியமாக, அது மூடி மறைத்துக் கொள்ளும்போது!

2

وَالنَّهَارِ اِذَا تَجَلّٰی ۟ۙ

பகலின் மீது சத்தியமாக, அது ஒளிரும் போது!

3

وَمَا خَلَقَ الذَّكَرَ وَالْاُ ۟ۙ

மேலும், ஆணையும் பெண்ணையும் படைத்தவன் மீது சத்தியமாக!

4

اِنَّ سَعْیَكُمْ لَشَتّٰی ۟ؕ

உண்மையில் உங்களுடைய முயற்சிகள் பலதரப்பட்டவையாக இருக்கின்றன.

5

فَاَمَّا مَنْ اَعْطٰی وَاتَّقٰی ۟ۙ

எனவே, எவர் (இறைவழியில்) பொருளை வழங்கினாரோ மேலும் (இறைவனுக்கு மாறு செய்வதிலிருந்து) விலகியிருந்தாரோ

6

وَصَدَّقَ بِالْحُسْنٰی ۟ۙ

மேலும், நன்மையை உண்மையென ஏற்றுக்கொண்டாரோ,

7

فَسَنُیَسِّرُهٗ لِلْیُسْرٰی ۟ؕ

அவருக்கு இலகுவான வழியில் செல்வதற்கு நாம் வகை செய்வோம்.

8

وَاَمَّا مَنْ بَخِلَ وَاسْتَغْنٰی ۟ۙ

எவர் கஞ்சத்தனம் செய்கின்றாரோ மேலும் (தன் இறைவனைப்) பொருட்படுத்தாமல் நடந்தாரோ;

9

وَكَذَّبَ بِالْحُسْنٰی ۟ۙ

இன்னும் நன்மையைப் பொய்யென நிராகரித்தாரோ

10

فَسَنُیَسِّرُهٗ لِلْعُسْرٰی ۟ؕ

அவருக்கு கடினமான வழியில் செல்வதற்கு நாம் வகை செய்வோம்.

11

وَمَا یُغْنِیْ عَنْهُ مَالُهٗۤ اِذَا تَرَدّٰی ۟ؕ

அவனுடைய செல்வம் அவன் அழிந்து விடும்போது அவனுக்கு என்ன பயன் அளிக்கப்போகின்றது?

12

اِنَّ عَلَیْنَا لَلْهُدٰی ۟ؗۖ

திண்ணமாக, வழிகாட்டுவது எமது பொறுப்பேயாகும்.

13

وَاِنَّ لَنَا لَلْاٰخِرَةَ وَالْاُوْلٰی ۟

மேலும், உண்மையில் மறுமை மற்றும் இம்மை இரண்டும் நமக்கே உரியனவாகும்.

14

فَاَنْذَرْتُكُمْ نَارًا تَلَظّٰی ۟ۚ

எனவே, கொழுந்துவிட்டெரியும் நெருப்பைக் குறித்து உங்களை நான் எச்சரிக்கை செய்துவிட்டேன்.

15

لَا یَصْلٰىهَاۤ اِلَّا الْاَشْقَی ۟ۙ

ஆனால், அதில் யாரும் எரிந்துபோக மாட்டார்கள், பெரும் துர்ப்பாக்கியவானைத் தவிர!

16

الَّذِیْ كَذَّبَ وَتَوَلّٰی ۟ؕ

அவர்கள் பொய்யென மறுத்தார்கள், புறக்கணித்தார்கள்.

17

وَسَیُجَنَّبُهَا الْاَتْقَی ۟ۙ

மேலும், அதனைவிட்டுத் தொலைவில் வைக்கப்படுவார், மிகுந்த இறையச்சம் உடையவர்.

18

الَّذِیْ یُؤْتِیْ مَالَهٗ یَتَزَكّٰی ۟ۚ

அவரோ தூய நிலை அடையும் பொருட்டு தம் செல்வத்தை வழங்குகின்றார்

19

وَمَا لِاَحَدٍ عِنْدَهٗ مِنْ نِّعْمَةٍ تُجْزٰۤی ۟ۙ

கைமாறு செய்யும் அளவுக்கு எவருக்கும் அவர் நன்றிக்கடன் படவில்லை.

20

اِلَّا ابْتِغَآءَ وَجْهِ رَبِّهِ الْاَعْلٰی ۟ۚ

ஆனாலும், அவர் உயர்வுமிக்க தம் இறைவனின் திருப்தியைப் பெறுவதற்காகவே இதைச் செய்கின்றார்.

21

وَلَسَوْفَ یَرْضٰی ۟۠

மேலும், (அவரைக் குறித்து) அவசியம் அவன் திருப்தியடைவான்.

PreviousAsh-ShamsNextAd-Duha

0:00–:––