All Surahs

Surah 74

المدثر

Al-Muddaththir

74. ஸூரத்துல் முத்தஸ்ஸிர் (போர்த்திக்கொண்டிருப்பவர்)

56 verses

بِسْمِ اللّٰهِ الرَّحْمٰنِ الرَّحِیْمِ

1

یٰۤاَیُّهَا الْمُدَّثِّرُ ۟ۙ

போர்த்திக் கொண்டு படுத்திருப்பவரே!

2

قُمْ فَاَنْذِرْ ۟

எழுந்து எச்சரிக்கை செய்வீராக!

3

وَرَبَّكَ فَكَبِّرْ ۟

மேலும், உம் இறைவனின் மேன்மையைப் பிரகடனப்படுத்துவீராக!

4

وَثِیَابَكَ فَطَهِّرْ ۟

மேலும், உம் ஆடைகளைத் தூய்மையாக்குவீராக!

5

وَالرُّجْزَ فَاهْجُرْ ۟

அசுத்தத்திலிருந்து விலகியிருப்பீராக!

6

وَلَا تَمْنُنْ تَسْتَكْثِرُ ۟

ஆதாயம் கருதி பிறருக்கு உதவி செய்யாதீர்;

7

وَلِرَبِّكَ فَاصْبِرْ ۟ؕ

உம் இறைவனுக்காகப் பொறுமையைக் கைக்கொள்வீராக!

8

فَاِذَا نُقِرَ فِی النَّاقُوْرِ ۟ۙ

எக்காளம் ஊதப்பட்டுவிட்டாலோ;

9

فَذٰلِكَ یَوْمَىِٕذٍ یَّوْمٌ عَسِیْرٌ ۟ۙ

அந்த நாள் மிகக் கடுமையான நாளாய் இருக்கும்.

10

عَلَی الْكٰفِرِیْنَ غَیْرُ یَسِیْرٍ ۟

நிராகரிப்பாளர்களுக்கு இலேசானதாய் இராது.

11

ذَرْنِیْ وَمَنْ خَلَقْتُ وَحِیْدًا ۟ۙ

நான் தன்னந்தனியாகப் படைத்திருக்கின்ற அந்த மனிதனை என்னிடம் விட்டுவிடுவீராக!

12

وَّجَعَلْتُ لَهٗ مَالًا مَّمْدُوْدًا ۟ۙ

அவனுக்கு நான் அதிகமான செல்வத்தை வழங்கினேன்.

13

وَّبَنِیْنَ شُهُوْدًا ۟ۙ

அவனுடனேயே இருக்கக்கூடிய புதல்வர்களையும் அளித்தேன்.

14

وَّمَهَّدْتُّ لَهٗ تَمْهِیْدًا ۟ۙ

மேலும், அவனுக்குத் தலைமை தாங்கும் வழிவகையையும் வகுத்துக் கொடுத்தேன்.

15

ثُمَّ یَطْمَعُ اَنْ اَزِیْدَ ۟ۗۙ

இதன் பிறகு நான் அவனுக்கு இன்னும் அதிகமாக வழங்க வேண்டும் என்று அவன் ஆசைப்படுகின்றான்.

16

كَلَّا ؕ اِنَّهٗ كَانَ لِاٰیٰتِنَا عَنِیْدًا ۟ؕ

ஒருபோதுமில்லை! அவன் நம்முடைய வசனங்களுடன் பகைமை கொண்டவனாக இருக்கின்றான்.

17

سَاُرْهِقُهٗ صَعُوْدًا ۟ؕ

நான் அவனை அதிவிரைவில் வேதனையின்

18

اِنَّهٗ فَكَّرَ وَقَدَّرَ ۟ۙ

சிகரத்திற்கு ஏறச் செய்வேன். அவன் சிந்தித்தான்; சில விஷயங்களைப் புனைந்துகூற முயன்றான்!

19

فَقُتِلَ كَیْفَ قَدَّرَ ۟ۙ

இறைவன் அவனை அழிக்கட்டும். அவன் எப்படிப்பட்ட விஷயங்களைப் புனைந்து கூற முற்பட்டுவிட்டான்.

20

ثُمَّ قُتِلَ كَیْفَ قَدَّرَ ۟ۙ

ஆம்! இறைவன் அவனை அழிக்கட்டும். எப்படிப்பட்ட விஷயங்களைப் புனைந்துரைக்க அவன் முற்பட்டு விட்டான்!

21

ثُمَّ نَظَرَ ۟ۙ

பிறகு (மக்களைப்) பார்த்தான்;

22

ثُمَّ عَبَسَ وَبَسَرَ ۟ۙ

பிறகு புருவத்தை நெரித்தான். பின்னர், முகத்தைச் சுளித்தான்;

23

ثُمَّ اَدْبَرَ وَاسْتَكْبَرَ ۟ۙ

பிறகு, திரும்பிச் சென்றான்; மேலும், தற்பெருமை கொண்டான்;

24

فَقَالَ اِنْ هٰذَاۤ اِلَّا سِحْرٌ یُّؤْثَرُ ۟ۙ

இறுதியில் கூறினான்: “இது ஒன்றுமில்லை; ஒரு சூனியம்தான்: முன்பிருந்தே சொல்லப்பட்டு வருவதுதான்!

25

اِنْ هٰذَاۤ اِلَّا قَوْلُ الْبَشَرِ ۟ؕ

இது ஒரு மனித வாக்கேதான்!”

26

سَاُصْلِیْهِ سَقَرَ ۟

அதிவிரைவில் நான் அவனை நரகத்தில் வீசி எறிவேன்.

27

وَمَاۤ اَدْرٰىكَ مَا سَقَرُ ۟ؕ

மேலும், அந்த நரகம் என்னவென்று நீர் அறிவீரா, என்ன?

28

لَا تُبْقِیْ وَلَا تَذَرُ ۟ۚ

அது இருக்கவும் விடாது; விட்டும் வைக்காது!

29

لَوَّاحَةٌ لِّلْبَشَرِ ۟ۚۖ

அது சருமத்தைக் கரித்துவிடக்கூடியது.

30

عَلَیْهَا تِسْعَةَ عَشَرَ ۟ؕ

பத்தொன்பது பேர் காவலர்களாய் அதற்கு நியமிக்கப்பட்டிருக்கிறார்கள்.

31

وَمَا جَعَلْنَاۤ اَصْحٰبَ النَّارِ اِلَّا مَلٰٓىِٕكَةً ۪ وَّمَا جَعَلْنَا عِدَّتَهُمْ اِلَّا فِتْنَةً لِّلَّذِیْنَ كَفَرُوْا ۙ لِیَسْتَیْقِنَ الَّذِیْنَ اُوْتُوا الْكِتٰبَ وَیَزْدَادَ الَّذِیْنَ اٰمَنُوْۤا اِیْمَانًا وَّلَا یَرْتَابَ الَّذِیْنَ اُوْتُوا الْكِتٰبَ وَالْمُؤْمِنُوْنَ ۙ وَلِیَقُوْلَ الَّذِیْنَ فِیْ قُلُوْبِهِمْ مَّرَضٌ وَّالْكٰفِرُوْنَ مَاذَاۤ اَرَادَ اللّٰهُ بِهٰذَا مَثَلًا ؕ كَذٰلِكَ یُضِلُّ اللّٰهُ مَنْ یَّشَآءُ وَیَهْدِیْ مَنْ یَّشَآءُ ؕ وَمَا یَعْلَمُ جُنُوْدَ رَبِّكَ اِلَّا هُوَ ؕ وَمَا هِیَ اِلَّا ذِكْرٰی لِلْبَشَرِ ۟۠

நாம் வானவர்களையே இந்த நரகத்தின் காவலர்களாய் ஆக்கியுள்ளோம். அவர்களின் இந்த எண்ணிக்கையை நிராகரிப்பாளர்களுக்கு சோதனையாக ஆக்கியுள்ளோம். எதற்காகவெனில், வேதம் வழங்கப்பட்ட மக்களுக்கு உறுதி ஏற்படுவதற்காகவும் இறைநம்பிக்கையாளர்களுக்கு அவர்களின் நம்பிக்கை இன்னும் அதிகமாவதற்காகவும், மேலும், வேதம் வழங்கப்பட்டவர்களும் நம்பிக்கையாளர்களும் எவ்வித ஐயத்திற்கும் ஆளாகக்கூடாது என்பதற்காகவும், மேலும், நெஞ்சில் நோய் உள்ளவர்களும், நிராகரிப்பாளர்களும் “அல்லாஹ் இந்த விநோதமான சொல்லால் என்ன நாடுகின்றான்?” என்று கேட்பதற்காகவும்தான்! இவ்வாறு அல்லாஹ் தான் நாடுபவர்களை வழிகேட்டில் தள்ளிவிடுகின்றான். மேலும், தான் நாடுபவர்களுக்கு நேர்வழியை அளிக்கின்றான். மேலும், உம் இறைவனின் படைகளை அவனைத் தவிர வேறெவரும் அறிந்திட மாட்டார் நரகத்தைப் பற்றிய இந்த விவரம் எடுத்துரைக்கப்பட்டதன் நோக்கம், மக்களுக்கு இதன் மூலம் ஓர் அறிவுரை கிடைக்கட்டும் என்பதே அன்றி வேறில்லை.

32

كَلَّا وَالْقَمَرِ ۟ۙ

ஒருபோதுமில்லை! சந்திரன் மீது சத்தியமாக!

33

وَالَّیْلِ اِذْ اَدْبَرَ ۟ۙ

இரவின் மீதும் சத்தியமாக, அது திரும்பிச் செல்லும்போது!

34

وَالصُّبْحِ اِذَاۤ اَسْفَرَ ۟ۙ

விடியற்காலையின் மீது சத்தியமாக, அது பிரகாசமடையும்போது!

35

اِنَّهَا لَاِحْدَی الْكُبَرِ ۟ۙ

இந்த நரகம் மிகப்பெரியவற்றுள் ஒன்றாகும்.

36

نَذِیْرًا لِّلْبَشَرِ ۟ۙ

அது மனிதர்களை அச்சுறுத்தக்கூடியதாகும்;

37

لِمَنْ شَآءَ مِنْكُمْ اَنْ یَّتَقَدَّمَ اَوْ یَتَاَخَّرَ ۟ؕ

உங்களில் முன்னேறிச் செல்வதற்கோ பின்தங்கி விடுவதற்கோ விரும்பும் ஒவ்வொரு மனிதரையும் அச்சுறுத்தக் கூடியதாகும்.

38

كُلُّ نَفْسٍ بِمَا كَسَبَتْ رَهِیْنَةٌ ۟ۙ

ஒவ்வொரு மனிதனும் தன் சம்பாத்தியத்திற்குப் பகரமாக பிணையாக இருக்கின்றான்;

39

اِلَّاۤ اَصْحٰبَ الْیَمِیْنِ ۟ؕۛ

வலப்பக்கத்தாரைத் தவிர!

40

فِیْ جَنّٰتٍ ۛ۫ یَتَسَآءَلُوْنَ ۟ۙ

அவர்கள் சொர்க்கத்தில் இருப்பார்கள்.

41

عَنِ الْمُجْرِمِیْنَ ۟ۙ

அவர்கள் குற்றவாளிகளிடம் கேட்பார்கள்:

42

مَا سَلَكَكُمْ فِیْ سَقَرَ ۟

“உங்களை நரகத்திற்குக் கொண்டு வந்தது எது?”

43

قَالُوْا لَمْ نَكُ مِنَ الْمُصَلِّیْنَ ۟ۙ

அதற்கு அவர்கள் கூறுவார்கள்: “தொழக்கூடியவர்களில் நாங்கள் இருக்கவில்லை.

44

وَلَمْ نَكُ نُطْعِمُ الْمِسْكِیْنَ ۟ۙ

நாங்கள் ஏழைகளுக்கு உணவு அளிக்கவில்லை.

45

وَكُنَّا نَخُوْضُ مَعَ الْخَآىِٕضِیْنَ ۟ۙ

மேலும், சத்தியத்திற்கெதிராகப் பேசுகிறவர்களுடன் நாங்களும் சேர்ந்து அதில் ஈடுபட்டோம்.

46

وَكُنَّا نُكَذِّبُ بِیَوْمِ الدِّیْنِ ۟ۙ

மேலும், கூலி கொடுக்கும் நாளினைப் பொய்யென்று கூறி வந்தோம்;

47

حَتّٰۤی اَتٰىنَا الْیَقِیْنُ ۟ؕ

அந்த உறுதியான விஷயம் எங்களை வந்தடையும் வரை!”

48

فَمَا تَنْفَعُهُمْ شَفَاعَةُ الشّٰفِعِیْنَ ۟ؕ

அந்நேரத்தில் பரிந்துரை செய்வோரின் பரிந்துரை எதுவும் அவர்களுக்குச் சிறிதும் பயனளிக்காது.

49

فَمَا لَهُمْ عَنِ التَّذْكِرَةِ مُعْرِضِیْنَ ۟ۙ

இவர்களுக்கு என்ன நேர்ந்துவிட்டது? இவர்கள் இந்த அறிவுரையைப் புறக்கணித்துக் கொண்டிருக்கின்றார்களே!

50

كَاَنَّهُمْ حُمُرٌ مُّسْتَنْفِرَةٌ ۟ۙ

மிரண்டு விரண்டோடும் காட்டுக் கழுதைகளைப் போல

51

فَرَّتْ مِنْ قَسْوَرَةٍ ۟ؕ

அதுவும் சிங்கத்தைக் கண்டு மிரண்டு (விரண்டோடும் காட்டுக் கழுதைகளைப் போல இருக்கின்றனர்);

52

بَلْ یُرِیْدُ كُلُّ امْرِئٍ مِّنْهُمْ اَنْ یُّؤْتٰی صُحُفًا مُّنَشَّرَةً ۟ۙ

அவர்கள் ஒவ்வொருவரும் தன்னுடைய பெயருக்குத் திறந்த மடல் அனுப்பப்பட வேண்டும் என்று விரும்புகின்றார்கள்.

53

كَلَّا ؕ بَلْ لَّا یَخَافُوْنَ الْاٰخِرَةَ ۟ؕ

ஒருபோதுமில்லை! உண்மை யாதெனில், இவர்கள் மறுமையைக் குறித்துப் பயப்படுவதில்லை.

54

كَلَّاۤ اِنَّهٗ تَذْكِرَةٌ ۟ۚ

ஒருபோதுமில்லை! இது ஓர் அறிவுரையே ஆகும்.

55

فَمَنْ شَآءَ ذَكَرَهٗ ۟ؕ

இனி எவர் விரும்புகின்றாரோ அவர் இதிலிருந்து படிப்பினை பெற்றுக்கொள்ளட்டும்.

56

وَمَا یَذْكُرُوْنَ اِلَّاۤ اَنْ یَّشَآءَ اللّٰهُ ؕ هُوَ اَهْلُ التَّقْوٰی وَاَهْلُ الْمَغْفِرَةِ ۟۠

இவர்கள் எந்தப் படிப்பினையும் பெறமாட்டார்கள்; அல்லாஹ் அதை நாடினாலே தவிர! அஞ்சப்படுவதற்குத் தகுதியுடையவன் அவன் ஒருவனே! தனக்கு அஞ்சுபவர்களை மன்னிப்பதற்கு அவனே தகுதியுடையவனாக இருக்கின்றான்.

PreviousAl-MuzzammilNextAl-Qiyamah

0:00–:––