All Surahs

Surah 50

ق

Qaf

50. ஸூரத்து ஃகாஃப்

45 verses

بِسْمِ اللّٰهِ الرَّحْمٰنِ الرَّحِیْمِ

1

قٓ ۚ۫ وَالْقُرْاٰنِ الْمَجِیْدِ ۟ۚ

காஃப் மாட்சிமை மிக்க குர்ஆனின் மீது ஆணையாக!

2

بَلْ عَجِبُوْۤا اَنْ جَآءَهُمْ مُّنْذِرٌ مِّنْهُمْ فَقَالَ الْكٰفِرُوْنَ هٰذَا شَیْءٌ عَجِیْبٌ ۟ۚ

உண்மை யாதெனில், இவர்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவர் இவர்களிலிருந்தே வந்திருப்பது பற்றி இவர்கள் வியப்படைந்துள்ளார்கள். மேலும், நிராகரிப்பாளர்கள் கூறத் தொடங்கினார்கள்: “இது வியப்புக்குரிய விஷயம்தான்!

3

ءَاِذَا مِتْنَا وَكُنَّا تُرَابًا ۚ ذٰلِكَ رَجْعٌ بَعِیْدٌ ۟

நாங்கள் மரணமடைந்து மண்ணோடு மண்ணாகி விட்டாலுமா (மீண்டும் எழுப்பப்படுவோம்?) மீண்டும் எழுப்பப்படுவது எனும் இவ்விஷயம் அறிவுக்குப் புறம்பானதாகும்.”

4

قَدْ عَلِمْنَا مَا تَنْقُصُ الْاَرْضُ مِنْهُمْ ۚ وَعِنْدَنَا كِتٰبٌ حَفِیْظٌ ۟

(உண்மை யாதெனில்) பூமி, இவர்களின் உடம்பிலிருந்து எவற்றைத் தின்கிறது என்பதையெல்லாம் நாம் அறிந்து வைத்துள்ளோம். மேலும், அனைத்தும் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ள ஓர் ஏடு நம்மிடம் இருக்கிறது.

5

بَلْ كَذَّبُوْا بِالْحَقِّ لَمَّا جَآءَهُمْ فَهُمْ فِیْۤ اَمْرٍ مَّرِیْجٍ ۟

ஆயினும், சத்தியம் இவர்களிடம் வந்தபோது அதனை இவர்கள் வெளிப்படையாகப் பொய்யெனக் கூறிவிட்டார்கள். இதனால்தான் இப்போது இவர்கள் குழப்பத்தில் வீழ்ந்து கிடக்கிறார்கள்.

6

اَفَلَمْ یَنْظُرُوْۤا اِلَی السَّمَآءِ فَوْقَهُمْ كَیْفَ بَنَیْنٰهَا وَزَیَّنّٰهَا وَمَا لَهَا مِنْ فُرُوْجٍ ۟

சரி, இவர்கள் தங்களுக்கு மேலுள்ள வானத்தை எப்பொழுதுமே பார்த்ததில்லையா, என்ன? அதனை நாம் எவ்வாறு அமைத்துள்ளோம்; எவ்வாறு அலங்கரித்துள்ளோம் என்று! அதில் எங்கும் எந்த ஒரு பிளவும் இல்லை.

7

وَالْاَرْضَ مَدَدْنٰهَا وَاَلْقَیْنَا فِیْهَا رَوَاسِیَ وَاَنْۢبَتْنَا فِیْهَا مِنْ كُلِّ زَوْجٍ بَهِیْجٍ ۟ۙ

மேலும், பூமியை நாம் விரித்தோம். இன்னும் அதில் மலைகளை நாட்டினோம். மேலும், எல்லாவிதமான அழகிய தோற்றமுடைய தாவரங்களையும் முளைக்கச் செய்தோம்.

8

تَبْصِرَةً وَّذِكْرٰی لِكُلِّ عَبْدٍ مُّنِیْبٍ ۟

மேலும், இவை அனைத்தும் (சத்தியத்தின் பக்கம்) திரும்பக்கூடிய ஒவ்வொரு அடியானுக்கும் அகப்பார்வையையும் படிப்பினையையும் வழங்கக்கூடியதாய் இருக்கின்றன.

9

وَنَزَّلْنَا مِنَ السَّمَآءِ مَآءً مُّبٰرَكًا فَاَنْۢبَتْنَا بِهٖ جَنّٰتٍ وَّحَبَّ الْحَصِیْدِ ۟ۙ

மேலும், நாம் வானத்திலிருந்து அருள்மிக்க நீரினை இறக்கினோம். பின்னர், அதன் மூலம் தோட்டங்களையும், அறுவடைத் தானியங்களையும்,

10

وَالنَّخْلَ بٰسِقٰتٍ لَّهَا طَلْعٌ نَّضِیْدٌ ۟ۙ

கனிகள் நிறைந்து, குலைகள் அடுக்கடுக்காய் தொங்குகின்ற நீண்ட நெடிய பேரீச்சை மரங்களையும் முளைக்கச் செய்தோம்.

11

رِّزْقًا لِّلْعِبَادِ ۙ وَاَحْیَیْنَا بِهٖ بَلْدَةً مَّیْتًا ؕ كَذٰلِكَ الْخُرُوْجُ ۟

இது மக்களுக்கு வாழ்வாதாரம் வழங்குவதற்கான ஏற்பாடாகும். இறந்து கிடக்கும் ஒரு பூமிக்கு நாம் இந்த நீரினால் உயிரூட்டுகின்றோம். (இறந்துவிட்ட மனிதர்கள் பூமியிலிருந்து) வெளிப்படுவதும் இவ்விதமேயாகும்.

12

كَذَّبَتْ قَبْلَهُمْ قَوْمُ نُوْحٍ وَّاَصْحٰبُ الرَّسِّ وَثَمُوْدُ ۟ۙ

இவர்களுக்கு முன்னர் நூஹுடைய சமூகத்தினரும், ‘ரஸ்ஸு’ வாசிகளும், ஸமூத் கூட்டத்தார்களும்,

13

وَعَادٌ وَّفِرْعَوْنُ وَاِخْوَانُ لُوْطٍ ۟ۙ

மற்றும் ஆத் கூட்டத்தார்களும், ஃபிர்அவ்னும், லூத்தின் சகோதரர்களும்

14

وَّاَصْحٰبُ الْاَیْكَةِ وَقَوْمُ تُبَّعٍ ؕ كُلٌّ كَذَّبَ الرُّسُلَ فَحَقَّ وَعِیْدِ ۟

மற்றும் ‘அய்கா’ வாசிகள், ‘துப்பஃவு’ சமுதாயத்தார் ஆகிய யாவரும் பொய்யெனத் தூற்றிவிட்டிருந்தார்கள். ஒவ்வொருவரும் இறைத்தூதர்களைப் பொய்யர் எனத் தூற்றினார்கள். இறுதியில், எனது எச்சரிக்கை அவர்களின் மீது உண்மையாகிவிட்டது.

15

اَفَعَیِیْنَا بِالْخَلْقِ الْاَوَّلِ ؕ بَلْ هُمْ فِیْ لَبْسٍ مِّنْ خَلْقٍ جَدِیْدٍ ۟۠

முதல் முறையாய்ப் படைப்பதற்கு நாம் இயலாதவர்களாயிருந்தோமா, என்ன? ஆனால், மீண்டும் புதிதாய்ப் படைப்பது பற்றி இவர்கள் சந்தேகத்தில் ஆழ்ந்து கிடக்கின்றார்கள்.

16

وَلَقَدْ خَلَقْنَا الْاِنْسَانَ وَنَعْلَمُ مَا تُوَسْوِسُ بِهٖ نَفْسُهٗ ۖۚ وَنَحْنُ اَقْرَبُ اِلَیْهِ مِنْ حَبْلِ الْوَرِیْدِ ۟

நாம் மனிதனைப் படைத்தோம். அவனது உள்ளத்தில் எழுகின்ற ஊசலாட்டங்களைக்கூட நாம் அறிகின்றோம். அவனது பிடரி நரம்பைவிடவும் அதிகமாக நாம் அவனிடம் நெருக்கமாயிருக்கின்றோம்.

17

اِذْ یَتَلَقَّی الْمُتَلَقِّیٰنِ عَنِ الْیَمِیْنِ وَعَنِ الشِّمَالِ قَعِیْدٌ ۟

(இவ்வாறு நாம் நேரடியாய் அறிவதுடன்) இரு எழுத்தர்கள் அவனுடைய வலப்புறமும், இடப்புறமும் அமர்ந்து ஒவ்வொன்றையும் பதிவு செய்து கொண்டிருக்கின்றார்கள்.

18

مَا یَلْفِظُ مِنْ قَوْلٍ اِلَّا لَدَیْهِ رَقِیْبٌ عَتِیْدٌ ۟

எந்தச் சொல்லையும் அவன் சொல் வதில்லை; அதனைப் பாதுகாப்பதற்குத் தயாராக உள்ள ஒரு கண்காணிப்பாளர் அவனிடத்தில் இல்லாத நிலையில்!

19

وَجَآءَتْ سَكْرَةُ الْمَوْتِ بِالْحَقِّ ؕ ذٰلِكَ مَا كُنْتَ مِنْهُ تَحِیْدُ ۟

(இன்னும் பாருங்கள்) மரணவேதனை உண்மையைக் கொண்டு வந்துவிட்டது. “எதிலிருந்து நீ விரண்டோடிக் கொண்டிருந்தாயோ அதுதான் இது!”

20

وَنُفِخَ فِی الصُّوْرِ ؕ ذٰلِكَ یَوْمُ الْوَعِیْدِ ۟

மேலும், எக்காளம் ஊதப்பட்டது. “உனக்கு எச்சரிக்கப்பட்டு வந்தநாள் இதுதான்!”

21

وَجَآءَتْ كُلُّ نَفْسٍ مَّعَهَا سَآىِٕقٌ وَّشَهِیْدٌ ۟

ஒவ்வொரு மனிதனும் வந்து சேர்ந்து விட்டான்; அவனுடன் விரட்டிக்கொண்டு வருபவர் ஒருவரும் சாட்சியளிப்பவர் ஒருவரும் இருப்பார்.

22

لَقَدْ كُنْتَ فِیْ غَفْلَةٍ مِّنْ هٰذَا فَكَشَفْنَا عَنْكَ غِطَآءَكَ فَبَصَرُكَ الْیَوْمَ حَدِیْدٌ ۟

இந்த விஷயத்தைப் பற்றி நீ அலட்சியத்தில் இருந்தாய்! உனக்கு முன்பாக இருந்த திரையை நாம் அகற்றிவிட்டோம். மேலும், இன்று உனது பார்வை நன்கு கூர்மையாய் உள்ளது.

23

وَقَالَ قَرِیْنُهٗ هٰذَا مَا لَدَیَّ عَتِیْدٌ ۟ؕ

அவனுடன் இருந்தவர் பணிந்து கூறினார்: “என் பொறுப்பில் இருந்தவன், இதோ ஆஜராகி இருக்கின்றான்!”

24

اَلْقِیَا فِیْ جَهَنَّمَ كُلَّ كَفَّارٍ عَنِیْدٍ ۟ۙ

(கட்டளையிடப்பட்டது:) “வீசி எறியுங்கள் நரகத்தில், ஒவ்வொரு நிராகரிப்பாளனையும்! அவனோ, சத்தியத்துடன் பகைமை பாராட்டுபவனாகவும்,

25

مَّنَّاعٍ لِّلْخَیْرِ مُعْتَدٍ مُّرِیْبِ ۟ۙ

நன்மையைத் தடுப்பவனாகவும், வரம்புமீறி நடப்பவனாகவும், சந்தேகத்தில் உழல்பவனாகவும்,

26

لَّذِیْ جَعَلَ مَعَ اللّٰهِ اِلٰهًا اٰخَرَ فَاَلْقِیٰهُ فِی الْعَذَابِ الشَّدِیْدِ ۟

அல்லாஹ்வுடன் இதர கடவுளை ஏற்படுத்துபவனாகவும் இருந்தான். எனவே, வீசுங்கள் அவனை, கடுமையான வேதனையில்!”

27

قَالَ قَرِیْنُهٗ رَبَّنَا مَاۤ اَطْغَیْتُهٗ وَلٰكِنْ كَانَ فِیْ ضَلٰلٍۢ بَعِیْدٍ ۟

அவனுடைய தோழன் கூறினான்: “எங்கள் இறைவா! இவனை வரம்புமீறக் கூடியவனாக நான் ஆக்கவில்லை. ஆயினும், அவனேதான் வழிகேட்டில் எல்லையைக் கடந்து விட்டிருந்தான்.”

28

قَالَ لَا تَخْتَصِمُوْا لَدَیَّ وَقَدْ قَدَّمْتُ اِلَیْكُمْ بِالْوَعِیْدِ ۟

(பதில் கூறப்பட்டது:) “என் முன்னிலையில் தர்க்கம் செய்யாதீர்கள். தீயகதியைப் பற்றி முன்பே நான் உங்களுக்கு எச்சரிக்கை செய்திருந்தேன்.

29

مَا یُبَدَّلُ الْقَوْلُ لَدَیَّ وَمَاۤ اَنَا بِظَلَّامٍ لِّلْعَبِیْدِ ۟۠

என்னிடத்தில் தீர்ப்பு மாற்றப்படுவதில்லை. மேலும், நான் என் அடிமைகள் மீது கொடுமை இழைப்பவன் அல்லன்.”

30

یَوْمَ نَقُوْلُ لِجَهَنَّمَ هَلِ امْتَلَاْتِ وَتَقُوْلُ هَلْ مِنْ مَّزِیْدٍ ۟

அந்த நாளில் நாம் நரகத்திடம், “உனக்கு நிரம்பிவிட்டதா?” என்று கேட்போம். அது கூறும், “இன்னும் அதிகம் இருக்கிறதா?” என்று!

31

وَاُزْلِفَتِ الْجَنَّةُ لِلْمُتَّقِیْنَ غَیْرَ بَعِیْدٍ ۟

மேலும், சுவனம் இறையச்சம் கொண்டவர்களின் அருகில் கொண்டுவரப்படும். சிறிதளவு தூரம்கூட இருக்காது!

32

هٰذَا مَا تُوْعَدُوْنَ لِكُلِّ اَوَّابٍ حَفِیْظٍ ۟ۚ

(கூறப்படும்:) “இதுதான் உங்களுக்கு வாக்களிக்கப்பட்டு வந்தது. அதிகம் மீளக்கூடியவராகவும் மிகவும் பேணுதலுடன் வாழக்கூடியவராகவும் இருந்த ஒவ்வொருவருக்கும் உரியது.

33

مَنْ خَشِیَ الرَّحْمٰنَ بِالْغَیْبِ وَجَآءَ بِقَلْبٍ مُّنِیْبِ ۟ۙ

அவரோ பார்க்காமலேயே கருணைமிக்க இறைவனுக்கு அஞ்சிக் கொண்டிருந்தார். மேலும், அவன் பக்கம் திரும்பக்கூடிய உள்ளத்துடனும் வந்திருக்கின்றார்.

34

دْخُلُوْهَا بِسَلٰمٍ ؕ ذٰلِكَ یَوْمُ الْخُلُوْدِ ۟

நுழைந்துவிடுங்கள் சுவனத்தில், முழு அமைதியுடன்! அந்த நாள் நிரந்தர வாழ்வுக்குரிய நாளாகும்.

35

لَهُمْ مَّا یَشَآءُوْنَ فِیْهَا وَلَدَیْنَا مَزِیْدٌ ۟

அங்கு அவர்களுக்கு அவர்கள் விரும்பும் அனைத்தும் கிடைக்கும். மேலும், நம்மிடம் இதனைவிட அதிகமாக இன்னும் பலவும் (அவர்களுக்காக) இருக்கின்றன.

36

وَكَمْ اَهْلَكْنَا قَبْلَهُمْ مِّنْ قَرْنٍ هُمْ اَشَدُّ مِنْهُمْ بَطْشًا فَنَقَّبُوْا فِی الْبِلَادِ ؕ هَلْ مِنْ مَّحِیْصٍ ۟

நாம் இவர்களுக்கு முன் இவர்களை விட அதிக வலிமை உடைய எத்தனையோ சமுதாயங்களை அழித்து விட்டிருக்கின்றோம். மேலும் அவர்கள் உலக நாடுகளில் (அக்கிரமம் செய்து கொண்டு) சுற்றித் திரிந்தார்கள். இருந்தும் அவர்களால் ஏதேனும் புகலிடத்தைப் பெறமுடிந்ததா, என்ன?

37

اِنَّ فِیْ ذٰلِكَ لَذِكْرٰی لِمَنْ كَانَ لَهٗ قَلْبٌ اَوْ اَلْقَی السَّمْعَ وَهُوَ شَهِیْدٌ ۟

இதயமுள்ள அல்லது கவனத்தோடு செவிமடுக்கின்ற ஒவ்வொரு மனிதனுக்கும் திண்ணமாக, இந்த வரலாற்றில் படிப்பினையூட்டும் பாடம் இருக்கின்றது.

38

وَلَقَدْ خَلَقْنَا السَّمٰوٰتِ وَالْاَرْضَ وَمَا بَیْنَهُمَا فِیْ سِتَّةِ اَیَّامٍ ۖۗ وَّمَا مَسَّنَا مِنْ لُّغُوْبٍ ۟

நாம் வானங்களையும் பூமியையும் அவற்றிற்கிடையேயுள்ள அனைத்தையும் ஆறு நாட்களில் படைத்தோம். நமக்குக் களைப்பேதும் ஏற்படவில்லை.

39

فَاصْبِرْ عَلٰی مَا یَقُوْلُوْنَ وَسَبِّحْ بِحَمْدِ رَبِّكَ قَبْلَ طُلُوْعِ الشَّمْسِ وَقَبْلَ الْغُرُوْبِ ۟ۚ

(நபியே!) இவர்கள் புனைந்துரைக்கும் பேச்சுகள் குறித்து பொறுமையை மேற்கொள்ளும். உம் இறைவனைப் புகழ்வதுடன் அவனைத் துதிப்பீராக; சூரியன் உதயமாகும் முன்னரும், மறையும் முன்னரும்! மேலும், இரவு நேரத்திலும்!

40

وَمِنَ الَّیْلِ فَسَبِّحْهُ وَاَدْبَارَ السُّجُوْدِ ۟

அவனைத் துதிப்பீராக; சிரம்பணிந்து வணங்கி முடிந்த பின்பும் கூட!

41

وَاسْتَمِعْ یَوْمَ یُنَادِ الْمُنَادِ مِنْ مَّكَانٍ قَرِیْبٍ ۟ۙ

மேலும், கேளுங்கள். எந்த நாளில், அழைப்பவர் (ஒவ் வொரு மனிதருக்கும்) அருகிலிருந்து அழைப்பாரோ

42

یَّوْمَ یَسْمَعُوْنَ الصَّیْحَةَ بِالْحَقِّ ؕ ذٰلِكَ یَوْمُ الْخُرُوْجِ ۟

எந்நாளில் மக்கள் அனைவரும் ஒன்று திரட்டி எழுப்புவதன் ஓசையை மிகச் சரியாகச் செவியுற்றுக் கொண்டிருப்பார்களோ அந்நாள்தான் பூமியிலிருந்து இறந்தவர்கள் வெளிப்படும் நாளாகும்.

43

اِنَّا نَحْنُ نُحْیٖ وَنُمِیْتُ وَاِلَیْنَا الْمَصِیْرُ ۟ۙ

திண்ணமாக, நாமே வாழ்வை அருளுகின்றோம். நாமே மரணத்தை அளிக்கின்றோம். மேலும், அந்த நாளில் அனைவரும் நம் பக்கமே திரும்பி வர வேண்டியிருக்கிறது.

44

یَوْمَ تَشَقَّقُ الْاَرْضُ عَنْهُمْ سِرَاعًا ؕ ذٰلِكَ حَشْرٌ عَلَیْنَا یَسِیْرٌ ۟

அன்று பூமி வெடிக்கும்; மக்கள் (அதனுள்ளிருந்து வெளிப்பட்டு) விரைவாக ஓடிக்கொண்டிருப்பார்கள். இவ்வாறு எழச்செய்வது நமக்கு மிக எளிதானதாகும்.

45

نَحْنُ اَعْلَمُ بِمَا یَقُوْلُوْنَ وَمَاۤ اَنْتَ عَلَیْهِمْ بِجَبَّارٍ ۫ فَذَكِّرْ بِالْقُرْاٰنِ مَنْ یَّخَافُ وَعِیْدِ ۟۠

(நபியே!) இந்த மக்கள் பேசும் பேச்சுகளை நாம் நன்கு அறிகின்றோம். இவர்களை நிர்ப்பந்தப்படுத்தி ஏற்கச் செய்வது உமது பணியல்ல. என் எச்சரிக்கைக்கு அஞ்சுகின்ற ஒவ்வொருவருக்கும் நீர் இந்தக் குர்ஆனைக் கொண்டு அறிவுரை கூறுவீராக!

PreviousAl-HujuratNextAdh-Dhariyat

0:00–:––