اَلرَّحْمٰنُ ۟ۙ
அளவிலாக் கருணையுள்ள (இறை)வன்
Surah 55
Ar-Rahman
55. ஸூரத்துர் ரஹ்மான் (அளவற்ற அருளாளன்)
78 verses
بِسْمِ اللّٰهِ الرَّحْمٰنِ الرَّحِیْمِ
اَلرَّحْمٰنُ ۟ۙ
அளவிலாக் கருணையுள்ள (இறை)வன்
عَلَّمَ الْقُرْاٰنَ ۟ؕ
இந்தக் குர்ஆனைக் கற்றுத் தந்தான்.
خَلَقَ الْاِنْسَانَ ۟ۙ
அவனே மனிதனைப் படைத்தான்;
عَلَّمَهُ الْبَیَانَ ۟
அவனுக்குப் பேசக் கற்றுக்கொடுத்தான்.
اَلشَّمْسُ وَالْقَمَرُ بِحُسْبَانٍ ۟ۙ
சூரியனும், சந்திரனும் ஓர் ஒழுங்கிற்குக் கட்டுப்பட்டிருக்கின்றன.
وَّالنَّجْمُ وَالشَّجَرُ یَسْجُدٰنِ ۟
மேலும், நட்சத்திரங்கள், மரங்கள் ஆகிய அனைத்தும் சிரம்பணிந்து கொண்டிருக்கின்றன.
وَالسَّمَآءَ رَفَعَهَا وَوَضَعَ الْمِیْزَانَ ۟ۙ
அவன் வானத்தை உயர்த்தினான். தராசை நிலைநாட்டினான்,
اَلَّا تَطْغَوْا فِی الْمِیْزَانِ ۟
நீங்கள் தராசில் நீதி தவறிவிடக்கூடாது என்பதற்காக!
وَاَقِیْمُوا الْوَزْنَ بِالْقِسْطِ وَلَا تُخْسِرُوا الْمِیْزَانَ ۟
மேலும், நீதியுடன் மிகச் சரியாக நிறுங்கள்; தராசில் எடைக்குறைவு ஏற்படுத்தாதீர்கள்!
وَالْاَرْضَ وَضَعَهَا لِلْاَنَامِ ۟ۙ
பூமியை அவன் எல்லாப் படைப்புகளுக்காகவும் அமைத்தான்.
فِیْهَا فَاكِهَةٌ وَّالنَّخْلُ ذَاتُ الْاَكْمَامِ ۟ۖ
அதில் விதவிதமான சுவைமிகு கனிகள் ஏராளமாய் இருக்கின்றன. பேரீத்த மரங்களும் இருக்கின்றன. அவற்றின் பழங்கள் பாளைகளால் மூடப்பட்டு இருக்கின்றன.
وَالْحَبُّ ذُو الْعَصْفِ وَالرَّیْحَانُ ۟ۚ
விதவிதமான தானியங்கள் உள்ளன. அவற்றில் உமியும் உண்டு; மணியும் உண்டு.
فَبِاَیِّ اٰلَآءِ رَبِّكُمَا تُكَذِّبٰنِ ۟
ஓ, ஜின்களே! மனிதர்களே! உங்கள் அதிபதியின் எந்த எந்த அருட்கொடைகளை நீங்கள் பொய்யெனக் கூறுவீர்கள்?
خَلَقَ الْاِنْسَانَ مِنْ صَلْصَالٍ كَالْفَخَّارِ ۟ۙ
ஓடு போன்று, தட்டினால் ஓசை வரக்கூடிய பேதகமடைந்த களிமண்ணிலிருந்து மனிதனைப் படைத்தான்.
وَخَلَقَ الْجَآنَّ مِنْ مَّارِجٍ مِّنْ نَّارٍ ۟ۚ
மேலும், ஜின்களைத் தீப்பிழம்பிலிருந்து படைத்தான்.
فَبِاَیِّ اٰلَآءِ رَبِّكُمَا تُكَذِّبٰنِ ۟
ஓ, ஜின்களே! மனிதர்களே! உங்கள் அதிபதியின் எந்த எந்த ஆற்றல்மிக்க விநோதங்களை நீங்கள் பொய்யெனக் கூறுவீர்கள்?
رَبُّ الْمَشْرِقَیْنِ وَرَبُّ الْمَغْرِبَیْنِ ۟ۚ
இரு கிழக்குகள், இரு மேற்குகள் அனைத்தின் அதிபதியும் பரிபாலகனும் அவனே!
فَبِاَیِّ اٰلَآءِ رَبِّكُمَا تُكَذِّبٰنِ ۟
ஓ, ஜின்களே! மனிதர்களே! உங்கள் அதிபதியின் எந்த எந்த ஆற்றல்களை நீங்கள் பொய்யெனக் கூறுவீர்கள்?
مَرَجَ الْبَحْرَیْنِ یَلْتَقِیٰنِ ۟ۙ
அவன் இரு கடல்களையும் ஒன்றோடொன்று சங்கமிக்கச் செய்தான்;
بَیْنَهُمَا بَرْزَخٌ لَّا یَبْغِیٰنِ ۟ۚ
ஆயினும், அவ்விரண்டுக்குமிடையே ஒரு தடுப்பு இருக்கின்றது. அதனை அவை மீறுவதில்லை.
فَبِاَیِّ اٰلَآءِ رَبِّكُمَا تُكَذِّبٰنِ ۟
ஓ, ஜின்களே! மனிதர்களே! நீங்கள் உங்கள் அதிபதியுடைய வல்லமையின் எந்த எந்த விநோதங்களைப் பொய்யெனக் கூறுவீர்கள்?
یَخْرُجُ مِنْهُمَا اللُّؤْلُؤُ وَالْمَرْجَانُ ۟ۚ
இந்தக் கடல்களிலிருந்து முத்துக்களும், பவளங்களும் வெளிப்படுகின்றன.
فَبِاَیِّ اٰلَآءِ رَبِّكُمَا تُكَذِّبٰنِ ۟
ஓ, ஜின்களே! மனிதர்களே! உங்கள் அதிபதியுடைய வல்லமையின் எந்த எந்த சிறப்புகளை நீங்கள் பொய்யெனக் கூறுவீர்கள்?
وَلَهُ الْجَوَارِ الْمُنْشَـٰٔتُ فِی الْبَحْرِ كَالْاَعْلَامِ ۟ۚ
மேலும், கடலில் மலைகளைப் போன்று உயர்ந்து நிற்கும் இந்தக் கப்பல்களும் அவனுக்கே உரியன.
فَبِاَیِّ اٰلَآءِ رَبِّكُمَا تُكَذِّبٰنِ ۟۠
ஓ, ஜின்களே! மனிதர்களே! உங்கள் அதிபதியின் எந்த எந்த பேருபகாரங்களை நீங்கள் பொய்யென மறுப்பீர்கள்?
كُلُّ مَنْ عَلَیْهَا فَانٍ ۟ۚۖ
இந்தப் பூமியின் மேல் உள்ள ஒவ்வொரு பொருளும் அழியக்கூடியதே!
وَّیَبْقٰی وَجْهُ رَبِّكَ ذُو الْجَلٰلِ وَالْاِكْرَامِ ۟ۚ
கம்பீரமும், கண்ணியமும் உடைய உம் அதிபதி மட்டுமே நிலைத்திருப்பவன் ஆவான்.
فَبِاَیِّ اٰلَآءِ رَبِّكُمَا تُكَذِّبٰنِ ۟
ஓ, ஜின்களே! மனிதர்களே! உங்கள் அதிபதியின் எந்த எந்த சிறப்பம்சங்களை நீங்கள் பொய்யெனக் கூறுவீர்கள்?
یَسْـَٔلُهٗ مَنْ فِی السَّمٰوٰتِ وَالْاَرْضِ ؕ كُلَّ یَوْمٍ هُوَ فِیْ شَاْنٍ ۟ۚ
பூமியிலும் வானங்களிலும் உள்ளவை அனைத்தும் தம் தேவைகளை அவனிடமே வேண்டிக் கொண்டிருக்கின்றன. ஒவ்வொரு கணமும், அவன் ஒரு புதிய மாட்சிமையின் நிலையில் இருக்கின்றான்.
فَبِاَیِّ اٰلَآءِ رَبِّكُمَا تُكَذِّبٰنِ ۟
ஓ, ஜின்களே! மனிதர்களே! உங்கள் அதிபதியின் பெரும் புகழ்மிக்க எந்த எந்தத் தன்மைகளை நீங்கள் பொய்யெனக் கூறுவீர்கள்?
سَنَفْرُغُ لَكُمْ اَیُّهَ الثَّقَلٰنِ ۟ۚ
பூமிக்குச் சுமையாய் இருப்பவர்களே! அதிவிரைவில் நாம் உங்களை விசாரணை செய்வதற்காக ஓய்வாகிவிடுவோம்.
فَبِاَیِّ اٰلَآءِ رَبِّكُمَا تُكَذِّبٰنِ ۟
பின்னர் உங்கள் அதிபதியின் எந்த எந்த பேருபகாரங்களை நீங்கள் பொய்யென மறுப்பீர்கள் (என்பதை நாம் பார்த்துக் கொள்வோம்.)
یٰمَعْشَرَ الْجِنِّ وَالْاِنْسِ اِنِ اسْتَطَعْتُمْ اَنْ تَنْفُذُوْا مِنْ اَقْطَارِ السَّمٰوٰتِ وَالْاَرْضِ فَانْفُذُوْا ؕ لَا تَنْفُذُوْنَ اِلَّا بِسُلْطٰنٍ ۟ۚ
ஓ, ஜின் மற்றும் மனிதக்கூட்டங்களே! வானங்கள் மற்றும் பூமியின் எல்லைகளை விட்டு ஓடிச் செல்ல உங்களால் முடியுமானால் ஓடிப் பாருங்கள். உங்களால் ஓடிச் செல்லவே முடியாது; அதற்கெனப் பெரும் வலிமை வேண்டும்.
فَبِاَیِّ اٰلَآءِ رَبِّكُمَا تُكَذِّبٰنِ ۟
உங்கள் இறைவனின் எந்த எந்த வல்லமைகளை நீங்கள் பொய்யெனக் கூறுவீர்கள்?
یُرْسَلُ عَلَیْكُمَا شُوَاظٌ مِّنْ نَّارٍ ۙ۬ وَّنُحَاسٌ فَلَا تَنْتَصِرٰنِ ۟ۚ
(அவ்விதம் நீங்கள் தப்பியோட முயன்றால்) உங்கள் மீது தீ ஜுவாலையும் புகையும் ஏவிவிடப்படும். அவற்றை எதிர்த்து நிற்க உங்களால் இயலாது.
فَبِاَیِّ اٰلَآءِ رَبِّكُمَا تُكَذِّبٰنِ ۟
(ஓ, ஜின்களே! மனிதர்களே!) உங்கள் இறைவனின் எந்த எந்த வல்லமைகளை நீங்கள் மறுப்பீர்கள்?
فَاِذَا انْشَقَّتِ السَّمَآءُ فَكَانَتْ وَرْدَةً كَالدِّهَانِ ۟ۚ
பின்னர், வானம் பிளந்து செந்தோலைப் போன்று சிவப்பாகிவிடும்போது (என்ன நிகழும்?)
فَبِاَیِّ اٰلَآءِ رَبِّكُمَا تُكَذِّبٰنِ ۟
ஓ, ஜின்களே! மனிதர்களே! அப்போது நீங்கள் உங்கள் இறைவனின் எந்த எந்த ஆற்றல்களைப் பொய்யெனக் கூறுவீர்கள்?
فَیَوْمَىِٕذٍ لَّا یُسْـَٔلُ عَنْ ذَنْۢبِهٖۤ اِنْسٌ وَّلَا جَآنٌّ ۟ۚ
அந்நாளில், எந்த மனிதனிடமும் எந்த ஜின்னிடமும் அவரவருடைய பாவத்தைப் பற்றி வினவ வேண்டிய அவசிய மிராது!
فَبِاَیِّ اٰلَآءِ رَبِّكُمَا تُكَذِّبٰنِ ۟
நீங்கள் இரு கூட்டத்தாரும் உங்களுடைய இறைவனின் எந்த எந்த பேருபகாரங்களை மறுக்கிறீர்கள்? (எனத் தெரிந்துவிடும்).
یُعْرَفُ الْمُجْرِمُوْنَ بِسِیْمٰهُمْ فَیُؤْخَذُ بِالنَّوَاصِیْ وَالْاَقْدَامِ ۟ۚ
அங்கு குற்றவாளிகள் தங்களின் முகக்கூறுகளால் அடையாளம் கண்டு கொள்ளப்படுவார்கள். மேலும், அவர்களின் உச்சி முடிகளையும் கால்களையும் பிடித்து இழுக்கப்படும்.
فَبِاَیِّ اٰلَآءِ رَبِّكُمَا تُكَذِّبٰنِ ۟
(அவ்வேளை) உங்கள் இறைவனின் எந்த எந்த வல்லமைகளை நீங்கள் பொய்யெனக் கூறுவீர்கள்?
هٰذِهٖ جَهَنَّمُ الَّتِیْ یُكَذِّبُ بِهَا الْمُجْرِمُوْنَ ۟ۘ
அப்பொழுது கூறப்படும்: ஆம்! இதுவேதான் அந்த நரகம்! இதனைத்தான் குற்றவாளிகள் பொய்யெனக் கருதிக் கொண்டிருந்தார்கள்.
یَطُوْفُوْنَ بَیْنَهَا وَبَیْنَ حَمِیْمٍ اٰنٍ ۟ۚ
அதே நரகத்துக்கும், மிகக் கடுமையாக கொதிக்கும் நீருக்கும் இடையே அவர்கள் சுற்றிக் கொண்டிருப் பார்கள்.
فَبِاَیِّ اٰلَآءِ رَبِّكُمَا تُكَذِّبٰنِ ۟۠
பின்னர், உங்கள் இறைவனின் எந்த எந்த வலிமைகளை நீங்கள் பொய்யெனக் கூறுவீர்கள்?
وَلِمَنْ خَافَ مَقَامَ رَبِّهٖ جَنَّتٰنِ ۟ۚ
மேலும், தன் அதிபதியின் திருமுன் நிற்க வேண்டியது குறித்து அச்சம் கொள்ளும் ஒவ்வொருவருக்கும் இரண்டு சுவனங்கள் உள்ளன.
فَبِاَیِّ اٰلَآءِ رَبِّكُمَا تُكَذِّبٰنِ ۟ۙ
உங்கள் இறைவனின் எந்த எந்த வெகு மதிகளை நீங்கள் பொய்யெனக் கூறுவீர்கள்?
ذَوَاتَاۤ اَفْنَانٍ ۟ۚ
அவையிரண்டும் பசுமையான கிளைகள் நிறைந்தவை!
فَبِاَیِّ اٰلَآءِ رَبِّكُمَا تُكَذِّبٰنِ ۟
உங்கள் இறைவனின் எந்த எந்த வெகுமதிகளை நீங்கள் பொய்யெனக் கூறுவீர்கள்?
فِیْهِمَا عَیْنٰنِ تَجْرِیٰنِ ۟ۚ
அந்த இரண்டு சுவனங்களிலும் இரண்டு ஊற்றுகள் ஓடிக்கொண்டிருக்கும்.
فَبِاَیِّ اٰلَآءِ رَبِّكُمَا تُكَذِّبٰنِ ۟
உங்கள் இறைவனின் எந்த எந்த வெகுமதிகளை நீங்கள் பொய்யெனக் கூறுவீர்கள்?
فِیْهِمَا مِنْ كُلِّ فَاكِهَةٍ زَوْجٰنِ ۟ۚ
அந்த இரண்டு சுவனங்களில் இருக்கும் ஒவ்வொரு பழமும் இரு வகையானவை.
فَبِاَیِّ اٰلَآءِ رَبِّكُمَا تُكَذِّبٰنِ ۟
உங்கள் இறைவனின் எந்த எந்த வெகுமதிகளை நீங்கள் பொய்யெனக் கூறுவீர்கள்?
مُتَّكِـِٕیْنَ عَلٰی فُرُشٍ بَطَآىِٕنُهَا مِنْ اِسْتَبْرَقٍ ؕ وَجَنَا الْجَنَّتَیْنِ دَانٍ ۟ۚ
சுவனவாசிகள் விரிப்புகளில் தலையணைகளை வைத்து சாய்ந்திருப்பார்கள். அவற்றின் உட்பாகங்கள் அடர்த்தியான பட்டுத்துணியால் ஆனவையாகும். மேலும், இரு தோட்டங்களின் கிளைகள் பழங்களால் நிரம்பித் தாழ்ந்துவிட்டிருக்கும்.
فَبِاَیِّ اٰلَآءِ رَبِّكُمَا تُكَذِّبٰنِ ۟
உங்கள் அதிபதியின் எந்த எந்த வெகுமதிகளை நீங்கள் பொய்யெனக் கூறுவீர்கள்?
فِیْهِنَّ قٰصِرٰتُ الطَّرْفِ ۙ لَمْ یَطْمِثْهُنَّ اِنْسٌ قَبْلَهُمْ وَلَا جَآنٌّ ۟ۚ
இந்த அருட்கொடைகளுக்கு மத்தியில் நாணும் விழிகளைக் கொண்ட பெண்களும் இருப்பார்கள்; இந்தச் சுவனவாசிகளுக்கு முன்னர் எந்த மனிதனும், ஜின்னும் அவர்களைத் தொட்டுக்கூடப் பார்த் திருக்க மாட்டார்கள்.
فَبِاَیِّ اٰلَآءِ رَبِّكُمَا تُكَذِّبٰنِ ۟ۚ
உங்கள் இறைவனின் எந்த எந்த வெகு மதிகளை நீங்கள் பொய்யெனக் கூறுவீர்கள்?
كَاَنَّهُنَّ الْیَاقُوْتُ وَالْمَرْجَانُ ۟ۚ
அந்தப் பெண்கள் மிக்க அழகானவர்கள், மாணிக்கத்தையும் முத்தையும் போன்று!
فَبِاَیِّ اٰلَآءِ رَبِّكُمَا تُكَذِّبٰنِ ۟
உங்கள் அதிபதியின் எந்த எந்த வெகுமதிகளை நீங்கள் பொய்யெனக் கூறுவீர்கள்?
هَلْ جَزَآءُ الْاِحْسَانِ اِلَّا الْاِحْسَانُ ۟ۚ
நன்மையின் கூலி நன்மையைத் தவிர வேறெதுவாய் இருக்க முடியும்?
فَبِاَیِّ اٰلَآءِ رَبِّكُمَا تُكَذِّبٰنِ ۟
பின்னர் ஓ, ஜின்களே! மனிதர்களே! உங்கள் அதிபதியின் பெரும் புகழுக்குரிய எந்த எந்தத் தன்மைகளை நீங்கள் பொய்யென மறுப்பீர்கள்?
وَمِنْ دُوْنِهِمَا جَنَّتٰنِ ۟ۚ
அந்த இரு தோட்டங்களைத் தவிர வேறு இரண்டு தோட்டங்களும் இருக்கும்.
فَبِاَیِّ اٰلَآءِ رَبِّكُمَا تُكَذِّبٰنِ ۟ۙ
உங்கள் அதிபதியின் எந்த எந்த வெகுமதிகளை நீங்கள் பொய்யெனக் கூறுவீர்கள்?
مُدْهَآمَّتٰنِ ۟ۚ
அடர்த்தியான, பசுமையான சுவனங்கள்!
فَبِاَیِّ اٰلَآءِ رَبِّكُمَا تُكَذِّبٰنِ ۟ۚ
உங்கள் அதிபதியின் எந்த எந்த வெகுமதிகளை நீங்கள் பொய்யெனக் கூறுவீர்கள்?
فِیْهِمَا عَیْنٰنِ نَضَّاخَتٰنِ ۟ۚ
அவ்விரு தோட்டங்களிலும் இரு ஊற்றுகள் நீர்த்தாரைகளைப் போன்று பீறிட்டுப் பொங்கிக் கொண்டிருக்கும்.
فَبِاَیِّ اٰلَآءِ رَبِّكُمَا تُكَذِّبٰنِ ۟
உங்கள் அதிபதியின் எந்த எந்த வெகுமதிகளை நீங்கள் பொய்யெனக் கூறுவீர்கள்?
فِیْهِمَا فَاكِهَةٌ وَّنَخْلٌ وَّرُمَّانٌ ۟ۚ
அவ் விரண்டிலும் ஏராளமான கனிகளும், பேரீச்சம் பழங்களும், மாதுளங்கனிகளும் இருக்கும்.
فَبِاَیِّ اٰلَآءِ رَبِّكُمَا تُكَذِّبٰنِ ۟ۚ
உங்கள் அதிபதியின் எந்த எந்த வெகுமதிகளை நீங்கள் பொய்யெனக் கூறுவீர்கள்?
فِیْهِنَّ خَیْرٰتٌ حِسَانٌ ۟ۚ
இந்த அருட்கொடைகளுடன் நன்னடத்தையும், பேரழகும் கொண்ட மனைவிகளும் இருப்பர்.
فَبِاَیِّ اٰلَآءِ رَبِّكُمَا تُكَذِّبٰنِ ۟ۚ
உங்கள் இறைவனின் எந்த எந்த வெகுமதிகளை நீங்கள் பொய்யெனக் கூறுவீர்கள்?
حُوْرٌ مَّقْصُوْرٰتٌ فِی الْخِیَامِ ۟ۚ
கூடாரங்களில் தங்க வைக்கப்பட்ட அழகிய பெண்களும் (ஹூரிகள்) இருப்பர்.
فَبِاَیِّ اٰلَآءِ رَبِّكُمَا تُكَذِّبٰنِ ۟ۚ
உங்கள் இறைவனின் எந்த எந்த வெகுமதிகளை நீங்கள் பொய்யெனக் கூறுவீர்கள்?
لَمْ یَطْمِثْهُنَّ اِنْسٌ قَبْلَهُمْ وَلَا جَآنٌّ ۟ۚ
இந்தச் சுவனவாசிகளுக்கு முன்னர் எந்த மனிதனும் ஜின்னும் அந்தப் பெண்களைத் தொட்டுக்கூடப் பார்த்திருக்க மாட்டார்கள்.
فَبِاَیِّ اٰلَآءِ رَبِّكُمَا تُكَذِّبٰنِ ۟
உங்கள் இறைவனின் எந்த எந்த வெகுமதிகளை நீங்கள் பொய்யெனக் கூறுவீர்கள்?
مُتَّكِـِٕیْنَ عَلٰی رَفْرَفٍ خُضْرٍ وَّعَبْقَرِیٍّ حِسَانٍ ۟ۚ
அந்தச் சுவனவாசிகள், பச்சைக் கம்பளங்களிலும், விலைமதிப்பற்ற அழகிய விரிப்புகளிலும் தலையணைகளை வைத்து சாய்ந்திருப்பார்கள்.
فَبِاَیِّ اٰلَآءِ رَبِّكُمَا تُكَذِّبٰنِ ۟
உங்கள் அதிபதியின் எந்த எந்த வெகுமதிகளை நீங்கள் பொய்யெனக் கூறுவீர்கள்?
تَبٰرَكَ اسْمُ رَبِّكَ ذِی الْجَلٰلِ وَالْاِكْرَامِ ۟۠
பெரும் அருட்பாக்கியங்கள் கொண்டதாக இருக்கின்றது, மாட்சிமையும் கண்ணியமும் மிக்க உம் இறைவனின் திருப்பெயர்!