طٰسٓمّٓ ۟
தாஸீம்மீம்.
Surah 28
Al-Qasas
28. ஸூரத்துல் கஸஸ் (வரலாறுகள்)
88 verses
بِسْمِ اللّٰهِ الرَّحْمٰنِ الرَّحِیْمِ
طٰسٓمّٓ ۟
தாஸீம்மீம்.
تِلْكَ اٰیٰتُ الْكِتٰبِ الْمُبِیْنِ ۟
இவை தெளிவான வேதத்தின் வசனங்களாகும்.
نَتْلُوْا عَلَیْكَ مِنْ نَّبَاِ مُوْسٰی وَفِرْعَوْنَ بِالْحَقِّ لِقَوْمٍ یُّؤْمِنُوْنَ ۟
நம்பிக்கை கொள்ளும் மக்களின் நலனுக்காக மூஸா மற்றும் ஃபிர்அவ்னைப் பற்றிய சில செய்திகளை மிகத் துல்லியமாக உங்களுக்கு நாம் எடுத்துரைக்கின்றோம்.
اِنَّ فِرْعَوْنَ عَلَا فِی الْاَرْضِ وَجَعَلَ اَهْلَهَا شِیَعًا یَّسْتَضْعِفُ طَآىِٕفَةً مِّنْهُمْ یُذَبِّحُ اَبْنَآءَهُمْ وَیَسْتَحْیٖ نِسَآءَهُمْ ؕ اِنَّهٗ كَانَ مِنَ الْمُفْسِدِیْنَ ۟
திண்ணமாக, ஃபிர்அவ்ன் பூமியில் வரம்பு மீறி நடந்துகொண்டான். அதில் வசிப்பவர்களைப் பல்வேறு பிரிவுகளாகப் பிரித்தான். அவர்களில் ஒரு பிரிவினரை இழிவுபடுத்தினான். அவர்களுடைய ஆண் மக்களைக் கொன்றான்; அவர்களின் பெண் மக்களை உயிரோடு விட்டுவிட்டான். உண்மையில் அவன் அராஜகம் புரிவோரைச் சேர்ந்தவனாக இருந்தான்.
وَنُرِیْدُ اَنْ نَّمُنَّ عَلَی الَّذِیْنَ اسْتُضْعِفُوْا فِی الْاَرْضِ وَنَجْعَلَهُمْ اَىِٕمَّةً وَّنَجْعَلَهُمُ الْوٰرِثِیْنَ ۟ۙ
மேலும், எவர்கள் பூமியில் ஒடுக்கப்பட்டிருந்தார்களோ அவர்கள் மீது நாம் அருள் புரியவும், அவர்களைத் தலைவர்களாக்கவும், அவர்களை வாரிசுகளாக்கி பூமியில் ஆட்சியதிகாரத்தை அவர்களுக்கு வழங்கவும் நாம் நாடியிருந்தோம்.
وَنُمَكِّنَ لَهُمْ فِی الْاَرْضِ وَنُرِیَ فِرْعَوْنَ وَهَامٰنَ وَجُنُوْدَهُمَا مِنْهُمْ مَّا كَانُوْا یَحْذَرُوْنَ ۟
மேலும், அவர்களின் மூலமாக ஃபிர்அவ்னுக்கும், ஹாமானுக்கும், அவ்விருவரின் படையினருக்கும் அவர்கள் எதைப் பற்றி அஞ்சிக் கொண்டிருந்தார்களோ அதை நாம் காண்பித்துக் கொடுக்கவும் நாடியிருந்தோம்.
وَاَوْحَیْنَاۤ اِلٰۤی اُمِّ مُوْسٰۤی اَنْ اَرْضِعِیْهِ ۚ فَاِذَا خِفْتِ عَلَیْهِ فَاَلْقِیْهِ فِی الْیَمِّ وَلَا تَخَافِیْ وَلَا تَحْزَنِیْ ۚ اِنَّا رَآدُّوْهُ اِلَیْكِ وَجَاعِلُوْهُ مِنَ الْمُرْسَلِیْنَ ۟
மேலும், நாம் மூஸாவின் தாயாருக்கு அறிவித்தோம், “இக் குழந்தைக்குப் பாலூட்டுவீராக! இனி, அதன் உயிருக்கு ஆபத்து வரும் என்று நீர் அஞ்சினால் அதனை ஆற்றில் விட்டுவிடும். நீர் யாதொரு அச்சமும், கவலையும் கொள்ளவேண்டாம். திண்ணமாக நாம், அவரை உம்மிடமே திரும்பக் கொண்டுவந்துவிடுவோம். மேலும், அவரைத் தூதர்களில் ஒருவராயும் ஆக்குவோம்!”
فَالْتَقَطَهٗۤ اٰلُ فِرْعَوْنَ لِیَكُوْنَ لَهُمْ عَدُوًّا وَّحَزَنًا ؕ اِنَّ فِرْعَوْنَ وَهَامٰنَ وَجُنُوْدَهُمَا كَانُوْا خٰطِـِٕیْنَ ۟
இறுதியில், ஃபிர்அவ்னுடைய குடும்பத்தார் அக்குழந்தையை (ஆற்றிலிருந்து) கண்டெடுத்தார்கள். அக்குழந்தை அவர்களுக்கு எதிரியாகவும், அவர்களின் கவலைக்குக் காரணமாகவும் அமையவேண்டும் என்பதற்காக! உண்மையில் ஃபிர்அவ்னும், ஹாமானும், அவ்விருவருடைய படையினரும் (தங்கள் திட்டத்தில்) பெரிதும் தவறிவிட்டிருந்தார்கள்.
وَقَالَتِ امْرَاَتُ فِرْعَوْنَ قُرَّتُ عَیْنٍ لِّیْ وَلَكَ ؕ لَا تَقْتُلُوْهُ ۖۗ عَسٰۤی اَنْ یَّنْفَعَنَاۤ اَوْ نَتَّخِذَهٗ وَلَدًا وَّهُمْ لَا یَشْعُرُوْنَ ۟
ஃபிர்அவ்னுடைய மனைவி (அவனிடம்) கூறினாள்: “இக்குழந்தை எனக்கும் உங்களுக்கும் கண் குளிர்ச்சியாய் உள்ளது. நீங்கள் இதனைக் கொன்றுவிடாதீர்கள். இக்குழந்தை நமக்குப் பயனளிக்கலாம். அல்லது இதனை நாம் மகனாகத் தத்தெடுத்துக் கொள்ளலாம்.” அவர்கள் (விளைவை) உணராதிருந்தார்கள்.
وَاَصْبَحَ فُؤَادُ اُمِّ مُوْسٰی فٰرِغًا ؕ اِنْ كَادَتْ لَتُبْدِیْ بِهٖ لَوْلَاۤ اَنْ رَّبَطْنَا عَلٰی قَلْبِهَا لِتَكُوْنَ مِنَ الْمُؤْمِنِیْنَ ۟
அங்கே.. மூஸாவுடைய தாயாரின் உள்ளம் ஏங்கித் தவித்துக் கொண்டிருந்தது. (நமது வாக்குறுதியின்மீது) நம்பிக்கை கொள்வோரில் அவரும் ஒருவராக வேண்டும் என்பதற்காக, நாம் அவருடைய உள்ளத்தை உறுதிப்படுத்தவில்லையானால் நிச்சயம் அக்குழந்தையின் இரகசியத்தை அவர் வெளிப்படுத்த முனைந்திருப்பார்.
وَقَالَتْ لِاُخْتِهٖ قُصِّیْهِ ؗ فَبَصُرَتْ بِهٖ عَنْ جُنُبٍ وَّهُمْ لَا یَشْعُرُوْنَ ۟ۙ
அவர் அக்குழந்தையின் சகோதரியிடம் கூறினார்: “அதைப் பின்தொடர்ந்தே செல்!” அவ்வாறே (எதிரிகள்) அறிந்து கொள்ளாத வகையில் தூரத்திலிருந்து அக்குழந்தையைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
وَحَرَّمْنَا عَلَیْهِ الْمَرَاضِعَ مِنْ قَبْلُ فَقَالَتْ هَلْ اَدُلُّكُمْ عَلٰۤی اَهْلِ بَیْتٍ یَّكْفُلُوْنَهٗ لَكُمْ وَهُمْ لَهٗ نٰصِحُوْنَ ۟
மேலும், இதர பெண்களின் மார்பகங்களிலிருந்து பால் அருந்துவதை விட்டு முன்னரே, அக்குழந்தையைத் தடுத்திருந்தோம். (இந்நிலையைக் கவனித்து) அச்சிறுமி கூறினாள்: “இக்குழந்தையைப் பரிபாலித்து வளர்க்கும் பொறுப்பை ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு வீட்டாரைப்பற்றி நான் உங்களுக்கு அறிவித்துத் தரட்டுமா?”
فَرَدَدْنٰهُ اِلٰۤی اُمِّهٖ كَیْ تَقَرَّ عَیْنُهَا وَلَا تَحْزَنَ وَلِتَعْلَمَ اَنَّ وَعْدَ اللّٰهِ حَقٌّ وَّلٰكِنَّ اَكْثَرَهُمْ لَا یَعْلَمُوْنَ ۟۠
இவ்வாறு நாம் மூஸாவை அவருடைய தாயாரிடம் திரும்பக் கொண்டு வந்தோம்; அவர் கண்குளிர்ந்து, கவலை மறந்திருப்பதற்காகவும், அல்லாஹ்வின் வாக்குறுதி உண்மையானதென்று அறிந்து கொள்வதற்காகவும்தான்! ஆயினும், மக்களில் பெரும்பாலோர் இதனை அறிவதில்லை.
وَلَمَّا بَلَغَ اَشُدَّهٗ وَاسْتَوٰۤی اٰتَیْنٰهُ حُكْمًا وَّعِلْمًا ؕ وَكَذٰلِكَ نَجْزِی الْمُحْسِنِیْنَ ۟
மேலும், மூஸா வாலிபத்தை அடைந்து முழு வளர்ச்சியும் பெற்றபோது, நாம் அவருக்கு நுண்ணறிவையும் ஞானத்தையும் வழங்கினோம். நன்மக்களுக்கு இவ்வாறே நாம் கூலி வழங்குகின்றோம்.
وَدَخَلَ الْمَدِیْنَةَ عَلٰی حِیْنِ غَفْلَةٍ مِّنْ اَهْلِهَا فَوَجَدَ فِیْهَا رَجُلَیْنِ یَقْتَتِلٰنِ ؗۗ هٰذَا مِنْ شِیْعَتِهٖ وَهٰذَا مِنْ عَدُوِّهٖ ۚ فَاسْتَغَاثَهُ الَّذِیْ مِنْ شِیْعَتِهٖ عَلَی الَّذِیْ مِنْ عَدُوِّهٖ ۙ فَوَكَزَهٗ مُوْسٰی فَقَضٰی عَلَیْهِ ؗۗ قَالَ هٰذَا مِنْ عَمَلِ الشَّیْطٰنِ ؕ اِنَّهٗ عَدُوٌّ مُّضِلٌّ مُّبِیْنٌ ۟
(ஒருநாள்) நகர மக்கள் கவனக்குறைவாய் இருந்தபோது அவர் நகரினுள் நுழைந்தார். அங்கு இருவர் சண்டையிட்டுக்கொண்டிருப்பதைக் கண்டார். ஒருவன் அவருடைய சமூகத்தைச் சேர்ந்தவன். மற்றவன் அவருடைய எதிரிகளின் சமுதாயத்தைச் சேர்ந்தவன். அவருடைய சொந்த சமுதாயத்தைச் சேர்ந்தவன், எதிர் சமுதாயத்தைச் சேர்ந்தவனுக்கு எதிராகத் தனக்கு உதவும்படி இவரை அழைத்தான். மூஸா அவனை ஓங்கிக் குத்தினார்; அவன் கதையை முடித்தார். (இவ்வாறு நிகழ்ந்ததும்) மூஸா கூறினார்: “இது ஷைத்தானின் செயல்; அவன் கடும் பகைவனும், வெளிப்படையாக வழி கெடுப்பவனுமாவான்.”
قَالَ رَبِّ اِنِّیْ ظَلَمْتُ نَفْسِیْ فَاغْفِرْ لِیْ فَغَفَرَ لَهٗ ؕ اِنَّهٗ هُوَ الْغَفُوْرُ الرَّحِیْمُ ۟
மூஸா இறைஞ்சினார்: “என் இறைவா! என்மீது நானே கொடுமை இழைத்துக் கொண்டேன். என்னை மன்னித்தருள்வாயாக!” அல்லாஹ் அவருக்கு மன்னிப்பு வழங்கினான். அவன் பெரிதும் மன்னிப்பவனாகவும் கிருபை புரிபவனாகவும் இருக்கின்றான்.
قَالَ رَبِّ بِمَاۤ اَنْعَمْتَ عَلَیَّ فَلَنْ اَكُوْنَ ظَهِیْرًا لِّلْمُجْرِمِیْنَ ۟
மூஸா உறுதியாகக் கூறினார்: “என் இறைவா! நீ என்மீது அருளிய இந்த உபகாரத்திற்காக இனி ஒருபோதும் நான், குற்றவாளிகளுக்கு உதவி செய்பவனாக இருக்கமாட்டேன்.”
فَاَصْبَحَ فِی الْمَدِیْنَةِ خَآىِٕفًا یَّتَرَقَّبُ فَاِذَا الَّذِی اسْتَنْصَرَهٗ بِالْاَمْسِ یَسْتَصْرِخُهٗ ؕ قَالَ لَهٗ مُوْسٰۤی اِنَّكَ لَغَوِیٌّ مُّبِیْنٌ ۟
மறுநாள் அதிகாலையில் அஞ்சியபடியும் (நாற்புறங்களிலிருந்து) அபாயத்தை உணர்ந்தவாறும் நகரில் அவர் போய்க் கொண்டிருந்தார். அப்போது நேற்றைய தினம் அவரை உதவிக்கு அழைத்த அதே மனிதன் இன்றும் உதவிக்காக அழைத்துக் கொண்டிருப்பதைக் காண்கின்றார். “நிச்சயம் நீ வெளிப்படையான வழிகேடன்தான்” என்று மூஸா அவனை நோக்கிக் கூறிவிட்டு,
فَلَمَّاۤ اَنْ اَرَادَ اَنْ یَّبْطِشَ بِالَّذِیْ هُوَ عَدُوٌّ لَّهُمَا ۙ قَالَ یٰمُوْسٰۤی اَتُرِیْدُ اَنْ تَقْتُلَنِیْ كَمَا قَتَلْتَ نَفْسًا بِالْاَمْسِ ۖۗ اِنْ تُرِیْدُ اِلَّاۤ اَنْ تَكُوْنَ جَبَّارًا فِی الْاَرْضِ وَمَا تُرِیْدُ اَنْ تَكُوْنَ مِنَ الْمُصْلِحِیْنَ ۟
தங்கள் எதிரியின் சமுதாயத்தைச் சேர்ந்த மனிதனைத் தாக்க விரும்பியபோது அவன் உரக்கக் கூறினான்: “மூஸாவே! நேற்று ஒருவனை நீர் கொலை செய்தது போல இன்று என்னையும் கொலை செய்யலாமென்று கருதுகின்றீரா? நீர் இந்த நாட்டில் அடக்குமுறையாளராய் இருக்க நினைக்கின்றீரே தவிர, சீர்திருத்தவாதியாய்த் திகழ விரும்பவில்லை.”
وَجَآءَ رَجُلٌ مِّنْ اَقْصَا الْمَدِیْنَةِ یَسْعٰی ؗ قَالَ یٰمُوْسٰۤی اِنَّ الْمَلَاَ یَاْتَمِرُوْنَ بِكَ لِیَقْتُلُوْكَ فَاخْرُجْ اِنِّیْ لَكَ مِنَ النّٰصِحِیْنَ ۟
(இதன் பின்னர்) நகரின் கோடியிலிருந்து ஒருவர் ஓடிவந்து கூறினார்: “மூஸாவே! தலைவர்கள் உம்மைக் கொல்வதற்குச் சதித்திட்டம் தீட்டிக் கொண்டிருக்கின்றார்கள். எனவே, நீர் இங்கிருந்து வெளியேறிவிடும். நான் உமக்கு நலம் நாடுபவனாய் இருக்கின்றேன்.
فَخَرَجَ مِنْهَا خَآىِٕفًا یَّتَرَقَّبُ ؗ قَالَ رَبِّ نَجِّنِیْ مِنَ الْقَوْمِ الظّٰلِمِیْنَ ۟۠
(இச்செய்தியைக் கேட்டதும்) மூஸா அஞ்சியவராய் முழு எச்சரிக்கையோடு வெளியேறிவிட்டார். மேலும் இறைஞ்சினார்: “என் இறைவா! என்னை கொடுமையாளர்களிடமிருந்து காப்பாற்றுவாயாக!”
وَلَمَّا تَوَجَّهَ تِلْقَآءَ مَدْیَنَ قَالَ عَسٰی رَبِّیْۤ اَنْ یَّهْدِیَنِیْ سَوَآءَ السَّبِیْلِ ۟
மூஸா (எகிப்திலிருந்து வெளியேறி) மத்யனை நோக்கித் திரும்பியபோது “என்னுடைய இறைவன் எனக்கு நேரான வழியைக் காட்டக்கூடும்!” என்று கூறினார்.
وَلَمَّا وَرَدَ مَآءَ مَدْیَنَ وَجَدَ عَلَیْهِ اُمَّةً مِّنَ النَّاسِ یَسْقُوْنَ ؗ۬ وَوَجَدَ مِنْ دُوْنِهِمُ امْرَاَتَیْنِ تَذُوْدٰنِ ۚ قَالَ مَا خَطْبُكُمَا ؕ قَالَتَا لَا نَسْقِیْ حَتّٰی یُصْدِرَ الرِّعَآءُ ٚ وَاَبُوْنَا شَیْخٌ كَبِیْرٌ ۟
மேலும், அவர் மத்யனுடைய கிணற்றுக்கு அருகில் வந்தபோது, அங்கு மக்கள் பலர் தங்களுடைய கால்நடைகளுக்குத் தண்ணீர் புகட்டிக் கொண்டிருப்பதைக் கண்டார். அவர்களைவிட்டு சற்று விலகி ஒருபுறம் இரண்டு பெண்கள் தம்முடைய கால்நடைகளைத் தடுத்து வைத்துக்கொண்டிருப்பதையும் கண்டார். மூஸா (அப்பெண்களிடம்) “உங்களுடைய பிரச்னை என்ன?” என்று கேட்டார். அவர்கள் கூறினார்கள்: “இந்த இடையர்கள் (தங்கள் கால்நடைகளை) திரும்ப ஓட்டிச் செல்லும் வரை (எங்களுடைய கால்நடைகளுக்கு) எங்களால் தண்ணீர் புகட்ட முடிவதில்லை. மேலும், எங்கள் தந்தையோ மிகவும் வயதானவராய் இருக்கின்றார்”
فَسَقٰی لَهُمَا ثُمَّ تَوَلّٰۤی اِلَی الظِّلِّ فَقَالَ رَبِّ اِنِّیْ لِمَاۤ اَنْزَلْتَ اِلَیَّ مِنْ خَیْرٍ فَقِیْرٌ ۟
(இதைக் கேட்ட) மூஸா, அவர்களுடைய கால்நடைகளுக்குத் தண்ணீர் புகட்டினார். பிறகு, ஒரு நிழலில் போய் அமர்ந்து கூறினார்: “என் இறைவா! நீ எனக்கு இறக்கியருளுகின்ற நன்மை எதுவானாலும் சரி, நான் அதன் பக்கம் தேவையுடையவனாக இருக்கின்றேன்”
فَجَآءَتْهُ اِحْدٰىهُمَا تَمْشِیْ عَلَی اسْتِحْیَآءٍ ؗ قَالَتْ اِنَّ اَبِیْ یَدْعُوْكَ لِیَجْزِیَكَ اَجْرَ مَا سَقَیْتَ لَنَا ؕ فَلَمَّا جَآءَهٗ وَقَصَّ عَلَیْهِ الْقَصَصَ ۙ قَالَ لَا تَخَفْ ۫ۥ نَجَوْتَ مِنَ الْقَوْمِ الظّٰلِمِیْنَ ۟
(சிறிது நேரம்கூட செல்லவில்லை, அதற்குள்) அவ்விரு பெண்களில் ஒருத்தி நாணத்தோடு அவரிடம் நடந்து வந்து கூறினாள்: “என்னுடைய தந்தை உங்களை அழைக்கின்றார். நீங்கள் எங்களுடைய கால்நடைகளுக்குத் தண்ணீர் புகட்டியதற்கான கூலியைத் தங்களுக்குத் தருவதற்காக!” மூஸா அவரிடம் வந்தார். மேலும், தனக்கு நேர்ந்த அனைத்து நிலைமைகளையும் அவரிடம் எடுத்துரைத்தபோது அவர் கூறினார்: “அஞ்சாதீர்! கொடுமையாளர்களிடமிருந்து நீர் தப்பித்துவிட்டீர்!”
قَالَتْ اِحْدٰىهُمَا یٰۤاَبَتِ اسْتَاْجِرْهُ ؗ اِنَّ خَیْرَ مَنِ اسْتَاْجَرْتَ الْقَوِیُّ الْاَمِیْنُ ۟
அவ்விரு பெண்களில் ஒருத்தி தன் தந்தையிடம் கூறினாள்: “என் தந்தையே! இவரைப் பணியாளாய் வைத்துக் கொள்ளுங்கள். எவர் வலிமை மிக்கவராயும் நம்பிக்கைக்குரியவராயும் இருக்கின்றாரோ அப்படிப்பட்டவர்தான் நீங்கள் பணியில் அமர்த்திக்கொள்வதற்கு மிகவும் சிறந்தவராவார்.”
قَالَ اِنِّیْۤ اُرِیْدُ اَنْ اُنْكِحَكَ اِحْدَی ابْنَتَیَّ هٰتَیْنِ عَلٰۤی اَنْ تَاْجُرَنِیْ ثَمٰنِیَ حِجَجٍ ۚ فَاِنْ اَتْمَمْتَ عَشْرًا فَمِنْ عِنْدِكَ ۚ وَمَاۤ اُرِیْدُ اَنْ اَشُقَّ عَلَیْكَ ؕ سَتَجِدُنِیْۤ اِنْ شَآءَ اللّٰهُ مِنَ الصّٰلِحِیْنَ ۟
அப்பெண்ணின் தந்தை மூஸாவிடம் கூறினார்: “என்னுடைய இவ்விரு பெண்களில் ஒருத்தியை உமக்குத் திருமணம் செய்து தர நான் விரும்புகின்றேன். நீர் எட்டாண்டு காலம் எனக்கு ஊழியம் செய்யவேண்டும் என்கின்ற நிபந்தனையின் பேரில்! ஆனால், நீர் பத்து ஆண்டாக நிறைவு செய்தால் அது உம்முடைய விருப்பம்!. நான் உமக்கு சிரமம் கொடுக்க விரும்பவில்லை. இறைவன் நாடினால், என்னை நல்லவராக நீர் காண்பீர்.”
قَالَ ذٰلِكَ بَیْنِیْ وَبَیْنَكَ ؕ اَیَّمَا الْاَجَلَیْنِ قَضَیْتُ فَلَا عُدْوَانَ عَلَیَّ ؕ وَاللّٰهُ عَلٰی مَا نَقُوْلُ وَكِیْلٌ ۟۠
அதற்கு மூஸா பதிலளித்தார்: “எனக்கும் உங்களுக்கும் இடையில் இந்த விஷயம் முடிவாகிவிட்டது. இவ்விரு தவணைகளில் எதனை நான் நிறைவேற்றினாலும் (அதன் பிறகு) எவ்விதத்திலும் எனக்கு சிரமம் தரக்கூடாது. மேலும், நாம் பேசித் தீர்மானித்திருக்கின்ற இந்த ஒப்பந்தத்துக்கு அல்லாஹ் சாட்சியாக இருக்கின்றான்.”
فَلَمَّا قَضٰی مُوْسَی الْاَجَلَ وَسَارَ بِاَهْلِهٖۤ اٰنَسَ مِنْ جَانِبِ الطُّوْرِ نَارًا ۚ قَالَ لِاَهْلِهِ امْكُثُوْۤا اِنِّیْۤ اٰنَسْتُ نَارًا لَّعَلِّیْۤ اٰتِیْكُمْ مِّنْهَا بِخَبَرٍ اَوْ جَذْوَةٍ مِّنَ النَّارِ لَعَلَّكُمْ تَصْطَلُوْنَ ۟
மூஸா தவணையை பூர்த்தியாக்கி விட்டுத் தம் குடும்பத்தாரை அழைத்துக் கொண்டு சென்றபோது ‘தூர்’ அருகில் நெருப்பைக் கண்டார். அவர் தம்முடைய குடும்பத்தாரிடம் கூறினார்: “நில்லுங்கள்! நான் ஒரு நெருப்பைக் காண்கின்றேன். நான் அங்கிருந்து ஏதேனும் செய்தியை அறிந்து வரலாம்; அல்லது அந்த நெருப்பிலிருந்து ஒரு கொள்ளியைக் கொண்டு வரலாம். அதன் மூலம் நீங்கள் குளிர்காயலாம்.”
فَلَمَّاۤ اَتٰىهَا نُوْدِیَ مِنْ شَاطِئِ الْوَادِ الْاَیْمَنِ فِی الْبُقْعَةِ الْمُبٰرَكَةِ مِنَ الشَّجَرَةِ اَنْ یّٰمُوْسٰۤی اِنِّیْۤ اَنَا اللّٰهُ رَبُّ الْعٰلَمِیْنَ ۟ۙ
அவர் அங்கு சென்றதும் பள்ளத்தாக்கின் வலக்கரையில் அருள்பாலிக்கப்பட்ட ஒரு மரத்திலிருந்து உருவிலி (அசரீரி) எழுந்தது: “மூஸாவே! நான்தான் அல்லாஹ்! அகிலத்தாரின் அதிபதி”.
وَاَنْ اَلْقِ عَصَاكَ ؕ فَلَمَّا رَاٰهَا تَهْتَزُّ كَاَنَّهَا جَآنٌّ وَّلّٰی مُدْبِرًا وَّلَمْ یُعَقِّبْ ؕ یٰمُوْسٰۤی اَقْبِلْ وَلَا تَخَفْ ۫ اِنَّكَ مِنَ الْاٰمِنِیْنَ ۟
மேலும், (கட்டளையிடப்பட்டது) “உம்முடைய கைத்தடியைக் கீழே போடும்!” அத்தடி பாம்பைப்போல் அசைந்து நெளிவதை மூஸா பார்த்தபோது, பின் நோக்கி ஓடினார்; திரும்பிக்கூடப் பார்க்கவில்லை. (அப்போது சொல்லப்பட்டது:) “மூஸாவே! திரும்பி வாரும்! அஞ்ச வேண்டாம். நீர் முற்றிலும் பாதுகாக்கப்பட்டவராவீர்.
اُسْلُكْ یَدَكَ فِیْ جَیْبِكَ تَخْرُجْ بَیْضَآءَ مِنْ غَیْرِ سُوْٓءٍ ؗ وَّاضْمُمْ اِلَیْكَ جَنَاحَكَ مِنَ الرَّهْبِ فَذٰنِكَ بُرْهَانٰنِ مِنْ رَّبِّكَ اِلٰی فِرْعَوْنَ وَمَلَاۡىِٕهٖ ؕ اِنَّهُمْ كَانُوْا قَوْمًا فٰسِقِیْنَ ۟
உம்முடைய கையை உம் சட்டையின் நெஞ்சுப் பகுதியில் புகுத்தும்! அது பிரகாசிக்கக்கூடியதாய் வெளிப்படும், எவ்வித மாசுமருவுமின்றி! மேலும், அச்சத்தைப் போக்குவதற்காக உம்முடைய தோள்களை நெருக்கமாக வையும். இவை இரண்டும் இறைவனிடமிருந்துள்ள தெளிவான சான்றுகளாகும், ஃபிர்அவ்னிடமும் அவனுடைய அவைப் பிரமுகர்களிடமும் சமர்ப்பிப்பதற்காக! அவர்கள் அறவே கீழ்ப்படியாத மக்களாக இருக்கின்றார்கள்.”
قَالَ رَبِّ اِنِّیْ قَتَلْتُ مِنْهُمْ نَفْسًا فَاَخَافُ اَنْ یَّقْتُلُوْنِ ۟
மூஸா கூறினார்: “என் அதிபதியே! நான் அவர்களில் ஒருவனைக் கொன்று விட்டேன். எனவே, அவர்கள் என்னைக் கொன்றுவிடுவார்களோ என்று நான் அஞ்சுகின்றேன்.
وَاَخِیْ هٰرُوْنُ هُوَ اَفْصَحُ مِنِّیْ لِسَانًا فَاَرْسِلْهُ مَعِیَ رِدْاً یُّصَدِّقُنِیْۤ ؗ اِنِّیْۤ اَخَافُ اَنْ یُّكَذِّبُوْنِ ۟
மேலும், என்னுடைய சகோதரர் ஹாரூன் என்னைவிட அதிகமாக நாவன்மை உடையவர். அவரை உதவியாளர் எனும் முறையில் என்னுடன் அனுப்பிவைப்பாயாக! அவர் எனக்குத் துணையிருப்பார். என்னைப் பொய்யன் என்று அம்மக்கள் மறுத்துவிடுவார்களோ என்று நான் அஞ்சுகின்றேன்.”
قَالَ سَنَشُدُّ عَضُدَكَ بِاَخِیْكَ وَنَجْعَلُ لَكُمَا سُلْطٰنًا فَلَا یَصِلُوْنَ اِلَیْكُمَا ۛۚ بِاٰیٰتِنَاۤ ۛۚ اَنْتُمَا وَمَنِ اتَّبَعَكُمَا الْغٰلِبُوْنَ ۟
இறைவன் கூறினான்: “நாம் உம்முடைய சகோதரர் மூலம் உம்முடைய கையைப் பலப்படுத்துவோம். மேலும், நாம் உங்களிருவருக்கும் எத்தகைய அதிகாரத்தை வழங்குவோம் என்றால், உங்களுக்கு அவர்கள் எந்தத் தீங்கையும் செய்ய முடியாது. நம்முடைய சான்றுகளின் பலத்தினால் நீங்களிருவரும், உங்களைப் பின்பற்றுகின்றவர்களுமே வெற்றியார்களாய்த் திகழ்வீர்கள்!”
فَلَمَّا جَآءَهُمْ مُّوْسٰی بِاٰیٰتِنَا بَیِّنٰتٍ قَالُوْا مَا هٰذَاۤ اِلَّا سِحْرٌ مُّفْتَرًی وَّمَا سَمِعْنَا بِهٰذَا فِیْۤ اٰبَآىِٕنَا الْاَوَّلِیْنَ ۟
பிறகு, மூஸா தெளிவான சான்றுகளோடு அம்மக்களிடம் வந்தபோது, அவர்கள் கூறினார்கள்: “இது புனையப்பட்ட சூனியமேயன்றி வேறில்லை. எங்களுடைய முன்னோர்களின் காலத்தில்கூட இதனை நாங்கள் கேள்விப்பட்டதே இல்லை.”
وَقَالَ مُوْسٰی رَبِّیْۤ اَعْلَمُ بِمَنْ جَآءَ بِالْهُدٰی مِنْ عِنْدِهٖ وَمَنْ تَكُوْنُ لَهٗ عَاقِبَةُ الدَّارِ ؕ اِنَّهٗ لَا یُفْلِحُ الظّٰلِمُوْنَ ۟
அதற்கு மூஸா பதிலளித்தார்: “என்னுடைய இறைவன் தன்னிடமிருந்து நேர்வழியைப் பெற்று வந்தவரின் நிலை என்னவென்பதையும், இறுதி முடிவு எவருக்கு நல்லவிதமாக அமையும் என்பதையும் நன்கு அறிவான். உண்மையாக, கொடுமைக்காரர்கள் ஒருபோதும் வெற்றி பெறுவதில்லை.”
وَقَالَ فِرْعَوْنُ یٰۤاَیُّهَا الْمَلَاُ مَا عَلِمْتُ لَكُمْ مِّنْ اِلٰهٍ غَیْرِیْ ۚ فَاَوْقِدْ لِیْ یٰهَامٰنُ عَلَی الطِّیْنِ فَاجْعَلْ لِّیْ صَرْحًا لَّعَلِّیْۤ اَطَّلِعُ اِلٰۤی اِلٰهِ مُوْسٰی ۙ وَاِنِّیْ لَاَظُنُّهٗ مِنَ الْكٰذِبِیْنَ ۟
மேலும், ஃபிர்அவ்ன் கூறினான்: “அவையோரே! உங்களுக்கு என்னைத் தவிர வேறு இறைவன் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. ஹாமானே! களிமண்ணைச் சுட்டு கற்கள் தயாரித்து எனக்காக ஓர் உயர்ந்த கோபுரம் எழுப்பும். ஒருவேளை, அதன் மீதேறி நான் மூஸாவுடைய இறைவனைப் பார்க்கக்கூடும். திண்ணமாக, நான் அவரைப் பொய்யர் என்றே கருதுகின்றேன்.”
وَاسْتَكْبَرَ هُوَ وَجُنُوْدُهٗ فِی الْاَرْضِ بِغَیْرِ الْحَقِّ وَظَنُّوْۤا اَنَّهُمْ اِلَیْنَا لَا یُرْجَعُوْنَ ۟
அவனும் அவனுடைய படைகளும் பூமியில் நியாயமின்றித் தற்பெருமை கொண்டனர். மேலும், அவர்கள் எப்போதும் நம் பக்கம் திரும்பி வரவேண்டியதில்லை என்றும் கருதிக் கொண்டனர்.
فَاَخَذْنٰهُ وَجُنُوْدَهٗ فَنَبَذْنٰهُمْ فِی الْیَمِّ ۚ فَانْظُرْ كَیْفَ كَانَ عَاقِبَةُ الظّٰلِمِیْنَ ۟
இறுதியில் நாம் அவனையும் அவனுடைய படைகளையும் பிடித்தோம்; அவர்களைக் கடலில் சிதறடித்தோம். இப்போது பார்த்துக் கொள்ளுங்கள், அந்தக் கொடுமைக்காரர்களின் கதி என்னவாயிற்று என்பதை!
وَجَعَلْنٰهُمْ اَىِٕمَّةً یَّدْعُوْنَ اِلَی النَّارِ ۚ وَیَوْمَ الْقِیٰمَةِ لَا یُنْصَرُوْنَ ۟
நாம் அவர்களை நரகத்தின் பக்கம் அழைக்கும் தலைவர்களாக ஆக்கினோம். மேலும், மறுமைநாளில் எங்கிருந்தும் எவ்வித உதவியும் அவர்களால் பெறமுடியாது.
وَاَتْبَعْنٰهُمْ فِیْ هٰذِهِ الدُّنْیَا لَعْنَةً ۚ وَیَوْمَ الْقِیٰمَةِ هُمْ مِّنَ الْمَقْبُوْحِیْنَ ۟۠
இவ்வுலகில் சாபம் அவர்களைத் தொடரும்படிச் செய்தோம். மேலும், மறுமைநாளில் அவர்கள் மிகவும் அருவருப்பான நிலைக்கு ஆளாவார்கள்.
وَلَقَدْ اٰتَیْنَا مُوْسَی الْكِتٰبَ مِنْ بَعْدِ مَاۤ اَهْلَكْنَا الْقُرُوْنَ الْاُوْلٰی بَصَآىِٕرَ لِلنَّاسِ وَهُدًی وَّرَحْمَةً لَّعَلَّهُمْ یَتَذَكَّرُوْنَ ۟
மேலும், முந்தைய தலைமுறையினரை அழித்த பிறகு, நாம் மூஸாவுக்கு வேதத்தை வழங்கினோம் மக்களுக்கு அறிவொளி ஊட்டக்கூடியதாகவும் வழிகாட்டக் கூடியதாகவும் கருணையாகவும் அது திகழ்ந்தது மக்கள் படிப்பினை பெறக்கூடும் என்பதற்காக!
وَمَا كُنْتَ بِجَانِبِ الْغَرْبِیِّ اِذْ قَضَیْنَاۤ اِلٰی مُوْسَی الْاَمْرَ وَمَا كُنْتَ مِنَ الشّٰهِدِیْنَ ۟ۙ
மேலும் (நபியே!) நாம் மூஸாவுக்கு இந்த ஷரீஅத் சட்டத்தை வழங்கியபோது நீர் அந்த மேற்குப் பகுதியில் இருக்கவில்லை. சாட்சியாளர்களில் ஒருவராயும் இருக்கவில்லை.
وَلٰكِنَّاۤ اَنْشَاْنَا قُرُوْنًا فَتَطَاوَلَ عَلَیْهِمُ الْعُمُرُ ۚ وَمَا كُنْتَ ثَاوِیًا فِیْۤ اَهْلِ مَدْیَنَ تَتْلُوْا عَلَیْهِمْ اٰیٰتِنَا ۙ وَلٰكِنَّا كُنَّا مُرْسِلِیْنَ ۟
ஆயினும், அதன் பின்னர் (உமது காலம் வரை) நாம் பற்பல தலைமுறையினரைத் தோற்றுவித்திருக்கின்றோம். மேலும், அவர்கள் மீது காலங்கள் பல உருண்டு சென்றன. மேலும், நீர் மத்யன்வாசிகளிடையே, அவர்களுக்கு நம்முடைய வசனங்களை ஓதிக்காண்பிப்பவராயும் இருக்கவில்லை. ஆயினும் (அக்காலத்தில் நிகழ்ந்த இந்தச் செய்திகளையெல்லாம்) அனுப்பித் தருவது நாம்தான்!
وَمَا كُنْتَ بِجَانِبِ الطُّوْرِ اِذْ نَادَیْنَا وَلٰكِنْ رَّحْمَةً مِّنْ رَّبِّكَ لِتُنْذِرَ قَوْمًا مَّاۤ اَتٰىهُمْ مِّنْ نَّذِیْرٍ مِّنْ قَبْلِكَ لَعَلَّهُمْ یَتَذَكَّرُوْنَ ۟
மேலும், நாம் (முதன்முறையாக மூஸாவை) அழைத்தபோதும் ‘தூர்’ அருகில் நீர் இருக்கவில்லை. ஆயினும், (இந்த விவரங்களை இவ்வாறு உமக்குத் தெரியப்படுத்துவது) உம் இறைவனின் கருணையாகும்; எதற்காகவெனில், உமக்கு முன்பு எந்த எச்சரிக்கையாளரும் வந்திராத இந்தச் சமூகத்தினரை அவர்கள் நல்லுணர்வு பெறும் பொருட்டு நீர் எச்சரிக்கை செய்வதற்காக!
وَلَوْلَاۤ اَنْ تُصِیْبَهُمْ مُّصِیْبَةٌ بِمَا قَدَّمَتْ اَیْدِیْهِمْ فَیَقُوْلُوْا رَبَّنَا لَوْلَاۤ اَرْسَلْتَ اِلَیْنَا رَسُوْلًا فَنَتَّبِعَ اٰیٰتِكَ وَنَكُوْنَ مِنَ الْمُؤْمِنِیْنَ ۟
மேலும், (இவ்வாறு நாம் செய்தது) அவர்கள் செய்த தீவினைகளின் காரணமாக ஏதேனும் துன்பம் அவர்களுக்கு வந்தால் அவர்கள், “எங்கள் இறைவனே! நீ யாரேனும் ஒரு தூதரை எங்களிடம் ஏன் அனுப்பவில்லை? நாங்கள் உன்னுடைய வசனங்களைப் பின்பற்றி நம்பிக்கையாளர்களோடு சேர்ந்திருப்போமே!” என்று கூறாமல் இருப்பதற்காகத்தான்.
فَلَمَّا جَآءَهُمُ الْحَقُّ مِنْ عِنْدِنَا قَالُوْا لَوْلَاۤ اُوْتِیَ مِثْلَ مَاۤ اُوْتِیَ مُوْسٰی ؕ اَوَلَمْ یَكْفُرُوْا بِمَاۤ اُوْتِیَ مُوْسٰی مِنْ قَبْلُ ۚ قَالُوْا سِحْرٰنِ تَظٰهَرَا ۥ۫ وَقَالُوْۤا اِنَّا بِكُلٍّ كٰفِرُوْنَ ۟
ஆனால், நம்மிடமிருந்து சத்தியம் அவர்களிடம் வந்தபோது அவர்கள் கேட்கலானார்கள்: “மூஸாவுக்கு வழங்கப்பட்டிருந்ததைப் போன்று இவருக்கு ஏன் வழங்கப்பட வில்லை?” முன்னர் மூஸாவுக்கு வழங்கப்பட்டிருந்ததை இவர்கள் நிராகரித்திடவில்லையா? இவர்கள் கூறினார்கள்: “இரண்டும் ஒன்றுக்கொன்று உதவுகின்ற இரு சூனியங்கள்.” மேலும், கூறினார்கள்: “நாங்கள் எதையும் நம்பக்கூடியவர்களல்லர்.”
قُلْ فَاْتُوْا بِكِتٰبٍ مِّنْ عِنْدِ اللّٰهِ هُوَ اَهْدٰی مِنْهُمَاۤ اَتَّبِعْهُ اِنْ كُنْتُمْ صٰدِقِیْنَ ۟
(நபியே! இவர்களிடம்) கூறுங்கள்: “நீங்கள் உண்மையாளர்களாயின், இவ்விரண்டையும் விட அதிக அளவு நேர்வழிகாட்டும் வேதம் ஒன்றை அல்லாஹ்விடமிருந்து கொண்டுவாருங்கள். நான் அதனைப் பின்பற்றுகின்றேன்.”
فَاِنْ لَّمْ یَسْتَجِیْبُوْا لَكَ فَاعْلَمْ اَنَّمَا یَتَّبِعُوْنَ اَهْوَآءَهُمْ ؕ وَمَنْ اَضَلُّ مِمَّنِ اتَّبَعَ هَوٰىهُ بِغَیْرِ هُدًی مِّنَ اللّٰهِ ؕ اِنَّ اللّٰهَ لَا یَهْدِی الْقَوْمَ الظّٰلِمِیْنَ ۟۠
உம்முடைய இந்தக் கோரிக்கையை அவர்கள் நிறைவேற்றவில்லையாயின், அவர்கள் தங்களின் மன இச்சைகளைத்தான் பின்பற்றுகின்றனர் என்பதைப் புரிந்து கொள்ளும். மேலும், அல்லாஹ்வின் வழிகாட்டலின்றி தன்னுடைய மன இச்சைகளை மட்டுமே பின்பற்றி வாழ்கின்றவனைவிட வழிகெட்டவன் யார்? இத்தகைய கொடுமைக்காரர்களுக்கு அல்லாஹ் ஒருபோதும் நேர்வழி காட்டுவதில்லை.
وَلَقَدْ وَصَّلْنَا لَهُمُ الْقَوْلَ لَعَلَّهُمْ یَتَذَكَّرُوْنَ ۟ؕ
மேலும், தொடர்ந்து (அறிவுரை மிக்க) வார்த்தைகளை அவர்களுக்குக் கிடைக்கச் செய்திருக்கின்றோம்; அவர்கள் அலட்சியத்திலிருந்து விழித்தெழ வேண்டும் என்பதற்காக!
اَلَّذِیْنَ اٰتَیْنٰهُمُ الْكِتٰبَ مِنْ قَبْلِهٖ هُمْ بِهٖ یُؤْمِنُوْنَ ۟
இதற்கு முன்பு எவர்களுக்கு நாம் வேதம் வழங்கியிருந்தோமோ அவர்கள் குர்ஆன் ஆகிய இதன் மீது நம்பிக்கை கொள்கின்றார்கள்.
وَاِذَا یُتْلٰی عَلَیْهِمْ قَالُوْۤا اٰمَنَّا بِهٖۤ اِنَّهُ الْحَقُّ مِنْ رَّبِّنَاۤ اِنَّا كُنَّا مِنْ قَبْلِهٖ مُسْلِمِیْنَ ۟
மேலும், இந்த வேதம் அவர்களுக்கு ஓதிக் காண்பிக்கப்படும் போது, “நாங்கள் இதன்மீது நம்பிக்கை கொண்டோம். உண்மையாக, இது எங்கள் இறைவனிடமிருந்து வந்த சத்தியமாகும். நாங்களோ முன்பிருந்தே முஸ்லிம்களாக கீழ்ப்படிந்தவர்களாக இருந்து வருகின்றோம்” என்று கூறுகின்றார்கள்.
اُولٰٓىِٕكَ یُؤْتَوْنَ اَجْرَهُمْ مَّرَّتَیْنِ بِمَا صَبَرُوْا وَیَدْرَءُوْنَ بِالْحَسَنَةِ السَّیِّئَةَ وَمِمَّا رَزَقْنٰهُمْ یُنْفِقُوْنَ ۟
அவர்கள் நிலைகுலையாமல் இருந்ததற்குப் பகரமாக அவர்களுடைய கூலி அவர்களுக்கு இரு தடவை வழங்கப்படும். மேலும், அவர்கள் தீமையை நன்மையின் மூலம் தடுக்கின்றார்கள், மேலும், நாம் அவர்களுக்கு வழங்கியவற்றிலிருந்து செலவு செய்கின்றார்கள்.
وَاِذَا سَمِعُوا اللَّغْوَ اَعْرَضُوْا عَنْهُ وَقَالُوْا لَنَاۤ اَعْمَالُنَا وَلَكُمْ اَعْمَالُكُمْ ؗ سَلٰمٌ عَلَیْكُمْ ؗ لَا نَبْتَغِی الْجٰهِلِیْنَ ۟
இன்னும் அவர்கள் வீணானவற்றைச் செவியுற்றால் அவற்றை விட்டு விலகிவிடுகின்றார்கள். மேலும், கூறுகின்றார்கள்: “எங்களுடைய செயல் எங்களுக்கு; உங்களுடைய செயல் உங்களுக்கு! உங்களுக்கு சாந்தி உண்டாகுக! நாங்கள் அறிவீனர்களின் நடத்தையை மேற்கொள்ள விரும்புவதில்லை.”
اِنَّكَ لَا تَهْدِیْ مَنْ اَحْبَبْتَ وَلٰكِنَّ اللّٰهَ یَهْدِیْ مَنْ یَّشَآءُ ۚ وَهُوَ اَعْلَمُ بِالْمُهْتَدِیْنَ ۟
(நபியே!) நீர் விரும்புகின்றவருக்கு நேர்வழி காட்டிட உம்மால் முடியாது. ஆயினும், அல்லாஹ் தான் நாடுவோருக்கு வழிகாட்டுதலை அளிக்கின்றான். மேலும், வழிகாட்டுதலைப் பெறக்கூடியவர்களை அவன் நன்கறிகின்றான்.
وَقَالُوْۤا اِنْ نَّتَّبِعِ الْهُدٰی مَعَكَ نُتَخَطَّفْ مِنْ اَرْضِنَا ؕ اَوَلَمْ نُمَكِّنْ لَّهُمْ حَرَمًا اٰمِنًا یُّجْبٰۤی اِلَیْهِ ثَمَرٰتُ كُلِّ شَیْءٍ رِّزْقًا مِّنْ لَّدُنَّا وَلٰكِنَّ اَكْثَرَهُمْ لَا یَعْلَمُوْنَ ۟
மேலும்; அவர்கள் கூறுகின்றார்கள்: “நாங்கள் உம்முடன் சேர்ந்து இந்த வழிகாட்டுதலைப் பின்பற்றினால், எங்கள் பூமியிலிருந்து நாங்கள் இறாஞ்சிக்கொண்டு செல்லப்பட்டு விடுவோம்.” அமைதி நிறைந்த ஹரம்* பகுதியை அவர்களுக்கு நாம் தங்குமிடமாக்கிக் கொடுக்கவில்லையா? நம்மிடமிருந்து உணவு எனும் முறையில் அனைத்துவிதமான கனிகளும் அதன் பக்கம் கொண்டுவரப்படவில்லையா? ஆயினும், அவர்களில் பெரும்பாலோர் அறிந்துகொள்வதில்லை!
وَكَمْ اَهْلَكْنَا مِنْ قَرْیَةٍ بَطِرَتْ مَعِیْشَتَهَا ۚ فَتِلْكَ مَسٰكِنُهُمْ لَمْ تُسْكَنْ مِّنْ بَعْدِهِمْ اِلَّا قَلِیْلًا ؕ وَكُنَّا نَحْنُ الْوٰرِثِیْنَ ۟
மேலும், எத்தனையோ ஊர்களை நாம் அழித்து விட்டிருக்கின்றோம். அந்த ஊர் மக்கள் தங்களுடைய அதிகப்படியான வாழ்க்கை வசதிகள் குறித்து கர்வம் கொண்டிருந்தார்கள். (இதோ! பார்த்துக்கொள்ளுங்கள்) இவை அவர்கள் குடியிருந்த இல்லங்கள். இவற்றில் அவர்களுக்குப் பின்னர் யாருமே வசிக்கவில்லை ஒரு சிலரைத் தவிர! இறுதியில் நாமே வாரிசுகளாகிவிட்டோம்.
وَمَا كَانَ رَبُّكَ مُهْلِكَ الْقُرٰی حَتّٰی یَبْعَثَ فِیْۤ اُمِّهَا رَسُوْلًا یَّتْلُوْا عَلَیْهِمْ اٰیٰتِنَا ۚ وَمَا كُنَّا مُهْلِكِی الْقُرٰۤی اِلَّا وَاَهْلُهَا ظٰلِمُوْنَ ۟
மேலும், உம் இறைவன் எந்த ஊர்களையும் அழிப்பவனாக இருந்ததில்லை, அவற்றின் மத்தியில் மக்களுக்கு நம்முடைய வசனங்களை ஓதிக்காட்டும் தூதர் ஒருவரை அனுப்பாதவரையில்! ஊரில் வாழ்பவர்கள் கொடுமை புரிபவர்களாய் இருந்தாலே தவிர, அந்த ஊர்களை நாம் அழிப்பவர்களல்லர்!
وَمَاۤ اُوْتِیْتُمْ مِّنْ شَیْءٍ فَمَتَاعُ الْحَیٰوةِ الدُّنْیَا وَزِیْنَتُهَا ۚ وَمَا عِنْدَ اللّٰهِ خَیْرٌ وَّاَبْقٰی ؕ اَفَلَا تَعْقِلُوْنَ ۟۠
உங்களுக்கு வழங்கப்பட்டிருப்பவை யாவும் உலக வாழ்வின் சாதனங்களும் அதன் அலங்காரமும்தான்! ஆனால், அல்லாஹ்விடம் இருப்பதுதான் இவற்றை விடச் சிறந்ததும் நிலையானதுமாகும். நீங்கள் சிந்தித்துணரமாட்டீர்களா?
اَفَمَنْ وَّعَدْنٰهُ وَعْدًا حَسَنًا فَهُوَ لَاقِیْهِ كَمَنْ مَّتَّعْنٰهُ مَتَاعَ الْحَیٰوةِ الدُّنْیَا ثُمَّ هُوَ یَوْمَ الْقِیٰمَةِ مِنَ الْمُحْضَرِیْنَ ۟
எவனுக்கு நாம் நல்ல வாக்குறுதி அளித்து, அவன் அதனை அடையவும் இருக்கின்றானோ அவன், நாம் உலக வாழ்க்கையின் வசதிகளை மட்டும் வழங்கி, பிறகு மறுமைநாளில் தண்டனைக்காகக் கொண்டு வரப்பட இருக்கின்றவனுக்கு சமம் ஆவானா?
وَیَوْمَ یُنَادِیْهِمْ فَیَقُوْلُ اَیْنَ شُرَكَآءِیَ الَّذِیْنَ كُنْتُمْ تَزْعُمُوْنَ ۟
மேலும், அந்த மறுமைநாளினை (இவர்கள் மறந்துவிடக் கூடாது). அன்று இறைவன் இவர்களை அழைத்துக் கேட்பான்: “எனக்கு யாரை இணையானவர்களென்று நீங்கள் எண்ணிக் கொண்டிருந்தீர்களோ அவர்கள் எங்கே?”
قَالَ الَّذِیْنَ حَقَّ عَلَیْهِمُ الْقَوْلُ رَبَّنَا هٰۤؤُلَآءِ الَّذِیْنَ اَغْوَیْنَا ۚ اَغْوَیْنٰهُمْ كَمَا غَوَیْنَا ۚ تَبَرَّاْنَاۤ اِلَیْكَ ؗ مَا كَانُوْۤا اِیَّانَا یَعْبُدُوْنَ ۟
இந்தக் கேள்வி எவர்களுக்குப் பொருந்துமோ அவர்கள் கூறுவார்கள்: “எங்கள் இறைவா! திண்ணமாக, நாங்கள் வழிகெடுத்தது இவர்களைத்தாம்! நாங்கள் எவ்வாறு வழிகெட்டுப் போனோமோ அவ்வாறே இவர்களையும் வழிகெடுத்தோம். இதற்கு நாங்கள் பொறுப்பல்ல என்று உன் முன்னிலையில் முறையிடுகின்றோம். இவர்கள் எங்களை ஒன்றும் வணங்கிக் கொண்டிருக்கவில்லை.
وَقِیْلَ ادْعُوْا شُرَكَآءَكُمْ فَدَعَوْهُمْ فَلَمْ یَسْتَجِیْبُوْا لَهُمْ وَرَاَوُا الْعَذَابَ ۚ لَوْ اَنَّهُمْ كَانُوْا یَهْتَدُوْنَ ۟
பின்னர், இவர்களிடம் கூறப்படும்: “நீங்கள் எனக்கு இணையாக ஏற்படுத்திய தெய்வங்களை அழையுங்கள்”. அப்போது இவர்கள் அவர்களை அழைப்பார்கள். ஆயினும், அவர்கள் இவர்களுக்கு யாதொரு பதிலும் அளிக்கமாட்டார்கள். மேலும், இந்த மக்கள் வேதனையைக் கண்டுகொள்வார்கள். அந்தோ! இவர்கள் வழிகாட்டுதலைப் பின்பற்றுவோராய் இருந்திருக்க வேண்டுமே!
وَیَوْمَ یُنَادِیْهِمْ فَیَقُوْلُ مَاذَاۤ اَجَبْتُمُ الْمُرْسَلِیْنَ ۟
மேலும், அந்நாளை (இவர்கள் மறந்துவிடக் கூடாது). அன்று இறைவன் இவர்களை அழைத்து, “இறைதூதர்களுக்கு நீங்கள் என்ன பதில் அளித்தீர்கள்?” என்று கேட்பான்.
فَعَمِیَتْ عَلَیْهِمُ الْاَنْۢبَآءُ یَوْمَىِٕذٍ فَهُمْ لَا یَتَسَآءَلُوْنَ ۟
அந்நேரம் அதற்கு என்ன பதில் அளிப்பது என்றே அவர்களுக்குப் புலப்படாது. தங்களிடையே பரஸ்பரம் ஒருவர் மற்றவரிடம் கேட்கவும் முடியாது.
فَاَمَّا مَنْ تَابَ وَاٰمَنَ وَعَمِلَ صَالِحًا فَعَسٰۤی اَنْ یَّكُوْنَ مِنَ الْمُفْلِحِیْنَ ۟
ஆயினும், எவர் (இன்று) பாவமன்னிப்புக் கோரி, நம்பிக்கை கொண்டு நற்செயலும் புரிந்தாரோ அவர்தாம் (அங்கு) வெற்றி அடைந்தவராவார்.
وَرَبُّكَ یَخْلُقُ مَا یَشَآءُ وَیَخْتَارُ ؕ مَا كَانَ لَهُمُ الْخِیَرَةُ ؕ سُبْحٰنَ اللّٰهِ وَتَعٰلٰی عَمَّا یُشْرِكُوْنَ ۟
மேலும், உம்முடைய இறைவன் தான் நாடுவதைப் படைக்கின்றான். மேலும், (தன்னுடைய பணிக்காகத் தான் நாடுவோரைத்) தேர்ந்தெடுத்துக் கொள்கின்றான். இப்படித் தேர்ந்தெடுப்பது, இவர்கள் செய்கின்ற பணியன்று; அல்லாஹ் தூய்மையானவன்; மிகவும் உயர்ந்தவன், இவர்கள் செய்யும் இணைவைப்புச் செயல்களிலிருந்து!
وَرَبُّكَ یَعْلَمُ مَا تُكِنُّ صُدُوْرُهُمْ وَمَا یُعْلِنُوْنَ ۟
இவர்கள் தங்கள் உள்ளங்களில் மறைத்து வைத்திருப்பவற்றையும், வெளிப்படுத்துகின்றவற்றையும் உம்முடைய இறைவன் அறிவான்.
وَهُوَ اللّٰهُ لَاۤ اِلٰهَ اِلَّا هُوَ ؕ لَهُ الْحَمْدُ فِی الْاُوْلٰی وَالْاٰخِرَةِ ؗ وَلَهُ الْحُكْمُ وَاِلَیْهِ تُرْجَعُوْنَ ۟
அவனே, அல்லாஹ்! வணக்கத்திற்குரிய இறைவன் அவனைத் தவிர வேறு யாருமில்லை. அனைத்துப் புகழும் அவனுக்கே. இம்மையிலும் மறுமையிலும் ஆட்சியதிகாரம் அவனுக்கே உரியதாகும். மேலும், அவனிடமே நீங்கள் அனைவரும் திரும்பக் கொண்டுவரப்படுவீர்கள்.
قُلْ اَرَءَیْتُمْ اِنْ جَعَلَ اللّٰهُ عَلَیْكُمُ الَّیْلَ سَرْمَدًا اِلٰی یَوْمِ الْقِیٰمَةِ مَنْ اِلٰهٌ غَیْرُ اللّٰهِ یَاْتِیْكُمْ بِضِیَآءٍ ؕ اَفَلَا تَسْمَعُوْنَ ۟
(நபியே! இவர்களிடம்) கேளும்: “நீங்கள் என்றேனும் சிந்தித்ததுண்டா? அல்லாஹ் இரவை உங்கள் மீது மறுமைநாள் வரை நிரந்தரமானதாக்கி இருந்தால், அல்லாஹ்வைத் தவிர வேறு எந்தக் கடவுளால்தான் உங்களுக்கு ஒளியைக் கொண்டுவர முடியும்? நீங்கள் செவியேற்பதில்லையா?”
قُلْ اَرَءَیْتُمْ اِنْ جَعَلَ اللّٰهُ عَلَیْكُمُ النَّهَارَ سَرْمَدًا اِلٰی یَوْمِ الْقِیٰمَةِ مَنْ اِلٰهٌ غَیْرُ اللّٰهِ یَاْتِیْكُمْ بِلَیْلٍ تَسْكُنُوْنَ فِیْهِ ؕ اَفَلَا تُبْصِرُوْنَ ۟
மேலும், இவர்களிடம் கேளும்: “நீங்கள் என்றேனும் சிந்தித்ததுண்டா? அல்லாஹ் பகலை மறுமை நாள் வரை உங்களுக்கு நிரந்தரமானதாக ஆக்கியிருந்தால், நீங்கள் அமைதி பெறுகின்ற இரவை உங்களுக்கு அல்லாஹ்வைத் தவிர வேறு எந்தக் கடவுளால் கொண்டு வரமுடியும்? என்ன, உங்களுக்குப் புலப்படவில்லையா?
وَمِنْ رَّحْمَتِهٖ جَعَلَ لَكُمُ الَّیْلَ وَالنَّهَارَ لِتَسْكُنُوْا فِیْهِ وَلِتَبْتَغُوْا مِنْ فَضْلِهٖ وَلَعَلَّكُمْ تَشْكُرُوْنَ ۟
அவன் தன்னுடைய கருணையினால்தான் உங்களுக்காக இரவையும் பகலையும் படைத்திருக்கின்றான். இரவில் நீங்கள் அமைதி பெற வேண்டும். மேலும், பகலில் அவனுடைய அருட் கொடையை நீங்கள் தேட வேண்டும்: அதனால் நீங்கள் நன்றி செலுத்துவோராய்த் திகழக்கூடும் என்பதற்காக!
وَیَوْمَ یُنَادِیْهِمْ فَیَقُوْلُ اَیْنَ شُرَكَآءِیَ الَّذِیْنَ كُنْتُمْ تَزْعُمُوْنَ ۟
மேலும், அந்நாளை (இவர்கள் நினைவில் வைக்க வேண்டும்). அன்று இறைவன் இவர்களை அழைத்துக் கேட்பான்: “எனக்கு இணை ஆனவர்கள் என்று நீங்கள் யாரைக் குறித்து எண்ணிக்கொண்டு இருந்தீர்களோ அவர்கள் எங்கே?”
وَنَزَعْنَا مِنْ كُلِّ اُمَّةٍ شَهِیْدًا فَقُلْنَا هَاتُوْا بُرْهَانَكُمْ فَعَلِمُوْۤا اَنَّ الْحَقَّ لِلّٰهِ وَضَلَّ عَنْهُمْ مَّا كَانُوْا یَفْتَرُوْنَ ۟۠
மேலும், நாம் ஒவ்வொரு சமுதாயத்திலிருந்தும் ஒரு சாட்சியாளரை வெளிக் கொணர்வோம்; பிறகு கூறுவோம்: “இப்போது கொண்டு வாருங்கள் உங்களுடைய ஆதாரத்தை!” அப்போது, உண்மை அல்லாஹ்வின் பக்கம் உள்ளது என்பது அவர்களுக்குத் தெரிந்துவிடும். அவர்கள் புனைந்து கூறிக்கொண்டிருந்த அனைத்தும் அவர்களைவிட்டு மறைந்து போகும்!
اِنَّ قَارُوْنَ كَانَ مِنْ قَوْمِ مُوْسٰی فَبَغٰی عَلَیْهِمْ ۪ وَاٰتَیْنٰهُ مِنَ الْكُنُوْزِ مَاۤ اِنَّ مَفَاتِحَهٗ لَتَنُوْٓاُ بِالْعُصْبَةِ اُولِی الْقُوَّةِ ۗ اِذْ قَالَ لَهٗ قَوْمُهٗ لَا تَفْرَحْ اِنَّ اللّٰهَ لَا یُحِبُّ الْفَرِحِیْنَ ۟
உண்மை யாதெனில், காரூன், மூஸாவின் சமுதாயத்தைச் சேர்ந்தவன். அவன் தன் சமூகத்திற்கு எதிராக வரம்புமீறி நடந்தான். மேலும், நாம் அவனுக்கு எந்த அளவுக்கு செல்வக் கருவூலங்களை வழங்கியிருந்தோமெனில், அவற்றின் சாவிகளை பலசாலிகளின் ஒரு குழுவால்கூட சிரமப்பட்டுத்தான் தூக்க முடியும். ஒரு தடவை அவனுடைய சமூகத்தார் அவனிடம் கூறினார்கள். “நீ பூரித்து விடாதே! ஏனெனில், பூரித்திருப்பவர்களை அல்லாஹ் நேசிப்பதில்லை.
وَابْتَغِ فِیْمَاۤ اٰتٰىكَ اللّٰهُ الدَّارَ الْاٰخِرَةَ وَلَا تَنْسَ نَصِیْبَكَ مِنَ الدُّنْیَا وَاَحْسِنْ كَمَاۤ اَحْسَنَ اللّٰهُ اِلَیْكَ وَلَا تَبْغِ الْفَسَادَ فِی الْاَرْضِ ؕ اِنَّ اللّٰهَ لَا یُحِبُّ الْمُفْسِدِیْنَ ۟
அல்லாஹ் உனக்கு வழங்கியுள்ள செல்வத்தின் மூலம் மறுமையின் வீட்டைப்பெற அக்கறை கொள்; மேலும் இம்மையிலும் உனது பங்கை மறந்துவிடாதே! மேலும், அல்லாஹ் உனக்கு உதவி செய்திருப்பது போல் நீயும் உதவி செய். மேலும், பூமியில் அராஜகம் விளைவிக்க முயற்சி செய்யாதே! அராஜகம் விளைவிப்பவர்களைத் திண்ணமாக அல்லாஹ் நேசிப்பதில்லை.”
قَالَ اِنَّمَاۤ اُوْتِیْتُهٗ عَلٰی عِلْمٍ عِنْدِیْ ؕ اَوَلَمْ یَعْلَمْ اَنَّ اللّٰهَ قَدْ اَهْلَكَ مِنْ قَبْلِهٖ مِنَ الْقُرُوْنِ مَنْ هُوَ اَشَدُّ مِنْهُ قُوَّةً وَّاَكْثَرُ جَمْعًا ؕ وَلَا یُسْـَٔلُ عَنْ ذُنُوْبِهِمُ الْمُجْرِمُوْنَ ۟
அதற்கவன், “இவையனைத்தும் என்னிடமுள்ள அறிவினால்தான் எனக்குக் கிடைத்திருக்கின்றன!” என்றான். அவனுக்கு முன்னால் அவனைவிட அதிக வலிமையையும் ஆள் பலத்தையும் பெற்றிருந்த சமூகங்களை அல்லாஹ் அழித்திருக்கின்றான் என்பது இவனுக்குத் தெரியாதா? மேலும், குற்றவாளிகளிடம் அவர்களின் பாவங்கள் பற்றிக் கேட்கப்படுவதில்லை.
فَخَرَجَ عَلٰی قَوْمِهٖ فِیْ زِیْنَتِهٖ ؕ قَالَ الَّذِیْنَ یُرِیْدُوْنَ الْحَیٰوةَ الدُّنْیَا یٰلَیْتَ لَنَا مِثْلَ مَاۤ اُوْتِیَ قَارُوْنُ ۙ اِنَّهٗ لَذُوْ حَظٍّ عَظِیْمٍ ۟
(ஒருநாள்) அவன் தன்னுடைய முழு அலங்கார மிடுக்குடன் தன் சமூகத்தார் முன்னிலையில் வந்தான். எவர்கள் உலக வாழ்க்கையை விரும்புவோராய் இருந்தனரோ அவர்கள் (அவனைப் பார்த்து) கூறலானார்கள்: “ஆஹா! காரூனுக்கு வழங்கப்பட்டிருப்பதைப் போன்று நமக்கும் கிடைத்திட வேண்டுமே! அவன் மகத்தான பாக்கியசாலிதான்!”
وَقَالَ الَّذِیْنَ اُوْتُوا الْعِلْمَ وَیْلَكُمْ ثَوَابُ اللّٰهِ خَیْرٌ لِّمَنْ اٰمَنَ وَعَمِلَ صَالِحًا ۚ وَلَا یُلَقّٰىهَاۤ اِلَّا الصّٰبِرُوْنَ ۟
ஆயினும் ஞானம் வழங்கப்பட்டவர்கள் கூறலானார்கள்: “உங்கள் நிலை குறித்து வருந்துகின்றோம். நம்பிக்கை கொண்டு நற்செயல் புரிந்தோருக்கு அல்லாஹ்வின் நற்கூலி சிறந்ததாகும். மேலும், பொறுமையை மேற்கொள்கின்றவர்களுக்குத்தான் இந்த நற்பாக்கியம் கிடைக்கும்.”
فَخَسَفْنَا بِهٖ وَبِدَارِهِ الْاَرْضَ ۫ فَمَا كَانَ لَهٗ مِنْ فِئَةٍ یَّنْصُرُوْنَهٗ مِنْ دُوْنِ اللّٰهِ ۗ وَمَا كَانَ مِنَ الْمُنْتَصِرِیْنَ ۟
இறுதியில், நாம் அவனையும் அவனுடைய வீட்டையும் பூமியில் புதைத்துவிட்டோம். அல்லாஹ்வுக்கு எதிராக அவனுக்கு உதவி செய்யும் கூட்டத்தார் எவரும் அவனுக்கு இருக்கவில்லை. தனக்குத்தானே உதவி செய்து கொள்ளக்கூடியவனாகவும் அவன் இல்லை.
وَاَصْبَحَ الَّذِیْنَ تَمَنَّوْا مَكَانَهٗ بِالْاَمْسِ یَقُوْلُوْنَ وَیْكَاَنَّ اللّٰهَ یَبْسُطُ الرِّزْقَ لِمَنْ یَّشَآءُ مِنْ عِبَادِهٖ وَیَقْدِرُ ۚ لَوْلَاۤ اَنْ مَّنَّ اللّٰهُ عَلَیْنَا لَخَسَفَ بِنَا ؕ وَیْكَاَنَّهٗ لَا یُفْلِحُ الْكٰفِرُوْنَ ۟۠
நேற்று அவன் பெற்ற அந்தஸ்தை அடைய ஏக்கம் கொண்டிருந்த அதே ஆட்கள் இப்போது கூற ஆரம்பித்தார்கள்: “ஐயகோ! நாம் மறந்துவிட்டிருந்தோம், அல்லாஹ் தன்னுடைய அடியார்களில் தான் நாடுவோர்க்கு வாழ்வாதாரத்தைத் தாராளமாக வழங்குகின்றான்; மேலும், தான் நாடுவோர்க்கு அளவோடு கொடுக்கின்றான் என்பதை! அல்லாஹ் எங்களுக்கு உதவி செய்திராவிட்டால், எங்களையும் பூமியில் புதைத்திருப்பான். ஐயகோ! நிராகரிப்பாளர்கள் வெற்றியடைவதில்லை என்பது எங்களுக்கு நினைவில்லாமல் போய்விட்டதே!”
تِلْكَ الدَّارُ الْاٰخِرَةُ نَجْعَلُهَا لِلَّذِیْنَ لَا یُرِیْدُوْنَ عُلُوًّا فِی الْاَرْضِ وَلَا فَسَادًا ؕ وَالْعَاقِبَةُ لِلْمُتَّقِیْنَ ۟
அந்த மறுமை வீட்டையோ எவர்கள் உலகில் பெருமையடிக்கவும் அராஜகம் விளைவிக்கவும் விரும்பமாட்டார்களோ அவர்களுக்கே உரித்தானதாக்கி வைத்துள்ளோம். மேலும், இறுதியில் நல்ல முடிவு இறையச்சமுள்ளவர்களுக்கே இருக்கிறது.
مَنْ جَآءَ بِالْحَسَنَةِ فَلَهٗ خَیْرٌ مِّنْهَا ۚ وَمَنْ جَآءَ بِالسَّیِّئَةِ فَلَا یُجْزَی الَّذِیْنَ عَمِلُوا السَّیِّاٰتِ اِلَّا مَا كَانُوْا یَعْمَلُوْنَ ۟
ஒருவர் நன்மையைக் கொண்டு வருவாராயின், அவருக்கு அதைவிடச் சிறந்த நன்மை இருக்கின்றது. எவரேனும் தீமையைக் கொண்டுவருவாராயின், தீமைகள் செய்வோருக்கு அவர்கள் செய்துகொண்டிருந்த தீமைகளின் கூலியே கொடுக்கப்படும்.
اِنَّ الَّذِیْ فَرَضَ عَلَیْكَ الْقُرْاٰنَ لَرَآدُّكَ اِلٰی مَعَادٍ ؕ قُلْ رَّبِّیْۤ اَعْلَمُ مَنْ جَآءَ بِالْهُدٰی وَمَنْ هُوَ فِیْ ضَلٰلٍ مُّبِیْنٍ ۟
(நபியே! உறுதியாய் அறிந்து கொள்வீராக!) இந்தக் குர்ஆனை உம்மீது கடமையாக்கியவன் உம்மை ஒரு நல்ல முடிவின் பக்கம் கொண்டு செல்வான். (இம்மக்களிடம்) கூறுவீராக: “வழிகாட்டுதலைக் கொண்டு வந்திருப்பவன் யார்; வெளிப்படையான வழிகேட்டில் வீழ்ந்து கிடப்பவன் யார் என்று என் அதிபதி நன்கு அறிவான்.”
وَمَا كُنْتَ تَرْجُوْۤا اَنْ یُّلْقٰۤی اِلَیْكَ الْكِتٰبُ اِلَّا رَحْمَةً مِّنْ رَّبِّكَ فَلَا تَكُوْنَنَّ ظَهِیْرًا لِّلْكٰفِرِیْنَ ۟ؗ
உம்மீது வேதம் இறக்கியருளப்பட இருக்கின்றது என்பதை நீர் எதிர்பார்த்துக் கொண்டிருக்கவில்லை. ஆனால், இது உம்முடைய இறைவனின் கிருபை(யினால் உம்மீது இறக்கியருளப்பட்டிருக்கின்றது). எனவே, நீர் நிராகரிப்பாளர்களுக்கு உதவி செய்பவராய் இருக்காதீர்.
وَلَا یَصُدُّنَّكَ عَنْ اٰیٰتِ اللّٰهِ بَعْدَ اِذْ اُنْزِلَتْ اِلَیْكَ وَادْعُ اِلٰی رَبِّكَ وَلَا تَكُوْنَنَّ مِنَ الْمُشْرِكِیْنَ ۟ۚ
மேலும், அல்லாஹ்வின் வசனங்கள் உம்மீது இறக்கியருளப்பட்ட பிறகு, பின்னர் இறைநிராகரிப்பாளர்கள் அவற்றை விட்டு உம்மை ஒருபோதும் தடுத்துவிட வேண்டாம். உம் இறைவனின் பக்கம் அழைப்பு விடுப்பீராக!. மேலும், இணைவைப்போருடன் நீர் ஒருபோதும் சேர்ந்துவிட வேண்டாம்.
وَلَا تَدْعُ مَعَ اللّٰهِ اِلٰهًا اٰخَرَ ۘ لَاۤ اِلٰهَ اِلَّا هُوَ ۫ كُلُّ شَیْءٍ هَالِكٌ اِلَّا وَجْهَهٗ ؕ لَهُ الْحُكْمُ وَاِلَیْهِ تُرْجَعُوْنَ ۟۠
மேலும், அல்லாஹ்வுடன் வேறு எந்தக் கடவுளையும் அழைக்க வேண்டாம். வணக்கத்திற்குரிய இறைவன் அவனைத் தவிர வேறு யாரும் இல்லை. அல்லாஹ்வைத் தவிர ஒவ்வொரு பொருளும் அழிந்து போகக்கூடியதாகும். ஆட்சியதிகாரம் அவனுக்கே உரித்தானது. மேலும், அவனிடமே நீங்கள் அனைவரும் திரும்பக் கொண்டுவரப்படுவீர்கள்.