وَالْفَجْرِ ۟ۙ
வைகறைப் பொழுதின் மீது சத்தியமாக!
Surah 89
Al-Fajr
89. ஸூரத்துல் ஃபஜ்ரி (விடியற்காலை)
30 verses
بِسْمِ اللّٰهِ الرَّحْمٰنِ الرَّحِیْمِ
وَالْفَجْرِ ۟ۙ
வைகறைப் பொழுதின் மீது சத்தியமாக!
وَلَیَالٍ عَشْرٍ ۟ۙ
மேலும், பத்து இரவுகளின் மீதும்,
وَّالشَّفْعِ وَالْوَتْرِ ۟ۙ
இரட்டை மற்றும் ஒற்றையின் மீதும்,
وَالَّیْلِ اِذَا یَسْرِ ۟ۚ
சென்று கொண்டிருக்கும் இரவின் மீதும் சத்தியமாக!
هَلْ فِیْ ذٰلِكَ قَسَمٌ لِّذِیْ حِجْرٍ ۟ؕ
அறிவுள்ள ஒருவருக்கு இனியும் சத்தியம் தேவையா, என்ன?
اَلَمْ تَرَ كَیْفَ فَعَلَ رَبُّكَ بِعَادٍ ۟
ஆது கூட்டத்தாருடன் உம் இறைவன் எவ்வாறு நடந்து கொண்டான் என்பதை நீர் கவனிக்கவில்லையா?
اِرَمَ ذَاتِ الْعِمَادِ ۟
(அவர்கள்) உயரமான தூண்களையுடைய இரம் எனும் நகரவாசிகள்;
الَّتِیْ لَمْ یُخْلَقْ مِثْلُهَا فِی الْبِلَادِ ۟
அவர்களைப் போன்று எந்தச் சமுதாயமும் உலகநாடுகளில் படைக்கப்படவில்லை;
وَثَمُوْدَ الَّذِیْنَ جَابُوا الصَّخْرَ بِالْوَادِ ۟
மேலும், பள்ளத்தாக்கில் பாறைகளைக் குடைந்த ஸமூத் சமுதாயத்தாருடனும்
وَفِرْعَوْنَ ذِی الْاَوْتَادِ ۟
மேலும், முளைகளையுடைய ஃபிர்அவ்னுடனும் (உம்முடைய இறைவன் எவ்வாறு நடந்துகொண்டான் என்பதை நீர் கவனிக்கவில்லையா?)
الَّذِیْنَ طَغَوْا فِی الْبِلَادِ ۟
அந்த மக்களோ உலக நாடுகளில் வரம்புமீறிய செயல்களில் ஈடுபட்டிருந்தார்கள்;
فَاَكْثَرُوْا فِیْهَا الْفَسَادَ ۟
அங்கு பெரும் குழப்பத்தை விளைவித்திருந்தார்கள்.
فَصَبَّ عَلَیْهِمْ رَبُّكَ سَوْطَ عَذَابٍ ۟ۚۙ
இறுதியில், அவர்கள் மீது உம் இறைவன் தண்டனையின் சாட்டைகளைப் பொழிந்தான்.
اِنَّ رَبَّكَ لَبِالْمِرْصَادِ ۟ؕ
உண்மையில், உம் இறைவன் குறிவைத்துக் காத்துக் கொண்டிருக்கின்றான்.
فَاَمَّا الْاِنْسَانُ اِذَا مَا ابْتَلٰىهُ رَبُّهٗ فَاَكْرَمَهٗ وَنَعَّمَهٗ ۙ۬ فَیَقُوْلُ رَبِّیْۤ اَكْرَمَنِ ۟ؕ
ஆனால், மனிதனின் நிலை எப்படி இருக்கின்றதெனில், அவனுடைய இறைவன் அவனைச் சோதிக்க நாடினால் மேலும், அவனை கண்ணியப்படுத்தி, அருட்கொடைகளையும் வழங்கினால், “என்னுடைய இறைவன் என்னைக் கண்ணியப்படுத்தினான்” என்று கூறுகின்றான்.
وَاَمَّاۤ اِذَا مَا ابْتَلٰىهُ فَقَدَرَ عَلَیْهِ رِزْقَهٗ ۙ۬ فَیَقُوْلُ رَبِّیْۤ اَهَانَنِ ۟ۚ
மேலும், அவனைச் சோதிக்க நாடினால் மேலும், அவனுடைய வாழ்க்கை வசதிகளைக் குறைத்து விட்டால் “என் இறைவன் என்னை இழிவுபடுத்திவிட்டான்” என்று கூறுகின்றான்.
كَلَّا بَلْ لَّا تُكْرِمُوْنَ الْیَتِیْمَ ۟ۙ
ஒருபோதும் இல்லை! ஆனால், அநாதையுடன் கண்ணியமாய் நீங்கள் நடந்து கொள்வதில்லை;
وَلَا تَحٰٓضُّوْنَ عَلٰی طَعَامِ الْمِسْكِیْنِ ۟ۙ
மேலும், வறியவர்க்கு உணவளிக்க ஒருவரையொருவர் தூண்டுவதுமில்லை!
وَتَاْكُلُوْنَ التُّرَاثَ اَكْلًا لَّمًّا ۟ۙ
மேலும், வாரிசுச் சொத்துக்களை முழுமையாக நீங்களே விழுங்கிவிடுகின்றீர்கள்.
وَّتُحِبُّوْنَ الْمَالَ حُبًّا جَمًّا ۟ؕ
மேலும், செல்வத்தின் மீது அளவு கடந்த மோகம் கொண்டுள்ளீர்கள்.
كَلَّاۤ اِذَا دُكَّتِ الْاَرْضُ دَكًّا دَكًّا ۟ۙ
ஒருபோதுமில்லை! பூமி தூள் தூளாக அடித்து நொறுக்கப்படும்போது,
وَّجَآءَ رَبُّكَ وَالْمَلَكُ صَفًّا صَفًّا ۟ۚ
மேலும் வானவர்கள் அணி அணியாக நிற்கும் நிலையில் உம் இறைவன் வருகை தரும்போது,
وَجِایْٓءَ یَوْمَىِٕذٍۭ بِجَهَنَّمَ ۙ۬ یَوْمَىِٕذٍ یَّتَذَكَّرُ الْاِنْسَانُ وَاَنّٰی لَهُ الذِّكْرٰی ۟ؕ
மேலும், அந்நாளில் நரகம் கண்ணெதிரில் கொண்டு வரப்படும்போது அந்நாளில்தான் மனிதன் புரிந்து கொள்வான். அப்போது அவன் புரிந்துகொள்வது என்ன பயனை அளிக்கும்?
یَقُوْلُ یٰلَیْتَنِیْ قَدَّمْتُ لِحَیَاتِیْ ۟ۚ
அவன் புலம்புவான்: ‘அய்யகோ! எனது இந்த வாழ்க்கைக்காக சில ஏற்பாடுகளை, நான் முன்னரே செய்திருக்கக்கூடாதா?
فَیَوْمَىِٕذٍ لَّا یُعَذِّبُ عَذَابَهٗۤ اَحَدٌ ۟ۙ
அந்நாளில் அல்லாஹ் தண்டிப்பதுபோல், தண்டிப்பவர் எவருமிலர்.
وَّلَا یُوْثِقُ وَثَاقَهٗۤ اَحَدٌ ۟ؕ
அவன் கட்டுவதுபோல் கட்டுபவரும் எவரும் இலர்.
یٰۤاَیَّتُهَا النَّفْسُ الْمُطْمَىِٕنَّةُ ۟ۗۖ
(மற்றொரு புறத்தில் அறிவிக்கப்படும்:) ஓ! அமைதியடைந்த ஆன்மாவே!
ارْجِعِیْۤ اِلٰی رَبِّكِ رَاضِیَةً مَّرْضِیَّةً ۟ۚ
செல் உன் இறைவனின் பக்கம்! (உன் நல்ல முடிவைக்கொண்டு) மகிழ்ந்த நிலையில்; (மேலும் உன் இறைவனின்) திருப்தியைப் பெற்ற நிலையில்!
فَادْخُلِیْ فِیْ عِبٰدِیْ ۟ۙ
இணைந்துவிடு, என்னுடைய (நல்) அடியார்களுடன்!
وَادْخُلِیْ جَنَّتِیْ ۟۠
மேலும், புகுந்துவிடு, என்னுடைய சுவனத்தில்!”