All Surahs

Surah 52

الطور

At-Tur

52. ஸூரத்துத் தூர் (மலை)

49 verses

بِسْمِ اللّٰهِ الرَّحْمٰنِ الرَّحِیْمِ

1

وَالطُّوْرِ ۟ۙ

தூர் மலையின் மீது சத்தியமாக!

2

وَكِتٰبٍ مَّسْطُوْرٍ ۟ۙ

மெல்லிய தோலில் எழுதப்பட்ட

3

فِیْ رَقٍّ مَّنْشُوْرٍ ۟ۙ

திறந்த புத்தகத்தின் மீது சத்தியமாக!

4

وَّالْبَیْتِ الْمَعْمُوْرِ ۟ۙ

மக்கள் நடமாட்டமுள்ள இல்லத்தின்மீது சத்தியமாக!

5

وَالسَّقْفِ الْمَرْفُوْعِ ۟ۙ

உயர்ந்த முகட்டின் மீது சத்தியமாக!

6

وَالْبَحْرِ الْمَسْجُوْرِ ۟ۙ

அலைபுரளும் கடலின் மீது சத்தியமாக!

7

اِنَّ عَذَابَ رَبِّكَ لَوَاقِعٌ ۟ۙ

உம்முடைய இறைவன் தரும் வேதனை நிச்சயம் வந்தே தீரும்.

8

مَّا لَهٗ مِنْ دَافِعٍ ۟ۙ

அதனைத் தடுப்பவர் எவருமிலர்.

9

یَّوْمَ تَمُوْرُ السَّمَآءُ مَوْرًا ۟ۙ

அது நிகழும் நாளில் வானம் கடுமையாக நடுங்கும்;

10

وَّتَسِیْرُ الْجِبَالُ سَیْرًا ۟ؕ

மலைகள் பறந்து கொண்டிருக்கும்.

11

فَوَیْلٌ یَّوْمَىِٕذٍ لِّلْمُكَذِّبِیْنَ ۟ۙ

கேடுதான் இருக்கிறது அந்நாளில், பொய் என்று தூற்றியவர்களுக்கு!

12

الَّذِیْنَ هُمْ فِیْ خَوْضٍ یَّلْعَبُوْنَ ۟ۘ

அவர்களோ இன்று வீண் வாதங்களில் விளையாட்டாக ஈடுபட்டுக்கொண்டிருக்கின்றார்கள்.

13

یَوْمَ یُدَعُّوْنَ اِلٰی نَارِ جَهَنَّمَ دَعًّا ۟ؕ

எந்நாளில் அவர்கள் நெட்டித் தள்ளப்பட்டு நரக நெருப்பின் பக்கம் விரட்டப்படுவார்களோ அந்நாளில்;

14

هٰذِهِ النَّارُ الَّتِیْ كُنْتُمْ بِهَا تُكَذِّبُوْنَ ۟

அவர்களிடம் கூறப்படும்: “இதுதான் அந்த நரக நெருப்பு; இதனைத்தான் நீங்கள் பொய்யென வாதித்தீர்கள்.

15

اَفَسِحْرٌ هٰذَاۤ اَمْ اَنْتُمْ لَا تُبْصِرُوْنَ ۟ۚ

இப்போது கூறுங்கள், இது சூனியமா அல்லது உங்களுக்குப் புலப்படவில்லையா?

16

اِصْلَوْهَا فَاصْبِرُوْۤا اَوْ لَا تَصْبِرُوْا ۚ سَوَآءٌ عَلَیْكُمْ ؕ اِنَّمَا تُجْزَوْنَ مَا كُنْتُمْ تَعْمَلُوْنَ ۟

இப்போது அதனுள் நுழைந்து எரிந்து விடுங்கள். நீங்கள் சகித்துக்கொண்டாலும் சரி, சகிக்காவிட்டாலும் சரி. இரண்டும் உங்களுக்குச் சமம்தான். நீங்கள் எவ்வாறு செயல்பட்டீர்களோ அவ்வாறே உங்களுக்குக் கூலி கொடுக்கப்படுகின்றது.”

17

اِنَّ الْمُتَّقِیْنَ فِیْ جَنّٰتٍ وَّنَعِیْمٍ ۟ۙ

இறையச்சமுள்ளவர்கள் அங்கு சுவனங்களிலும் அருட்பேறுகளிலும் இருப்பார்கள்.

18

فٰكِهِیْنَ بِمَاۤ اٰتٰىهُمْ رَبُّهُمْ ۚ وَوَقٰىهُمْ رَبُّهُمْ عَذَابَ الْجَحِیْمِ ۟

அவர்களுடைய அதிபதி அவர்களுக்கு அளிப்பவற்றிலிருந்து இன்பம் துய்த்துக் கொண்டிருப்பார்கள். மேலும், அவர்களுடைய இறைவன் அவர்களை நரக வேதனையிலிருந்து காப்பாற்றுவான்.

19

كُلُوْا وَاشْرَبُوْا هَنِیْٓـًٔا بِمَا كُنْتُمْ تَعْمَلُوْنَ ۟ۙ

(அவர்களிடம் கூறப்படும்:) “உண்ணுங்கள், பருகுங்கள் மகிழ்வோடு; நீங்கள் செய்து கொண்டிருந்த நற்செயல்களுக்குரிய வெகுமதியாக!”

20

مُتَّكِـِٕیْنَ عَلٰی سُرُرٍ مَّصْفُوْفَةٍ ۚ وَزَوَّجْنٰهُمْ بِحُوْرٍ عِیْنٍ ۟

எதிரெதிரே விரித்து வைக்கப்பட்டிருக்கும் கட்டில்களில் மெத்தைகள் வைத்து அவர்கள் அமர்ந்திருப்பார்கள். அழகிய கண்களைக் கொண்ட மங்கையரை அவர்களுக்கு மணமுடித்துக் கொடுப்போம்.

21

وَالَّذِیْنَ اٰمَنُوْا وَاتَّبَعَتْهُمْ ذُرِّیَّتُهُمْ بِاِیْمَانٍ اَلْحَقْنَا بِهِمْ ذُرِّیَّتَهُمْ وَمَاۤ اَلَتْنٰهُمْ مِّنْ عَمَلِهِمْ مِّنْ شَیْءٍ ؕ كُلُّ امْرِىۢ بِمَا كَسَبَ رَهِیْنٌ ۟

எவர்கள் இறைநம்பிக்கை கொண்டார்களோ, அவர்களையும், இறைநம்பிக்கையில் ஓரளவாவது அவர்களின் அடிச்சுவட்டைப் பின்பற்றிய அவர்களின் வழித்தோன்றல்களையும் நாம் (சுவனத்தில்) ஒன்று சேர்த்து வைப்போம். மேலும், அவர்களின் செயல்களில் எந்த இழப்பையும் அவர்களுக்கு நாம் ஏற்படுத்தமாட்டோம். ஒவ்வொரு மனிதனும் தான் சம்பாதித்தவற்றுக்குப் பணயமாக இருக்கின்றான்.

22

وَاَمْدَدْنٰهُمْ بِفَاكِهَةٍ وَّلَحْمٍ مِّمَّا یَشْتَهُوْنَ ۟

மேலும், நாம் எல்லாவிதமான பழங்களையும், இறைச்சியையும், அவர்களின் உள்ளம் விரும்புகின்றவற்றையும் அவர்களுக்குத் தாராளமாகக் கொடுத்துக்கொண்டே இருப்போம்.

23

یَتَنَازَعُوْنَ فِیْهَا كَاْسًا لَّا لَغْوٌ فِیْهَا وَلَا تَاْثِیْمٌ ۟

அங்கே அவர்கள் ஒருவர் மற்றவரிடமிருந்து மதுக்கிண்ணத்தைப் பாய்ந்து பாய்ந்து வாங்கிக் கொண்டிருப்பார்கள். அங்கு வீணான பேச்சும் இருக்காது; தீய நடத்தையும் இருக்காது.

24

وَیَطُوْفُ عَلَیْهِمْ غِلْمَانٌ لَّهُمْ كَاَنَّهُمْ لُؤْلُؤٌ مَّكْنُوْنٌ ۟

அவர்களுக்குப் பணிவிடை செய்வதற்கென்று நியமிக்கப்பட்ட சிறுவர்கள் அவர்களுக்குச் சேவைபுரிய ஓடியாடிக் கொண்டிருப்பார்கள். அந்தச் சிறுவர்கள் மறைத்து வைக்கப்பட்ட முத்துக்களைப் போல் அழகாய் இருப்பார்கள்.

25

وَاَقْبَلَ بَعْضُهُمْ عَلٰی بَعْضٍ یَّتَسَآءَلُوْنَ ۟

மேலும், அவர்கள் (உலகில் நடந்த) நிலைமைகளைக் குறித்து பரஸ்பரம் விசாரிப்பார்கள்.

26

قَالُوْۤا اِنَّا كُنَّا قَبْلُ فِیْۤ اَهْلِنَا مُشْفِقِیْنَ ۟

அவர்கள் கூறுவார்கள்: “நாங்கள் முன்பு எங்கள் குடும்பத்தாரிடையே அஞ்சிய வண்ணம் வாழ்ந்து வந்தோம்.

27

فَمَنَّ اللّٰهُ عَلَیْنَا وَوَقٰىنَا عَذَابَ السَّمُوْمِ ۟

இறுதியில், அல்லாஹ் எங்கள்மீது அருள்புரிந்தான்; மேலும், பொசுக்கிவிடும் காற்றின் வேதனையிலிருந்து எங்களைக் காப்பாற்றிவிட்டான்.

28

اِنَّا كُنَّا مِنْ قَبْلُ نَدْعُوْهُ ؕ اِنَّهٗ هُوَ الْبَرُّ الرَّحِیْمُ ۟۠

திண்ணமாக, நாங்கள் முந்தைய வாழ்க்கையில் அவனிடமே இறைஞ்சிக்கொண்டிருந்தோம். அவன் உண்மையில் பேருபகாரியும் கருணையாளனும் ஆவான்.”

29

فَذَكِّرْ فَمَاۤ اَنْتَ بِنِعْمَتِ رَبِّكَ بِكَاهِنٍ وَّلَا مَجْنُوْنٍ ۟ؕ

(நபியே!) நீர் அறிவுரை வழங்கிய வண்ணம் இருப்பீராக! உம் இறைவனின் அருளால் நீர் சூனியக்காரருமல்லர்; பைத்தியக்காரரும் அல்லர்.

30

اَمْ یَقُوْلُوْنَ شَاعِرٌ نَّتَرَبَّصُ بِهٖ رَیْبَ الْمَنُوْنِ ۟

“இவர் ஒரு கவிஞர்; இவர் விஷயத்தில் சுழற்சியை எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றோம்” என்று இவர்கள் கூறுகின்றார்களா, என்ன?

31

قُلْ تَرَبَّصُوْا فَاِنِّیْ مَعَكُمْ مِّنَ الْمُتَرَبِّصِیْنَ ۟ؕ

இவர்களிடம் நீர் கூறும்: “சரி, எதிர்பாருங்கள். நானும் உங்களுடன் எதிர்பார்க்கிறேன்.”

32

اَمْ تَاْمُرُهُمْ اَحْلَامُهُمْ بِهٰذَاۤ اَمْ هُمْ قَوْمٌ طَاغُوْنَ ۟ۚ

இவர்களின் அறிவுதான் இவ்வாறெல்லாம் இவர்களைப் பேசத் தூண்டுகிறதா? அல்லது உண்மையில் இவர்கள் பகைமையில் வரம்புமீறிச் செல்கின்ற மக்களாய் இருக்கின்றார்களா?

33

اَمْ یَقُوْلُوْنَ تَقَوَّلَهٗ ۚ بَلْ لَّا یُؤْمِنُوْنَ ۟ۚ

அல்லது, “இந்த மனிதர் இந்தக் குர்ஆனை சுயமாகப் புனைந்திருக்கின்றார்” என்று இவர்கள் கூறுகின்றார்களா? உண்மை யாதெனில், இவர்கள் நம்பிக்கை கொள்ள விரும்பவில்லை.

34

فَلْیَاْتُوْا بِحَدِیْثٍ مِّثْلِهٖۤ اِنْ كَانُوْا صٰدِقِیْنَ ۟ؕ

இவர்கள் உண்மையானவர்களாய் இருந்தால், இதே போன்ற மகத்துவமிக்க ஒரு வாக்கை இவர்கள் இயற்றிக்கொண்டு வரட்டும்!

35

اَمْ خُلِقُوْا مِنْ غَیْرِ شَیْءٍ اَمْ هُمُ الْخٰلِقُوْنَ ۟ؕ

படைப்பாளன் யாருமின்றி தாமாகவே இவர்கள் பிறந்துவிட்டார்களா? அல்லது இவர்கள் தங்களுக்குத் தாங்களே படைப்பாளர்களாய் இருக்கின்றார்களா?

36

اَمْ خَلَقُوا السَّمٰوٰتِ وَالْاَرْضَ ۚ بَلْ لَّا یُوْقِنُوْنَ ۟ؕ

அல்லது வானங்களையும் பூமியையும் இவர்கள் படைத்துள்ளார்களா? உண்மை யாதெனில், இவர்கள் உறுதியான நம்பிக்கை கொள்வதில்லை!

37

اَمْ عِنْدَهُمْ خَزَآىِٕنُ رَبِّكَ اَمْ هُمُ الْمُصَۜیْطِرُوْنَ ۟ؕ

உம் அதிபதியின் கருவூலங்கள் இவர்களின் பிடியில் உள்ளனவா? அல்லது அவற்றின் மீது இவர்களின் ஆதிக்கம்தான் நடைபெறுகின்றதா?

38

اَمْ لَهُمْ سُلَّمٌ یَّسْتَمِعُوْنَ فِیْهِ ۚ فَلْیَاْتِ مُسْتَمِعُهُمْ بِسُلْطٰنٍ مُّبِیْنٍ ۟ؕ

அல்லது இவர்களிடம் ஏணி ஏதும் இருந்து அதில் ஏறிச்சென்று (மேலுலகின் செய்திகளை) இவர்கள் ஒட்டுக்கேட்டு வருகின்றார்களா, என்ன? இவர்களில் எவரேனும் அப்படிக் கேட்டிருந்தால் அவர் ஏதேனும் தெளிவான அத்தாட்சியைக் கொண்டு வரட்டும்!

39

اَمْ لَهُ الْبَنٰتُ وَلَكُمُ الْبَنُوْنَ ۟ؕ

என்ன, அல்லாஹ்விற்கு மட்டும் பெண்மக்கள்; உங்களுக்கு ஆண் மக்களா?

40

اَمْ تَسْـَٔلُهُمْ اَجْرًا فَهُمْ مِّنْ مَّغْرَمٍ مُّثْقَلُوْنَ ۟ؕ

நீர் அவர்களிடம் ஏதாவது கூலியைக் கேட்கின்றீரா? அதன் சுமையால் அவர்கள் அழுத்தப்படுகின்றார்களா, என்ன?

41

اَمْ عِنْدَهُمُ الْغَیْبُ فَهُمْ یَكْتُبُوْنَ ۟ؕ

அல்லது, இவர்களிடம் மறைவான உண்மைகளின் ஞானம் இருக்கின்றதா? (அதன் அடிப்படையில்) இவர்கள் எழுதிக் கொண்டிருக்கின்றார்களா?

42

اَمْ یُرِیْدُوْنَ كَیْدًا ؕ فَالَّذِیْنَ كَفَرُوْا هُمُ الْمَكِیْدُوْنَ ۟ؕ

அல்லது, இவர்கள் சூழ்ச்சி ஏதும் செய்ய விரும்புகின்றார்களா, என்ன? அப்படியென்றால், நிராகரிப்பாளர்களின் சூழ்ச்சி அவர்களையே திருப்பித் தாக்கும்.

43

اَمْ لَهُمْ اِلٰهٌ غَیْرُ اللّٰهِ ؕ سُبْحٰنَ اللّٰهِ عَمَّا یُشْرِكُوْنَ ۟

அல்லாஹ்வைத் தவிர, வேறு ஒரு கடவுள் இவர்களுக்கு உண்டா? அல்லாஹ் தூய்மையானவன், இவர்களின் இணை வைப்பை விட்டு!

44

وَاِنْ یَّرَوْا كِسْفًا مِّنَ السَّمَآءِ سَاقِطًا یَّقُوْلُوْا سَحَابٌ مَّرْكُوْمٌ ۟

வானத்தின் துண்டுகள் கீழே வீழ்வதை இவர்கள் பார்த்தாலும், “இவை அடர்த்தியாய் வந்து கொண்டிருக்கும் மேகங்கள்” என்றுதான் கூறுவார்கள்.

45

فَذَرْهُمْ حَتّٰی یُلٰقُوْا یَوْمَهُمُ الَّذِیْ فِیْهِ یُصْعَقُوْنَ ۟ۙ

எனவே (நபியே!) இவர்களை இவர்களுடைய நிலையிலேயே விட்டுவிடும்; இவர்கள் எந்நாளில் அடித்து வீழ்த்தப்படுவார்களோ அந்நாளை அடையும் வரையில்!

46

یَوْمَ لَا یُغْنِیْ عَنْهُمْ كَیْدُهُمْ شَیْـًٔا وَّلَا هُمْ یُنْصَرُوْنَ ۟ؕ

அந்நாளில் இவர்களின் எந்த சூழ்ச்சியும் இவர்களுக்கு எவ்விதப் பயனும் அளிக்காது. மேலும், இவர்களுக்கு உதவி செய்திட யாரும் வரமாட்டார்கள்.

47

وَاِنَّ لِلَّذِیْنَ ظَلَمُوْا عَذَابًا دُوْنَ ذٰلِكَ وَلٰكِنَّ اَكْثَرَهُمْ لَا یَعْلَمُوْنَ ۟

மேலும், அந்த நாள் வருவதற்கு முன்பும் கூட கொடுமைக்காரர்களுக்கு ஒரு வேதனை இருக்கின்றது. ஆனால், அவர்களில் பெரும்பாலோர் அறிவதில்லை.

48

وَاصْبِرْ لِحُكْمِ رَبِّكَ فَاِنَّكَ بِاَعْیُنِنَا وَسَبِّحْ بِحَمْدِ رَبِّكَ حِیْنَ تَقُوْمُ ۟ۙ

(நபியே!) உம் அதிபதியின் தீர்ப்பு வரும்வரை பொறுமையாய் இருப்பீராக! நீர் எம் கண்காணிப்பில் இருக்கின்றீர். நீர் எழும்போது உம் இறைவனைப் புகழ்வதுடன் அவனைத் துதிப்பீராக!

49

وَمِنَ الَّیْلِ فَسَبِّحْهُ وَاِدْبَارَ النُّجُوْمِ ۟۠

இரவிலும் அவனைத் துதி செய்வீராக. தாரகைகள் மறையும் வேளையிலும் (துதிப்பீராக!)

PreviousAdh-DhariyatNextAn-Najm

0:00–:––