All Surahs

Surah 73

المزمل

Al-Muzzammil

73. ஸூரத்துல் முஸ்ஸம்மில் (போர்வை போர்த்தியவர்)

20 verses

بِسْمِ اللّٰهِ الرَّحْمٰنِ الرَّحِیْمِ

1

یٰۤاَیُّهَا الْمُزَّمِّلُ ۟ۙ

போர்த்திக் கொண்டு படுத்திருப்பவரே!

2

قُمِ الَّیْلَ اِلَّا قَلِیْلًا ۟ۙ

இரவில் எழுந்து தொழுவீராக; ஆனால் கொஞ்ச நேரம்!

3

نِّصْفَهٗۤ اَوِ انْقُصْ مِنْهُ قَلِیْلًا ۟ۙ

அதாவது, பாதி இரவு அல்லது அதைவிடச் சற்று குறைவாகவோ

4

اَوْ زِدْ عَلَیْهِ وَرَتِّلِ الْقُرْاٰنَ تَرْتِیْلًا ۟ؕ

அல்லது கூடுதலாகவோ (தொழுவீராக!) மேலும், குர்ஆனை நிறுத்தி நிதானமாக ஓதுவீராக!

5

اِنَّا سَنُلْقِیْ عَلَیْكَ قَوْلًا ثَقِیْلًا ۟

திண்ணமாக, நாம் உம் மீது கன மானதொரு வாக்கை இறக்கப் போகின்றோம்.

6

اِنَّ نَاشِئَةَ الَّیْلِ هِیَ اَشَدُّ وَطْاً وَّاَقْوَمُ قِیْلًا ۟ؕ

உண்மையில், இரவில் எழுந்திருப்பது மனத்தைக் கட்டுப்படுத்துவதற்கு மிகவும் பயனுள்ளதாகவும் (குர்ஆனை) நேர்த்தியாக ஓதுவதற்கு மிகவும் ஏற்றதாகவும் இருக்கின்றது.

7

اِنَّ لَكَ فِی النَّهَارِ سَبْحًا طَوِیْلًا ۟ؕ

பகல் நேரங்களிலோ உமக்கு நிறையப் பணிகள் உள்ளன.

8

وَاذْكُرِ اسْمَ رَبِّكَ وَتَبَتَّلْ اِلَیْهِ تَبْتِیْلًا ۟ؕ

உம் இறைவனின் பெயரை நினைவுகூர்ந்து கொண்டிருப்பீராக! மேலும், அனைத்தையும் விட்டு அவனுக்காகவே ஆகிவிடுவீராக!

9

رَبُّ الْمَشْرِقِ وَالْمَغْرِبِ لَاۤ اِلٰهَ اِلَّا هُوَ فَاتَّخِذْهُ وَكِیْلًا ۟

அவன் கிழக்கு மேற்குத் திசைகளின் அதிபதி ஆவான். அவனைத் தவிர வேறு இறைவன் இல்லை. எனவே, அவனையே உமக்குப் பொறுப்பேற்பவனாக (வகீல்) ஆக்கிக் கொள்வீராக!

10

وَاصْبِرْ عَلٰی مَا یَقُوْلُوْنَ وَاهْجُرْهُمْ هَجْرًا جَمِیْلًا ۟

மேலும், இம்மக்கள் எவற்றையெல்லாம் புனைந்துரைக்கின்றார்களோ அவற்றின் மீது பொறுமை கொள்வீராக! மேலும், கண்ணியமான முறையில் அவர்களை விட்டும் விலகிவிடுவீராக!

11

وَذَرْنِیْ وَالْمُكَذِّبِیْنَ اُولِی النَّعْمَةِ وَمَهِّلْهُمْ قَلِیْلًا ۟

பொய்யென வாதிடுபவர்களான இந்த சுகவாசிகளைக் கவனித்துக் கொள்ளும் பொறுப்பை என்னிடம் விட்டுவிடுவீராக! மேலும், சிறிது காலத்திற்கு இவர்களை இப்படியே விட்டு வைப்பீராக.

12

اِنَّ لَدَیْنَاۤ اَنْكَالًا وَّجَحِیْمًا ۟ۙ

நம்மிடம் (இவர்களுக்காகக்) கனத்த விலங்குகளும் கொழுந்துவிட்டெரியும் நெருப்பும்,

13

وَّطَعَامًا ذَا غُصَّةٍ وَّعَذَابًا اَلِیْمًا ۟ۗ

தொண்டையில் சிக்கிக் கொள்ளும் உணவும், துன்புறுத்தும் வேதனையும் உள்ளன.

14

یَوْمَ تَرْجُفُ الْاَرْضُ وَالْجِبَالُ وَكَانَتِ الْجِبَالُ كَثِیْبًا مَّهِیْلًا ۟

இது நடைபெறும் அந்நாளில் பூமியும் மலைகளும் நடுங்கும். மேலும், மலைகள் சரிந்து போகும்; மணற்குவியலைப் போன்றாகிவிடும்.

15

اِنَّاۤ اَرْسَلْنَاۤ اِلَیْكُمْ رَسُوْلًا ۙ۬ شَاهِدًا عَلَیْكُمْ كَمَاۤ اَرْسَلْنَاۤ اِلٰی فِرْعَوْنَ رَسُوْلًا ۟ؕ

திண்ணமாக, நாம் ஒரு தூதரை, உங்களின் மீது சான்று பகரக்கூடியவராக ஆக்கி உங்களிடம் அனுப்பினோம்; ஃபிர்அவ்னிடம் நாம் ஒரு தூதரை அனுப்பியது போன்று!

16

فَعَصٰی فِرْعَوْنُ الرَّسُوْلَ فَاَخَذْنٰهُ اَخْذًا وَّبِیْلًا ۟

(பிறகு, பார்த்துக் கொள்ளுங்கள்:) ஃபிர்அவ்ன் அந்தத் தூதரின் பேச்சை ஏற்காதபோது, நாம் அவனை மிகவும் கடுமையாகப் பிடித்தோம்.

17

فَكَیْفَ تَتَّقُوْنَ اِنْ كَفَرْتُمْ یَوْمًا یَّجْعَلُ الْوِلْدَانَ شِیْبَا ۟ۗۖ

நீங்கள் நிராகரித்து விட்டால் அந்த நாளில் எப்படித் தப்பித்துக் கொள்வீர்கள்? அதுவோ, குழந்தைகளை நரைக்கச் செய்துவிடும்;

18

لسَّمَآءُ مُنْفَطِرٌ بِهٖ ؕ كَانَ وَعْدُهٗ مَفْعُوْلًا ۟

அதன் கடினத்தால் வானம் வெடித் துத் தகர்ந்து போய்விடும். அல்லாஹ்வின் வாக்குறுதி நிறைவேறியே தீர வேண்டியுள்ளது.

19

اِنَّ هٰذِهٖ تَذْكِرَةٌ ۚ فَمَنْ شَآءَ اتَّخَذَ اِلٰی رَبِّهٖ سَبِیْلًا ۟۠

திண்ணமாக, இது ஓர் அறிவுரையாகும். எனவே, இனி விரும்புகிறவர் தன்னுடைய இறைவனின் பக்கம் செல்லும் வழியைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளட்டும்.

20

اِنَّ رَبَّكَ یَعْلَمُ اَنَّكَ تَقُوْمُ اَدْنٰی مِنْ  الَّیْلِ وَنِصْفَهٗ وَثُلُثَهٗ وَطَآىِٕفَةٌ مِّنَ الَّذِیْنَ مَعَكَ ؕ وَاللّٰهُ یُقَدِّرُ الَّیْلَ وَالنَّهَارَ ؕ عَلِمَ اَنْ لَّنْ تُحْصُوْهُ فَتَابَ عَلَیْكُمْ فَاقْرَءُوْا مَا تَیَسَّرَ مِنَ الْقُرْاٰنِ ؕ عَلِمَ اَنْ سَیَكُوْنُ مِنْكُمْ مَّرْضٰی ۙ وَاٰخَرُوْنَ یَضْرِبُوْنَ فِی الْاَرْضِ یَبْتَغُوْنَ مِنْ فَضْلِ اللّٰهِ ۙ وَاٰخَرُوْنَ یُقَاتِلُوْنَ فِیْ سَبِیْلِ اللّٰهِ ۖؗ فَاقْرَءُوْا مَا تَیَسَّرَ مِنْهُ ۙ وَاَقِیْمُوا الصَّلٰوةَ وَاٰتُوا الزَّكٰوةَ وَاَقْرِضُوا اللّٰهَ قَرْضًا حَسَنًا ؕ وَمَا تُقَدِّمُوْا لِاَنْفُسِكُمْ مِّنْ خَیْرٍ تَجِدُوْهُ عِنْدَ اللّٰهِ هُوَ خَیْرًا وَّاَعْظَمَ اَجْرًا ؕ وَاسْتَغْفِرُوا اللّٰهَ ؕ اِنَّ اللّٰهَ غَفُوْرٌ رَّحِیْمٌ ۟۠

(நபியே!) உம் இறைவன் அறிந்திருக்கின்றான் ஏறத்தாழ இரவின் மூன்றில் இரண்டு பகுதி வரை, சில சமயம் பாதி இரவு வரை, சிலசமயம் அதன் மூன்றில் ஒரு பகுதி வரை, நீர் இறைவழிபாட்டில் கழிக்கின்றீர் என்பதையும், உம்முடைய தோழர்களிலும் ஒரு குழுவினர் இவ்வாறு செய்து வருகின்றார்கள் என்பதையும்! அல்லாஹ்தான் இரவையும் பகலையும் கணக்கிட்டு வைத்துள்ளான். அவற்றைத் துல்லியமாகக் கணக்கிட உங்களால் முடியாது என்பது அவனுக்குத் தெரியும். ஆதலால், அவன் உங்கள் மீது கருணை புரிந்தான். உங்களுக்கு குர்ஆனிலிருந்து சுலபமாக எந்த அளவுக்கு ஓத முடியுமோ அந்த அளவுக்கு ஓதிக் கொள்ளுங்கள். உங்களில் சிலர் நோயாளிகளாய் இருப்பார்கள் என்பதும், வேறு சிலர் அல்லாஹ்வின் அருளைத் தேடி பூமியில் பயணம் செய்கின்றார்கள் என்பதும், இன்னும் சிலர் அல்லாஹ்வின் வழியில் போர் புரிகின்றார்கள் என்பதும் அவனுக்கு நன்கு தெரியும். எனவே, குர்ஆனிலிருந்து சுலபமாக எந்த அளவுக்கு ஓத முடியுமோ அந்த அளவுக்கு ஓதிக் கொள்ளுங்கள்; தொழுகையை நிலைநிறுத்துங்கள்; ஜகாத்தும் கொடுங்கள். மேலும், அல்லாஹ்வுக்கு அழகிய கடனை அளித்து வாருங்கள். நீங்கள் உங்களுக்காக முன்கூட்டியே செய்து அனுப்பும் நன்மைகள் எவையோ அவற்றை அல்லாஹ்விடத்தில் காண்பீர்கள். அதுவே மிகச் சிறந்ததாகும். அதன் கூலியும் மகத்தானதாகும். அல்லாஹ்விடத்தில் பாவமன்னிப்புக் கோருங்கள். ஐயமின்றி அல்லாஹ் பெரிதும் மன்னிப்பவனாகவும், கிருபை மிக்கவனாகவும் இருக்கின்றான்.

PreviousAl-JinnNextAl-Muddaththir

0:00–:––