All Surahs

Surah 25

الفرقان

Al-Furqan

25. ஸூரத்துல் ஃபுர்ஃகான் (பிரித்தறிவித்தல்)

77 verses

بِسْمِ اللّٰهِ الرَّحْمٰنِ الرَّحِیْمِ

1

تَبٰرَكَ الَّذِیْ نَزَّلَ الْفُرْقَانَ عَلٰی عَبْدِهٖ لِیَكُوْنَ لِلْعٰلَمِیْنَ نَذِیْرَا ۟ۙ

பெரும்பாக்கியம் நிறைந்தவனாக இருக்கின்றான், தன்னுடைய அடியார் மீது (சத்தியத்தையும், அசத்தியத்தையும் பிரித்துக் காட்டும்) இந்த ஃபுர்கானை (அதாவது குர்ஆனை) இறக்கி வைத்தவன். அகிலத்தார் அனைவருக்கும் (அவர்) எச்சரிக்கை செய்யக் கூடியவராக திகழ வேண்டும் என்பதற்காக!

2

لَّذِیْ لَهٗ مُلْكُ السَّمٰوٰتِ وَالْاَرْضِ وَلَمْ یَتَّخِذْ وَلَدًا وَّلَمْ یَكُنْ لَّهٗ شَرِیْكٌ فِی الْمُلْكِ وَخَلَقَ كُلَّ شَیْءٍ فَقَدَّرَهٗ تَقْدِیْرًا ۟

அவன் எத்தகையவனெனில், வானங்கள் மற்றும் பூமியின் ஆட்சிக்கு அவனே அதிபதி. மேலும், அவன் யாரையும் மகனாக ஏற்படுத்திக் கொள்ளவில்லை. ஆட்சியில் அவனுடன் பங்கு உடையோர் எவரும் இல்லை! மேலும், அவன் ஒவ்வொரு பொருளையும் படைத்து, பிறகு அவை ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு விதியை நிர்ணயித்தான்.

3

وَاتَّخَذُوْا مِنْ دُوْنِهٖۤ اٰلِهَةً لَّا یَخْلُقُوْنَ شَیْـًٔا وَّهُمْ یُخْلَقُوْنَ وَلَا یَمْلِكُوْنَ لِاَنْفُسِهِمْ ضَرًّا وَّلَا نَفْعًا وَّلَا یَمْلِكُوْنَ مَوْتًا وَّلَا حَیٰوةً وَّلَا نُشُوْرًا ۟

ஆனால், மக்கள் அவனை விடுத்து எத்தகைய கடவுள்களை ஏற்படுத்திக் கொண்டார்கள் என்றால், அந்தக் கடவுள்கள் எந்தப் பொருளையும் படைப்பதில்லை ஏன், அவர்களே படைக்கப்பட்டவர்களாக இருக்கின்றார்கள். மேலும், தங்களுக்குக்கூட எத்தகைய இலாபத்தையும் நஷ்டத்தையும் அளிக்கும் அதிகாரத்தை அவர்கள் பெற்றிருக்கவில்லை; மேலும், மரணிக்கச் செய்யவும், உயிர் கொடுக்கவும் (இறந்தவர்களை) மீண்டும் எழுப்பவும் அவர்களால் இயலாது!

4

وَقَالَ الَّذِیْنَ كَفَرُوْۤا اِنْ هٰذَاۤ اِلَّاۤ اِفْكُ فْتَرٰىهُ وَاَعَانَهٗ عَلَیْهِ قَوْمٌ اٰخَرُوْنَ ۛۚ فَقَدْ جَآءُوْ ظُلْمًا وَّزُوْرًا ۟ۚۛ

எவர்கள் (நபியின் கூற்றை) ஏற்றுக்கொள்ள மறுத்தார்களோ அவர்கள் கூறுகின்றார்கள்: “இந்த ஃபுர்கான் புனைந்துரைக்கப்பட்ட ஒன்றேயாகும்; இதனை இவரே இயற்றிக்கொண்டார். மேலும், (இது விஷயத்தில்) வேறு சில மனிதர்கள் இவருக்கு உதவியுள்ளார்கள்!” இத்தகைய பெரும் கொடுமை புரியும் அளவிற்கும், கடும் பொய்யைக் கூறும் அளவிற்கும் அவர்கள் இறங்கி வந்துவிட்டார்கள்.

5

وَقَالُوْۤا اَسَاطِیْرُ الْاَوَّلِیْنَ اكْتَتَبَهَا فَهِیَ تُمْلٰی عَلَیْهِ بُكْرَةً وَّاَصِیْلًا ۟

மேலும், இவர்கள் கூறுகின்றார்கள்: “இவை பழங்காலத்து மக்களால் எழுதப்பட்டவையாகும். இவர் அவற்றை நகல் எடுக்கச் செய்கின்றார். அவை, காலையிலும், மாலையிலும் இவருக்கு ஓதிக் காட்டப்படுகின்றன.”

6

قُلْ اَنْزَلَهُ الَّذِیْ یَعْلَمُ السِّرَّ فِی السَّمٰوٰتِ وَالْاَرْضِ ؕ اِنَّهٗ كَانَ غَفُوْرًا رَّحِیْمًا ۟

(நபியே!) இவர்களிடம் நீர் கூறும்: “பூமி மற்றும் வானங்களில் உள்ள இரகசியங்களை அறிகின்றவன்தான் இதனை இறக்கி அருளினான். திண்ணமாக, அவன் அதிகம் மன்னிப்பவனாகவும் கிருபை செய்பவனாகவும் இருக்கின்றான்.”

7

وَقَالُوْا مَالِ هٰذَا الرَّسُوْلِ یَاْكُلُ الطَّعَامَ وَیَمْشِیْ فِی الْاَسْوَاقِ ؕ لَوْلَاۤ اُنْزِلَ اِلَیْهِ مَلَكٌ فَیَكُوْنَ مَعَهٗ نَذِیْرًا ۟ۙ

மேலும், கூறுகின்றார்கள்: “இவர் எத்தகைய இறைத்தூதர்! உணவு உண்ணுகிறாரே; கடை வீதிகளில் நடமாடுகின்றாரே! இவரிடம் ஒரு வானவர் அனுப்பப்பட்டிருக்கக் கூடாதா? அவர், இவருடன் சேர்ந்து (ஏற்றுக் கொள்ளாதவர்களை) எச்சரிக்கை செய்வதற்காக!

8

اَوْ یُلْقٰۤی اِلَیْهِ كَنْزٌ اَوْ تَكُوْنُ لَهٗ جَنَّةٌ یَّاْكُلُ مِنْهَا ؕ وَقَالَ الظّٰلِمُوْنَ اِنْ تَتَّبِعُوْنَ اِلَّا رَجُلًا مَّسْحُوْرًا ۟

அல்லது அவருக்கு ஏதேனுமொரு கருவூலமாவது இறக்கப்பட்டிருக்கக் கூடாதா? அல்லது (நிம்மதியாக) உணவு பெறுவதற்குரிய ஏதேனும் தோட்டமாயினும் இவருக்கு இருந்திருக்கக்கூடாதா?” மேலும், இவ்வக்கிரமக்காரர்கள் கூறுகின்றார்கள்: “சூனியம் செய்யப்பட்ட ஒரு மனிதரின் பின்னால்தான் நீங்கள் சென்று கொண்டிருக்கின்றீர்கள்!”

9

اُنْظُرْ كَیْفَ ضَرَبُوْا لَكَ الْاَمْثَالَ فَضَلُّوْا فَلَا یَسْتَطِیْعُوْنَ سَبِیْلًا ۟۠

பாருங்கள்! உம் விஷயத்தில் எத்தகைய விந்தையான வாதங்களை இவர்கள் உம் முன் எடுத்துரைக்கின்றார்கள்! எந்த அளவுக்கு இவர்கள் வழிதவறிப் போய்விட்டார்களெனில் உறுதியாக நிற்பதற்கான எந்த விஷயமும் அவர்களுக்குப் புலப்படுவதில்லை.

10

تَبٰرَكَ الَّذِیْۤ اِنْ شَآءَ جَعَلَ لَكَ خَیْرًا مِّنْ ذٰلِكَ جَنّٰتٍ تَجْرِیْ مِنْ تَحْتِهَا الْاَنْهٰرُ ۙ وَیَجْعَلْ لَّكَ قُصُوْرًا ۟

பெரும் பாக்கியம் நிறைந்தவனாவான் அவன். தான் நாடினால், இவர்கள் சொன்னவற்றையெல்லாம் விட மிகச் சிறந்ததை உமக்கு வழங்கிட முடியும் (ஒன்றல்ல) கீழே ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும் பல தோப்புகளையும், பெரும் பெரும் மாளிகைகளையும் (அவனால் வழங்கிட முடியும்).

11

بَلْ كَذَّبُوْا بِالسَّاعَةِ ۫ وَاَعْتَدْنَا لِمَنْ كَذَّبَ بِالسَّاعَةِ سَعِیْرًا ۟ۚ

உண்மை யாதெனில், இவர்கள் அந்த நேரத்தைப் பொய்யென்று வாதாடினர். யார் அந்த நேரத்தைப் பொய்யென்று வாதாடினார்களோ அவர்களுக்குக் கொழுந்து விட்டெரியும் நெருப்பை நாம் தயார் செய்து வைத்திருக்கின்றோம்.

12

اِذَا رَاَتْهُمْ مِّنْ مَّكَانٍ بَعِیْدٍ سَمِعُوْا لَهَا تَغَیُّظًا وَّزَفِیْرًا ۟

அது தொலைவான இடத்திலிருந்து இவர்களைப் பார்க்குமாயின், அதன் ஆவேசம் மற்றும் சீற்றத்தின் இரைச்சல்களை இவர்கள் கேட்பார்கள்.

13

وَاِذَاۤ اُلْقُوْا مِنْهَا مَكَانًا ضَیِّقًا مُّقَرَّنِیْنَ دَعَوْا هُنَالِكَ ثُبُوْرًا ۟ؕ

மேலும், கை, கால்கள் விலங்கிடப்பட்டு அதன் நெருக்கடியான ஓர் இடத்தில் அவர்கள் வீசி யெறியப்படுவார்கள். அங்கே அவர்கள் மரணத்தை அழைக்கத் தொடங்குவார்கள்.

14

لَا تَدْعُوا الْیَوْمَ ثُبُوْرًا وَّاحِدًا وَّادْعُوْا ثُبُوْرًا كَثِیْرًا ۟

(அப்போது அவர்களிடம் கூறப்படும்:) “இன்று ஒரு மரணத்தையல்ல, பல மரணங்களை அழையுங்கள்!”

15

قُلْ اَذٰلِكَ خَیْرٌ اَمْ جَنَّةُ الْخُلْدِ الَّتِیْ وُعِدَ الْمُتَّقُوْنَ ؕ كَانَتْ لَهُمْ جَزَآءً وَّمَصِیْرًا ۟

இவர்களிடம் கேளுங்கள்: “இந்த முடிவு சிறந்ததா? அல்லது இறையச்சம் கொண்ட தூய்மையாளர்களுக்கு வாக்களிக்கப்பட்டுள்ள நிலையான சுவனம் சிறந்ததா? அது எத்தகையது எனில், அவர்களின் (செயல்களுக்குக்) கூலியாகவும் (அவர்களுடைய பயணத்தின்) இறுதி இடமாகவும் இருக்கும்.

16

لَهُمْ فِیْهَا مَا یَشَآءُوْنَ خٰلِدِیْنَ ؕ كَانَ عَلٰی رَبِّكَ وَعْدًا مَّسْـُٔوْلًا ۟

அதில் அவர்களுடைய விருப்பங்கள் எல்லாம் நிறைவேறும். அதில் அவர்கள் என்றென்றும் தங்கியிருப்பார்கள். இதனை வழங்குவது உம் இறைவனின் பொறுப்பில் உள்ள நிறைவேற்றப்பட வேண்டிய ஒரு வாக்குறுதியாகும்.

17

وَیَوْمَ یَحْشُرُهُمْ وَمَا یَعْبُدُوْنَ مِنْ دُوْنِ اللّٰهِ فَیَقُوْلُ ءَاَنْتُمْ اَضْلَلْتُمْ عِبَادِیْ هٰۤؤُلَآءِ اَمْ هُمْ ضَلُّوا السَّبِیْلَ ۟ؕ

மேலும், அந்நாளிலேயே (உம் இறைவன்) இவர்களையும் ஒன்று திரட்டுவான். (இன்று) அல்லாஹ்வை விடுத்து இவர்கள் வணங்கிக் கொண்டிருக்கும் தெய்வங்களையும் கூப்பிடுவான். பிறகு, அவன் அவர்களிடம் கேட்பான்: “என்னுடைய இந்த அடிமைகளை நீங்கள்தாம் வழிகெடுத்தீர்களா? அல்லது அவர்களே வழி கெட்டுப் போனார்களா?”

18

قَالُوْا سُبْحٰنَكَ مَا كَانَ یَنْۢبَغِیْ لَنَاۤ اَنْ نَّتَّخِذَ مِنْ دُوْنِكَ مِنْ اَوْلِیَآءَ وَلٰكِنْ مَّتَّعْتَهُمْ وَاٰبَآءَهُمْ حَتّٰی نَسُوا الذِّكْرَ ۚ وَكَانُوْا قَوْمًا بُوْرًا ۟

அதற்கு அவர்கள் பணிந்து கூறுவார்கள்: “நீ தூய்மையானவன்! உன்னைத் தவிர வேறு யாரையும் எங்களுடைய பாதுகாவலர்களாக்கிக் கொள்வதற்கு எங்களுக்குத் துணிவு ஏது? ஆயினும், நீ இவர்களுக்கும் இவர்களுடைய மூதாதையர்களுக்கும் வாழ்க்கை வசதிகளை தாராளமாக வழங்கியிருந்தாய்; இறுதியில் இவர்கள் இந்தப் படிப்பினையை மறந்து விட்டனர். கடும் நாசத்திற்குரியவராகிவிட்டனர்!”

19

فَقَدْ كَذَّبُوْكُمْ بِمَا تَقُوْلُوْنَ ۙ فَمَا تَسْتَطِیْعُوْنَ صَرْفًا وَّلَا نَصْرًا ۚ وَمَنْ یَّظْلِمْ مِّنْكُمْ نُذِقْهُ عَذَابًا كَبِیْرًا ۟

இவ்வாறு அவர்கள் (உங்களுடைய தெய்வங்கள்) பொய்யெனக் கூறிவிடுவார்கள், இன்று நீங்கள் வாதித்துக் கொண்டிருக்கும் உங்களுடைய விஷயங்களை! பிறகு (உங்களுக்கு ஏற்படும் நாசத்தை) உங்களால் தடுக்கவும் இயலாது; எங்கிருந்தும் உதவியைப் பெறவும் இயலாது. மேலும், உங்களில் எவரேனும் கொடுமை புரிந்தால் அவருக்குக் கடுமையான வேதனையை நாம் சுவைக்கக் கொடுப்போம்.

20

وَمَاۤ اَرْسَلْنَا قَبْلَكَ مِنَ الْمُرْسَلِیْنَ اِلَّاۤ اِنَّهُمْ لَیَاْكُلُوْنَ الطَّعَامَ وَیَمْشُوْنَ فِی الْاَسْوَاقِ ؕ وَجَعَلْنَا بَعْضَكُمْ لِبَعْضٍ فِتْنَةً ؕ اَتَصْبِرُوْنَ ۚ وَكَانَ رَبُّكَ بَصِیْرًا ۟۠

மேலும் (நபியே!) உமக்கு முன்பு நாம் அனுப்பி வைத்திருந்த தூதர்கள் அனைவரும் உணவு உண்பவர்களாயும் கடைவீதிகளில் நடமாடுபவர்களாயும்தாம் இருந்தார்கள். உண்மையில் நாம் உங்களில் ஒரு சிலரை மற்றும் சிலருக்குச் சோதனையாக ஆக்கிவைத்துள்ளோம். நீங்கள் பொறுமையை மேற்கொள்வீர்களா? உம் இறைவன் அனைத்தையும் பார்ப்பவனாய் இருக்கின்றான்.

21

وَقَالَ الَّذِیْنَ لَا یَرْجُوْنَ لِقَآءَنَا لَوْلَاۤ اُنْزِلَ عَلَیْنَا الْمَلٰٓىِٕكَةُ اَوْ نَرٰی رَبَّنَا ؕ لَقَدِ اسْتَكْبَرُوْا فِیْۤ اَنْفُسِهِمْ وَعَتَوْ عُتُوًّا كَبِیْرًا ۟

எவர்கள் நம் திருமுன் வருவதைக் குறித்து சற்றும் கவலை கொள்ளாமல் இருக்கின்றார்களோ அவர்கள் கூறுகின்றார்கள்: “எங்களிடம் வானவர்கள் ஏன் அனுப்பப்படவில்லை? அல்லது எங்கள் இறைவனை நாங்கள் ஏன் காணுவதில்லை?” இவர்கள் தங்களையே பெரிதாக எண்ணி ஆணவம் கொண்டு திரிகின்றார்கள். மேலும், இவர்கள் தங்கள் அக்கிரமத்தில் பெரிதும் வரம்பு மீறிச் சென்றுவிட்டார்கள்.

22

یَوْمَ یَرَوْنَ الْمَلٰٓىِٕكَةَ لَا بُشْرٰی یَوْمَىِٕذٍ لِّلْمُجْرِمِیْنَ وَیَقُوْلُوْنَ حِجْرًا مَّحْجُوْرًا ۟

எந்த நாளில் இவர்கள் வானவர்களைக் காண்பார்களோ அந்த நாள் குற்றவாளிகளுக்கு நற்செய்திக்குரிய நாளாக இராது. (நற்பாக்கியம்) முற்றாக (உங்களுக்கு) தடுக்கப்பட்டு விட்டது என்று அந்த மலக்குகள் கூறுவார்கள்.

23

وَقَدِمْنَاۤ اِلٰی مَا عَمِلُوْا مِنْ عَمَلٍ فَجَعَلْنٰهُ هَبَآءً مَّنْثُوْرًا ۟

மேலும், அவர்கள் செய்த செயல்கள் எதுவாக இருந்தாலும் அதைப் புழுதியாக்கிப் பறக்க விட்டுவிடுவோம்.

24

اَصْحٰبُ الْجَنَّةِ یَوْمَىِٕذٍ خَیْرٌ مُّسْتَقَرًّا وَّاَحْسَنُ مَقِیْلًا ۟

ஆனால், எவர்கள் சுவனத்துக்குத் தகுதியானவர்களோ அவர்கள்தாம் அந்நாளில் சிறந்த இடத்தில் தங்குவார்கள். மதிய வேளையைக் கழிப்பதற்கு மிக அழகிய இடத்தைப் பெறுவார்கள்.

25

وَیَوْمَ تَشَقَّقُ السَّمَآءُ بِالْغَمَامِ وَنُزِّلَ الْمَلٰٓىِٕكَةُ تَنْزِیْلًا ۟

அந்நாளில் வானத்தைப் பிளந்துகொண்டு ஒரு மேகம் வெளிப்படும். மேலும், வானவர்கள் கூட்டங்கூட்டமாய் இறக்கி வைக்கப்படுவார்கள்.

26

اَلْمُلْكُ یَوْمَىِٕذِ لْحَقُّ لِلرَّحْمٰنِ ؕ وَكَانَ یَوْمًا عَلَی الْكٰفِرِیْنَ عَسِیْرًا ۟

அந்நாளில் உண்மையான ஆட்சியதிகாரம், ரஹ்மானுக்கே கருணைமிக்க இறைவனுக்கே உரியதாக இருக்கும். மேலும், அது இறைநிராகரிப்பாளர்களுக்கு மிகக் கடினமான நாளாக இருக்கும்.

27

وَیَوْمَ یَعَضُّ الظَّالِمُ عَلٰی یَدَیْهِ یَقُوْلُ یٰلَیْتَنِی اتَّخَذْتُ مَعَ الرَّسُوْلِ سَبِیْلًا ۟

மேலும், அந்நாளில் கொடுமை புரிந்த மனிதன் தன்னுடைய கைகளைக் கடித்தபடிக் கூறுவான்: “அந்தோ! நான் இறைத்தூதருக்குத் துணைபுரிந்திருக்கக் கூடாதா?

28

یٰوَیْلَتٰی لَیْتَنِیْ لَمْ اَتَّخِذْ فُلَانًا خَلِیْلًا ۟

ஐயகோ! எனது துர்பாக்கியமே! நான் இன்ன மனிதனை நண்பனாக்காமல் இருந்திருக்க வேண்டுமே!

29

لَقَدْ اَضَلَّنِیْ عَنِ الذِّكْرِ بَعْدَ اِذْ جَآءَنِیْ ؕ وَكَانَ الشَّیْطٰنُ لِلْاِنْسَانِ خَذُوْلًا ۟

நான் அவனுடைய வழிகேட்டுக்குப் பலியாகி என்னிடம் வந்த அறிவுரையை ஏற்காமல் இருந்துவிட்டேனே! ஷைத்தான் மனிதனை மிகவும் ஏமாற்றக்கூடியவன் என்று நிரூபணமாகிவிட்டது.”

30

وَقَالَ الرَّسُوْلُ یٰرَبِّ اِنَّ قَوْمِی اتَّخَذُوْا هٰذَا الْقُرْاٰنَ مَهْجُوْرًا ۟

மேலும், இறைத்தூதர் கூறுவார்: “என் இறைவா! என் சமூகத்தைச் சார்ந்த மக்கள் இந்தக் குர்ஆனை நகைப்புக்குரியதாக்கிக் கொண்டிருந்தார்கள்.”

31

وَكَذٰلِكَ جَعَلْنَا لِكُلِّ نَبِیٍّ عَدُوًّا مِّنَ الْمُجْرِمِیْنَ ؕ وَكَفٰی بِرَبِّكَ هَادِیًا وَّنَصِیْرًا ۟

(நபியே!) இவ்வாறே நாம் குற்றவாளிகளை இறைத்தூதர் ஒவ்வொருவருக்கும் பகைவர்களாக்கினோம். மேலும், வழிகாட்டுவதற்கும், உதவி புரிவதற்கும் உங்கள் இறைவனே உங்களுக்குப் போதுமானவன்.

32

وَقَالَ الَّذِیْنَ كَفَرُوْا لَوْلَا نُزِّلَ عَلَیْهِ الْقُرْاٰنُ جُمْلَةً وَّاحِدَةً ۛۚ كَذٰلِكَ ۛۚ لِنُثَبِّتَ بِهٖ فُؤَادَكَ وَرَتَّلْنٰهُ تَرْتِیْلًا ۟

மேலும், இறைநிராகரிப்பாளர்கள் கேட்கின்றார்கள்: “இவர் மீது குர்ஆன் முழுவதும் ஒரே நேரத்தில் ஏன் இறக்கி வைக்கப்படவில்லை? ஆம்! இவ்வாறு ஏன் செய்யப்பட்டிருக்கின்றது என்றால், இதனை நல்ல முறையில் உமது இதயத்தில் நாம் பதிய வைக்க வேண்டும் என்பதற்காகத்தான்! மேலும் (இதே நோக்கத்திற்காகத்தான்) இதனை நாம் ஒரு குறிப்பிட்ட வரிசைக் கிரமத்துடன் தனித்தனிப் பகுதிகளாக்கினோம்.

33

وَلَا یَاْتُوْنَكَ بِمَثَلٍ اِلَّا جِئْنٰكَ بِالْحَقِّ وَاَحْسَنَ تَفْسِیْرًا ۟ؕ

மேலும் (இதில் இந்த விவேகம் இருக்கின்றது:) அவர்கள் உம்மிடம் விநோதமான விஷயத்தை (அல்லது வியப்புக்குரிய கேள்வியை)க் கேட்டு வந்த போதெல்லாம் அதற்குரிய சரியான விடையை (உரிய நேரத்தில்) உமக்கு நாம் அளித்துள்ளோம். மேலும், மிக அழகான முறையில் விஷயத்தை விளக்கியுள்ளோம்.

34

اَلَّذِیْنَ یُحْشَرُوْنَ عَلٰی وُجُوْهِهِمْ اِلٰی جَهَنَّمَ ۙ اُولٰٓىِٕكَ شَرٌّ مَّكَانًا وَّاَضَلُّ سَبِیْلًا ۟۠

நரகத்தை நோக்கி எவர்கள் முகம் குப்புற இழுத்துச் செல்லப்படவிருக்கின்றார்களோ அவர்களின் தங்குமிடம் மிகவும் மோசமானதாகும்; அவர்களின் வழியும் மிகமிகத் தவறானதாகும்.

35

وَلَقَدْ اٰتَیْنَا مُوْسَی الْكِتٰبَ وَجَعَلْنَا مَعَهٗۤ اَخَاهُ هٰرُوْنَ وَزِیْرًا ۟ۚۖ

மேலும், நாம் மூஸாவுக்கு வேதத்தை அருளினோம். மேலும், அவருடன் அவருடைய சகோதரர் ஹாரூனை உதவி யாளராய் ஆக்கினோம்.

36

فَقُلْنَا اذْهَبَاۤ اِلَی الْقَوْمِ الَّذِیْنَ كَذَّبُوْا بِاٰیٰتِنَا ؕ فَدَمَّرْنٰهُمْ تَدْمِیْرًا ۟ؕ

அவ்விருவர்க்கும் கூறினோம்: “நமது சான்றுகளைப் பொய்யென வாதிட்டுக் கொண்டிருக்கின்ற சமூகத்தாரிடம் செல்லுங்கள்!” இறுதியில், அச்சமூகத்தை நாம் அழித்தொழித்துவிட்டோம்.

37

وَقَوْمَ نُوْحٍ لَّمَّا كَذَّبُوا الرُّسُلَ اَغْرَقْنٰهُمْ وَجَعَلْنٰهُمْ لِلنَّاسِ اٰیَةً ؕ وَاَعْتَدْنَا لِلظّٰلِمِیْنَ عَذَابًا اَلِیْمًا ۟ۚۖ

இதே கதிதான் நூஹ் உடைய சமூகத்தார்க்கும் ஏற்பட்டது; தூதர்களைப் பொய்யர்களென்று அவர்கள் தூற்றியபோது! அவர்களை நாம் மூழ்கடித்தோம். மேலும் (அனைத்துலக) மக்களுக்கும் ஒரு படிப்பினை தரும் சான்றாக அவர்களை ஆக்கினோம். மேலும், அந்தக் கொடுமைக்காரர்களுக்கு துன்புறுத்தும் வேதனையை நாம் தயார் செய்து வைத்திருக்கின்றோம்.

38

وَّعَادًا وَّثَمُوْدَاۡ وَاَصْحٰبَ الرَّسِّ وَقُرُوْنًا بَیْنَ ذٰلِكَ كَثِیْرًا ۟

இதேபோன்று ஆத், ஸமூத் சமூகத்தினரும் ‘ரஸ்’ சமூகத்தினரும், மேலும், அவர்களுக்கு இடைப்பட்ட நூற்றாண்டுகளில் வாழ்ந்த அநேக மக்களும் அழித்தொழிக்கப்பட்டனர்.

39

وَكُلًّا ضَرَبْنَا لَهُ الْاَمْثَالَ ؗ وَكُلًّا تَبَّرْنَا تَتْبِیْرًا ۟

மேலும், அவர்களில் ஒவ்வொருவருக்கும் (முன்னர் அழிந்து போனவர்களின்) உதாரணங்களைக் கூறி விளக்கினோம். இறுதியில், ஒவ்வொருவரையும் அடியோடு அழித்துவிட்டோம்.

40

وَلَقَدْ اَتَوْا عَلَی الْقَرْیَةِ الَّتِیْۤ اُمْطِرَتْ مَطَرَ السَّوْءِ ؕ اَفَلَمْ یَكُوْنُوْا یَرَوْنَهَا ۚ بَلْ كَانُوْا لَا یَرْجُوْنَ نُشُوْرًا ۟

மேலும், எந்த ஊர் மீது கொடுமையான மழை பொழிவிக்கப்பட்டதோ அந்த ஊரினூடே இவர்கள் சென்றிருக்கின்றார்கள். என்ன, அதனுடைய கதியை இவர்கள் பார்க்கவில்லையா? இருப்பினும், இவர்கள் மரணத்திற்குப் பின் மற்றொரு வாழ்க்கையை நம்பாதவர்களாகவே இருக்கின்றனர்.

41

وَاِذَا رَاَوْكَ اِنْ یَّتَّخِذُوْنَكَ اِلَّا هُزُوًا ؕ اَهٰذَا الَّذِیْ بَعَثَ اللّٰهُ رَسُوْلًا ۟

மேலும், இவர்கள் உம்மைக் காண்பார்களானால், உம்மைக்கேலிக்கு உரியவராக எடுத்துக் கொள்கின்றார்கள். (அவர்கள் கூறுகின்றார்கள்:) “இவரைத்தான் இறைவன் தூதராய் அனுப்பியிருக்கின்றானா?

42

اِنْ كَادَ لَیُضِلُّنَا عَنْ اٰلِهَتِنَا لَوْلَاۤ اَنْ صَبَرْنَا عَلَیْهَا ؕ وَسَوْفَ یَعْلَمُوْنَ حِیْنَ یَرَوْنَ الْعَذَابَ مَنْ اَضَلُّ سَبِیْلًا ۟

நம் தெய்வங்கள் மீது உள்ள நம்பிக்கையில் நாம் நிலைத்திருக்கவில்லையானால் இவரோ நம்மை வழிகெடுத்து அந்தத் தெய்வங்களை விட்டு நம்மை விலக்கியே வைத்திருப்பார்.” சரி! அந்த நேரம் வெகு தூரத்தில் இல்லை இவர்கள் வேதனையைக் காணும்போது யார் வழிகேட்டில் வெகுதூரம் சென்றுவிட்டார்கள் என்பது இவர்களுக்குத் தாமாகவே தெரிந்துவிடும்.

43

اَرَءَیْتَ مَنِ اتَّخَذَ اِلٰهَهٗ هَوٰىهُ ؕ اَفَاَنْتَ تَكُوْنُ عَلَیْهِ وَكِیْلًا ۟ۙ

தனது மனஇச்சையைத் தன் கடவுளாக்கிக் கொண்டவனின் நிலை குறித்து என்றேனும் நீர் சிந்தித்ததுண்டா? இத்த கையவனை நேர்வழியில் கொண்டுவரும் பொறுப்பை நீர் ஏற்க முடியுமா?

44

اَمْ تَحْسَبُ اَنَّ اَكْثَرَهُمْ یَسْمَعُوْنَ اَوْ یَعْقِلُوْنَ ؕ اِنْ هُمْ اِلَّا كَالْاَنْعَامِ بَلْ هُمْ اَضَلُّ سَبِیْلًا ۟۠

என்ன, இவர்களில் பெரும்பாலோர் செவியேற்கின்றார்கள் என்றோ, புரிந்து கொள்கின்றார்கள் என்றோ நீர் கருதுகின்றீரா? இவர்களோ கால்நடைகளைப் போன்றவர்களாவர். ஏன், அவற்றை விடவும் இவர்கள் மிகவும் தரங்கெட்டவர்களாவர்.

45

اَلَمْ تَرَ اِلٰی رَبِّكَ كَیْفَ مَدَّ الظِّلَّ ۚ وَلَوْ شَآءَ لَجَعَلَهٗ سَاكِنًا ۚ ثُمَّ جَعَلْنَا الشَّمْسَ عَلَیْهِ دَلِیْلًا ۟ۙ

உம் இறைவன் எவ்வாறு நிழலை விரிக்கின்றான் என்பதை நீர் பார்க்கவில்லையா? அவன் நாடினால், அந்நிழலை நிலையானதாய் ஆக்கியிருப்பான். பிறகு, நாம் சூரியனை அதற்கு வழிகாட்டி ஆக்கினோம்.

46

ثُمَّ قَبَضْنٰهُ اِلَیْنَا قَبْضًا یَّسِیْرًا ۟

பிறகு (சூரியன் மேலே செல்லச் செல்ல) அந்நிழலை நாம் மெல்ல மெல்ல நம் பக்கமாக சுருட்டிக் கொண்டே போகின்றோம்.

47

وَهُوَ الَّذِیْ جَعَلَ لَكُمُ الَّیْلَ لِبَاسًا وَّالنَّوْمَ سُبَاتًا وَّجَعَلَ النَّهَارَ نُشُوْرًا ۟

மேலும், அவனே உங்களுக்கு இரவை ஆடையாகவும், உறக்கத்தை அமைதியாகவும் பகலை உயிர்த்தெழும் வேளையாகவும் ஆக்கினான்.

48

وَهُوَ الَّذِیْۤ اَرْسَلَ الرِّیٰحَ بُشْرًاۢ بَیْنَ یَدَیْ رَحْمَتِهٖ ۚ وَاَنْزَلْنَا مِنَ السَّمَآءِ مَآءً طَهُوْرًا ۟ۙ

மேலும், அவனே தன்னுடைய கருணைக்கு முன்னால் காற்றை நற்செய்தியாக அனுப்புகின்றான். பிறகு, வானத்தில் இருந்து தூய்மையான நீரை இறக்குகின்றான்.

49

لِّنُحْیِ بِهٖ بَلْدَةً مَّیْتًا وَّنُسْقِیَهٗ مِمَّا خَلَقْنَاۤ اَنْعَامًا وَّاَنَاسِیَّ كَثِیْرًا ۟

பூமியின் உயிரற்ற பகுதிகளுக்கு அதன் மூலம் நாம் உயிர் கொடுப்பதற்காகவும், மேலும், நம்முடைய படைப்பினங்களில் அநேக கால்நடைகளுக்கும், மனிதர்களுக்கும் தண்ணீர் புகட்டுவதற்காகவும்தான்!

50

وَلَقَدْ صَرَّفْنٰهُ بَیْنَهُمْ لِیَذَّكَّرُوْا ۖؗ فَاَبٰۤی اَكْثَرُ النَّاسِ اِلَّا كُفُوْرًا ۟

இந்த விந்தைகளை அவர்களிடையே அடிக்கடி நாம் நிகழ்த்துகின்றோம், அவர்கள் படிப்பினை பெற வேண்டும் என்பதற்காக! ஆயினும், மக்களில் பெரும்பாலோர் நிராகரிப்பு மற்றும் நன்றி கொல்லும் நடத்தையைத் தவிர வேறெதனையும் மேற்கொள்ள மறுக்கின்றார்கள்.

51

وَلَوْ شِئْنَا لَبَعَثْنَا فِیْ كُلِّ قَرْیَةٍ نَّذِیْرًا ۟ؗۖ

மேலும், நாம் நாடியிருந்தால் ஒவ்வோர் ஊரிலும் ஒவ்வோர் எச்சரிக்கையாளரை அனுப்பி வைத்திருப்போம்.

52

فَلَا تُطِعِ الْكٰفِرِیْنَ وَجَاهِدْهُمْ بِهٖ جِهَادًا كَبِیْرًا ۟

எனவே, (நபியே!) நிராகரிப்பாளர்களின் பேச்சை ஒருபோதும் ஏற்றுக் கொள்ளாதீர்! மேலும், இந்தக் குர்ஆனைக் கொண்டு அவர்களுடன் பெரும் ஜிஹாதில் கடுமையான போராட்டத்தில் ஈடுபடுங்கள்.

53

وَهُوَ الَّذِیْ مَرَجَ الْبَحْرَیْنِ هٰذَا عَذْبٌ فُرَاتٌ وَّهٰذَا مِلْحٌ اُجَاجٌ ۚ وَجَعَلَ بَیْنَهُمَا بَرْزَخًا وَّحِجْرًا مَّحْجُوْرًا ۟

மேலும், இரு கடல்களை ஒன்றிணைத்து வைத்திருப்பவன் அவனே! ஒன்று சுவையும் இனிமையும் வாய்ந்தது; மற்றொன்று, உப்பும் கசப்பும் கலந்தது. மேலும், இரண்டுக்குமிடையே ஒரு திரை ஒரு தடுப்பு இருக்கிறது. (அவை ஒன்றோடொன்று கலந்து விடாதவாறு) அது தடுத்துக் கொண்டிருக்கிறது.

54

وَهُوَ الَّذِیْ خَلَقَ مِنَ الْمَآءِ بَشَرًا فَجَعَلَهٗ نَسَبًا وَّصِهْرًا ؕ وَكَانَ رَبُّكَ قَدِیْرًا ۟

மேலும், நீரிலிருந்து மனிதனைப் படைத்தவன் அவனே! பிறகு, வம்ச உறவின் மூலமாகவும், திருமணத் தொடர்பின் மூலமாகவும் இரு தனித்தனியான உறவு முறைகளை அவன் ஏற்படுத்தினான். உம் இறைவன் பெரும் ஆற்றல் மிக்கவனாய் இருக்கின்றான்.

55

وَیَعْبُدُوْنَ مِنْ دُوْنِ اللّٰهِ مَا لَا یَنْفَعُهُمْ وَلَا یَضُرُّهُمْ ؕ وَكَانَ الْكَافِرُ عَلٰی رَبِّهٖ ظَهِیْرًا ۟

மேலும், அல்லாஹ்வை விடுத்து தமக்கு எவ்வித நன்மையும் தீமையும் அளித்திட இயலாத தெய்வங்களை மக்கள் வணங்கிக் கொண்டிருக்கின்றார்கள். மேலும், இது தவிர நிராகரிப்பாளன் தன் இறைவனுக்கு எதிரான ஒவ்வொரு துரோகிக்கும் உதவியாளனாக இருக்கின்றான்.

56

وَمَاۤ اَرْسَلْنٰكَ اِلَّا مُبَشِّرًا وَّنَذِیْرًا ۟

(நபியே!) நற்செய்தி அறிவிப்பவராகவும், எச்சரிக்கை செய்பவராகவும் மட்டுமே உம்மை நாம் அனுப்பியிருக்கின்றோம்.

57

قُلْ مَاۤ اَسْـَٔلُكُمْ عَلَیْهِ مِنْ اَجْرٍ اِلَّا مَنْ شَآءَ اَنْ یَّتَّخِذَ اِلٰی رَبِّهٖ سَبِیْلًا ۟

இவர்களிடம் கூறிவிடும்: “இப்பணிக்காக உங்களிடம் நான் கூலி எதுவும் கேட்கவில்லை. எனது கூலியோ, எவர் தன் இறைவன் பக்கம் சென்றடைவதற்கான வழியினை மேற்கொள்ள விரும்புகின்றாரோ அவர் இதனை மேற்கொள்வதுதான்!”

58

وَتَوَكَّلْ عَلَی الْحَیِّ الَّذِیْ لَا یَمُوْتُ وَسَبِّحْ بِحَمْدِهٖ ؕ وَكَفٰی بِهٖ بِذُنُوْبِ عِبَادِهٖ خَبِیْرَا ۟

மேலும் (நபியே!) என்றென்றும் உயிருடன் இருப்பவனும் ஒருபோதும் மரணிக்காதவனுமான இறைவனை முழுவதுஞ் சார்ந்திருப்பீராக! அவனைப் புகழ்வதுடன் அவன் தூய்மையையும் எடுத்துரைப்பீராக! தன்னுடைய அடிமைகளின் பாவங்களை நன்கு அறிந்துகொள்ள அவனே போதுமானவன்.

59

لَّذِیْ خَلَقَ السَّمٰوٰتِ وَالْاَرْضَ وَمَا بَیْنَهُمَا فِیْ سِتَّةِ اَیَّامٍ ثُمَّ اسْتَوٰی عَلَی الْعَرْشِ ۛۚ اَلرَّحْمٰنُ فَسْـَٔلْ بِهٖ خَبِیْرًا ۟

அவன் எத்தகையவனெனில் வானங்களையும் பூமியையும் அவற்றுக்கிடையேயுள்ள அனைத்துப் பொருட்களையும் ஆறு நாட்களில் படைத்தான். பிறகு அர்ஷின்* மீது அமர்ந்தான்; அவன் ரஹ்மான்கருணை மிக்கவன். அவனுடைய மாட்சிமை பற்றி யாரேனும் அறிந்தவரிடம் கேளுங்கள்.

60

وَاِذَا قِیْلَ لَهُمُ اسْجُدُوْا لِلرَّحْمٰنِ قَالُوْا وَمَا الرَّحْمٰنُ ۗ اَنَسْجُدُ لِمَا تَاْمُرُنَا وَزَادَهُمْ نُفُوْرًا ۟

“ரஹ்மானுக்கு கருணைமிக்க இறைவனுக்கு ஸுஜூது• செய்யுங்கள்” என்று அவர்களிடம் கூறப்பட்டால், “ரஹ்மான் என்றால் யார்? நீர் சொல்வோருக்கெல்லாம் நாங்கள் ஸஜ்தா செய்துகொண்டிருக்க வேண்டுமா?” என்று அவர்கள் கேட்கின்றார்கள். இந்த அழைப்பு அவர்களுடைய வெறுப்பை இன்னும் அதிகமாக்கி விடுகின்றது.

61

تَبٰرَكَ الَّذِیْ جَعَلَ فِی السَّمَآءِ بُرُوْجًا وَّجَعَلَ فِیْهَا سِرٰجًا وَّقَمَرًا مُّنِیْرًا ۟

பெரும் பாக்கியம் உடையவனாவான்; விண்ணில் உறுதியான மண்டலங்கள் அமைத்து அதில் ஒளிவிளக்கையும் ஒளிர்கின்ற சந்திரனையும் பிரகாசிக்கச் செய்தவன்!

62

وَهُوَ الَّذِیْ جَعَلَ الَّیْلَ وَالنَّهَارَ خِلْفَةً لِّمَنْ اَرَادَ اَنْ یَّذَّكَّرَ اَوْ اَرَادَ شُكُوْرًا ۟

அவனே, இரவையும் பகலையும் ஒன்று மற்றொன்றைத் தொடர்ந்து வரக்கூடியதாக அமைத்தான்படிப்பினை பெற நாடும் அல்லது நன்றியுடையவராக இருக்க விரும்பும் ஒவ்வொரு மனிதனுக்காகவும்!

63

وَعِبَادُ الرَّحْمٰنِ الَّذِیْنَ یَمْشُوْنَ عَلَی الْاَرْضِ هَوْنًا وَّاِذَا خَاطَبَهُمُ الْجٰهِلُوْنَ قَالُوْا سَلٰمًا ۟

மேலும், ரஹ்மானின் (உண்மையான) அடியார்கள் எத்தகையவர்களெனில், அவர்கள் பூமியில் பணிவோடு நடப்பார்கள்; அறிவீனர்கள் அவர்களுடன் முறைகேடாக உரையாடினால், “உங்களுக்கு ஸலாம்சாந்தி உண்டாகட்டும்” என்று கூறிவிடுவார்கள்.

64

وَالَّذِیْنَ یَبِیْتُوْنَ لِرَبِّهِمْ سُجَّدًا وَّقِیَامًا ۟

மேலும், அவர்கள் தங்கள் இறைவனின் திருமுன் ஸுஜூது செய்தும் நின்றும் வணங்கியவாறு இரவைக் கழிப்பார்கள்.

65

وَالَّذِیْنَ یَقُوْلُوْنَ رَبَّنَا اصْرِفْ عَنَّا عَذَابَ جَهَنَّمَ ۖۗ اِنَّ عَذَابَهَا كَانَ غَرَامًا ۟ۗۖ

மேலும், அவர்கள் இறைஞ்சுவார்கள்: “எங்கள் இறைவனே! நரக வேதனையை எங்களைவிட்டு அகற்றுவாயாக! அதன் வேதனையோ ஓயாது தொல்லை தரக்கூடியதாக இருக்கின்றது.

66

اِنَّهَا سَآءَتْ مُسْتَقَرًّا وَّمُقَامًا ۟

திண்ணமாக, நரகம் தீய தங்குமிடமாகவும் மிகவும் மோசமான இடமாகவும் இருக்கின்றது!”

67

وَالَّذِیْنَ اِذَاۤ اَنْفَقُوْا لَمْ یُسْرِفُوْا وَلَمْ یَقْتُرُوْا وَكَانَ بَیْنَ ذٰلِكَ قَوَامًا ۟

மேலும், அவர்கள் செலவு செய்யும்போது வீண்விரயமும் கஞ்சத்தனமும் செய்வதில்லை. மாறாக, அவர்களுடைய செலவுகள் இந்த மிதமிஞ்சிய இரு நிலைகளுக்கிடையில் மிதமானதாக இருக்கும்.

68

وَالَّذِیْنَ لَا یَدْعُوْنَ مَعَ اللّٰهِ اِلٰهًا اٰخَرَ وَلَا یَقْتُلُوْنَ النَّفْسَ الَّتِیْ حَرَّمَ اللّٰهُ اِلَّا بِالْحَقِّ وَلَا یَزْنُوْنَ ۚ وَمَنْ یَّفْعَلْ ذٰلِكَ یَلْقَ اَثَامًا ۟ۙ

மேலும், அவர்கள் அல்லாஹ்வுடன் வேறெந்தத் தெய்வத்தையும் அழைப்பதில்லை. மேலும், (கொலை செய்யக்கூடாது) என்று அல்லாஹ்வினால் தடை செய்யப்பட்ட எந்த உயிரையும் நியாயமின்றி அவர்கள் கொலை செய்வதில்லை; மேலும், விபச்சாரமும் செய்வதில்லை. யாரேனும் இச்செயல்களைச் செய்தால் அவன் தன் பாவத்திற்கான கூலியைப் பெற்றே தீருவான்;

69

یُّضٰعَفْ لَهُ الْعَذَابُ یَوْمَ الْقِیٰمَةِ وَیَخْلُدْ فِیْهٖ مُهَانًا ۟ۗۖ

மறுமைநாளில் அவனுக்கு இரட்டிப்பு தண்டனை அளிக்கப்படும். மேலும், அதிலேயே இழிவுக்குரியவனாய் என்றென்றும் அவன் வீழ்ந்து கிடப்பான்.

70

اِلَّا مَنْ تَابَ وَاٰمَنَ وَعَمِلَ عَمَلًا صَالِحًا فَاُولٰٓىِٕكَ یُبَدِّلُ اللّٰهُ سَیِّاٰتِهِمْ حَسَنٰتٍ ؕ وَكَانَ اللّٰهُ غَفُوْرًا رَّحِیْمًا ۟

ஆனால் (இந்தப் பாவங்களுக்குப் பின்னர்) எவர் மன்னிப்புக்கோரி, மேலும், நம்பிக்கை கொண்டு நற்செயலும் புரியத்தொடங்கி விட்டிருக்கின்றாரோ அவரைத் தவிர! இத்தகையோரின் தீமைகளை அல்லாஹ் நன்மைகளாக மாற்றி விடுவான். மேலும், அவன் பெரும் மன்னிப்பாளனும் கிருபையாளனுமாவான்!

71

وَمَنْ تَابَ وَعَمِلَ صَالِحًا فَاِنَّهٗ یَتُوْبُ اِلَی اللّٰهِ مَتَابًا ۟

எவர் பாவமன்னிப்புக் கோரி, நற்செயலை மேற்கொள்கின்றாரோ அவர் அல்லாஹ்வின் பக்கம் எவ்வாறு திரும்பி வர வேண்டுமோ அவ்வாறு திரும்பி வருகின்றார்.

72

وَالَّذِیْنَ لَا یَشْهَدُوْنَ الزُّوْرَ ۙ وَاِذَا مَرُّوْا بِاللَّغْوِ مَرُّوْا كِرَامًا ۟

மேலும் (ரஹ்மானின் உண்மையான அடியார்கள் யாரெனில்) அவர்கள் பொய்மைக்கு சாட்சியாக இருப்பதில்லை. அவர்கள் ஏதேனும் வீணானவற்றின் அருகில் செல்ல நேர்ந்தால் கண்ணியமானவர்களாய்க் கடந்து சென்றுவிடுவார்கள்.

73

وَالَّذِیْنَ اِذَا ذُكِّرُوْا بِاٰیٰتِ رَبِّهِمْ لَمْ یَخِرُّوْا عَلَیْهَا صُمًّا وَّعُمْیَانًا ۟

மேலும், தம் இறைவனின் வசனங்களை ஓதிக்காட்டி அவர்களுக்கு நல்லுரை வழங்கப்படும்போது அவற்றைக் குறித்து குருடர்களாயும், செவிடர்களாயும் இருப்பதில்லை.

74

وَالَّذِیْنَ یَقُوْلُوْنَ رَبَّنَا هَبْ لَنَا مِنْ اَزْوَاجِنَا وَذُرِّیّٰتِنَا قُرَّةَ اَعْیُنٍ وَّاجْعَلْنَا لِلْمُتَّقِیْنَ اِمَامًا ۟

மேலும், அவர்கள் இறைஞ்சிய வண்ணம் இருப்பார்கள்: “எங்கள் இறைவனே! எங்கள் மனைவிமார்களையும், எங்கள் குழந்தைகளையும், எங்கள் கண்களுக்குக் குளிர்ச்சி அளிக்கக்கூடியவர்களாய் விளங்கச் செய்வாயாக! மேலும், எங்களை இறையச்சமுடையோருக்குத் தலைவர்களாய் திகழச் செய்வாயாக!”

75

اُولٰٓىِٕكَ یُجْزَوْنَ الْغُرْفَةَ بِمَا صَبَرُوْا وَیُلَقَّوْنَ فِیْهَا تَحِیَّةً وَّسَلٰمًا ۟ۙ

இத்தகையோரே தங்களுடைய பொறுமையின் பலனாக உயர்ந்த மாளிகைகளைப் பெறுவார்கள். மரியாதையுடனும் வாழ்த்துக்களுடனும் அவர்கள் அங்கு வரவேற்கப்படுவார்கள்.

76

خٰلِدِیْنَ فِیْهَا ؕ حَسُنَتْ مُسْتَقَرًّا وَّمُقَامًا ۟

அவர்கள் என்றென்றும் அங்குத் தங்கி வாழ்வார்கள். எவ்வளவு அழகானதாக இருக்கின்றது அந்தத் தங்குமிடம்! எவ்வளவு உன்னதமாக இருக்கிறது அந்த ஓய்விடம்!

77

قُلْ مَا یَعْبَؤُا بِكُمْ رَبِّیْ لَوْلَا دُعَآؤُكُمْ ۚ فَقَدْ كَذَّبْتُمْ فَسَوْفَ یَكُوْنُ لِزَامًا ۟۠

(நபியே!) மக்களிடம் கூறுங்கள்: “என்னுடைய இறைவனை நீங்கள் அழைக்கவில்லையென்றால், அவனுக்கு உங்களுடைய தேவைதான் என்ன? இப்போது நீங்கள் (இறைத்தூதைப்) பொய்யெனக் கூறிவிட்டீர்கள். தடுக்க முடியாத கடும் தண்டனையை, விரைவில் நீங்கள் பெறத்தான் போகிறீர்கள்!”

PreviousAn-NurNextAsh-Shuara

0:00–:––